Posts

Maturity - பாகம் 2

கிருஷ்ணர்  : ஒரு சம்பவத்தில், தன்னுடைய அறியாமையை விலக்கிய ஒருவரைச் சொல்ல முடியுமா…? மேகலா  : ஒரே சம்பவத்தின் மூலம், சாதாரண மக்களுக்கு ‘அறியாமை’ விலகும் என்பது ரொம்ப கஷ்டம் கிருஷ்ணா….  பணப் பிரச்னையில், நம்முடைய இயலாமை, நமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்கும். ஒரு செயல், தோல்வியில் முடியும் போது, அது தரும் வலி, அந்த தோல்வியை முறியடிக்கக் கற்றுக் கொடுக்கும்… இப்படி ஒவ்வொரு சம்பவமும், மெள்ள மெள்ள ஒரு மனிதனை, வாழ்க்கையை அறிந்து கொள்ளக் கற்றுக் கொடுக்கும்….. ஒரே சம்பவம், மனிதனை புரட்டிப் போடுமா…. ஹாங்…! எனக்கு வால்மீகி முனிவர் கதை ஞாபகம் வந்து விட்டது கிருஷ்ணா…. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, மஹரிஷியாவதற்கு முன்னாடி, ‘ரத்னாகர்’ என்னும் வழிப்பறிக் கொள்ளைக்காரர். காட்டு வழியே செல்லும் வழிப்போக்கர்களை வழிமறித்து, அவர்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கும் கொடுந்தொழில் செய்து வந்தார். சில சமயங்களில் கொலை கூட செய்து விடுவதுண்டு… இப்படியான காலகட்டத்தில், அந்தக் காட்டு வழியில், வேத விற்பன்னர்கள் கூட்டமாக வந்தார்கள். பார்ப்பதற்கு செல்வச் செழிப்பாக இருந்தவர்களிடம் கொள்ளையடிக்க, கொள்ளைக்காரர் அ...

Maturity - பாகம் 1

மேகலா  : யாரோ, யாரையோ தேடுவது போல இருக்குது…. யாருன்னு பார்ப்போம்…. கிருஷ்ணர்  : நீலப்புடவை கட்டிய பெண் யாராவது இங்கு வந்தாளா…. நீங்க பார்த்தீங்களா…, சொல்லுங்களேன்…. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள்… மேகலா  : கிருஷ்ணா…., யாரைத் தேடுகிறாய்…. கிருஷ்ணர்  : ஓ…! மேகலா…., வந்துட்டயா…., ‘வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள்’’ என்ற வார்த்தையை முடிக்கும் முன்னேயே வந்து விட்டாயா…. யப்பா…., இப்பத்தான் நிம்மதி…. கடந்த ஒரு வாரமாக உன் குரலே கேட்கவில்லையா…, காதே இருண்டது போல இருக்கு…. இனி பரவாயில்லை…. காதுக்கு கொஞ்சம் ‘சளசள’வென்று பேச்சு சப்தம் கேட்கும்…. மேகலா  : என்ன கிருஷ்ணா…., என்னைத் தேடியது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சளசளன்னு’ பேசுவேன்னு சொல்லி, என்னை ‘வாயாடி’ ஆக்கி விட்டாயே…. என்னை எதற்கு தேடினாய் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : நீ ரிஷிகேஷ் சென்று வந்ததைப் பற்றிப் பேசிப்….., பேசி…., பக்கங்களையெல்லாம் நிறைத்து விட்டாயா…. இனி அடுத்த subject பேசுவதற்கு கொஞ்ச காலம் ஆகுமோ என்று நானும் சும்மா இருந்தேன். ஆனாலும், ஏதாவது topic எடுத்து வருவாயோ…, என்று இன்று வாசலைப் பார்க்க...

Motivation - பகுதி 9 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : கனவுகளை விதைப்பதும் motivation தான். நியாயமான கனவுகளை, சம்பந்தப்பட்டவரை, ‘இது தான் என் கனவு’ என்று நம்புமளவுக்கு உருவாக்குபவர்களை, அதிலும், அப்துல் கலாம் மாதிரி வரணும்; பெரிய scientist ஆக வரணும், doctor ஆக வரணும் என்று சொல்லிச் சொல்லி செதுக்கும் சிற்பிகளை, உருவாகிய பின், கோயில் கட்டி கும்பிடணும்…. motivation-ல் உன்னதமான motivation இது தான் என்று நான் சொல்லுவேன்….. மேகலா  : இக்கட்டான சூழலில், சிக்கலில் மாட்டியிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதுதானே தலை சிறந்த motivation….. கிருஷ்ணர்  :  Motivation என்றாலே, தன்னம்பிக்கை கொடுப்பதுதானே…. தன் திறமையை அறிய வைப்பதுதானே….,  கதை சொல்லி விளங்க வைத்தாலும், இடித்துரைத்து எடுத்துச் சொன்னாலும், சிக்கலில் மாட்டிய பின், வழி சொல்லி ஊக்குவித்தாலும், எல்லாமே தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுப்பதுதான்…. இதில் எது சிறந்தது என்று ஆராய்வதை விட, நம்முடைய அக்கறை, ஆறுதல் இன்னொருவரை முன்னேறச் செய்ய வேண்டும்…. மேகலா  : You are correct கிருஷ்ணா…. நான் ஒரு சம்பவத்தை உன்னிடம் சொல்கிறேன்… நம்மிடம் வந்து ஒருவர் தங்கள் மன அ...

Motivation - பகுதி 8

கிருஷ்ணர்   : …… சிவாஜி, அவருடைய தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர் அம்மா, ’ஜிஜாபாய்’, சிவாஜிக்கு, சிறு வயதிலேயே ராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி, பாரத நாட்டின் பெருமைகளை, கலாச்சாரத்தை, வீரத்தை எடுத்துச் சொல்லி, சிறு வயது சிவாஜிக்கு தேசப் பற்றினைத் தூண்டி விட்டார். அது அவருடைய மனசுக்குள் ஆழமாகப் பதிந்தது. அவருடைய பயமறியாத் தன்மையை, வீரமாக மாற்றிய பெருமை, அவருடைய அம்மாவைச் சேரும். அதன் பிறகு, அவருடைய ஆசிரியரான தாதாபாய் கொண்டதேவ் அவர்களிடம், குதிரையேற்றம், போர்முறை, அரசு நிர்வாகம் முதலியவற்றில் பயிற்சி எடுத்தார். அம்மா வளர்த்த வளர்ப்பு, பயமறியாதது. ஆசிரியர் அளித்த பயிற்சி, பேரரசராக்கியது.   இங்கு, ஒரு வீரன் உருவாவதற்கு, மனதில் ஆழமாகப் பதியும்படிக்கு, கதையைச் சொல்லும் அன்பும், அரவணைப்பும் மிக்க அம்மா இருந்திருக்காங்க பார்…..   சொல்லப் போனால்…., கதை சொல்லத் தெரிந்த அம்மாக்கள்…., தான் அறியாமலேயே, ஒரு சத்ரபதி சிவாஜியையோ…, விண்வெளியில் சாகசம் புரியும் அப்துல் கலாமையோ உருவாக்கலாம் இல்லையா….. மேகலா  : Yes…., boss…. கிருஷ்ணா, நான் கூட கதை சொல்லும் அம்மாவாக, ஆச்சியாக, ஐயாமா...

Motivation - பகுதி 7

மேகலா   : கிருஷ்ணா…, நீயே ஜராசந்தனின் கதையைச் சொல்லச் சொல்லி விட்டாய்… எனக்கு ‘நுங்கு பதநீர்’ குடிச்ச மாதிரி சில்லுனு ஆயிருச்சி கிருஷ்ணா…. ஜராசந்தனுடைய பெற்றோருக்கு, ஆரம்பத்தில் குழந்தைப்பேறு இல்லாமல், பிள்ளை வரம் வேண்டி, ஒரு மாமுனிவரிடம் வரம் கேட்டனர். அவரும், மன்னனை ஆசிர்வதித்து, ஒரு கனியைக் கொடுத்து, அவனுடைய மனைவிக்கு கொடுக்கச் சொன்னார். மன்னனுக்கு இரண்டு மனைவிகள். அதனால், அந்தக் கனியை இரண்டாக அறுத்து, இருவருக்கும் சமமாகக் கொடுத்தான். அவர்கள் கர்ப்பமுற்றார்கள். குழந்தை பிறக்கும் காலம் வந்தது. இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறந்தது. என்ன ஆச்சர்யம்…., ஒரே குழந்தை இருவருக்கும், இரு கூறாகப் பிறந்தது…. உயிரற்ற பிண்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, அந்தப் பிண்டங்களை குப்பைத் தொட்டியில் வீசினர். அப்பொழுது அங்கு சுற்றித் திரிந்த ‘ஜரை’ என்னும் அரக்கி, அந்த இரு பிண்டங்களையும் கையிலெடுத்து ஒட்ட வைக்க முயற்சிக்க…, என்ன அதிசயம்…, அந்தப் பிண்டங்கள் ஒன்று சேர்ந்து குழந்தையாக உயிர் கொண்டது. அதிசயத்துடனும், ஆச்சர்யத்துடனும், ஜரை, அந்தக் குழந்தையை மன்னனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அரண்மனையே குதூ...

Motivation - பகுதி 6

கிருஷ்ணர்  : தவறு செய்யும் போது மட்டும் தான் தட்டிக் கேட்பானா…. செய்ய முடிந்த வேலையை பயத்தினால், செய்வதற்கு பின்வாங்குவான் பாரு…, அவன் மீது பயங்கரமாய் கோபம் வரும்… ஆனால், அந்த நேரத்தில், கோபத்தைக் காட்டிலும், வேலையின் தன்மையை எடுத்துச் சொல்லணும். அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மீது அக்கறை மட்டுமல்ல…, அதனால் வரப் போகும் நன்மைகள் முழுவதும் அறிந்த அனுபவசாலிகளாகவும் இருக்க வேண்டும்… அப்பேற்பட்டவர்கள், பயத்தைப் போக்க முற்படும் போது, strong-ஆகப் பேசினால் தான் வேலையைச் செய்ய வைக்கவே முடியும் மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…., நீ சொல்லும் போது தான் தெரியுது….  motivation பண்ணுபவர்கள், சாதாரணமாக, ‘எடுத்தோம், கவுத்தோம்னும்’ பேசக் கூடாது; கோபத்தால் எகிறவும் கூடாது… உக்கார்ந்து class – உம் எடுக்கக் கூடாது… என்ன மாதிரி வார்த்தைகளைப் போட்டால், கேட்பவன் மனம் உடன்படும் நிலைக்கு வரும் என்பதை உணர்ந்து technique-ஆகப் பேச வேண்டும்….  ஸ்ரீகிருஷ்ணர், வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவதில் படு சமர்த்தர் என்பதற்கு, மகாபாரதத்தில் வரும் இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம்… கிருஷ்ணர்  : ’ராஜசூய ய...

Motivation - பகுதி 5

மேகலா  : நீ சொல்லியது மாதிரி என்று simple ஆகச் சொல்லலாம் கிருஷ்ணா…. அர்ஜுனனுக்கு நீ எடுத்த சுளுக்கு…, அதுதான் உலகின் best சுளுக்கு எடுத்தல் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…., அப்படி என்ன பிரமாதம்… சுளுக்கு தான எடுத்தோம்… மேகலா  : சுளுக்கு…, தானவா…, என்ன கிருஷ்ணா, லேசா சொல்லிட்ட…. அர்ஜுனன் வாழ்ந்த காலம் என்ன…, நாங்க வாழுற காலம் இன்று வரையிலும், எங்கள் பிரச்னை எங்களை அழுத்தும் போது…, கிருஷ்ணா, உன் வார்த்தை எங்களை உசுப்பேத்துவது போல, வேறு ஒருவருடைய motivation…, எங்களுக்கு அத்தனை தைரியத்தைக் கொடுக்க முடியாது….. அர்ஜுனன், துரோணாச்சாரியாருடைய நம்பிக்கைக்குகந்த மாணவன்…. எம்பெருமான் சிவபெருமானிடமே, பாசுபதா அஸ்திரத்தினை ஏவும் பயிற்சி பெற்றவன். அர்ஜுனனின் வில் திறமையின் மீது கொண்ட பயத்தினால் தான் துரியோதனன், பரசுராமருடைய மாணவன் கர்ணனை அங்க தேசத்து மன்னனாக்கி தன் நண்பனாக்கினான்… எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அர்ஜுனன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், ஸ்ரீகிருஷ்ணரே அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வந்திருந்தும் கூட, எதிரில் நிற்பவர், தன் உறவினர்கள்…, இவர்களை எப்படி கொல்வது என்று மனத்த...