ஆளுமை - பாகம் 3
மேகலா : இந்த ‘மண்ணின் மைந்தன்’, ‘மாணவர்களின் நம்பிக்கை’, ‘ஏவுகணைகளின் தந்தை’, பாரத ரத்னா, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்… கிருஷ்ணர் : அவர், எளிமையானவர், நேர்மையானவர்…, அதே நேரத்தில், தீவிரவாதத்தின் வீர்யத்தை உணர்ந்தவர். நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளிடம், அஹிம்சை பேசக் கூடாது… ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ – என்று அந்நிய சக்திகளிடம் சிரித்துக் கொண்டே சொன்னாரா, இல்லையா… ‘பொக்ரான்’ குண்டு வெடிப்புச் சோதனையை நடத்தி…, பாரத நாட்டின் பலத்தைக் காட்டி, பக்கத்து நாடுகளுக்கு கிலியைக் கொடுத்தாரா, இல்லையா… இந்த ஒரு நிகழ்ச்சியினால், பாரத நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்தாரா, இல்லையா…. அவரைப் பற்றி ஒரு comment-ஐ, நீ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அதைச் சொல்லேன்…. மேகலா : கலாம் அவர்கள் மறைந்த போது, ஒருவர், தன் கடையின் முன்னால் எழுதியிருந்த கண்ணீர் அஞ்சலியா கிருஷ்ணா… கிருஷ்ணர் : ஆமாம்…, அதேதான்… மேகலா : ‘ஐயா, எங்களுக்கு பெரிய அறிவாளிகளையோ, தலைவர்களையோ தெரியாது… எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், நீங்கள் மட்ட...