வழிப்போக்கர்கள் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர் : என்ன மேகலா…, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடினாயோ…. பூஜையில் வைத்த புத்தகத்தை (diary) எடுக்கவேயில்லையா…..

மேகலா : ஏன் கிருஷ்ணா…., மறுநாள் எடுத்து விட்டேனே….

கிருஷ்ணர் : நம்முடைய திண்ணைப் பேச்சுக்கு நீ வரவேயில்லையே…, அதான் கேட்டேன்…

மேகலா ஒரு ரெண்டு நாள் அலுப்பினால் diary-யைத் தூக்கவில்லை. அடுத்த இரண்டு நாள், சோம்பலில் தூக்கவில்லை…. இப்படியே போயிருச்சி கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஓ! நான் ஒருவன், நீ வம்பளக்க வருவாய் என்றிருக்கிறேன். நீயானால், சோம்பலாய் இருந்தது, அதனால் dairy-யைத் தூக்கவில்லை என்கிறாயே… வழிப்போக்கர்களைப் பற்றிப் பேசுகிறோம். அதாவது ஞாபகம் இருக்கிறதா…. உன் ஒருவளுக்கே, இத்தனை அனுபவங்களைச் சொல்லுகிறாயே…. இன்னும், உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தால்…., இந்த diary பத்தாது மேகலா….

மேகலா : கிருஷ்ணா…., இப்போ, நிறையப் பேர் குழுவாக சேர்ந்து, தைப்பூசத்திற்கு திருச்செந்தூர் அல்லது பழனிக்கு பாதயாத்திரை செல்கிறார்கள் கிருஷ்ணா…. அது மாதிரி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், வழிவிடு முருகன் கோவில் என்றும் செல்கிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பழனி, திருச்செந்தூரெல்லாம் ரொம்ப தூரமே…. சென்று திரும்பி வருவதற்கே, பத்து நாட்கள் ஆகி விடுமே….

மேகலா : இவர்கள் எல்லாம் van arrange பண்ணுகிறார்கள். பணக்காரர்கள் என்றால், தன் car-ஐப் பின்னால் வரச் செய்து, திரும்பி வரும் போது, அதில் வந்து விடுவார்கள்… இந்த மாதிரி குழுக்களில், முதலாளிமார்களெல்லாம் கலந்து கொள்வதுண்டு கிருஷ்ணா…. இப்படிப்பட்ட காலங்களில், காவி உடை அணிந்து, shave செய்யாமல், நடந்து செல்வார்கள்…. காலுக்கு செருப்பு கூட அணிவதில்லை…

கிருஷ்ணர் : சபரிமலைக்கு பாதயாத்திரை செல்வது மாதிரி…. ஏன் மேகலா…., இவர்கள் இரவெல்லாம் நடப்பார்களாமா….

மேகலா : இரவு எவ்வளவு நேரம் நடப்பார்கள் என்று தெரியவில்லை கிருஷ்ணா…. ஆனால், கிடைத்த இடத்தில் படுத்துக் கொள்வார்களாம்…. School, Petrol Bunk…. சில சமயங்களில், பெரிய வீடுகளின் வெளி முற்றத்தில் கூட படுத்துக் கொள்வார்களாம்…

கிருஷ்ணர் : ஏன் அப்படி….? இது ஒன்றும் கட்டாயமில்லையே…. ஒரு லாட்ஜில் room எடுத்து, தூங்கி எழுந்து செல்லலாமே….

மேகலா : நான் ஒரு முறை, இந்த மாதிரி பாதயாத்திரை சென்ற என் அண்ணன் மகனிடம், காரணத்தைக் கேட்டேன் கிருஷ்ணா…. அவன் சொன்ன பதில், என் நடு மண்டையில் ஆணி அடித்தது போன்று இறங்கி விட்டது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ம்….. என்னடா இது……, என்ன உபதேசம் செய்தான்…?

மேகலா : ’எல்லோரும், வாழ்க்கையில், பரதேசி வாழ்க்கையை, ஏதாவது ஒரு சமயத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு, எதையும் தாங்கும் பக்குவத்தைக் கொடுக்கும்… அதற்கான பயிற்சி தான் இந்த பாதயாத்திரை’ என்று சொன்னான் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : இது, வழிப்போக்கர்களின் வாழ்வியல் தத்துவமா…..? பரவாயில்லையே… வேறு எந்த வழிப்போக்கனாவது, தத்துவம் சொல்லியிருக்கிறானா….?

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. ‘Keats’ என்னும் ஆங்கிலப் புலவன்…., ‘ஒரு மனிதன், பயணம் செய்யச் செய்ய, அவன் பார்வை விரிவடையும்’ என்று கூறியிருக்கிறான்…

கிருஷ்ணர் : நெசம்மாவே…. இது உண்மையான வாக்கியம் தான் மேகலா… நம்ம வீடு…, நம்ம உலகம்…, என்பதை விட்டு, அடுத்த ஊருக்குப் போகும் பொழுது…, அந்த ஊரின் சிறப்புகள்…, வளம்…, செல்வம்…, என்று தெரிய வருவது நிஜம் தானே…. ஏதாவது புதுசாய் ஒன்றை அறிவதால் வருவதுதானே அறிவு… அதையே wide range-ல் பார்க்கும் போது, நம் பார்வை விரிவடைகிறது…., அறிவும் பரந்து விரிகிறது……

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஏன் மேகலா…, எப்போதுமே வழிப்போக்கர்களாகவே இருந்தவர்கள் யாரைப் பற்றியாவது உனக்குத் தெரியுமா மேகலா…?

மேகலா : Particular – ஆக அப்படி யாரையும் தெரியாது கிருஷ்ணா…., இருந்தாலும், journalist- ஆக இருப்பவர்கள், எப்பவும் பயணம் செய்து கொண்டேதான் இருப்பார்கள். அவர்களுடைய தொழில், தகவல்களைத் தேடிப் பயணித்துக் கொண்டேதான் இருக்க முடியும். சிலர், பல இடங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து கட்டுரை எழுதுபவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர்…., ஏதாவது வியக்கத்தக்க சம்பவமோ…., மர்மமான சம்பவமோ…., பரபரப்பு சம்பவமோ…, நடந்த இடத்திற்கே சென்று செய்திகள் சேகரிப்பவர்களாக இருப்பார்கள். கோவிலைப் பற்றின ஆராய்ச்சி, பழங்காலத் தமிழ்நாடு…, கலைகளைப் பற்றிய செய்திகள் என்று ஆராய்ச்சி செய்பவர்கள்…, இவர்களெல்லாம், தகவல்களைத் தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். இந்த உலகம் முழுவதும் இவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் தான், நாமும் புதிய புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது…. எனக்குத் தெரிந்த திரிலோக சஞ்சாரி ஒருவர், புராண காலத்தில் ரொம்பவும் புகழ் பெற்றிருந்தார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : யாரு…. நாரதரைச் சொல்கிறாயா… ஆமாம், அவர் திரிலோக சஞ்சாரி தான். உனக்கு ஒண்ணு தெரியுமா…? அவர், எந்தெந்த உலகங்களுக்குச் செல்கிறாரோ, அங்குள்ள தகவலைச் சேகரித்து, எல்லோருக்கும் தெரியப்படுத்தும் satellite வேலையும் செய்தாரே…. அப்படி அவர், இந்த பரந்த பூமியை சுற்றி வரும் போது தான், இமய மலையில், பார்வதி, பரமேஸ்வரரின் அதி அற்புதமான உரையாடலைக் கேட்டதாகச் சொன்னார். அந்த சமயத்தில், சர்வேஸ்வரனாகிய பரமேஸ்வரன் சொன்ன ஒரு தகவல் என்ன தெரியுமா…. மனிதர்கள், ஆண் பெண் இரு பாலாருக்கும் அடிப்படைத் தகுதி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்… அது, ‘கல்வி’…. கல்வி கற்றவன், வாழ்க்கையில் மேன்மை அடைவான். கல்வி ஒன்று தான், மனிதர்களுக்கு, எல்லா வித செயலின் உண்மையையும் அறிய வைக்கும் என்று வலியுறுத்திப் பேசியதாக நாரதர் சொன்னார்.

மேகலா : சிறப்பு…., சிறப்பு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : So, முழு நேர வழிப்போக்கர்கள், எக்காலத்திலும் செய்தி சேகரிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்…. ‘’வழிப்போக்கர்கள்” என்ற சாதாரண கதாபாத்திரத்தை வைத்து நிறைய தகவல்களைப் பார்த்து விட்டோம். ஆதி காலத்திலிருந்தே, மனிதன், உணவுக்காகவும், உயிர் வாழ்வதற்காகவும், ஓரிடத்திலிருந்து, மற்றொரு வளமான இடம் தேடி பயணம் செய்து கொண்டேதான் இருந்திருக்கிறான். சொல்லப் போனால், ஆதி மனிதனாய் அவதரித்த காலத்திலிருந்தே இதுதான் மனிதனின் சொந்த இடம் என்று எந்த இடமும் குறிப்பாக இருந்தது கிடையாது…… வளமான இடம்…., பிடித்தமான இடம்…, என்று மனிதன் தேடிப் பார்த்து, தங்கிய இடத்தை சொந்தமாக்கிக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்…. அப்படித் தேடும் பட்சத்தில், அவன் சந்தித்த பிரச்னைகள்…., போராடி ஜெயித்த சம்பவங்கள் என்று எவ்வளவோ, இந்த பூமியில் நடந்திருக்கிறது. இவை எல்லாவற்றையும்…, இந்த சிறு உரையாடலில் கொண்டு வர முடியாது. இருந்தாலும், நாம் பேசிய தகவல்கள் சுவாரஸ்யமானது….

மேகலா : என்ன கிருஷ்ணா…., நீ உரையாடலை முடிக்கப் போகிறாயா….

கிருஷ்ணர் : பின்ன….. ரொம்ப நாளாச்சு…., நான் என் இருப்பிடம் செல்ல வேண்டாமா… நேரம் ஆகிப் போச்சே…., இருட்டாகிப் போச்சு….

‘காட்டு வழிதனிலே – அண்ணே

கள்ளர் பயமிருந்தால், எங்கள்

வீட்டுக் குலதெய்வம் – தம்பி,

வீரம்மை காக்குமடா….’

மேகலா : கிருஷ்ணா…., கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஐயோ…. ‘கறுத்த மாரியின் பேர் சொன்னால்

காலனும் அஞ்சுமடா….’

— இதோ, நான் போயிட்டேன்….

(நிறைவு பெறுகிறது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1