Posts

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 116

மேகலா   : எல்லோரும் கூறிய அறிவுரைகளைக் கேட்டு தருமபுத்திரர் சிந்திக்கத் தொடங்கினார் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இருப்பினும், தருமருக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அதற்கான விளக்கம் அளிக்கவும் வியாசர் தயாரானார். ’பாட்டனாராகிய பீஷ்மர், பிராமணராகிய துரோணர், மூத்த சகோதரனாகிய கர்ணன், மேலும் பல அரசர்கள் – எல்லோரையும் கொன்றதனால் எனக்கு ஏற்பட்டுள்ள பாவத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. ராஜ்ஜிய பாரத்தை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.   ஒரு புறம் பொறுப்பு, இன்னொரு புறம் பாவச் சுமை. என்னுடைய மனம், இந்த இரண்டுக்குமிடையில் சிக்கித் தவிக்கிறது’  – என்று கூறிய தருமபுத்திரரைப் பார்த்து, வியாசர் விளக்கமளித்தார். ‘யுதிஷ்டிரா! தர்மத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட துரியோதனாதிகளைத்தான் கொன்றாய். இதனால் உனக்கு எந்தப் பாவமும் வந்து சேராது.  கொடுப்பது மட்டும் அரசனின் கடமை அல்ல; அடிப்பதும் கூட அரசனின் கடமை தான். சமாதானம் செய்து கொள்வது மட்டும் ராஜநீதி அல்ல; எதிரிகளைப் போரில் வீழ்த்திக் கொல்வதும் ராஜநீதி தான்’. இவ்வாறு கூறி, யுதிஷ்டிரன் ...

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 2

கிருஷ்ணர்   : ஏன், கதவில், சித்திர வேலைப்பாடு உன்னைக் கவர்ந்ததோ….? மேகலா  : ஹை! Correct-ஆய்ச் சொல்லிட்டயே…. ஆனால், ஒரு திருத்தம்… சித்திரம் இல்ல கிருஷ்ணா…, சிற்பம். சிற்ப வேலைப்பாடு மட்டுமில்ல கிருஷ்ணா…, அதன் சுத்தம்…. ‘யப்பா’, ஒரு தூசு இல்லாமல் விளக்கி வைத்த ‘வெங்கலக் குத்து விளக்கு’, தங்கமாய் மின்னுமே, அது மாதிரி,  ‘சொர்க்கத்தின் கதவு’ இதுதானோ என்று சொல்லுமளவுக்கு, சுத்தமான கதவு; கோயிலின் கர்ப்பக்கிரகமே இதுதானோ என்று நம்மை மயக்கும் சிற்ப வேலைப்பாடுகள்.  வாயிலின் இருமருங்கிலும், இடை சிறுத்த தேவ மாந்தர்களின் சிற்பங்கள். அதன் அழகைக் கடந்து செல்ல என்னால் முடியவில்லை…. கிருஷ்ணர்  : எத்தனை photos எடுத்தாய்….? மேகலா  : ராணிமா cross பண்ணிப் போய் விட்டா கிருஷ்ணா. அவளைக் கூப்பிட்டுக் காட்டினேன். அதில் தவழும் கண்ணன் வேறு தவழ்ந்து கொண்டிருந்தாரா….. நிறைய்….ய photos எடுத்தோம். நான் தேவமாந்தர் பெண்ணோடு, ‘selfie’ எடுக்க try பண்ணினேன். எனக்கு ‘ஆங்கிள்’ சரியா கிடைக்கல. ‘ராணிமா’ எடுத்திட்டா. Photos எடுத்த பின்பு, கோயிலுக்குள் நுழைந்தோம் கிருஷ்ணா. நாங்கள் கோயிலுக்குள் நுழைந...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 115

                                    காலத்தின் வலிமை பற்றி வியாசர் மேகலா  : திரௌபதி பேசிய பிறகு, அர்ஜுனன், ‘உலகிலுள்ள மக்களையெல்லாம் காப்பாற்றுவது தண்டனை நீதியே! தண்டனை சாத்திரம் இல்லையென்றால், உலகில் நியாயம் இருக்காது. குற்றங்களுக்குரிய தண்டனையை தீர விசாரித்து அளிக்கும் அரசன் இல்லாவிட்டால், மக்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்களுக்குள்ளும் அடங்க மாட்டார்கள்.  கல்வி கற்றல், ஒரு வேலையை முழுமையாகச் செய்து முடித்தல் என்பதற்குக் கூட, அரசனின் கண்டிப்பு அவசியம் தேவை. அரசே! முழுமையான சிறப்புப் பெற்ற காரியம் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. நன்மையும், தீமையும் கலந்ததாகத்தான் எல்லாக் காரியங்களுமே இருக்கின்றன.  பெரியவர்கள் சென்ற பாதையில் செல்வதுதான் நமக்கிருக்கும் வழி.  எனவே, ஆட்சியை நடத்துங்கள். மக்களைக் காப்பாற்றுங்கள். தவறு செய்பவர்களைத் தண்டியுங்கள். யாகங்களை நடத்துங்கள். தானங்களை வழங்குங்கள். பகைவர்களைக் கொல்லுங்கள். ஆயுதமேந்தி ஒருவன் நம்மைத் தாக்க வந்தால், அவனை நாம் தாக்குவதாலோ, கொலை செய்வத...

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 1

  கிருஷ்ணர்   : ஹாய் மேகலா! என்ன, உன்னை இந்தப் பக்கம் ஆளையே காணோமே…. எங்க போன….? கல்யாணம் இரண்டு நாள் தானே நடந்திருக்கும். உனக்கு மட்டும் பத்து நாட்களாகத் தொடர்ந்ததோ… ஒரேயடியாக லீவு எடுத்திட்டயே….. மேகலா  : எனக்கு மட்டும் special விருந்தா…. அப்படியெல்லாம் யாராலும் கொடுக்க முடியுமா கிருஷ்ணா? கல்யாண வீடு function-க்கு முன்னாடியே நான் பிள்ளையார்பட்டி போகணுமென்று decide பண்ணியிருந்தேன் அல்லவா…..  ‘நிவர்’ புயலாலும், ’புரெவி’ புயலாலும் அந்த program, cancel ஆகிப் போச்சுல்ல கிருஷ்ணா….  எனக்கு மனசு சமாதானமே ஆகல கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : வெளியவே போக முடியாம மழையா மேகலா…? மேகலா  : வானிலை அறிக்கை சொன்ன நாளிலெல்லாம் பெருசா மழையில்லை கிருஷ்ணா… ‘கல்யாண வீடு’ முடிந்த பின், மழை ‘round’ கட்டி அடித்தது. Dec 10-ம் தேதி திண்டுக்கல்லில் ஒரு கல்யாண வீடு நடக்க இருந்தது. வேலை, அலுப்பு…. என்று தொடர்ந்து வந்த சலிப்பினால், திண்டுக்கல் கல்யாண வீடு attend பண்ணணும்; அதோட சேர்ந்து பிள்ளையார்பட்டியும் சென்று விட வேண்டும்….  ஒரு நாள் முன்னமேயே கிளம்பிச் சென்று, எங்காவது தங்கியிருந்த...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 114

                          யுதிஷ்டிரரின் மனக் குழப்பம் (சாந்தி பர்வம்) மேகலா  : இறந்தவர்களுக்கெல்லாம் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த பிறகு, திருதராஷ்டிரன் முதலானோர், நகரத்திற்கு வெளியே, கங்கைக் கரையிலேயே ஒரு மாத காலம் தங்கினார்கள். அந்த சமயத்தில், வியாசர், நாரதர், கண்வர் போன்ற பல மஹரிஷிகளும் அங்கே வந்தார்கள். பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த தருமபுத்திரருக்கு ஆறுதல் கூறினார்கள். நாரதர், தருமபுத்திரரைப் பார்த்து, ‘தர்மத்தின் வழியில் நின்று, இந்தப் பூமி உன்னால் வெல்லப்பட்டது. பாண்டவனே! நீ மனமகிழ்ச்சியுடன் இருக்கிறாயா, அல்லது உன்னைச் சோகம் பீடித்திருக்கிறதா?’ என்று கேட்டார். அதற்கு தருமபுத்திரர் சொன்னார்,  ‘கிருஷ்ணருடைய கருணையினாலும், பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தினாலும் இந்தப் பூமி என்னால் வெல்லப்பட்டது.  ஆனால், என் மனதில் துக்கம் தான் மிஞ்சியிருக்கிறது.  பிள்ளைகளையும், உறவினர்களையும் இழந்து நாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, ஒரு தோல்வியாகவே எனக்குக் காட்சி தருகிறது.  எங்களால் யுத்தத்தில் கொல்...

நீங்க..., நல்லவரா..., கெட்டவரா...? - பகுதி 6 (நிறைவு)

  மேகலா   : கிருஷ்ணா…! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன குழப்பம்…? நல்லவங்களைத் தேடுவது உனக்கு அவ்வளவு கஷ்டமாப் போச்சா….? மேகலா  : பிரபலங்களில், நல்லவங்களைத் தேடும் போது, குறைகளை ஒதுக்கி விட்டு, நிறைகளை மட்டும் எடை போடலாம்…  குறைகளை விட, நிறைகளை அதிகம் பார்த்து, நல்லவர்களை அடையாளம் காணலாம். ஆனால், எங்களை மாதிரி சாதாரண மக்களிடையே நல்லவர்களைத் தேடுவதில் தான் குழப்பமே வருகிறது கிருஷ்ணா.  நல்லவர்களை எப்படி அடையாளம் பார்ப்பது கிருஷ்ணா…? கிருஷ்ணர்  : பொறுமையாய் இரு…. பொறுமையான கண்களுடன் பார் மேகலா…..  சில சமயங்களில், நல்லவர்களாக இருப்பவர்கள், பல சமயங்களில் நம் மனதுக்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொள்வார்கள். பொது இடங்களில், நம் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்பவர்கள், personal-ஆக நல்ல attitude இல்லாமல் இருக்கலாம்.  இப்படி ஒவ்வொரு விஷயமாக யோசித்துப் பார்க்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக நல்லவர்களை அடையாளம் காணலாம் மேகலா. எப்படியிருந்தாலும், குறைகளோ, நிறைகளோ; நம் மனதுக்குப் பிடிக்குது, பிடிக்கவில்லை என்ற கண்ணாடியைக் கழட்டி வ...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 113

மேகலா   : காந்தாரி, ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சம் அழிய சாபம் கொடுத்தாள் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இவ்வாறு காந்தாரி மிகவும் கோபமுற்றுத் தன்னை சபித்த போது, கிருஷ்ணர் புன்சிரிப்புடன் அதற்குப் பதில் சொன்னார். ‘க்ஷத்திரியப் பெண்மணியே! நீ சொன்னது போல் நிகழ்ச்சிகள் நடந்தேறப் போகின்றன என்று எனக்கும் தெரிந்துதான் இருக்கிறது.  என்னுடைய குலமாகிய விருஷ்ணி குலம் அழியத்தான் போகிறது. அதில் சந்தேகமில்லை. என்னைத் தவிர அந்தக் கூட்டத்தை அழிப்பவன் ஒருவன் இல்லை.  ஆகையால், அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டே அழிவார்கள். கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார், ‘காந்தாரி! சோகத்தில் உன் மனதை ஆழ்த்தி விடாதே.  பெரியவர்களின் வார்த்தைக்குச் சற்றும் மதிப்புத் தராமல் அழிவை விரும்பியே செயல்பட்ட துரியோதனனின் நடத்தையைச் சற்று நினைத்துப் பார். தடுக்காதது உன் குற்றம் அல்லவா?  அப்படிப் பார்த்தால் உன்னுடைய குற்றத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் நாசமடைந்தார்கள் என்றல்லவா ஆகிறது? நீ செய்த அந்தத் தவறை என் மீது போடுவது என்ன நியாயம்? இறந்தவன், தன்னை விட்டு ஓடி விட்டவன், காணாமல் போய் விட்டவன் ஆகியோரை நினைத...