பக்குவம் - பாகம் 7

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…, நீ சொல்வது சரிதான் கிருஷ்ணா… ஒரு மாணவன் எவ்வளவுதான் செல்லப்பிள்ளையாக இருந்தாலும், தன்னுடைய கல்வி, வேலை வாய்ப்பு என்று வரும் போது, செல்லப்பிள்ளைத்தனத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு, தன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்படுத்துபவரை நிறையப் பேரை நானும் பார்த்தும் இருக்கிறேன்…, கேள்வியும் பட்டிருக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இதில், ‘பக்குவப்படுத்துதல்’ என்று சொன்னாயே… இதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் சொல்லட்டுமா….

மேகலா : பரம்பொருளே…, நீ என்னிடம் இத்தனை விஷயங்களைப் பேசுவதே, நான் செய்த புண்ணியம் கிருஷ்ணா… இதில், ‘சொல்லட்டுமா’ என்று கேட்கலாமா கிருஷ்ணா… நீ எடுத்துச் சொல் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Season-ல் கிடைக்கும் பழங்கள், அதிகமாகக் காய்த்தால், அதை என்ன செய்வார்கள்… விற்பனைக்குப் போன பின்னும், அதிகமாக இருப்பதை உபயோகப்படுத்தாமல் யாராவது கீழே போடுவார்களா….

மேகலா : கிருஷ்ணா…, இப்பல்லாம், அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தை பதப்படுத்தி, juice, jam என்று தயாரித்து, வருடம் முழுவதும் கிடைக்குமாறு செய்து விடுகிறார்கள் கிருஷ்ணா… அது இன்னும் பிரமாதமான சுவையில் கிடைக்கிறது கிருஷ்ணா…. மாம்பழம் மட்டுமல்ல கிருஷ்ணா…, கொய்யாப்பழம், லிச்சி, grapes, அன்னாசிப்பழம், எலுமிச்சம்பழம் என்று…, ஒரு பழம் விடாமல், அனைத்தையும் பக்குவப்படுத்தி, ரொம்ப நாள் கெடாமல் பாதுகாக்கும் முறை, இப்போ ரொம்ப trending கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பழங்களைப் பக்குவப்படுத்துவது, தானாக நடக்கும் chemical reaction கிடையாது. நாமாக முயற்சி செய்து, ரொம்ப நாள் கெடாமல் இருக்க எடுக்கும் பக்குவப்படுத்தும் முறை… இப்போ…, ஊறுகாயை எடுத்துக்கோ. பழம், காய் எதுவாக இருந்தாலும், உப்பு, எலுமிச்சை, காரம் இவை, பக்குவமான முறையில் கலந்து பதப்படுத்தும் போது, தேவாமிர்தமான சுவையில், ஊறுகாயாகக் கிடைக்கிறது… நாலு நாளில் அழுகிப் போகும் மாங்காயோ, எலுமிச்சையோ…, இரண்டு வருடமானாலும் கெட்டுப் போகாத அளவுக்கு நம்மால் பக்குவப்படுத்த முடியும்… அது போலத்தான் நம்முடைய குணங்களும்…. நம்முடைய வளர்ச்சிக்காக, சில குணங்களைக் கட்டுப்படுத்தி, சில ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க மனதைப் பழக்கப்படுத்தும் போது, அந்த ஒழுக்கம் மனிதனுக்கு உயர்வைத் தருகிறது…

மேகலா : Oh! கிருஷ்ணா…, ஊறுகாயைப் பக்குவப்படுத்துவது போல, நம்ம மனதையும் நம்மால் பக்குவப்படுத்த முடியும்…, இல்லையா….

கிருஷ்ணர் : மாங்காயை ஊறுகாயாகப் பக்குவப்படுத்துவதால், அதன் original மாங்காய் சுவையை விட, வேறு ஒரு ஊறுகாய் சுவையில் நம்மை மகிழ்விக்கும். அதே மாதிரி, செல்லப்பிள்ளை பக்குவமடைந்து, ஒர் executive ஆக புதிய அவதாரம் எடுக்கும் போது, எத்தனை பேரை மகிழ்ச்சியடையச் செய்கிறான்… இது, ‘பக்குவத்தின்’ இன்னொரு முகம் மேகலா…. பக்குவத்தை பதப்படுத்தி பயன்படுத்தினாலும் சரி, தானாகக் கனியச் செய்து பயன்படுத்தினாலும் சரி, பக்குவம் நம்மை மேன்மையடையத்தான் வைக்கும்… பக்குவப்படுத்துதல்னா என்ன…, சில அனுபவங்களைக் கடந்து வரும் அறிவின் தெளிவு… சாதாரண மனிதர்களிலிருந்து, மகரிஷிகள், மகான்கள் வரை, எல்லோரும் பக்குவத்தை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியின் மூலமாகத்தான் அடைகிறார்கள்… ஒரே நாளில் யாருக்கும், அறிவில் தெளிவும், நிதானமும் வந்து விடுவதில்லை… தவம் செய்யும் முனிவர்கள் கூட, , ‘நான் தவம் செய்யும் முனிவன்’ என்று நினைத்தாலும் போதும், அவர்களின் பக்குவம், அவர்களைக் கை விட்டு விடும்… உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா… முனிவர்களில் ஒருவர், தனக்கு எல்லாம் தெரியும் என்ற ரீதியில் பேசினாரே…, என்ன ஆச்சு பார்த்தாயா….

மேகலா : நீ எந்த முனிவரைச் சொல்லுகிறாய் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : குருக்ஷேத்திரத்தில் யுத்தம் முடிந்த நிலையில், யுதிஷ்டிரனுடைய பட்டாபிஷேக நிகழ்ச்சியை நடத்தி விட்டு, நான் துவாரகை திரும்பிக் கொண்டிருந்தேன். செல்லும் வழியில், ‘உத்தங்கர்’ என்ற தவத்தில் சிறந்த முனிவரை சந்தித்தேன். பல நாட்கள் கழித்து கிருஷ்ணரைப் பார்த்த உத்தங்கர், ’பாண்டவர்களும், கௌரவர்களும் நலமாக இருக்கிறார்களா கிருஷ்ணா…. உன்னுடைய முயற்சியினால், பாண்டவர்களுக்கும் துரியோதனனுக்குமிடையில் உறவு நெருக்கமானதா…. பாண்டவர்களும், தங்களுக்கான பிரதேசத்தில் சந்தோஷமாக அரசாள்கிறார்களா’ என்று நடந்த நிகழ்ச்சிகள் எதுவுமே தெரியாமல் கேட்டார்…. கிருஷ்ணரும், ‘என்ன உத்தங்கரே, உங்களுக்கு விஷயம் தெரியாதா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5