ஆளுமை - பாகம் 11

மேகலா : கிருஷ்ணா…, இன்னொரு கிருஷ்ணர் கிடையாது. அதையும் சேர்த்துச் சொல்லு கிருஷ்ணா… எத்தனை பேர் சாஸ்திரம் படைத்தாலும், திருக்குறள் எழுதினாலும்…, எல்லாம் ‘கீதை’யின் எதிரொலியே… எந்த நல்ல சிந்தனையும், கிருஷ்ணரிடமிருந்து வந்தவையே… தைரியம், நம்பிக்கை, உழைப்பு, முயற்சி, பக்தி, தர்மம்…, என்று யார் போதித்தாலும், அது கீதையின் தாக்கத்தினால் வந்ததே… உலகத்தின் மொத்த ஆளுமையும், ஸ்ரீகிருஷ்ணரும், கீதையும் தான்….

கிருஷ்ணர் : Ok…, done…bye…

மேகலா : கிருஷ்ணா.., என்ன கிருஷ்ணா…., கிருஷ்ணா, நான் இன்னுமொரு ஆளுமையாளரைப் பற்றி உன்னிடம் சொல்லவில்லை… அதற்கு முன்னே, நீ bye சொல்லிட்டு கிளம்புறியே… நான் யாரிடம் சொல்லுவேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு புலம்புற… யார் அந்த ஆளுமையாளர்….

மேகலா : ‘யார் அந்த நிலவு…, ஏன் இந்தக் கனவு’ – என்ற பாடலுக்கு…, gentle ஆ…, சோகமா.., இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்ற பாவனையில் சிகரெட்டை ஊதி, ஊதி தன் வேதனையை வெளிப்படுத்துவாரே…, அந்த நடிகர்…, நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் கிருஷ்ணா… அவர் நடிக்கும் காட்சியில் ஆளையே முழுங்கும் அளவு நடிப்பால் நம்மை அசர வைப்பார் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! ஆமாம்ல… நீ நடிகர் திலகத்தைப் பற்றிச் சொல்லப் போகிறாய் என்பதால் முடிவுரை சொன்ன பின்பும் கேட்கிறேன்… நீ சொன்ன அந்தப் பாட்டு வரும் காட்சியை நானும் பார்த்திருக்கிறேன்…. அசுரன் மாதிரி நடித்திருப்பார்…

மேகலா : கிருஷ்ணா…, எனக்கென்னவோ…, இந்தப் பாட்டின் காட்சியைப் பார்ப்பதற்கே ரசிகர்கள் பல முறை படத்தைப் பார்த்திருப்பார்களோ என்று தோணுது கிருஷ்ணா… M. S. V-யின் music-ம் வித்தியாசமா இருக்கும்…. பாடிய T. M. S – ன் குரலில் இருந்த மந்திரப் பொடி…, சிவாஜி கணேசனை யோசிக்க வைத்ததாம் கிருஷ்ணா… 3 நாட்கள் time கேட்டு, home work பண்ணிப் பார்த்து நடித்தாராம் கிருஷ்ணா. இன்றும் இந்தப் பாடல் காட்சியை, வச்ச கண் வாங்காமல் பார்க்கத் தோணுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ பார்க்கும் போதெல்லாம், உனக்குப் பின்னாலிருந்து நானும் பார்த்திருக்கிறேன்… அடுத்து என்ன சொல்லப் போகிறார்…, என்று ஆவலோடு காத்திருப்பேன்… நீ அடுத்த program பார்க்க மாற்றி விடுவாய்… கடுப்பாகும் எனக்கு… ‘ஒரு நல்ல scene-ஐ பார்க்க விட மாட்டாளே என்றிருக்கும்….

மேகலா : நீ இந்தப் படத்தையே, ‘என்னைப் பார்க்க விடலை என்கிறாயே…, அவர் நடித்த எல்லாப் படங்களிலும், ஒவ்வொரு scene-லும், அவர் காட்டும் expression-உம், ‘என்ன மாதிரி நடிப்புடா இது… அடுத்து என்ன…, அடுத்து என்ன’ என்று நம்மை வேறு எங்கும் போக விடாமல் தடுக்கும்… முழு ஆக்ரமிப்புடன், அந்த scene-ஐ நம்ம மனசுக்குள் அழுத்தமாக உட்கார வைத்து விடுவார் கிருஷ்ணா… ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : எத்தனை தடவை நீ போட்டிருக்க…. வேற வழி… அத்தனை தடவையும் நானும் பார்த்திருக்கிறேன்… அந்தப் படம் முழுக்க, ‘சிக்கல் சண்முகசுந்தரத்தின்’ ஆளுமைதானே… நீ எந்த scene-ஐச் சொல்லுற….

மேகலா : முதன் முதலில், hero-வும், heroine-ம் சந்திக்கும் காட்சி கிருஷ்ணா… சிக்கல் சண்முகசுந்தரமும், அவருடைய டீமும், நாதஸ்வர கச்சேரியை பாதியில் நிறுத்தி விட்டு வெளியேறுவார்கள். அவருடைய கச்சேரியைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த மோகனாம்பாள், நட்டுவனாரிடம், சண்முகசுந்தரத்தை, தன் நாட்டியத்தைப் பார்த்து விட்டுப் போகும்படி கேட்கச் சொல்வார்… நட்டுவனாரும், மோகனாவின் நாட்டியத்தைப் பார்த்துப் போகுமாறு, வித்வானிடம் கேட்பார்… அந்தக் கணத்தில், அவளுடைய அழகால் ஈர்க்கப்பட்டு, அதை மறைத்துக் கொண்டு, ‘கேட்கும் வெடிச்சப்தத்திற்கு, உங்கள் அம்மாவை ஆடச் சொல்லுங்கள்’ என்றதும், மோகனாம்பாள், ‘ஏன், இந்த வெடிச்சப்தம் என்ன…, பலத்த மழைக்கும், இடியோசைக்கும் கூட நடனமாட முடியும்’ என்று ஆரம்பித்து, பேச்சு வளர்ந்து…, கடைசியில், ‘நான் நாதஸ்வரத்தில் ஒரு தில்லானா வாசிக்கிறேன்…, அதற்கேற்றாற் போல உன்னால் ஆட முடியுமா’ என்று இவர் கேட்க…, அதற்கு அந்த அம்மா, ’நானும் காலில் சலங்கையைக் கட்டி ஒரு மேடையில் ஆடுகிறேன்…, அதற்கு உங்களால் நாதஸ்வரம் வாசிக்க முடியுமா’…, என்று போட்டி போட்டு சவால் விடுகிறார்கள். அந்த நேரத்தில் இருவரிடமும், கோபம், சண்டை, ஈகோ…, இதற்கு நடுவில் ஒரு காதல் தெரியும் பார் கிருஷ்ணா…. நாம் எத்தனை தடவை பார்த்தாலும், புதுசாப் பார்ப்பது போல, செவாலியே சிவாஜி கணேசனும், பத்மினியும், நம்மை கண்கள் விலகாமல் பார்க்கச் செய்து விடுவார்கள். சுற்றியிருக்கும் characters வேற, தங்களுடைய முகபாவத்தால், அந்த சண்டையை இன்னும் சுவாரஸ்யமாக்கி, நம்மை முழுமையாக ஆக்ரமித்து விடுகிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : படத்தை இஞ்ச் by இஞ்ச் ரசிக்கிற என்பதை விட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினியுடைய ஆளுமை, அந்த scene-ல் powerful ஆக இருக்கு மேகலா…

மேகலா : கிருஷ்ணா…, இந்த scene ஒரு சின்ன sample தான் கிருஷ்ணா… நடிக்கும் போது, நடிகர் திலகத்துடைய ஆளுமை எப்படிப்பட்டது தெரியுமா கிருஷ்ணா… இது திரைப்படம் தான்…, நம் கண் முன்னே நடப்பது நாடகம் தான் என்று நமக்கு நல்லாத் தெரிஞ்சாலும்…, ‘படிக்காத மேதை’ ரங்கன் அழும் போது, நம் கண்ணிலும் நீர் வழியும்… செக்கிழுத்த செம்மல், செக்கிழுத்து, சாட்டையால் அடி வாங்கும் போது…, லேசுக்குள் நாம் சுதந்திரத்தை அடையவில்லை… கப்பலோட்டிய தமிழன் பட்ட கஷ்டத்தைப் பார் என்று புலம்பத் தோணும்….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5