Posts

Showing posts from September, 2025

பக்குவம் - பாகம் 1

மேகலா   : கிருஷ்ணா…, தினந்தோறும் ஏதும் எழுதாமல் சும்மா இருப்பது…, குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி எழுதலாமா…. இன்று, மாண்புமிகு நரேந்திர மோடி பேசிய, ‘ரோட்டி காவ்…, இல்லையேல் என் துப்பாக்கியின் கோலி உன்னைத் தேடி வரும்’ – என்று பாகிஸ்தானை எச்சரித்ததை நினைத்து கொந்தளிக்கவா…, என்று திணறித் திணறி மூச்சு முட்டுது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : மூச்சு முட்டெல்லாம் வேண்டாம்… ஏதாவது எழுதணும் என்றால், நல்ல தலைப்பாக யோசி… இன்னும் முடிவுறாத ஆபரேஷன் சிந்தூரை வேறு ஒரு நாள் யோசிக்கலாம்… நிறையப் பேசி, பேசி நானே கொதித்துப் போனேன்… ஏதாவது குளிர்ச்சியாகப் பேசலாம்… மேகலா  : அக்னி நட்சத்திரத்தில், சூரியன் கூட தகிக்காமல், கொஞ்ச நாளாக குளிர்ச்சியாயிருக்கிறான். அது போல, நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒரு இதம் தேவையாக இருக்கு போல…. நீயும் அதைத்தான் சொல்லுகிறாய்… கிருஷ்ணர்  : சரி…, தலைப்பைச் சொல்லு… மேகலா  : எதை எழுதுவது என்று எனக்கும் புரியவில்லை கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இன்று முழுவதும், ‘பக்குவம்’, ‘பக்குவமடைதல்’…, ‘மேன்மை’ – இதைப் பற்றி யோசி… அப்புறம் பேசலாம்… ...

ஆளுமை - பாகம் 12 (நிறைவுப் பகுதி)

மேகலா   : வெள்ளையனைப் பார்த்து, கட்டபொம்மன், ‘நீ யார் என்னிடம் வட்டி கேட்பது?’ – என்று சொல்லிய வசனத்தை, வீட்டிற்கு வந்த பின்னும், ‘கிஸ்தி, வரி, வட்டி…, எங்களுடன் வயலுக்கு வந்தாயா…, நாற்று நட்டாயா…, இல்லை, எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி செய்தாயா? யாரைக் கேட்கிறாய் வட்டி…, மானம் கெட்டவனே’ – என்று நாமும் கட்டபொம்மனாக மாறி, மெய் சிலிர்த்துப் போவோம்… ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே…’ என்ற பாடலைக் கேட்கும் போது…, பாரதியாரைக் காட்டிலும், பாரதியார் வேஷத்தில் நடித்த நடிகர் திலகம் மட்டுமே கண்ணில் தெரிவார்… ‘திருவிளையாடலில்’ மீனவனாக வரும் சிவபெருமான், கடற்கரையோரம் நடக்கும் நடையழகு…, அந்த எம்பெருமான் சிவனையே நினைக்க வைக்கும் கிருஷ்ணா…. எந்தப் பாத்திரத்தைச் சொல்ல…, நாவுக்கரசராய் நடித்த சிவாஜியா…, தொண்டரடிப்பொடியாழ்வாராய் நடித்த சிவாஜியா…, இவ்வளவு ஏன்…,   1960-களில், தமிழக மக்களுக்கு சுதந்திரத்தின் வலியையும், ஆன்மீகத்தின் மேன்மையையும் வெளிப்படுத்திக் காட்டியதில் முக்கிய பங்கு நடிகர் திலகம் சிவாஜி ஐயாவையே சாரும் கிருஷ்ணா…  ‘படிக்காத மேதை’ ரங்கனாகட்டும்…, ‘பாசமலர்’ அண்ணனாகட்டும்…...

ஆளுமை - பாகம் 11

மேகலா   : கிருஷ்ணா…, இன்னொரு கிருஷ்ணர் கிடையாது. அதையும் சேர்த்துச் சொல்லு கிருஷ்ணா…   எத்தனை பேர் சாஸ்திரம் படைத்தாலும், திருக்குறள் எழுதினாலும்…, எல்லாம் ‘கீதை’யின் எதிரொலியே…   எந்த நல்ல சிந்தனையும், கிருஷ்ணரிடமிருந்து வந்தவையே… தைரியம், நம்பிக்கை, உழைப்பு, முயற்சி, பக்தி, தர்மம்…, என்று யார் போதித்தாலும், அது கீதையின் தாக்கத்தினால் வந்ததே…   உலகத்தின் மொத்த ஆளுமையும், ஸ்ரீகிருஷ்ணரும், கீதையும் தான்…. கிருஷ்ணர்  : Ok…, done…bye… மேகலா  : கிருஷ்ணா.., என்ன கிருஷ்ணா…., கிருஷ்ணா, நான் இன்னுமொரு ஆளுமையாளரைப் பற்றி உன்னிடம் சொல்லவில்லை… அதற்கு முன்னே, நீ bye சொல்லிட்டு கிளம்புறியே… நான் யாரிடம் சொல்லுவேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு புலம்புற… யார் அந்த ஆளுமையாளர்…. மேகலா  : ‘யார் அந்த நிலவு…, ஏன் இந்தக் கனவு’ – என்ற பாடலுக்கு…, gentle ஆ…, சோகமா.., இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்ற பாவனையில் சிகரெட்டை ஊதி, ஊதி தன் வேதனையை வெளிப்படுத்துவாரே…, அந்த நடிகர்…, நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் கிருஷ்ணா… அவர் நடிக்கு...

ஆளுமை - பாகம் 10

கிருஷ்ணர்   :   நம்மைக் கவர்ந்த ஆளுமையாளர்களின் உணர்வுகள் எதுவோ, அது நம்மையும் தொற்றி விடும் என்பது உண்மையிலும் உண்மை… மேகலா  : கிருஷ்ணா…, என்னோடு பேசும் போது, என்னோட feeling உனக்கும் தெரிந்து விட்டதா கிருஷ்ணா… மனுஷங்களான நாங்க அப்படித்தான் கிருஷ்ணா… சில விஷயங்களில் எனக்குன்னு தனி கோபமோ, ஆச்சரியமோ…, அதிசயமோ இல்லாத போது கூட, நாம் ரசிக்கும் ஆளுமையாளர்களின் கோபமும், பேச்சுக்களும், அனுசரணையும், நமக்கும் கோபத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி விடும்… இந்த உணர்வுகளால்தான், எங்களுக்கு தேச உணர்வும் கூட வருகிறது கிருஷ்ணா… அதுவும் குறிப்பாக அரசியல் நிகழ்வுகளில், விளையாட்டுப் போட்டிகளில் தான் ஆளுமையாளர்களின் தாக்கம் நம்மையும் அதே உணர்வுகளில் பாடாய்ப் படுத்தும்.. கிருஷ்ணர்  : ஆமாம்…, ஆமாம்… கிரிக்கெட்டில், ’man of the match’ யாரோ…, அவர்கள்தான் அன்றைய hero-வாகவும் ஆகிறார்கள். அடுத்து ஆடும் போது, நேற்றைய sixer-ஐயும், boundary-யையும் எதிர்பார்த்து, மக்களுடைய ஆரவாரமும், விசிலும் எகிறும்…  தன்னை follow பண்ணுபவர்களின் எதிர்பார்ப்பு, ஆளுமையாளர்களிடையே பொறுப்புக்களை அதிகமாக்குகிறத...