Posts

Showing posts from September, 2026

திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 2

கிருஷ்ணர் : இப்படிப்பட்ட அறிவில் பெரியோர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்… அவரைக் கைப்பிடிக்கும் துணை நலம், எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா…. மேகலா : சொல்லாமல் இருப்பாரா கிருஷ்ணா… ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” ஒரு பெண் கற்புடையவளாக, தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனின் புகழையும், அவன் உயர்வையும் காத்து, சோர்வடையாமல், தன் குடும்பத்தைத் தாங்குவதற்கும், காப்பதற்கும் எப்பொழுதும் தயாராகவே இருப்பாள்.. . அப்படிப்பட்டவள் வாழ்க்கையில் இல்லத்தரசியாக அமைந்தால், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்… நீயே யோசித்துப்பார் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ‘வாவ்’… ஆமாம்… நல்ல மனைவி, கற்பினில் நெருப்பாக ஜொலிப்பாள். தன் கணவனுக்கு, எல்லா சோதனைகளிலும், சாதனைகளிலும் கூடவே, தைரியமாக இருப்பாள். ஒரு கணவன் புகழ் பெறுவதில் கூட, மனைவியின் பொறுமை, இல்லத்தைக் கட்டிக் காத்தல், குழந்தைகளை வளர்த்தல் என்ற பல பரிமாணங்களில் புகழ் சேர்ப்பாள்… அப்படி யாரையாவது உனக்குத் தெரியுமா…. மேகலா : கிருஷ்ணா…., ஒரு முறை, பாடகர் S. P. பாலசுப்ரமணியத்திற்கு...