எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 8

மேகலா : Yes boss…. கிருஷ்ணா, இன்று தேசிய அளவில் அந்தஸ்து பெற்ற ஒரு விளையாட்டு, ‘கபடி’… இந்தக் கபடி, கிராமத்து மக்களால் விளையாடப் பெற்ற விளையாட்டுதான் கிருஷ்ணா….. எதிராளியைத் தொட்டு, out ஆக்கும் வரை, மூச்சைப் பிடித்துக் கொண்டு, ‘கபடி, கபடி’ என்று சொல்ல வேண்டும். அதற்கு, பழங்காலத்தில் ஒரு பாட்டு உண்டு.

‘நாந்தாண்டா உங்கப்பன்

நல்லமுத்து பேரன்

தங்கச் சிலம்பெடுத்து

தாலி கட்ட வாரேன்’

‘வாரேன்’ என்று ‘தம்’ பிடிச்சிக்கிட்டே வருவாங்க…. வரும் வீரரை, எதிர்த்திசையில் இருக்கும் வீரர் மடக்கி, கீழே விழச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டால், வந்தவர் out…. அவர்கள் மடக்கிப் பிடிக்கும் போது, ‘தம்’ பிடித்தவர், மடக்கியவர்களை கீழே தள்ளி விட்டு, அவர் இருப்பிடத்திற்குச் சென்று விட்டால், அவரைத் தொட்டவர்கள் அனைவரும் out….

கிருஷ்ணர் : சூப்பர்…. சூப்பர்…. மேகலா…. நல்லாயிருக்கே game…. ஏன் மேகலா….

மேகலா : கிருஷ்ணா, இந்தக் கபடி விளையாட்டுப் பாட்டு இருக்குல்ல; இதை கண்ணதாசன் கூட ஒரு படத்துல எழுதியிருக்காரு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படியா…. நாமளா பாடலாமா….

மேகலா : விளையாட்டுல வீரர்கள் நாட்டுப் பாடலைப் பாடினாலும், சினிமாவுல,

‘வாடியம்மா வாடி, வண்டாட்டம் வாடி

ஆத்தங்கரை பக்கத்துல காத்திருக்கேன் வாடி

பலீஞ்சடுகுடு…. சடுகுடு….. சடுகுடு….’ –

என்று இந்தப் பாட்டு வரும். P. சுசீலாவும். L. R. ஈஸ்வரியும் மூச்சிரைக்கப் பாடுவது மாதிரி இந்தப் பாட்டு இருக்கும்….

கிருஷ்ணர் : Oh! ’சடுகுடு’ விளையாட்டு… அதுதானே இந்த game-ன் பெயர். பார்த்தியா மேகலா… மனுஷனுக்குத் தன்னுடைய வேலைகளுக்கிடையில் விளையாடுதல் என்பது, தன்னுடைய உற்சாகம், நட்பு, team work, பொழுது போக்கு என்று எல்லா விதங்களிலும் அவசியமாக இருந்திருக்கிறது. விளையாட்டு, ‘பொழுது போக்கு’ என்று மக்களுக்கு தேவையாக இருந்தாலும், அது வீரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் போது, மக்களிடையே, அது எவ்வளவு பிரபலமாகிறது…. இல்லையா….?

மேகலா : பொதுவாக மக்களிடையே பிரதிபலிப்பதைப் பற்றி நீ கூறுகிறாய் கிருஷ்ணா…. காளையை அடக்குபவர்களிடம் மனதைப் பறி கொடுத்து, அவர்களையே கல்யாணம் செய்து கொண்ட பெண்களை உனக்குத் தெரியுமா கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : என் கிட்டயே தகவலா…. தகவலுக்கே தகவல் சொல்லும் ‘தகவல் களஞ்சியமே’…. ஏழு காளைகளை அடக்கிய பின் தான் நப்பின்னையை நான் கல்யாணம் செய்து கொண்டேன்… தெரியுமா உனக்கு? வீரத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் என்னிடமே கதையளக்கிறாயா…?

மேகலா : யப்பா…. ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராமத்துச் சிறுவனிடம் பேசுகிறோம் என்பதே மறந்து போச்சு கிருஷ்ணா! காளையை அடக்குவதைப் பற்றி உங்கிட்ட சொல்ல முடியுமா கிருஷ்ணா…. ‘ஜல்லிக்கட்டு’ என்று இப்ப சொல்றாங்க. இதன் தூய தமிழ் வார்த்தை என்ன தெரியுமா… ‘ஏரு தழுவுதல்’….

கிருஷ்ணர் : ஆஹா… ‘ஏரு தழுவுதல்’…. உச்சரிக்கும் போதே, சுகமாயிருக்கும் தமிழ்… ஆமாம், காளை மாட்டுக்கு, ‘எருது’ என்று ஒரு பெயர் உண்டா…. காளையை அடக்கும் போது, வீரன், ஒரு கையால் கொம்பைப் பிடித்து, மற்றொரு கையால், கழுத்தை வளைத்து, அடக்க முயற்சி செய்வானா…. அதனால் தான் ‘ஏரு தழுவுதல்’ என்று பெயர் வந்திருக்கலாமோ என்னவோ…..

மேகலா : நீயே காளையை அடக்கிக் கல்யாணம் செய்திருக்கிறாய்… உன் வழி வந்த இந்த பாரத தேசத்து மக்களும், காளையை அடக்கியும், காளை மாட்டு வண்டி ரேஸில் ஜெயித்தும், தாங்கள் விரும்பிய பெண்ணைக் கைப்பிடித்திருக்கிறார்கள் கிருஷ்ணா. இன்றும் கூட காளையை அடக்கும் வீரர்கள், பெண்கள் மத்தியில் ‘ஹீரோக்கள்’தான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அருமையான வீரம் தெறிக்கும் கிராமீய விளையாட்டு. ‘அக்மார்க்’ பாரத நாட்டின் கலாச்சாரம்…. Super Mekalaa….. Entertainment Category-யில், அடுத்து என்ன இருக்கு மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2