மனிதர்கள் பலவிதம் - பகுதி 4 (நிறைவு)

மேகலா : Judge, சிதம்பரம் case விஷயத்தில், ‘அவர் தான் எல்லா case-களிலும் kingpin ஆக இருந்திருக்கிறார்’ என்று சொன்னதும், நாட்டின் உயர் பதவியை வகித்தவர், சட்டம் தெரிந்தவர், தப்புச் செய்யாதவர் என்றால், என்ன செய்திருக்கணும்....? மறுப்பு ஒண்ணும் சொல்லாமல், ஓடி ஒளியாமல், C.B.I officers-உடன் சென்றிருக்கணும்...., but ஆள் absconded, கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : ஐயய்யோ..., சட்டச் சிக்கலாகி விடுமே....

மேகலா : கிட்டத்தட்ட 24 மணி நேரம் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. Phone switched off....! C.B.I officers, இரண்டு, மூன்று தடவை அவரோட வீட்டுக்குச் சென்று திரும்புகிறார்கள்.

கிருஷ்ணர் : இந்த நடவடிக்கையே, அவர் குற்றமுள்ளவர் என்று சொல்லிருமே....

மேகலா : நாட்டில் ஒவ்வொரு குடிமகனும், இதைப் பற்றி விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால், அவருடைய குற்றப் பின்னணிகளை, number போட்டு விலாவாரியாக social media-க்களில் list போட ஆரம்பித்து விட்டார்கள். பத்திரிகை, media எல்லோரும் ’ப. சிதம்பரம் தலைமறைவு’ என்று open statement கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நாட்டிலும், பெருசா போராட்டம், எதிர்ப்பு என்று ஒன்றும் நடக்கவில்லை. அவர்கள் கூட்டாளிகள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை; 24 மணி நேரம் கழித்து, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். C.B.I உள்ளே நுழைய முற்பட்டது. வீட்டு security, gate-ஐ மூடி விட்டார். நம்ம C.B.I என்ன செஞ்சது தெரியுமா, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : என்ன....! சுவரேறிக் குதித்தார்களா? பார்த்தேன்.... பின்ன, அப்படித்தானே செய்ய முடியும்...!

மேகலா : அவங்க சுவரேறிக் குதிச்சதுக்குக் கூட ஒரு காரணம் வச்சித்தான் குதிச்சிருக்காங்க, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : என்ன காரணம்....? Arrest பண்ணுவதற்காகத்தானே...!

மேகலா : ஐயே... இதுக்காக மட்டும் பானா சீனா வீட்டில் சுவரேறிக் குதிப்பார்களா..... கிருஷ்ணா, அவர் ஊழலாக செஞ்சு குவிக்கும் போதிலிருந்தே, நீதிபதிகளுக்கு 'something' கொடுத்து, correct பண்ணி வைத்திருந்தாராம். எப்பவாவது, C.B.I விசாரணை, ‘அது இது’ என்று வந்தால், முன் ஜாமீனை உடனே கொடுத்து விடுவார்கள் என்று ரொம்.....ப , நம்....பி செய்திருக்கிறார், கிருஷ்ணா..

கிருஷ்ணர் : ஆதாரம் strong ஆக இருக்கும் போது, எப்புடி.....

மேகலா : நம்ம நாட்டுல அப்படித்தான், கிருஷ்ணா.... "something, something'-க்காக, ரொம்ப விசுவாசமா இருப்பாங்க. அதனால் தான், மேற்படியாளர், வக்கீலைப் பார்த்து, சட்டத்தில் ‘பொத்தல்களைத் தேடிப் பார்க்கப் போயிருந்த போது, ‘தலைமறைவு’, ’phone switch off' என்று பரபரப்புக் காட்டியிருக்கிறது C.B.I.

கிருஷ்ணர் : Oh! அதனால் தான், கதவைச் சாத்தியதும், வேறு வழியில்லாமல், சுவரேறிக் குதித்து, 'arrest' என்று அதகளப் படுத்தியிருக்கிறார்களா.... சரி....! தன்னிடம் தப்பு இல்லாவிட்டால், C.B.I-ஐ தைரியமாக எதிர்கொள்ளலாமே....!

மேகலா : Arrest பண்ணுவதற்கு late ஆக ஆக, முன் ஜாமீன் கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தார்களாம், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : இவர்கள் கேட்ட ‘மீன்’ கடையில் கிடைக்கவேயில்லையா....? இவர் பண்ணிய அக்கப்போரில், இவர் சம்பந்தப்பட்ட ஊழல்களை, ‘அக்கு வேறு, ஆணி வேறாக’ பிரிச்சு மேய்ஞ்சிருப்பாங்களே.....

மேகலா : பின்ன.... இவர் அதிகாரத்தில் இருக்கும் போது, இவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாஜி மந்திரி, இன்னும் ஏகப்பட்ட ஊழல்களின் ஆதாரங்களை, C.B.I வசம் கொடுத்திருக்கிறாராம். அவர் யாரென்று என்னைக் கேட்காதே.... உனக்கு அத்தனையும் தெரியும்....

கிருஷ்ணர் : ஐயோ.... சத்தியமா எனக்குத் தெரியாதும்மா... ஆமாம், எனக்கு ஒண்ணு புரியல மேகலா. 400 கோடி, 800 கோடி என்று ஒண்ணல்ல, ஏகப்பட்ட ஊழல்களில் பணத்தை சம்பாதித்து என்ன செய்யப் போகிறார்கள்......?

மேகலா : இவர்கள் கையில் இருக்கும் பணத்தை எடுத்தாலே போதும், கிருஷ்ணா! எத்தனையோ திட்டங்களை easy-யாக செயல்படுத்தலாம். ஒரு demonetization announce பண்ணி, கள்ளப்பணம், கருப்புப் பணத்தைக் கைப்பற்றியே, போன period-ல், அரசாங்கம், வெளிநாட்டில் கடனே வங்கவில்லை. இந்த முறை, தனித்தனியே பொறியில் மாட்டப் போகும் ‘ஊழல் பெருச்சாளிகள்’ வசம் இருக்கும் பணத்தை வைத்தே, இந்தியா இன்னும் 10 வருஷத்திற்கு உட்கார்ந்து சாப்பிடலாம், கிருஷ்ணா! அவ்வளவு பணம்....!

கிருஷ்ணர் : அடப்பாவிகளா....! அத்தனையும் அரசாங்கத்தை ஏமாற்றிச் சேர்த்த பணம்.... சரி! இப்ப என்ன..., மேற்படியாளரை விசாரணைக்காக C.B.I, ஜெயிலில் போட்டு விட்டார்களா...?

மேகலா : ஆமாம், கிருஷ்ணா! செப்டெம்பர் 5-ம் தேதி case, court-க்கு வந்தது. நீதிபதி, மறுபடியும் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். செப்டெம்பர் 19-ம் தேதி வரை C.B.I custody-யில் வைக்கச் சொல்லி உத்தரவிட்டார். ‘திஹார் சிறை’, ‘தனிமை சிறை’ கட்டிட எண் 7 கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘திஹார் சிறை வேண்டாம்; கடுமையான விதிகளோடு, வீட்டுச் சிறையில் வையுங்கள்’ என்று கெஞ்சினார்.....

கிருஷ்ணர் : ஏனாம்....! அவர் செய்த ஊழலுக்கு, அவரே தீர்ப்பு சொல்லுவாராமா....? நல்லா இருக்குல்ல, கதை...!

மேகலா : அமலாக்கத்துறை வேறு, கையை முறுக்கிக் கொண்டு, முஷ்டியை மடக்கிக் கொண்டு காத்திருக்கிறது.

கிருஷ்ணர் : ஏனாம்.... அடுத்து அவங்க turn-ஆ? எப்படா...., நம்ம கையில் கிடைப்பார் என்றா....?

மேகலா : கிருஷ்ணா! என்ன கேள்வி கேட்டாலும், பதிலே சொல்ல மாட்டேங்கிறாராம், கிருஷ்ணா.... இதில் இன்னொரு விஷயம் நாட்டுக்குள்ளே உலா வருகிறது, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : என்ன.... பலான விஷயங்களில் தொடர்பு இருக்குதாமா...., நெனைச்சேன். குறி வச்ச இடத்திலிருந்தெல்லாம்..., கை வச்ச இடத்திலிருந்தெல்லாம், கேட்ட தொகை வந்து காலடியில் குவியும் போது, மனுஷனுடைய அகம்பாவம், மெள்ள மெள்ள உடம்பெல்லாம் ஊடுருவி, ஆட்டம் போடும். கடனோ, dealing-ஓ கேட்பவன், பொம்பளையைக் கூட்டிப் போய்தான் பேரம் பேசுவான். மேற்படியாளரின் கண்களை அளவெடுத்தேதான் பேசுவான்! பணத்தில் கறாராயிருப்பவன், பலானதில் தோற்றுப் போவான், மேகலா. இவர்களுக்குள் பொதுவான ஒண்ணு என்ன தெரியுமா.... நேர்மையும் இருக்காது; தேசப்பற்றும் இருக்காது.

மேகலா : நீ.... கடவுள்.... உனக்கு மனிதனுடைய வலிமையும் தெரியும்; வலிமையானவனை வீழ்த்தவும் தெரியும். இன்னும் இந்த case எப்படியெல்லாம் போகப் போகிறதோ....

கிருஷ்ணர் : பார்க்கலாம்.....பார்க்கலாம்..... ‘விசாரணை’ ஜெயிக்கிறதா....? ‘ஜனநாயகம்’ ஜெயிக்கிறதா என்று....

மேகலா : என்ன கிருஷ்ணா..... நீ, சூட்சுமமாய்ப் பேசுகிறாயே; ’விசாரணை’, ’ஜனநாயகம்’...... என்று. ஜனநாயக நாட்டில் தானே, ‘விசாரணை’ நடக்கிறது. நீ என்னவோ சொல்லுகிறாயே....

கிருஷ்ணர் : ஜனநாயக நாட்டில்.... குற்றம் சாட்டப்பட்டவர்களும், நிறையப் பேசுவார்கள்; தன் பக்கத்து நியாயம் பேசுவதல்ல, நான் சொல்வது. C.B.I அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருப்பார்கள்; ஆதாரத்தைக் காட்டுவார்கள். அனைத்தும் அரசாங்கத்தின் பழி வாங்கும் நடவடிக்கை என்று இவர்கள் பேசுவார்கள். Press-ம் இவர்கள் பேசுவதை, பூதாகரமாகக் காட்டுவர்கள். ஜாமீன் கிடைத்தாலோ, case-லிருந்து விடுதலையே கிடைத்தது போல, ‘தர்மம் ஜெயித்தது’ என்பார்கள். இது...., ஜனநாயகம்....!

மேகலா : ஹையோ....யப்பா.... நான் பயந்தே போயிட்டேன், கிருஷ்ணா! சட்டத்தின் ஓட்டைகளையெல்லாம் நீ தைத்து விடு, கிருஷ்ணா! சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்....

கிருஷ்ணர் : வர்ட்டா..... escape.......

(இத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2