ஆளுமை - பாகம் 12 (நிறைவுப் பகுதி)

மேகலா : வெள்ளையனைப் பார்த்து, கட்டபொம்மன், ‘நீ யார் என்னிடம் வட்டி கேட்பது?’ – என்று சொல்லிய வசனத்தை, வீட்டிற்கு வந்த பின்னும், ‘கிஸ்தி, வரி, வட்டி…, எங்களுடன் வயலுக்கு வந்தாயா…, நாற்று நட்டாயா…, இல்லை, எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி செய்தாயா? யாரைக் கேட்கிறாய் வட்டி…, மானம் கெட்டவனே’ – என்று நாமும் கட்டபொம்மனாக மாறி, மெய் சிலிர்த்துப் போவோம்… ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே…’ என்ற பாடலைக் கேட்கும் போது…, பாரதியாரைக் காட்டிலும், பாரதியார் வேஷத்தில் நடித்த நடிகர் திலகம் மட்டுமே கண்ணில் தெரிவார்… ‘திருவிளையாடலில்’ மீனவனாக வரும் சிவபெருமான், கடற்கரையோரம் நடக்கும் நடையழகு…, அந்த எம்பெருமான் சிவனையே நினைக்க வைக்கும் கிருஷ்ணா…. எந்தப் பாத்திரத்தைச் சொல்ல…, நாவுக்கரசராய் நடித்த சிவாஜியா…, தொண்டரடிப்பொடியாழ்வாராய் நடித்த சிவாஜியா…, இவ்வளவு ஏன்…, 1960-களில், தமிழக மக்களுக்கு சுதந்திரத்தின் வலியையும், ஆன்மீகத்தின் மேன்மையையும் வெளிப்படுத்திக் காட்டியதில் முக்கிய பங்கு நடிகர் திலகம் சிவாஜி ஐயாவையே சாரும் கிருஷ்ணா… ‘படிக்காத மேதை’ ரங்கனாகட்டும்…, ‘பாசமலர்’ அண்ணனாகட்டும்…, ‘வியட்நாம் வீடு’ பத்மனாப ஐயராகட்டும்…, ‘தங்கப்பதக்கம் ‘ சௌத்ரியாகட்டும்…, ‘கௌவரத்தின்’ style-ஆன lawyer ஆகட்டும்…, அப்படியே, அந்த அந்த கதாபாத்திரத்தை, நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து, நம்மை அழ வைக்கவும், பிரமிக்க வைக்கவும், அதிசயப்படுத்தவும் தவறுவதேயில்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏ…..யப்பா…, மூச்சு விடாம, ஒரு பிரம்மாண்டத்தையே சொல்லிட்டயே… ‘நவராத்திரி’யை விட்டுட்ட… எனக்கு, அதில் வரும் விவசாயியும், நாடகக் கலைஞரையும் ரொம்பப் பிடிக்கும்… அதில், mild-ஆ ஒரு comedy-யைக் குடுப்பாரே… என்ன ஒரு அழுத்தமான நடிப்பு… நடிப்பு விஷயத்தில் 200% dominating person… இன்றைய காலகட்டத்தில் மட்டும் அவர் இருந்தால்…, பிரதம மந்திரியின், பத்மஸ்ரீ, பதமபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா…, என்று எல்லா award-ஐயும் பெற்றிருப்பார்…..

மேகலா : அதான்…, எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணரே, அவருக்கு அத்தனை award-களையும் கொடுத்திட்டாரே…. Great கிருஷ்ணா…, Great…. கிருஷ்ணா…, இப்போ, இன்னொரு ஆளுமையாளர் ரொம்ப trending ஆக இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்னது…, ‘ஆளுமையாளர்’ trending ஆக இருக்கிறாரா…. ஆளுமையாளரே, exclusive ஆனவர்… இது என்ன ‘trending’ ஆன ஆளுமையாளர்….

மேகலா : கிருஷ்ணா…, இன்றைக்கு ஏதாவது stage performance அல்லது programme எதுனாலும், அந்த programme-ஐ நடத்திக் கொடுப்பவர்…, ‘anchor’ என்று ஒருவர் இருப்பார். Programme-ஐ ஏற்பாடு செய்தவர், முதலில் மேடையில் தோன்றி, சில வார்த்தைகளைப் பேசி விட்டு, programme-ஐ, anchor-இடம், ‘hand over’ பண்ணுவார்… அதன் பிறகு, அந்த programme முழுவதும் anchor கையில்தான்… கிருஷ்ணா, சிலருடைய anchoring, programme-ஐ விட interesting ஆக இருக்கும் கிருஷ்ணா…. சபையில் இருக்கும் பார்வையாளர்களை, வெளியில் செல்ல விடாமல் கட்டிப் போட்டு வைக்கும் தந்திரம் அவர்கள் கையில் இருக்கும்… அடுத்தடுத்து perform பண்ண வருபவர்களின் தனித்துவத்தை உற்சாகமாக பேசி வரவேற்பு கொடுக்கும் போது…, அவர்களின் திறமை, அவர்களுக்கே புரியுமாறு எடுத்துச் சொல்லி, கை தட்டல் பெற்றுக் கொடுத்து, ‘இன்னும் பலமா…, பத்தல…’ என்று உற்சாகமாகப் பேசி, stage-ல் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து விடுவார்கள்… அதுவும், ’பரிசளிப்பு விழா’ என்றால், பரிசு பெறுபவரை, அவருடைய திறமையை எடுத்துச் சொல்லி, கண் கலங்க வைத்து விடுவார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! இப்படியும் ஆளுமையா…. கேக்கவே சுவாரஸ்யமா இருக்கே… மொத்தத்தில், தன்னைச் சுற்றி இருக்கிறவங்கள சந்தோஷப்படுத்துவது…, மனதாலோ, வாக்காலோ, செயலாலோ…, நல்ல காரியம் தானே…. ஒருவன், பிறரின் மனதைக் கவர்கிறான் என்பது, ‘ஆளுமையாளர்களின் தனித் திறமை தான்’… ‘ஆளுமை’ – சூழ்நிலையை ஆளுதல், மனங்களை வெல்லுதல், சந்தர்ப்பத்தை தனதாக்குதல், நம்பிக்கையைக் கொடுத்தல்…, ‘ஆஹா’ – இந்த ஒரு சொல்லுக்கு எத்தனை விளக்கம் கொடுக்கலாம்…. நிறைய பேசிட்டோம்… நல்ல explanations… அதிலும் குறிப்பாக, special விளக்கம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றியது… வாவ்…, நல்லா இருந்தது… All the best மேகலா…

மேகலா : எனக்கு முடிக்க மனசில்ல கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நான் முடிச்சிட்டேன்….

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4