பக்குவம் - பாகம் 2
மேகலா : கிருஷ்ணா…, சின்னப்புள்ளைகளாக இருக்கும் போது, ஒவ்வொரு மனிதர்களும் எப்படிலாம் ஆசைப்படுவாங்க தெரியுமா கிருஷ்ணா… அது குழந்தைத்தனமான ஆசைன்னு சொல்லி easy-யா இப்போ ஒதுக்கிரலாம். சொல்லப் போனா, ஒவ்வொரு பருவத்திலும் மனிதன், தான் நினைப்பதுதான் சரி…, நாம ஆசைப்படுறதுல தப்பே கிடையாது…, அது நிச்சயம் நமக்குக் கிடைக்கும்…, என்று தன்னுடைய தகுதி மறந்து நினைப்பதுண்டு… இவ்வளவு ஏன்…? மாணவப் பருவத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு hero பிடிச்சிருக்கும். அவங்க நடிச்ச படத்தின் பாடலை மனப்பாடம் பண்ணுவது மட்டுமில்லை…, அந்த hero-வோட heroine ஆக நினைப்பதிலே, அவர்களுக்கு ஒரு சந்தோஷம்… இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்ற ‘பக்குவம்’ கிடையாது. முதலில் அந்த hero-வுக்கு நம்மைப் பிடிக்குமா என்ற அறிவு கூட இல்லாமல், கற்பனையிலும், கனவுகளிலுமே லயித்திருப்பார்கள். இப்படி immature behavior எப்போ மாறும் தெரியுமா… நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவத்தையும் சந்திக்க சந்திக்க…, யதார்த்தம் புரிய ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக பக்குவமாகிறார்கள். அப்பவும்…, புதுசா ஒரு அனுபவத்தை சந்திக்கும் போது, ஆலோசனை சொல்பவர்களை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, புதிய அனுபவத்தைக் கூட, பக்குவமாக ஜெயித்து விட முடியும். அதைத்தான் கவிஞர் மருதகாசி, ‘சேத்த பணத்த சிக்கனமா செலவு செய்ய பக்குவமா, அம்மா கையில கொடுக்கச் சொல்றாரு… பக்குவமான ஆலோசனை பக்கத்தில் இருக்கும் போது, நாம காயாக இருந்தாலும், பக்குவமாக கனிந்து விடலாம், கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஓஹோ…. Immaturity-யை அனுபவம் தான் பக்குவப்படுத்துகிறது என்கிறாயா….. ஓரளவு உண்மைதான்… ஆமாம்…, பக்குவம் இல்லாதவர்களை எப்படி கூப்பிடுவாங்க….
மேகலா : சொல்லட்டா கிருஷ்ணா… நீ கோவிச்சிக்கக் கூடாது… ‘அரை வேக்காடு’, ‘ஆஃப் பாயில்’, ’கூமுட்டை’…. இப்படீலாந்தான் குறிப்பிடுவோம் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : அதென்ன…, எல்லாமே முட்டைய வச்சி சொல்றீங்க….
மேகலா : முட்டய வச்சி, easy-யா சொல்லி விடலாம் கிருஷ்ணா… ஏன்னா…, ‘அரை வேக்காடு’, ‘ஆஃப் பாயில்’ – இதெல்லாம் முட்டையால சுலபமா புரிஞ்சிக்க முடியும்… இதுல ஒரே ஒரு கஷ்டம் தான்…. முட்டை எந்த நிலையிலும் சாப்பிட சுவையாக இருக்கும். அதனால், இவர்களை ‘கூமுட்டை’ன்னு சொன்னா, ரொம்ப பொருத்தமா இருக்கும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…., ‘பக்குவம்’ என்ற வார்த்தையை, எந்த இடங்களிலெல்லாம் use பண்ணுவார்கள்… கொஞ்சம் பக்குவமா எடுத்துச் சொல்லு பார்ப்போம்….
மேகலா : நிறைய இடங்களில்…, அதுவும் உணவு preparation-ல் அடிக்கடி ‘பக்குவம்’ என்ற வார்த்தை சரளமாக வரும் கிருஷ்ணா…. காலையில், coffee போடுவதிலிருந்து, காலை பலகாரம், மதிய உணவு, இரவு உணவு, விருந்து, snacks என்ற எல்லா நேரங்களிலும், ‘பக்குவம்’ வரும். சூடாக டிக்காஷன் இறக்கி, பாலை ஆடை படியாமல் காய்ச்சி, சுவைக்குத் தகுந்தபடி சீனி போட்டு, டிக்காஷனையும், பாலையும், பக்குவமான ratio-வில் கலந்து, ஒரு ஆத்து ஆத்தி, நுரை ததும்ப, டம்ளரில் ஊற்றி பக்குவமாகக் கொடுப்பது, அற்புதமான coffee… அந்த பக்குவம், coffee-யின் வாசனையில், லேசாக கசந்தும், இனிப்பான சுவையிலும் தெரியும் கிருஷ்ணா…. இந்த coffee பக்குவம், காலையில் அமைதியான மனதில், உடனடி திருப்தியைக் கொடுக்கும்… இது ஒரு சுகமான அனுபவம் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : என்ன ரசனையான அனுபவம்…. வாவ்….
மேகலா : கிருஷ்ணா…, இந்த அடுப்பாங்கரையில், ‘பக்குவம்’ எப்படியெல்லாம் ஜகஜ்ஜாலம் செய்யும் தெரியுமா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ‘பக்குவம்’ சமையலறையிலா… ஏதோ, coffee போடுறத interesting ஆக கேட்டேன்… அதுக்காக சமையலறையில, ‘பக்குவம்’ ஜகஜ்ஜாலம் செய்யுதுங்கிறாயே… நானென்னவோ, மனுசங்க…, மனதால் வளர்வதை, மேன்மையடைவதை, ‘பக்குவமடைதல்’ என்று சொல்லுவாய்ன்னு எதிர்பார்த்தேன்… நீ இப்படிச் சொல்ற… என்ன ஜகஜ்ஜாலம் பண்ணுது…
மேகலா : கிருஷ்ணா…, உனக்கு ஒண்ணுமே தெரியாதா… இப்ப ஒரு family-க்கு favorite ஆன குழம்புன்னு ஒண்ணு இருக்கும்… அந்த குடும்பத்தச் சேர்ந்த பெண்கள், ஒரே குழம்பை ஒரே method-ல எல்லோரும் செய்தாலும்…, ஒருவர் கைப்பக்குவம் மட்டும், எல்லோராலும் பெரிதும் விரும்பப்படும் சுவை கூடுதலாக இருக்கும்…
கிருஷ்ணர் : அதாவது…, ‘சுக்கா’வ யார் செய்தாலும், ஒரே சுவையுடன் தான் செய்வார்கள்… ஆனா, உங்க ஐயாமா செய்தால், அதன் வாசனையும், சுவையும், ஊரையே கூட்டி விடும்… அதற்கு அவர்களுடைய, கைப்பக்குவம் தான் காரணம்… அப்படீன்னு சொல்லப் போற….
மேகலா : எப்புடி கிருஷ்ணா… எப்டி… என் மனசுல உள்ளத அப்படியே சொல்ற….
(தொடரும்)
Comments
Post a Comment