Posts

Showing posts from November, 2025

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : ‘பிரம்மரிஷி’ என்பது ஒரு நிலை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், இதை விட better-ஆ நாம் நடந்து கொள்ளணும்…, இல்லையென்றால்…, இதை விட உயர்ந்த promotion-க்கு நாம் முன்னேறணும் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் போது, அவனுடைய பழக்க வழக்கம் நடத்தை மட்டுமல்ல மேகலா….   கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய attitude கூட shape ஆக ஆரம்பிக்கும். அதனால் அவன் மனநிலையும் பக்குவமடைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், அறிவில் தெளிவு மட்டுமல்ல, நிதானம், பொறுமை, அடுத்து நடக்கப்போவதில் தீர்க்கம்…, அதற்கான ஆயத்தம்…, தன் திறமையில் நம்பிக்கை…, அதற்கான பணிவு எல்லாம் ஒன்று சேரும் போது, அவன் outstanding personality யாக, தீர்க்கதரிசனமாக தன் மரணத்தைக் கூட தெரிந்து கொள்ளும் தைரியசாலியாக நிற்கும் நிலை வருமல்லவா…, அதுதான் ‘பிரம்மரிஷி’…  இதைத்தான் விசுவாமித்திரருக்கு, வசிஷ்டர் சூசகமாகத் தெரிவித்தார். இந்த முயற்சியில் ஈடுபடும் போது, ஆசைப்பட்டாலும், கோபப்பட்டாலும் கூட நம் நிதானம் தவறி விடுகிறது… விசுவாமித்திரருக்கு, மேனகை மீது காதல் வந்ததும்…, திரிசங்கு கேட்டதால், அவனை ஸ்தூல உடம்புடன் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக...

பக்குவம் - பாகம் 8

கிருஷ்ணர்  : கிருஷ்ணரும், ‘என்ன உத்தங்கரே, உங்களுக்கு விஷயம் தெரியாதா… கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்த, பீஷ்மர், துரோணர், விதுரர், கிருஷ்ணர் அடங்கிய குழு எவ்வளவோ முயற்சி செய்தோம். துரியோதனனின் பொறாமையும்,பிடிவாதமும், சமாதானத்தை மறுத்து விட்டது…. இறுதியில் போர் மூண்டது…. கௌரவர்களில் பீஷ்மர் உட்பட அனைவரும் மாண்டனர். தர்மபுத்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டுத்தான் துவாரகை திரும்புகிறேன்’ என்று எடுத்துச் சொல்ல, அதற்கு உத்தங்கர், நீ இருந்தும் அவர்கள் பகையை மறந்து போரைக் கை விடவில்லையென்றால்…, இந்தப் போருக்குக் காரணமே நீதானோ என்று சந்தேகிக்கிறேன்… என் தவத்தின் வலிமையால், இதோ உம்மை சபிக்கப் போகிறேன்’ என்று கோபப்பட்டார். கிருஷ்ணரும் மெல்லச் சிரித்து விட்டு, ‘கடுமையாகத் தவம் புரிகிறவர்கள், என்ன நடந்திருக்கும் என்பதைக் கூட அனுமானிக்க முடியாமலா இருந்திருப்பார்கள்… நீரோ, தகவல் சொன்னவரையே சம்பந்தப்படுத்தி கோபப்படுவதால், அந்தக் கோபம் என்னை எதுவும் செய்து விடாது… நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்…. கிருஷ்ணராகிய நான் மனிதனாகப் பிறந்து, சகல குணங்களையும் வெளிப்படுத்தக் கூ...

பக்குவம் - பாகம் 7

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா…, நீ சொல்வது சரிதான் கிருஷ்ணா… ஒரு மாணவன் எவ்வளவுதான் செல்லப்பிள்ளையாக இருந்தாலும், தன்னுடைய கல்வி, வேலை வாய்ப்பு என்று வரும் போது, செல்லப்பிள்ளைத்தனத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு, தன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்படுத்துபவரை நிறையப் பேரை நானும் பார்த்தும் இருக்கிறேன்…, கேள்வியும் பட்டிருக்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இதில், ‘பக்குவப்படுத்துதல்’ என்று சொன்னாயே… இதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் சொல்லட்டுமா…. மேகலா  : பரம்பொருளே…, நீ என்னிடம் இத்தனை விஷயங்களைப் பேசுவதே, நான் செய்த புண்ணியம் கிருஷ்ணா… இதில், ‘சொல்லட்டுமா’ என்று கேட்கலாமா கிருஷ்ணா… நீ எடுத்துச் சொல் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Season-ல் கிடைக்கும் பழங்கள், அதிகமாகக் காய்த்தால், அதை என்ன செய்வார்கள்… விற்பனைக்குப் போன பின்னும், அதிகமாக இருப்பதை உபயோகப்படுத்தாமல் யாராவது கீழே போடுவார்களா…. மேகலா  : கிருஷ்ணா…, இப்பல்லாம், அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தை பதப்படுத்தி, juice, jam என்று தயாரித்து, வருடம் முழுவதும் கிடைக்குமாறு செய்து விடுகிறார்கள் கிருஷ்ணா… அது இன்னும் பிரமாதமான சுவையில்...

பக்குவம் - பாகம் 6

கிருஷ்ணர்   : இந்த ‘பக்குவம்’ என்பது, வயசு ஏற ஏற வருவது என்று நினைத்தாயா…. மேகலா  : ஐயோ…, கிருஷ்ணா…, எத்தனையோ வயசானவங்க, அரைவேக்காட்டுத்தனமாய் பேசுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம் கிருஷ்ணா.. கிருஷ்ணர்  : Yes,…,  ’பக்குவம்’ என்பது, அறிவின் தெளிவினால் வருவது…  சின்னக் குழந்தையிலிருந்து, மனிதன் வளர வளர, அந்தந்த காலகட்டங்களில் தான் சிறப்புறுவதற்காக எடுக்கும் முடிவுகளில், அந்த வயசுக்கேற்ற தெளிவும், பக்குவமும் இருக்கணும் மேகலா… ஒரு குழந்தை படிக்கிற காலங்களில், படிப்பதற்கு சோம்பேறித்தனப்படலாம். அம்மாவின் கண்டிப்பான அணுகுமுறையால், ஆசிரியரின் சொல்லிக் கொடுக்கும் முறையினால், அந்த குழந்தைக்கு, தானும் நல்லா படிக்கணும், 1st mark எடுக்கணும் என்று யோசிச்சி…, முறையாக படிக்க ஆரம்பிக்கும் போது தெரிந்து கொள்…. படிக்கும் விஷயத்தில், அந்தக் குழந்தைக்கு, நல்லாப் படிக்கணும்ங்கிற தெளிவும், பக்குவமும் வந்து விட்டதென்று. அப்பொழுது அந்த மாணவனுக்கு, தனக்கு கணக்கு பாடம் ரொம்பப் பிடிக்கிறது என்று தீர்மானம் செய்து, IIT-யில் சேருவதற்கு coaching எடுக்குமளவுக்கு கல்வியில் தனி கவனமும், பக்குவமும...