பேச்சுத்தமிழ் - பாகம் 12
மேகலா : ‘எலி ஏன் அம்மணமா ஓடுது’….
கிருஷ்ணர் : ‘ஹேங்’…. என்கிட்ட கேட்டால்…. ஓ! இது பழமொழியா…
மேகலா : கிருஷ்ணா…, யாராவது நம்மகிட்ட வந்து தேவையில்லாம ‘காகா’ பிடிக்கிறாங்கன்னு வச்சிக்கோ…
கிருஷ்ணர் : அதுக்கு….
மேகலா : எலி வீட்டுக்குள்ள, நமக்குத் தெரியுற மாதிரி ஓடுமா…. விளக்கு அணைஞ்சா பிறகு, திருட்டுத்தனமா ஓடுமா… எலி, open statement மாதிரி கண்ணு முன்னே ஓடுனா…
கிருஷ்ணர் : ஓ! அதுதான் அம்மணமா ஓடுறதா….
மேகலா : ‘நுணலும் தன் வாயால் கெட்டுப் போகும்’…
கிருஷ்ணர் : இதுக்கும் பழமொழியா…
மேகலா : இங்கு எல்லா உணர்வுகளுக்கும் பழமொழி உண்டு… வேண்டுபவர்கள் வந்து அள்ளிக் கொள்ளலாம்…
கிருஷ்ணர் : மக்களே! வாங்க! வாங்க! வந்து எங்கள் தமிழைப் பேசுங்க…, பேசுங்க… ஆமாம், போகிற போக்கில, ஏதோ ‘காகா’ பிடிக்கும் வேலைன்னு சொன்னாயே…, அது என்ன…?
மேகலா : ஒரு ஆளிடம் காரியம் சாதிக்கணும்னு காலைப் பிடிக்கும் போது போடும் build-up…., அதைத்தான்…, என்னமா ‘மஸ்கா’ அடிக்கிறான்…, ‘காகா பிடிக்கிறான்’பாங்க…
கிருஷ்ணர் : புதுப்புது மொழியா பேசுறயோ…
மேகலா : புதுமொழி இல்ல கிருஷ்ணா…, பழகுன மொழிதான்… இது என்ன பிரமாதம். இன்னும் புதுப்புது ஐட்டமெல்லாம் இருக்கு கிருஷ்ணா… ஆடு, மாடு, கோழி, சேவல்ங்கிற வரிசையில, இன்னுமொருவர்…, ‘ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, கடைசியில என்னையும் கடிக்க வந்துட்டயா’..., அப்படீன்னு கொலவெறியில பேசுறான்னா என்ன அர்த்தம் தெரியுமா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எனக்கு ஒண்ணுந்தெரியாது… நீயே சொல்லு… நானும் கொலவெறியில இருக்கிறேன்…
மேகலா : ஐயோ கிருஷ்ணா…. உன்னை விட்டா எனக்கு வேற கதி யார் இருக்கா…. எதுக்கு இந்த கொலவெறி….
கிருஷ்ணர் : ஏன்னா…, கொலவெறியில எதுக்குச் சொல்றான்னு புரியல… கொலைங்கிறது crime… அதை எதுக்குச் சொல்லணும்… அது எனக்கும் தொத்திக்கிச்சி..
மேகலா : கிருஷ்ணா…, ஒருத்தன், சின்ன அளவுல சிலரை ஏமாத்துறான்… கொஞ்சம் தைரியம் வந்ததும்…, ஆட்டைக் கடிச்சதும், மாட்டைக் கடிக்கிறான்… இதையெல்லாம் கண்டும் காணாமலும் போனவரையே, ஏமாத்தத் துணியும் போது…, ’அங்க சுத்தி, இங்க சுத்தி, எம்மேலேயே மோதுறயா’ன்னும் கேப்பாங்க… பயங்கர கோபத்துல இருக்கும் போது, ‘ஆட்டைக் கடிச்சி…’ என்ற பழமொழியையும் சொல்லுவான்… அப்போ அவன் ஆடுற ஆட்டம் தான் ‘கொலவெறி’….
கிருஷ்ணர் : ஓ! நானும் கொலவெறி ஆட்டம் ஆடட்டுமா….?
கிருஷ்ணர் : கா…, கா…, கா…., என்னம்மா, காகா பிடிக்கிறயா….
மேகலா : ஹேங்! என்ன கிருஷ்ணா…, உன் இயல்பை எடுத்துச் சொன்னா, ‘காகா’ பிடிக்கிறதா சொல்றயே… ‘கடப்பாரய’ முழுங்குன மாதிரி இருக்கு அப்படீன்னு, heavy விஷயத்தை மனசுக்குள்ள மறைச்சி வச்சிருக்கிறத சொல்லுவாங்க… அதுக்கு என்ன பதில் சொல்லுவது…
கிருஷ்ணர் : Oh! என்னையவே மடக்கலாம்னு பாக்குறியா... ‘சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்ல; சுப்ரமணிக்கு மிஞ்சின கடவுளும் இல்ல’…. சுக்குக் கஷாயம் போட்டுக் குடி…, கடப்பாரை கரைஞ்சிரும்’ – அப்படீன்னு சொல்லுவேன்….
மேகலா : வாவ்! எந்த விஷயத்துக்கும், அதைக் கரைக்கக் கூடிய ‘மருந்து’ இருக்கு அப்படீங்கிற விஷயத்தை, உன்னத் தவிர வேற யாரால சொல்ல முடியும் கிருஷ்ணா… சரி, நான் சொல்லும் இந்த நிலைப்பாட எப்படி கீழே இறக்கப் போறன்னு பாக்குறேன்… ‘பணம் வந்ததிலிருந்து, ‘உச்சாணிக் கொம்புல’ ஏறி உக்காந்து, ஆடாத ஆட்டம் ஆடுறா’. இந்த மாதிரி ஆட்களை எப்படி இறக்குவ…
கிருஷ்ணர் : ‘கரைப்பார் கரைச்சா, கல்லும் கரையும்’…, நீ எம்மாத்திரம்… காத்து அடிச்சா கீழே விழுந்திருவ… ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும் போது, , உச்சாணிக் கொம்புல என்ன…, உச்சிமலையில உக்காந்து இருந்தாலும், காத்துக்கும் புயலுக்கும் தலை வணங்கித்தான் ஆகணும்…, அப்படீன்னு சொல்லுவேன்…
கிருஷ்ணர் : பொதுவா…, ’வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்றாலும், ‘பகலில் பக்கம் பாத்துப் பேசு…, இரவில் அதையும் பேசாதே’…. எப்பவும், ‘ஒரு வார்த்தைய அரை வார்த்தையா சுருக்கிப் பேசு’… ‘தவளை தன் வாயால் கெட்ட மாதிரி’…, நீயும் கெட்டுப் போகாத’ – என்பேன்…
மேகலா : ஐயோ! கிருஷ்ணா…., இன்னைக்கு நீ கொடுக்கும் பதிலெல்லாம் super counter கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment