பக்குவம் - பாகம் 6

கிருஷ்ணர் : இந்த ‘பக்குவம்’ என்பது, வயசு ஏற ஏற வருவது என்று நினைத்தாயா….

மேகலா : ஐயோ…, கிருஷ்ணா…, எத்தனையோ வயசானவங்க, அரைவேக்காட்டுத்தனமாய் பேசுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம் கிருஷ்ணா..

கிருஷ்ணர் : Yes,…, ’பக்குவம்’ என்பது, அறிவின் தெளிவினால் வருவது… சின்னக் குழந்தையிலிருந்து, மனிதன் வளர வளர, அந்தந்த காலகட்டங்களில் தான் சிறப்புறுவதற்காக எடுக்கும் முடிவுகளில், அந்த வயசுக்கேற்ற தெளிவும், பக்குவமும் இருக்கணும் மேகலா… ஒரு குழந்தை படிக்கிற காலங்களில், படிப்பதற்கு சோம்பேறித்தனப்படலாம். அம்மாவின் கண்டிப்பான அணுகுமுறையால், ஆசிரியரின் சொல்லிக் கொடுக்கும் முறையினால், அந்த குழந்தைக்கு, தானும் நல்லா படிக்கணும், 1st mark எடுக்கணும் என்று யோசிச்சி…, முறையாக படிக்க ஆரம்பிக்கும் போது தெரிந்து கொள்…. படிக்கும் விஷயத்தில், அந்தக் குழந்தைக்கு, நல்லாப் படிக்கணும்ங்கிற தெளிவும், பக்குவமும் வந்து விட்டதென்று. அப்பொழுது அந்த மாணவனுக்கு, தனக்கு கணக்கு பாடம் ரொம்பப் பிடிக்கிறது என்று தீர்மானம் செய்து, IIT-யில் சேருவதற்கு coaching எடுக்குமளவுக்கு கல்வியில் தனி கவனமும், பக்குவமும் வந்து விடுகிறது… இன்னும் சொல்லப் போனால், IIT-யில் கிடைக்கலேன்னா, அடுத்த best…, அது இல்லன்னா இன்னொரு best என்று கல்வி கற்பது, எந்த இடமானாலும் சரி…, கற்க வேண்டும் என்ற பக்குவம் வருகிறதே… அது ரொம்ப முக்கியம் மேகலா…. அறிவின் பக்குவம் நம்மை மேன்மையாக்கும்… நமக்கென்று ஒரு கனவு இருக்கும்… அப்படிப்பட்ட கனவு எல்லோருக்கும் வாழ்க்கையில் வாய்ப்பதில்லை…. ஏன்…, நம்முடைய அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு, போர் விமானம் ஓட்டும் விமானியாகணும்ங்கிற கனவு இருந்தாலும், காலம் அவரை, ’விஞ்ஞானி’யாக்கி அழகு பார்த்தது…, அவருடைய அறிவும் தெளிவும், விவேகமும்…, பக்குவமும்…, தனக்குக் கிடைத்ததை ஏற்று, அந்தத் துறையையே பெருமைப்படுத்தவில்லையா… இப்படித்தான் நம்முடைய ‘பக்குவம்’ நம்மை உயர்த்தும். நம் மாணவர்களும் அப்படித்தான்… பக்குவப்படாத மாணவன் தான், அப்பாவைச் சார்ந்து, ‘நான் சென்னையில்தான் படிப்பேன்’ என்று பிடிவாதமாய் நிற்பான்… ஆனால், எங்கு படித்தாலென்ன, நமக்கு கல்விதான் முக்கியம் என்று நினைக்கும் மாணவன், எந்த institute-ல் placement ஆனாலும், நல்லா படிச்சி, முன்னுக்கு வருவது மட்டுமே நமக்கு முக்கியம் என்று முடிவு செய்வான்… இது தெளிவான, பக்குவமான முடிவு என்று நினைக்கிறான்….

மேகலா : Yes, boss…! நீ சொல்லச் சொல்ல, பக்குவத்திற்கு இத்தனை dimension இருக்கா என்று ஆச்சர்யமாக இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இன்னும் கேட்டுப் பார்… இன்னும் ஆச்சர்யப்படுவ…. ஒரு பையன் மாணவனாக, தன்னுடைய கல்விக்காக பிடிவாதம், செல்லம், சிறுபிள்ளைத்தனத்தை விட்டு விட்டு, கொஞ்சம் மாறி, எங்க வேணாலும் படிக்கிறேன் என்னும் போது, அந்தப் பக்குவம், மாணவனுக்கு, பணிவையும், பழகும் தன்மையையும் கற்றுக் கொடுக்கிறது. யாரிடம் எப்படிப் பேசுவது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டவன், வேலை பார்ப்பதிலும், தன் விருப்பம் என்று ஒன்றை வைத்திருப்பான் அல்லவா….

மேகலா : ஆமாம்! அவன் விருப்பத்திற்கு வேலை பார்க்கும் பொழுது, சந்தோஷத்துடன் வேலை பார்ப்பானே….

கிருஷ்ணர் : ஆனால், ஒரு வட்டத்திற்குள் நின்று விடுமே… உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது… Technology வளர்ச்சியோ, அசுர வளர்ச்சியாகிறது…. நம் விருப்பம் ஒரு முக்கியமல்ல…, நம்ம வளர்ச்சிக்கான எந்த செயலையும் கற்றுக் கொள்ளணும்…., வாய்ப்புக் கிடைத்தால், சிறப்பாக செயல்படணும் என்ற மனநிலையில் தயாராகும் ஒரு employee, வேலை செய்யும் company-க்குத் தகுந்த பக்குவமான மனதுடன் நுழைகிறான். எதையும் சிறப்பாக செய்யணும்கிற மனப்பக்குவம் உள்ள ஒரு இளைஞனை…, அந்த மனப்பக்குவம், மிக உயர்ந்த நிலையை அடையச் செய்கிறது… இப்போ, அவனுடைய குணத்தில், யாரிடம் எப்படிப் பேசுவது, பணிவு இவை மட்டுமல்ல மேகலா… Comapny-யில் அதிகாரிகள் விரும்பும் வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற sincerity-யும் சேர்ந்து விடுகிறது…

மேகலா : Oh! இதற்குப் பேர்தான் பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியோ…

கிருஷ்ணர் : வளர்ந்துட்டுப் போகட்டுமே… நீங்க சமையலில் சொல்றீங்கல்ல… பக்குவமா, பதம் பார்த்து இறக்கணும்னு…., அதே மாதிரி…, இங்கு பக்குவம் அவனை ’perfect employee’ ஆக்குகிறது… Time-க்குள் முடிச்சிக் கொடுக்கணும் என்ற நினைப்பு., வேலையில் perfection…, team management…, என்ற எல்லாவற்றையும் மனிதனுக்கு, பக்குவம் தான் கற்றுக் கொடுக்கிறது… தன்னுடைய கோபம், பிடிவாதம், சிறுபிள்ளைத்தனம் போன்ற குணங்களை…, தனக்குள்ளேயே அடக்கிக் கொள்கிறான்… ‘நிதானம்’ தான் நிறைய நேரம் செயல்படுகிறது….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நீ சொல்வது சரிதான் கிருஷ்ணா…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4