பாலம் - பகுதி 4 (நிறைவு)
மேகலா : சீன அதிபர் மகாபலிபுரம் வந்திருந்த நேரத்தில், அவரை உபசரிக்கும் போது, பாரதப் பிரதமர், நமது தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்திருந்தார் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். மறுநாள் அதிகாலையில், கடற்கரையோரம், walking செல்கிறார். Beach-ல் கிடந்த waste plastic bottle, குப்பைகள், தின்று போட்ட paper என்று பொறுக்கிக் கொண்டே போனவர், அதை ஒரு bag-ல் collect பண்ணி, குப்பைக்கூடையில் சேர்க்கிறார். உடனே social media-க்களில், ‘camera முன்பு நடிக்கிறார்’ என்று போடுகிறார்கள். கிருஷ்ணர் : சொல்லட்டும்.... நடிச்சாக்கூட, நல்லது நடக்குதே.... வெறும் வாய்வார்த்தையாய் மட்டும் பேசல இல்ல... பொதுவா, வீடுகளில் குப்பையைப் பார்த்த உடனே பொறுக்கும் பழக்கமுடையவர்கள், நடந்து போகும் பாதையில் வேண்டாத பொருள் கிடந்தால், அதைப் பொறுக்கத்தான் செய்வார்கள். இவரைப் பார்த்து 10 பேர் குப்பைகளைப் பொறுக்கட்டும். சினிமாக்காரங்க கையில் ‘விளக்குமாறு’ கொடுத்து ‘தூய்மை இந்தியா’ என்று பெருக்கச் சொன்னார் இல்லையா; announce பண்ணிச் செய்தால், ‘தூய்மை திட்டம்’, அவராகச் செய்தால், ‘drama'-வாமா....? சரி, பாலத்தைத் தொடர்ந்து