வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 8

மேகலா : யப்பா…. நான் பயந்தே போயிட்டேன்….

கிருஷ்ணர் : என்ன நடிப்புடா சாமி….

மேகலா : கிருஷ்ணா….. ஒருவர் தன் ‘bio-data’-வை சொல்லுவார். ’தான் ஒழுக்கமானவன்; சிகரெட் பிடிக்க மாட்டேன்; மது அருந்த மாட்டேன்; பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்….. ஆனால், ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் என்னிடம் உண்டு….. ‘பொய்’ மட்டும் தான் பேசுவேன்’ என்றானாம்….

கிருஷ்ணர் : வாவ்….. வாவ்….. அட்டகாசம்….

மேகலா : இன்னொரு character-அ கேளு கிருஷ்ணா….. ஒரு படத்துல M. R. ராதா, radio repair கடை வைத்திருப்பார். அவர் தன்னோட customer கிட்ட பொய்யா பேசி பல பிரச்னைகளை இழுத்துட்டு வருவார். அந்த பிரச்னையெல்லாம் அவரோட மனைவியான மனோரமாவை ரொம்பவே சங்கடப்படுத்தும். அவர் தன்னோட புருஷங்கிட்ட பேசி, ‘தினமும் 1 மணி நேரம் மட்டும் உண்மையைப் பேசு; உனக்கு புண்ணியமாப் போகும்’ என்று மனம் வருந்தி வற்புறுத்துவார். அவரும், போனாப் போகுதுண்ணு, ‘சரி…., உனக்காக தினமும் ஒரு மணி நேரம் மட்டும் உண்மையே பேசுகிறேன்’ என்று சத்தியம் செய்து கொடுப்பார்….

கிருஷ்ணர் : உண்மை பேசியதால் என்ன ஆயிற்று….?

மேகலா : M. G. R. தான் ஹீரோ…. அவர் ஒரு case-ல் மாட்டி விடுவார். அவர் விடுதலை பெறுவதற்கான evidence M. R. ராதா கையில் மாட்டும். ஒரு தடவை சாட்சி சொல்லும் போது, உண்மை சொல்லும் நேரம் தாண்டி விடும். இன்னொரு நாள், அது பொய் பேசும் நேரம் என்று தட்டிக் கழிப்பார். இறுதியில், அவரோட சாட்சியால் தான், M. G. R. case-லிருந்து விடுவிக்கப்படுவார். அப்போ, அவரோட மனைவி, ‘ஒரு மணி நேரம் உண்மை சொன்னதற்கே இத்தனை நன்மை கிடைக்கிறதே…., நாள் முழுக்க, வருஷம் முழுக்க உண்மையே பேசினால், எவ்வளவு நல்லது நடக்கும்’ என்ற ரீதியாகப் பேசி, அவரை உண்மையைப் பேச வைப்பார்.

கிருஷ்ணர் : பரவாயில்லையே…. சினிமாவில், உண்மையின் value-வை நாசூக்காகச் சொல்லியிருக்கிறார்களே….. வேற ஏதாச்சும் ‘பொய்’ special இருக்கா மேகலா…..?

மேகலா : அண்டப் புளுகர்களும், ஆகாசப் புளுகர்களும் உலகத்தில் இருக்கும் வரை இங்கு எந்நாளும் பொய் special தானே கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ சொல்லும் special, சாதாரணமானது தானே…..; ’something special பொய்’ ஏதாவது சொல்லேன்….

மேகலா : something என்ன கிருஷ்ணா, ஒரு ‘big thing’ பொய்யே…., நடத்தியிருக்கிறாரே…..

கிருஷ்ணர் : யாரு…..

மேகலா : நம்ம ‘இறையனார்’ தான். மாணிக்கவாசகருக்காக சொன்ன பொய்….. இறையனார் பிரம்படி வாங்கும் வரை போனதா இல்லையா….

கிருஷ்ணர் : ’வாவ்’….. ஆமாம்….. தன் பக்தனுக்காக, பரம்பொருள் பொய் சொல்லுவது கூட, பக்தன் மீது கொண்ட பேரன்பு தானே…. சரி, இறையனார், மாணிக்கவாசகருக்காக சொன்ன பொய்யை எனக்குக் கதையாகச் சொல்லு மேகலா…

மேகலா : கிருஷ்ணா….. அரிமர்த்தன பாண்டிய மன்னன், மதுரையை ஆண்டு கொண்டிருந்த பொழுது, அவருடைய மந்திரி சபையில், அறிவிற் சிறந்த திருவாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், முதன்மை அமைச்சகராக இருந்தார். ஒரு சமயம், மன்னனுடைய குதிரை லாயத்தில், குதிரைகளெல்லாம் வயதாகிப் போனதால், நல்ல லட்சணங்களுடன் கூடிய குதிரைகள் வாங்க வேண்டிய அவசியம் வந்தது. சிறப்பான குதிரைகள் வாங்க வேண்டுமானால், கடல் வாணிகம் தான் செய்ய வேண்டும் என்று யோசித்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன், திருவாதவூரரை அழைத்து, ‘கருவூலத்தில் தேவையான பணம் எடுத்துக் கொண்டு, நல்ல வலிமையான குதிரைகள் வாங்கி வாருங்கள்’ என்று சொல்லி, திருவாதவூரரை அனுப்பி வைத்தான்.

திருவாதவூரரும், சோமசுந்தரனாரை பணிந்து வணங்கி, கருவூலத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு, குதிரை வாங்குவதற்காகக் கிளம்பினார். செல்லும் வழியில், திருப்பெருந்துறையில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபடுவதற்காக கோயிலுக்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த குருந்த மரத்தடியில், ஞானாசிரியனாக அமர்ந்திருந்த எம்பெருமான், திருவாதவூரரை, கையசைத்து அழைக்க, தன்னை மறந்து அவரருகில் சென்று, ஒரு மாணவனுக்குரிய மனப்பக்குவத்தில் அமர்கிறார். ஞானாசிரியன் வசம் தன்னை ஒப்படைத்த திருவாதவூரர், குதிரை வாங்கும் கடமையை மறந்து போனார். கையில் வைத்திருக்கும் அரசாங்கப் பணத்தை, கோயில் திருப்பணிக்கும், அன்னதானத்திற்கும், மனம் நிறைவாக செலவழித்தார்.

நாட்கள் பல கடந்து போயின……

(தொடரும்)

(அடுத்த பகுதியோடு இந்தத் தொடர் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1