Posts

Showing posts from August, 2026

திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 1

மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா… கிருஷ்ணர் : என்னம்மா மேகலா…, உங்க ஊருல திருவிழாலாம் முடிஞ்சிருச்சா… இப்பத்தான் எழுதணும்னு நெனப்பு வந்துச்சாக்கும்… ராமாயணமாவது படிச்சியா… ராமநவமி கூட இப்பத்தான் முடிஞ்சிது… மேகலா : கிருஷ்ணா…, ராமநவமி ஆரம்பிக்கும் போது, விசுவாமித்திரர் கதை படிச்சேன்… நவமி நிறைவு நேரத்தில், பரசுராமரிடம் இருந்த விஷ்ணு வில்லை ராமர் முறித்த கதையைப் படித்து சந்தோஷமடைந்தேன் கிருஷ்ணா… அப்பப்ப சோர்வாயிருந்தாலும், திருக்குறள் எழுதுவதையும்…, ராமாயணம் படிப்பதையும் விடல கிருஷ்ணா…. கிருஷ்ணர் : சரி…, இப்ப இங்க என்ன வந்திருக்கிற… ஏதாவது அரட்டையா… மேகலா : ஆமாம் கிருஷ்ணா… ‘வாழ்வியலும் வள்ளுவரும்’ என்ற தலைப்பைக் கூட யோசிச்சிட்டேன் கிருஷ்ணா… கிருஷ்ணர் : ஓ! தலைப்பே அமர்க்களமாயிருக்கே… 1330 குறளிலும் வாழ்வியல் பாடம் எடுத்திருக்காரு…. அத்தனையுமா சொல்லப் போற…. மேகலா : இல்ல கிருஷ்ணா… ஒரு 5 அல்லது 10 குறளை மட்டும் எடுத்து எழுதப் போகிறேன்… கிருஷ்ணர் : ஓ! அப்படியா… சிறப்பா எழுது… உனக்கு எப்படி, திருக்குறளில் வாழ்வியல் எழுதணும்னு தோணுச்சி… மேகலா : அதுவா கிருஷ்ணா… இப்போ தினமும் திருக்குறள் விளக்...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 19 (நிறைவுப்பகுதி)

கிருஷ்ணர் : இதில் கிருஷ்ணர்…, கொலை செய்யத் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லுகிறேன்… அடுத்த நாட்டைக் கைப்பற்றத் தூண்டுவது மகாபாவம்…. ஆனால், தன்னை அழிப்பதற்கு ஒருவன் புறப்பட்டால், அவனுடன் சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அதில் தப்பேயில்லை… தமிழில் ஒரு பழமொழி உண்டே…. ‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்…, வந்த சண்டையை விட மாட்டேன்’ – என்று சொல்வதில் தவறு கிடையாது. அந்த சண்டையில் தர்மம் ஜெயிக்க வேண்டும். நல்லவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது பொது விதி. உரிமைக்கான போர் என்று வந்தவுடன், பின் வாங்குவது, தன்னை நம்பிய மக்களை நட்டாற்றில் விடுவதற்குச் சமம்…. உன்னை ஒன்று கேட்கிறேன்… தீவிரவாதிகள், பாரத மக்களை, வரைமுறையில்லாமல் தாக்கும் போது, நம் அரசாங்கம், ‘போர்’, அதனால் ‘விளைகிற இறப்பு’…, சனாதன தர்மத்திற்கு எதிரானது…, அதனால் விட்டுக் கொடுக்கிறோம் என்று சொல்லி, போர் புரியாமல் இருந்திருந்தால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை போற்றவா செய்வார்கள்… திருப்பி அடித்ததனால், மக்கள் அரசாங்கத்தை வெறுக்கவா செய்தார்கள். இதில் தர்மம் என்னவென்றால், தீவிரவாதம் செய்தவர்களு...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 18

மேகலா : கிருஷ்ணா…, பதிவிரதை, மிதிலாபுரியில் வாழும் தர்மவியாதரைச் சென்று பார்க்கச் சொன்னவுடன், ஒரு எதிர்பார்ப்புடன் தானே, மிதிலாபுரிக்கு வருகிறார். வந்த இடத்தில், தர்மவியாதர் முனிவரை வரவேற்று, ’நீங்கள் பார்த்த பார்வையில் கொக்கு எரிந்து போனதால், அந்தப் பெண்மணி, என்னையும் கொக்கென்று நினத்தாயா என்று கேட்டு, என்னிடம் அனுப்பினாரா’ என்று கேட்டதும்…, ஏன் திகைத்துப் போகணும்…. கிருஷ்ணர் : இதெல்லாம் ஒரு சந்தேகமா… கௌசிகர் ஒரு முனிவர். இயல்பு வாழ்க்கையில் வாழும் பெண்மணிகளிடத்தும், ஒரு கசாப்புக்கடைக்காரரிடமும் தர்மசிந்தனை உண்டு என்பதை அறியாதவர். ஒரு எதிர்பார்ப்புடன் தான் வருகிறார் என்றாலும்…, ஒரு கசாப்புக்கடைக்காரர், இவ்வளவு துல்லியமாக, எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல், யாரிடமும் கேட்காமல், கொக்கு எரிந்ததையும், அதை நேரில் பார்த்த மாதிரி சொன்ன பதிவிரதையையும் சுட்டிக் காட்டும் போது, கசப்புக்கடைக்காரருக்கு இத்தனை தவவலிமையா என்ற வியப்பு வருவது இயற்கைதான்… அவர் இடத்தில் யார் இருந்தாலும் திகைக்கத்தான் செய்வார்கள்…. மேகலா : கிருஷ்ணா…, முதலில் கௌசிக முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை… தர்மவியாதரின் ஆழ்ந்த ஞ...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 17

மேகலா : கௌசிகனுக்கு தர்மவியாதர் கூறிய விளக்கங்கள் தொடர்ந்தன…கெட்ட காரியம் செய்வதில் விருப்பமுடைய ஒருவரை, அவர் கல்வி அறிவு கூட சரி செய்வதில்லை. எல்லா தர்மங்களையும், correct-ஆக அனுசரிப்பவருக்குக் கூட, அவருடைய முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பதில்லை… கெட்ட வழியில் செல்பவர்கள், சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஒருவர் எந்தவித முயற்சியும் எடுக்காமலேயே, அவர்களுக்கு பணம் வந்து சேரலாம். ஒருவர், எவ்வளவு உழைத்தும், உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை…. தவமிருந்து பெற்ற பிள்ளை, நம்முடைய பெயரைக் கெடுக்கும்படி இருக்கலாம்… செல்வம் நிறைய இருப்பவனுக்கு, நோய் வந்து வாட்டலாம். அவனால் நல்ல உணவை சாப்பிட முடியாமல் போய் விடும். ஆரோக்யமாக இருப்பவனுக்கு, நல்ல உணவு கிடைக்காமல் போகலாம்… இவையனைத்துக்கும் ஒரே காரணம்…, முன்வினைப்பயன் தான். முன்பிறவியில் நாம் செய்த வினைகளின் பலனை, இந்தப் பிறவியில் நாம் அனுபவித்தே தீர வேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. அதனால் இந்தப் பிறவியில் நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும். இந்த நன்மைகள் அடுத்த பிறவியில், நமக்கு நல்ல வாழ்வைக் கொடுக்கும். இப்பிறவியில், முன்வினைப்பயன் காரணமாக வரும் துன்பங்...