கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 1

மேகலா : ஹாய் கிருஷ்ணா…., மார்கழி மாதம் பிறந்திருச்சி… மாதங்களில் நான் ‘மார்கழி’ என்று நீ சொன்னாயா… இந்த மார்கழிக் குளிர் என்னை இதமாக வருடும் போது, கிருஷ்ணா…., உன் புன்னகை என்னை இதமாக வருடுவதாக உணர்கிறேன். ஆண்டு முழுவதும் மார்கழி மாதமே தொடரக் கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது. காரில் பயணம் செய்யும் பொழுது, சாலை இருமருங்கிலும், பச்சைப் பசேலென பயிர் பச்சைகள் செழித்திருப்பதைப் பார்க்கும் போது, உலகமெங்கும் கிருஷ்ணா, உன் அழகே படர்ந்திருப்பதாய் உணர்கிறேன். ஆங்காங்கே சின்னச் சின்ன குளங்களும், அதில் தெளிவாய்த் தேங்கி நிற்கும் நீர்த்தேக்கமும்…., குளங்களைத் தொடர்ந்து ஓடும் சின்னச் சின்ன ஓடைகளும், கார்த்திகை, மார்கழி மாதங்களுக்கென்றே பிரத்யேகமாக சிருஷ்டிக்கப்பட்டதோ என்று வியக்க வைக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Good morning மேகலா…. என்ன வரும் போதே பீடிகை பலமாக இருக்கிறது… இன்று என்ன…., மார்கழி மாத திருப்பாவை பற்றி பேசப் போகிறாயா….

மேகலா : Oh! அது கூட பேசலாமோ…. இருந்தாலும், நான் பேச வந்தது….

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்,

கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ – என்ற தலைப்பில் தான்….

கிருஷ்ணர் : வாவ்! நல்ல தலைப்புதான்…, பேசலாம்… நீ தலைப்பு சொன்னவுடன்…., நீ என்னவெல்லாம் பேசுவாய் என்றும் தோணிருச்சி…. இருந்தாலும்…, நீயே முதலில் ஆரம்பி…..

மேகலா : கிருஷ்ணா…., ‘நீ என்னவெல்லாம் பேசுவாய் என்று தெரிஞ்சி போச்சி’ – என்று சொல்லி, இந்த topic-க்கு என்னை ஊக்குவிக்கும் நீயே என் குரு…. கிருஷ்ணா…, கர்ம யோகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்ன மகாத்மா… நீ…, கைத்தொழிலைக் கற்றுக் கொள்வதால் விளையும் நன்மைகளை உன்னைத் தவிர வேறு யாரால் சிறப்பாகச் சொல்ல முடியும்….

கிருஷ்ணர் : சரி…., அதெல்லாம் இருக்கட்டும்…. கைத்தொழில் என்று எதையெதையெல்லாம் சொல்லப் போகிறாய்….?

மேகலா : மண்பானை செய்வதிலிருந்து, கூடை முடைவது, tailoring வேலை, மேக்கப் போடுதல், சமையல் வேலை, செருப்பு தைப்பது…, அழகான artwork என்று எல்லாவற்றையும் பேசலாம் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : நல்ல topic மேகலா…. நிறைய பேசலாம்…. உபயோகமாகப் பேசலாம்…. ஆண், பெண் யாராக இருந்தாலும்,

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” – என்ற பாடல் வேதவாக்குதான் மேகலா… கைத்தொழில் என்பது, பெண்களுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் பொதுவானதுதான். ஒரு சட்டையில் பட்டன் பிய்ந்து போனாலும், நாமே repair செய்து கொண்டால், அது நல்லதல்லவா…. அந்த நேரத்தில் பட்டன் இல்லாமல் போச்சே என்ற கவலை இல்லாமல் போகுமே… இதெல்லாம் instant problem… நீ சொல்லு மேகலா…, கைத்தொழில் தெரிந்து, வாழ்க்கையில் முன்னேறிய யாராவது ஒருவரைப் பற்றிச் சொல்லு….

மேகலா : அங்க இங்கன்னு யாரைத் தேடணும் கிருஷ்ணா. என் மாமியாரே ஒரு சிறந்த உதாரணம். எங்க ஊர் பக்கங்களில், manual work-கினால் செய்யக் கூடிய தீப்பெட்டித் தொழிலும், பட்டாசுத் தொழிலும், பீடி சுற்றும் தொழிலும் பிரசித்தமானது என்பதை உலகறியும்… சுமார் 100 வருடங்களுக்கு முன்பு தான் எங்கள் பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலை அறிமுகமாகி, பல குடும்பத்து மக்களுக்கும் அது வாழ்வாதாரமாகிப் போனது. அந்த சமயத்தில், எளிய குடும்பத்தில் பிறந்த என் மாமியாரும் தீப்பெட்டியைச் செய்யும் கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவசியத்திற்காகக் கற்றுக் கொண்ட கைத்தொழில், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தியது கிருஷ்ணா…. என் மாமனாரும் இதே தொழிலைக் கற்றுக் கொண்டவர். இருவரும் இணைந்து, தன்னைப் போல இந்த கைத்தொழில் தெரிந்தவருடன் கூட்டணி அமைத்து, பெரிய தொழிற்சாலையாக உருவெடுக்க காரணமானது மட்டுமல்ல…., பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்தார்கள் என்பது அவர்களுடைய வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உண்மை… உண்மை…., கைத்தொழில் நமக்கு மட்டும் நல்வழி காட்டுவதல்ல. பலருக்கும் கற்றுக் கொடுக்கும் போது, அவர்களுடைய வாழ்க்கைக்கும் ஒளி கொடுக்கும்…. Very good மேகலா….

மேகலா : எங்கள் பகுதி, வானம் பார்த்த பூமி என்பதால், வாழ்வாதாரத்திற்கு, தீப்பெட்டித் தொழிலை மக்கள் நம்பினார்கள். இன்னும் வேறு பகுதிகளில் வாழும் மக்கள், இப்படி ஒரு வாய்ப்பு இல்லாதவர்கள்…., தாங்களாகவே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்ட ஒரு தொழில் இருக்கிறது. அது என்ன தொழில் தெரியுமா கிருஷ்ணா….?

கிருஷ்ணர் : நீ என்ன சொல்ல வருகிறாய்….?

மேகலா : கிருஷ்ணா…., வீட்டில் சமையல் வேலை செய்யும் இல்லத்தரசிகள், ‘சிறுவாடு’ பணம் சேர்ப்பது என்பது, எந்தக் காலமும் இருப்பதுதானே….

கிருஷ்ணர் : ஆமாம்…., ‘சிறுவாடு’ பணம் என்றால் என்ன மேகலா….?

மேகலா : ’சேமிப்பு’ கிருஷ்ணா… சாமிக்கு முன்னால் உண்டியல் சேர்ப்பது, ‘சாமி உண்டியல்’. ஆனால், யாருக்கும் தெரியாமல், அஞ்சறைப் பெட்டிக்குள்ள…, புளிப்பானைக்குள்ள…, அரிசி drum–க்குள்ள என்று, சின்னச் சின்னதாய் பணம் சேர்ப்பது தான், ‘சிறுவாடு’ பணம்… உனக்குத் தெரியுமா கிருஷ்ணா…. பெண்கள், இப்படி யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைக்கும் பணத்தில்…, தன்னுடைய பொண்ணு கல்யாணத்தையே நடத்தி முடித்த பெண்கள் ஏராளம் கிருஷ்ணா…. கல்யாணம் மட்டுமல்ல கிருஷ்ணா…. அந்த வீட்டு ஐயாவுக்கு தொழிலுக்கு பணம் தேவைப்படும் போது கூட, ‘சிறுவாடு பணம்’ பெருமளவு கை கொடுத்த கதை நிறையப் பேர் வாழ்வில் நடந்ததுண்டு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! நீ சொன்ன தகவல் ரொம்ப சுவாரஸ்யமானது மேகலா… சரி…, அந்த சிறுவாடு பணம் சேர்ப்பதற்கு இல்லத்தரசிகள் தேர்ந்தெடுத்த கைவேலை என்ன மேகலா….?

மேகலா : சமையல் வேலை நல்லாச் செய்யும் பெண்கள், அந்த வேலையிலிருந்தே, தங்களுக்கான கைத்தொழிலை யோசிக்கிறாங்க கிருஷ்ணா…. வத்தல், வடகம், சாம்பார் பொடி…., குறிப்பாக இட்லிப் பொடி, ஊறுகாய் என்று ரொம்ப perfect ஆகச் செய்யத் தெரிந்தவர்கள், இதையே தன்னுடைய side business ஆக ஆரம்பித்து…, அதன் சுவை காரணமாக, பெரிய லெவலுக்கு, பத்துப் பன்னிரெண்டு பேரைத் தன்னுடன் சேர்த்து தொழில் செய்து வருபவர்கள் கூட உண்டு கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! சாப்பாட்டுக்கு பயன்படும் பொடி வகையறாவா…. ஆமாம்…, இவர்களுள் star value உள்ளவர்கள் யாரையாவது உனக்குத் தெரியுமா மேகலா….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2