அரசியல் அதகளம் - பகுதி 3

மேகலா : ‘போஸ்டர் கலாச்சாரம்’. விடிஞ்சி எழுந்து school-க்கு, college-க்குக் கிளம்பிப் போகும் போது, பாலம், பெரிய சுவர், குட்டிச் சுவர் என்று ஒரு இடம் பாக்கியில்லாமல், தலைவர்கள் படத்தையும், கட்சியின் சின்னத்தையும் ஒட்டிட்டுப் போயிருப்பார்கள். சாயந்திரம் வீடு திரும்பும் போது பார்த்தால், poster முழுக்க சாணி அடித்து கலக்கியிருப்பார்கள் கிருஷ்ணா! ‘மக்களின் மனம் கவர்ந்தவர்’, ‘நாட்டின் பாதுகாவலர்’ சாணியில் குளிப்பாட்டப்பட்டிருப்பார்கள்…..

கிருஷ்ணர் : ஐயோ….! பரவாயில்லை மேகலா….. அந்தந்த காலங்களில், மனுஷங்க அவங்களோட எரிச்சல எந்த வழியிலாவது வெளிக்காட்டிக் கொண்டே தான் இருக்காங்க….. நீ சொன்ன ’cartoon கலாச்சாரம்’…… சில பத்திரிகைகளில் வெளியிடும் cartoon-ஐப் பார்ப்பதற்காகவே election time-ல, பத்திரிகைகளின் circulation அதிகரிக்கும் இல்லையா….. இப்ப வருகிற ‘மீம்ஸ்’-ல், drawing திறமை தேவையில்லை அல்லவா……

மேகலா : என்ன கிருஷ்ணா…., இப்படிச் சொல்லிட்ட….! மேடைப் பேச்சை ஓட விட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி comedy clippings-ஐப் போட்டு, சமயத்தில், உளறுபவர் முகத்தில், வடிவேலு முகத்தையோ, கவுண்டமணி முகத்தையோ replace பண்ணி பேசுவது போல, வெட்டியும், ஒட்டியும் ஜகஜ்ஜாலம் பண்ணியிருப்பார்கள் கிருஷ்ணா…. Room போட்டு யோசிப்பது மாதிரி இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh….! சரி…, உனக்குத் தெரிந்த cartoonist யாரையாவது சொல்லேன். எனக்குமே அந்த கழுதை cartoon நல்லா ஞாபகம் இருக்கு. ‘துக்ளக்’ பத்திரிகை ஆரம்பிக்கும் போது, அதன் முதல் issue அட்டைப் படமே இரண்டு கழுதைகள் பேசுவது தானே….!

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நல்லா ஞாபகம் வச்சிருக்கியே….. இந்தியா முழுக்க பிரபலமான cartoonist R. K. லக்ஷ்மண், கிருஷ்ணா…. இவருடைய எல்லா cartoon-லயும், வேஷ்டி கட்டி, overcoat போட்டு கண்ணாடி மாட்டியிருக்கும் ஒரு ‘பொது ஜனம்’, எல்லா incidents-ஐயும் watch பண்ணுவதாக வரைந்திருப்பார் கிருஷ்ணா…. தமிழ்நாட்டு ‘லெவல்ல’, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வரையும் மதனோட cartoon பிரபலமானது. அவர் வரைந்த ‘சிரிப்புத் திருடன் சிங்காரவேலன்’ என்னும் character-ஐ என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : Cartoon படங்கள் மூலம் ‘சித்திரக் கதை’ படிப்பதும், படம் பார்ப்பதுமே தனி சுகம்…. அதே cartoon, அரசியல் நையாண்டி பண்ணுவதென்பதோ, ரெட்டிப்பு சந்தோஷம் இல்லையா…!

மேகலா : கிருஷ்ணா, இந்த மாதிரி அரசியல் கார்ட்டூன்களெல்லாம், pencil drawing-ஆகத்தான் வரையப்பட்டிருக்கும். ஒரு சின்ன கோடு, ஒரு சின்ன வளைவு…., அரசியல் தலைவர்களின் முகத்தை அஷ்ட கோணலாக்கி விடும். போஸ்டரில் இந்த மாதிரி நகாசு வேலை பண்ண முடியாது என்றாலும், ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, பட்டி தொட்டியெல்லாம் பரவிக் கிடந்தது தான் போஸ்டர்… பத்திரிகையும், கார்ட்டூனும் அறியாதவர்கள் கூட, போஸ்டரில் தங்கள் தலைவர்களைப் பார்த்து கொண்டாடவும் செய்வார்கள். வெறுப்பவர்கள் சாணியால் அபிஷேகம் செய்வார்கள்…..

கிருஷ்ணர் : ஏன் மேகலா…. சென்ற election-ல ‘whatsapp’, ‘phone’ மூலமாகவும் message அனுப்பினார்களா….?

மேகலா : கிருஷ்ணா…. சென்ற election-ல என்னோட, ஜெயலலிதா அம்மா பேசுனாங்க….

கிருஷ்ணர் : அப்படியா….. So, போன election-லயே technology attack ஆரம்பிச்சிருச்சு….

மேகலா : சென்ற சட்டசபை election-க்கு முன்னாடி வந்த, நம்முடைய Honorable Prime Minister முதல் தடவையாக பிரதம மந்திரிக்கான candidate ஆக அறிமுகப்படுத்தப்பட்டு நடந்த பாராளுமன்ற election-னிலேயே, technology attack ஆரம்பிச்சிருச்சி கிருஷ்ணா…. அந்த technology attack-னால கவரப்பட்டுதான் மக்கள் B.J.P-க்கு ஓட்டு போட்டதாகக் கூட சொல்வார்கள் கிருஷ்ணா. இப்ப ஒரே ‘technology war’ தான் கிருஷ்ணா…. அதிலும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் ‘caravan’ என்று அழைக்கப்படும் ‘பிரச்சார வண்டி’யைப் பற்றி உன்னிடம் சொல்லியே தீரணும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்ன விசேஷம்…? வண்டியையே மேடையாக்கி விடுவார்களா….?

மேகலா : எப்படி…. எப்படி…. கிருஷ்ணா…. இப்படி துல்லியமாய் அடிக்கிறாய்….? Caravan-க்குள்ள என்ன வசதி இருக்குமோ, எனக்குத் தெரியாது. நிறையப் பேர், தான் travel பண்ணி வரும் வண்டியிலேயே…. ‘Audi’ car மாதிரி, வண்டியின் மேற்புறத்தில் open பண்ணும் வசதி வைத்திருப்பார்கள்…. அதன் வழியாக, தலை தெரியும்படியாகக் காரில் நின்று கொண்டே பிரச்சாரம் பண்ணுவார்கள் கிருஷ்ணா. மக்கள் வண்டியைச் சுற்றி நின்று, தலைவர்கள் பேச்சைக் கேட்பார்கள். காரில் நிற்க முடியாத அம்மா…. காருக்குள் உட்கார்ந்து கொண்டே பேசியதும் உண்டு. இதெல்லாம் சூறாவளிப் பயணத்தின் போது நடக்கும் பிரச்சார யுக்தி…. ‘மேடைப் பெச்சு’ என்பது regular பிரச்சாரம்…

கிருஷ்ணர் : பிரச்சாரம் பண்ண வருவது, மக்களுக்குத் தெரியுமா மேகலா ?

மேகலா : கிருஷ்ணா…., தலைவர்களின் தேர்தல் வியூகத்தில் இதுவும் ஒண்ணு கிருஷ்ணா… ஒரு வாரத்திற்கான சுற்றுப் பயண நிலவரங்கள் பேப்பரில் வந்து விடும் கிருஷ்ணா. இதில் ‘செண்டிமென்ட்’ வேறு…! பெரும்பாலும், தலைவர்கள் பிரச்சாரத்தை மதுரையிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள். தலைவர்கள், ஊருக்கு வரும் முன்னேயே, ’போஸ்டர்களும்’, ‘பேனர்களும்’ தோரணமாகும்…. தெருக்களின் இருமருங்கிலும் கொடிக்கம்பம் நட்டி, கொடியினைப் பறக்க விடுவார்கள். அது மட்டுமில்லை கிருஷ்ணா…. உள்ளூர் மக்களை மட்டும் நம்பாமல், வெளியூரிலிருந்து லார் லாரியாக மக்களைக் கூட்டி வருவார்கள்….

கிருஷ்ணர் : அப்படியும் மக்கள் வருவார்களா…?

மேகலா : வரு… வார்களா…. ரூபாய் 200 கையில் கொடுத்து, பிரியாணியும், ‘குவார்ட்டரும்’ போட்டால்…., வராமல் இருப்பார்களா…! விசில் அடிக்கத் தெரிந்தவர்களையா கூட்டி வருவார்கள் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2