கொரோனா படுத்தும் பாடு - பாகம் 2
மேகலா : கிருஷ்ணா….. இப்போ சமீபத்தில், என் தம்பி மகள் கல்யாணத்திற்குப் போனேனல்லவா…. கிருஷ்ணர் : என்னது….. உன் தம்பி மகளா…. உங்கள் வீட்டில் தான் எல்லா கல்யாணமும் முடிஞ்சிருச்சில்ல… மேகலா : கிருஷ்ணா….. இது எங்க ‘சின்னய்யா’ பேத்தி கிருஷ்ணா… கிருஷ்ணர் : ‘சின்னய்யா’…. ‘வாவ்’, தூய தமிழ்ச் சொல்; இந்தக் ‘கொரோனா’ time-ல கல்யாண வீட்டிற்கு சென்று ஆட்டம் போட்டாயா….? மேகலா : எங்கேயும் வெளியில் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தோம்…. ஒரு வண்டி நிறைய பாசத்தைக் கொண்டு வந்து, நம்ம மேல கொட்டி, கையில் அவன் மனசு போலயே ‘தகதக’வென மின்னும் ‘சேலையை’,,,,. ஒண்ணல்ல, மூணு கொடுத்து, ‘அக்கா! கல்யாணத்துக்கு வந்திருங்கக்கா’ என்றால், என்ன செய்ய கிருஷ்ணா! அதான்! போய் விட்டேன். கல்யாண வீட்டில், reception-ல் சந்தனமும், கல்கண்டும் வைக்கல; ‘mask’ தான் வைத்திருந்தார்கள். ஒரு chair-க்கும் இன்னொரு chair-க்கும் இடையில் 2 அடி இடைவெளி…… கிருஷ்ணர் : நீங்கள் இடைவெளியைக் கடைப்பிடித்தீர்களா…., நெருக்கிப் போட்டு உட்கார்ந்து அரட்டை அடிச்சீங்களா….? மேகலா : ம்…. கொஞ்சம்…. கடைப்பிடித்தோம்…. கொஞ்சம்….. கிருஷ்ணர் : கொஞ்சம் வி