அழகு - பகுதி 22 (நிறைவுப் பகுதி)
மேகலா : கிருஷ்ணா…. நான் drawing கத்துக்கிட்டேன். இங்க N. G. O. காலனியில, ‘அன்பு சார்’ கிட்ட water color painting கூட கத்துக்கிட்டேன். இவையெல்லாம் என்னோட interest-க்காக கற்றுக் கொண்டதே தவிர…., நான் பெரிய artist-லாம் கிடையாது. இருந்தாலும், நான் வரைந்த ‘பிள்ளையார்’ pencil sketch அழகாத்தான் வரைந்திருப்பேன். Drawing என்னோட genuine திறமை கிடையாது. அன்பு சார் இந்த ஊரை விட்டுப் போன பிறகு, நானும், ராமாயணம், மகாபாரதம், கீதை என்று என் திசையை மாற்றிக் கொண்டேன்.
கிருஷ்ணர் : அட்டா…. வட போச்சே…. நம்ம friend, exhibition நடத்தற அளவுக்கு collection வச்சிருப்பா…. எத்தனை அழகான திறமையைக் கை வசம் வச்சிருக்கா…. பாராட்டலாம் என்று நினைத்தேன்…. சே…., வட போச்சே…. பெருசா ‘மாயா சித்ராலயா’ student-னு பீலா விட்டயே…. post-ல வரும் எல்லாப் பாடங்களையும் பார்த்திட்டு, சும்மா cupboard-ல போட்டுருவயா…. வரைஞ்சு பாக்க மாட்டயா…. சரி, இதெல்லாம் இருக்கட்டும்…., உனக்குப் பிடித்த அழகான ஓவியங்களைப் பற்றிச் சொல்லு மேகலா….
மேகலா : கிருஷ்ணா…. எனக்கு drawing-னா ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா…. ஆனந்த விகடன்ல கதைகளுக்கு வரையும் artist-ஓட படங்கள், அதிலும் குறிப்பாக ‘கோபுலு’ வரையும் கோடுகளாலேயே, சில அங்க சேஷ்டைகளை விளக்கும் படம் என்றால், உயிர் கிருஷ்ணா…. ‘சில்பி’ வரையும் ‘திருவிழா’ படம் என்றாலோ, ஒரு நகரத்தின் படமென்றாலோ, அந்த ஓவியத்தில், திருவிழாவின், நகரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அப்படியே உயிரோட்டமாக வரையும் விதம் என்னை அதிசயிக்க வைக்கும். கதைகளுக்கு வரையப்பட்ட கதாபாத்திரத்தின் படம் பார்த்து, நானும் பென்சிலால் வரைந்து பார்ப்பேன். ஓரளவுக்கு திருப்தியாய் வருவது மாதிரி இருந்தால், திரும்பத் திரும்ப வரைவேன். வரைந்து பார்த்து மகிழும் ஆள் நான். பிறவியிலேயே ஓவியம் வரைவதில் கில்லாடியெல்லாம் கிடையாது கிருஷ்ணா….. அப்புறம் எங்க exhibition நடத்த…..
கிருஷ்ணர் : அம்மணி…., ’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதோ….. சரி, இதெல்லாம் இருக்கட்டும்…. கோபுலு வரையும் ஓவியங்கள் பிடிக்கும் என்று சொன்னாயே… அதைப் பற்றிச் சொல்லு….
மேகலா : கிருஷ்ணா…., வாரப் பத்திரிக்கைகளில் வரும் சிறுகதை, தொடர்கதைகளில், கதையின் போக்குக்கேற்ற நிகழ்வுகளை ஓவியங்கள் வரைந்திருப்பார்கள் கிருஷ்ணா…. அந்த ஓவியத்தைப் பார்த்தவுடனேயே, இது ‘ஜெயராஜ்’ வரைந்தது…, இது ‘கோபுலு’ வரைந்தது…., இது ‘ராமு’ வரைந்தது என்று சொல்லி விடலாம் கிருஷ்ணா…. சொல்லப் போனால், ஓவியத்தின் அழகே, கதையை வாசிக்கத் தூண்டும் கிருஷ்ணா… ‘துப்பறியும் சாம்பு’ என்ற கதாபாத்திரம் உனக்குத் தெரியுமா கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : ஏன் தெரியாமல்……, ‘தேவன்’ எழுதிய நகைச்சுவைத் தொடரின் hero தானே…..
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. அந்த துப்பறியும் சாம்புவுக்கு உயிர் கொடுப்பதே ‘கோபுலு’ என்ற ஓவியனோட கை வண்ணம் தான கிருஷ்ணா…. ஒவ்வொரு வாரமும் கதை வெளியாகும் போது, முதலில் பார்ப்பது கதைக்கான ஓவியத்தைத்தான். அன்றைய ஓவியத்தில் சாம்புவின் முக சேஷ்டையைப் பார்த்தே, பாதி கதை தெரிந்து போகும்…. அத்தனை expression காட்டும் ஓவியம்…. இன்றும் நினைக்கும் போதே மனம் நிறைந்து போகிறது கிருஷ்ணா…. இன்னும் இரண்டு characters – காலத்தால் அழிக்க முடியாத, ‘சீதாப் பாட்டி’, ‘அப்புசாமி’….. ’பாக்கியம் ராமசாமி’ என்ற எழுத்தாளரால், இன்னும் உயிரோட்டமாய் எல்லோர் மனதிலும் வலம் வருகிறார்கள் என்றால்…., ஓவியர் ஜெயராஜால் அந்த கதாபாத்திரம் உயிர் பெற்று என்றும் நலமாக வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை….
கிருஷ்ணர் : Correct….. அசடு வழியும் அப்புசாமியும், கம்பீரமான சீதாப்பாட்டியும், தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும், அழகு மாறாமல், அதே நேரத்தில் கதைக்கான expression-ஓடு, நகைச்சுவை ததும்ப, எப்படி ஒரு ஓவியனால் வரைய முடிகிறது….! இது கடவுள் தந்த வரமா…., திறமை தரும் வரமா….?
மேகலா : திறமை, அறிவு, அழகு இது எல்லாமே கடவுள் தந்த வரம் என்று நீதானே சொன்ன கிருஷ்ணா…. அவங்கெல்லாம் கடவுளோட special அன்பு பெற்றவர்கள். ராமாயணக் காட்சிகளைப் புத்தகத்தில் வாசிப்பதைக் காட்டிலும், சிற்பங்களில் சிலையாகப் பார்ப்பதைக் காட்டிலும், ரவி வர்மாவின் ஓவியத்திலோ…., கோயிலில் வரையப்பட்டிருக்கும் சித்திரத்திலோ பார்க்கும் போது, சீதையின் சோகத்தையும், ராமரின் அழகையும், கற்பனைக் கெட்டாத ராவணனின் தோற்றத்தையும், நம்மால் உணர முடிகிறது கிருஷ்ணா….. அசோகவனத்தில் சீதை தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் காட்சியை ரவி வர்மா oil painting-ல் வரைந்திருப்பார். அந்த சோகத்தை கண்ணெதிரே பார்ப்பது மாதிரி ஒரு feeling வரும்…., அத்தனை அழகாய் இருக்கும் கிருஷ்ணா…. இன்னும் சொல்லப் போனால், 14-ஆம் நூற்றாண்டு, 15-ஆம் நூற்றாண்டு, மன்னர்கள், மக்கள் ஆகியோரின் ஆடை அலங்காரங்கள்…., hair style இவைகளை ஓவியங்கள் மூலமாகவே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. Drawing என்பது உலகம் முழுவதுக்கும் பொதுவான, அழகான மொழி என்றே கூறலாம். ’மைக்கேல் ஏஞ்சலோ’ வரைந்த ‘last supper’ என்ற ஓவியம், வரலாற்றினை உள்ளடக்கிய அழகான சித்திரம் அல்லவா…. அன்பு, கருணை, தாய்மை மட்டும் தான் உலகத்தின் அழகான உணர்வு என்று சொல்கிறோமே…., கிட்டத்தட்ட ஓவியம் கூட, அது மாதிரி தான் கிருஷ்ணா…. உலகத்தார் அனைவருக்கும் பொதுவான உணர்வைச் சொல்லும் மொழி என்று சொல்லலாம்.
கிருஷ்ணர் : வாவ்! அழகு என்ற track-ல், இத்தனை நாளாக பேசியதெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன். ஒருவரை, முகத்துக்கு முகம் நேராகப் பார்ப்பதோ, சில காட்சிகளைக் கண்டு அசந்து போவதோ, பிறந்த குழந்தைகளின் சிரிப்பைப் பார்த்து மெய் மறப்பதோ…., இது மட்டும் அழகு கிடையாது. உழைப்பு, வியர்வை, திறமை, புகழ், செயற்கரிய செயல் இவை எல்லாவற்றிலும் ஓர் அழகு, ஒரு ஒழுங்கு இருப்பது தெரிகிறது. உலகம் இப்படித்தான் மேகலா…. நம் கண்களுக்கும், மனதுக்கும் பிடித்தமானதெல்லாம் அழகாய் தெரியும்…. மனசுக்குப் பிடிக்காவிட்டாலோ…., அது எவ்வளவு அழகாய் இருந்தாலும், நம் கண்களுக்கு அழகாகவே தெரியாது. இந்த விஷயத்தை நாம பேசப் பேசத்தான் நன்றாகப் புரிகிறது…. சரி…., O. K….. Very good….
மேகலா : என்ன கிருஷ்ணா…. நான் பேசுவதை முடிக்கணுமா…. நீ இந்த topic முடித்து வைத்தாலும், நான் வேறு ஒரு topic-உடன், உன் கூட பேச வந்து விடுவேன்…
கிருஷ்ணர் : மேகலா…., நீ தாராளமாக எப்ப வேணாலும் வரலாம்…. எப்பவும் என் கதவுகள் திறந்தே இருக்கும்….
மேகலா : Thank you, கிருஷ்ணா….
(நிறைவு பெற்றது)
Comments
Post a Comment