பேச்சுத்தமிழ் - பாகம் 10

மேகலா : நீ சொல்றது ரொம்ப correct கிருஷ்ணா… ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்துல ஏறி வைகுந்தம் காட்டினானாம்’ – அப்படீங்கிற பழமொழிய, சர்வ சாதாரணமா…, பள்ளிக்கூடம் போய் பட்டம் வாங்காதவன் கூட சொல்லுவான்… ஆனா, இதில் special என்னன்னா, ’யாரை’ எப்படி எடக்கா பேசுறாங்கன்னு, கேக்குறவன் கப்புனு புரிஞ்சிக்குவான்… ‘யாரு’…, ‘இவனா’…, இவனுக்கு அடுத்த தெரு கூட தெரியாதே. இவன் ‘காசி’க்குப் போனானாமா… யார் காதுல பூ சுத்துறாங்க….

கிருஷ்ணர் : காதுல பூ சுத்துறதுனா என்ன…?

மேகலா : ஒரு ஆளு காது குடுத்து கேட்டா, இஷ்டத்துகு reel வுடுறது… நான் அங்க போனேன்…, இங்க போனேன்…, இதை சாதிச்சேன்…, அதப் புடிச்சேன் – அப்படீன்னு…, காதுல ரத்தம் வர்ற அளவுக்கு…, முழம் முழமா அளந்து விடுறது….

கிருஷ்ணர் : முழம் முழமா அளக்கிறதா…. யப்பா…, வுட்டா, இதுக்கு தனி இலக்கியமே போடுவ போலயே… ஏன் மேகலா…., இந்த மாதிரி பழமொழியாகட்டும்.., நடைமுறை மொழியாகட்டும்…, எப்படி உருவாகுது….

மேகலா : கிருஷ்ணா…, இப்போ, நம்ம ரெண்டு பேரும் பேசும் போது…, கிண்டலாகப் பேசுவது, ரொம்ப பிடித்தமான இயல்பான பழக்கம் தான கிருஷ்ணா… அப்படிப் பேசும் போது, அங்க கேட்டது…, எங்கேயோ படிச்சது…, ‘வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோ’ன்னு சொல்லிபுடுவாங்க… மத்தப்படி, பழமொழிகள்…, ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’ங்கிற மாதிரி பழமொழிகளை, இயற்கையின் குணநலன்களை பதிவு செய்வதுதான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அவ்வை எழுதிய ஆத்திசூடியை விட valuable ஆக இருக்கு மேகலா… எனக்கு இதுக்கு முடிவுரை சொல்லவே பிடிக்கலே… ‘சொல்லச் சொல்ல’ நாவெல்லாம் இனிக்கும் பேச்சுத் தமிழ் இலக்கியம்னு சொன்னால், அது மிகையாக சொல்வதே கிடையாது… எங்கே…, இயற்கையின் இயல்புகளை பதிவு செய்த பழமொழியைச் சொல்லேன்….

மேகலா : ஐயோ…, இதெல்லாம் நீ கேட்கணுமா கிருஷ்ணா… என் மனசுல முதல்ல வர்ற பழமொழி…, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’…

கிருஷ்ணர் : எவ்வளவு நல்ல பழமொழி. ஆடி மாசம் வந்ததை மறந்த விவசாயிகளை ஞாபகப்படுத்தும் பழமொழி…

மேகலா : எப்படி கிருஷ்ணா…, ஆடி வந்ததை மறப்பாங்க… அதுதான், ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’னு சொன்ன மாதிரி, பேய்க்காத்து சுத்தி சுத்தி அடிக்கும்ல… டப்பாலயும், பெட்டியிலயும் கொட்டி வச்சிருக்கிற விதைகளை, தான் மறந்தாலும், காத்து ஞாபகப்படுத்திரும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Correct…, correct…

மேகலா : விதைப்பு வேலை முடிஞ்சதும், அடுத்த வேலையையும் உஷார்ப்படுத்திருவாங்க…

‘ஆடியில விதைப்பு, ஆவணியில முளைப்பு’ – என்ற பழமொழியை குறித்து வைத்து…, நீ பாட்டுக்கு தூங்கிறாத அப்பு… நல்லா கவனிச்சாதான், ஆவணியில முளைப்பைப் பார்க்க முடியும் – அப்படீன்னு பண்ணையாட்களுக்கும் அலாரம் வச்சிருவாங்க கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh!

மேகலா : இதுல இன்னொரு நுணுக்கத்தையும் கத்துக்குடுக்குறுவாங்க….! நீ பாட்டுக்கு மெள்ள விதைக்கலாம்னு இருக்காத… ஆடி முதல் பத்து; ஆவணி நடுப்பத்து; புரட்டாசி கடைசிப் பத்து; ஐப்பசி முழுவதும் நடலாகாது’ – என்று எத்தனை நுணுக்கமாக கத்துக்குடுக்குறாங்க… ஆடிப்பெருக்கு அன்று, நதி பெருகி ஓடும் என்பதால், ஆடி முதலிலேயே விதைக்கலாம், நடலாம்… அதை விட்டா, ஆவணி நடுவிலே மழை பெய்யும்… ஆவணி நடு மாசத்துல கூட நடலாம், விதைக்கலாம்… மறந்துட்டீனா…, புரட்டாசி மழையில விதைக்கலாம், நடலாம்… புரட்டாசி கடைசில கூட விதைச்சிரலாம். ஆனா…, ஐப்பசி அடைமழை காலத்துல, விதைப்பும் கூடாது…, நடவே கூடாது…, மழை தண்ணியிலே நிக்காது.., என்று, புதியவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது போல, நடவுமுறையை பதிவு செய்கிறார்கள்…

கிருஷ்ணர் : இதப்பார்ரா…., ஒரு data கிடையாது…, record கிடையாது…, file கிடையாது… just பழமொழி… Entire விவசாயிகளுக்கும் சொல்லி புரிகின்ற எளிமையான, ஆனால் strong ஆன பழமொழி… Just 2 வரி…, விவசாயத்துக்கே இலக்கணம் எழுதிட்டாங்க…

மேகலா : அப்படியா…, இப்ப இந்தப்பழமொழியவும் நீ பாராட்டியே ஆகணும் கிருஷ்ணா..

கிருஷ்ணர் : அது என்ன பழமொழி…

மேகலா : ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’

கிருஷ்ணர் : Mathlab kya hai…?

மேகலா : தை மாதம் விவசாயிகளுக்கு, அறுவடை காலம்… நெல் அறுவடை செய்து, வியாபாரிகளுக்கு…, வியாபாரிகளுக்கு கை மாற்றிய பின், கையில பணம் புரளும் காலம்… வீட்டில் திருமணத்திற்கு பெண்ணோ…, பிள்ளையோ இருந்தால்.., நகை வாங்கி, சீர் செனத்தி செய்து, கல்யாணம் பண்ணி வைக்கலாம்… ரொம்ப நாளாக பேசிக் கொண்டிருந்த இடத்தை வாங்கி, விவசாயத்தை விரிவுபடுத்தலாம்… இருப்பதற்கு வசதியாக மச்சுவீடு கட்டலாம்… எல்லா வளமான திட்டங்களையும் செயல்படுத்தலாம் – என்று நினைக்க வைப்பதே, தை மாதத்தின் சவுகரியம்… ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று ஒரு விவசாயி சொன்ன அர்த்தமுள்ள பொன்மொழி கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4