கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 13

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா… இது (தச்சுத் தொழில்) ஆண்களுக்கான கைத்தொழில் கிருஷ்ணா…. இதுவரைக்கும் நாம் பார்த்து வந்தது, அதாவது, சமையல், tailoring இவையெல்லாம் ஆண் பெண் இருவருக்குமானது. ஆனால், மர வேலைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களுக்கான வேலையாக இருக்கிறது கிருஷ்ணா…. மர வேலைகளில், வீட்டுக்குத் தேவையான நிலை, கதவு, ஜன்னல் மற்றும் இதைச் சார்ந்த பொருட்கள் செய்வது தச்சர்களுக்கு காலம் காலமாக ஆகி வரும் வேலைதான் கிருஷ்ணா… அதில் exclusive ஆக, கதவுகளில் சிற்பம் வடிப்பது, carpenter-ரிலேயே தலைமை ஆசாரிதான் செய்வார் கிருஷ்ணா… இன்னும், sofa-க்களில், teapoy, corner table என்று வேலைப்பாடுகள் நிறைந்த ராஜஸ்தான் மரச் சாமான்கள், exhibition கூட அப்பப்ப நடக்கும் கிருஷ்ணா… நான் அப்படியொரு exhibition-ல் corner stand-ம், telephone stand-ம் வாங்கினேன். தமிழ் நாட்டில், மரச்சிற்பங்கள், கலை நயம் மிக்க மர பீரோ…, யானைதலை teapoy இவையெல்லாம் காரைக்குடியில் கிடைக்கும் கிருஷ்ணா. அந்தக் காலத்து செட்டி நாட்டு மக்கள், தங்கள் வியாபாரத்தை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் செய்து, பெரும் செல்வம் ஈட்டினர். சம்பாதித்த பணத்திற்கு, பர்மா தேக்கு மரங்களை வாங்கி, காரைக்குடிக்கு அனுப்பி வைத்து, தங்கள் வீட்டு நிலை, கதவு, ஜன்னல், அனைத்தும் தேக்குகளாலேயே செய்திருக்கிறார்கள். மிச்சமிருக்கும் மரங்களில் மர பீரோ, அடுப்பங்கரை அஞ்சறைப்பெட்டி, கணக்கு எழுதும் மேஜை, முக்காலி, பூரி தேய்க்கும் பலகை, பெரிய மரப்பெட்டி என்று வித விதமாக செய்த சாமான்கள்…., இன்று, பழைய சாமான்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது…. ஒவ்வொரு சாமானிலும், தச்சரின் அழகுணர்வும், கைத்திறமையும் நன்கு தெரியும் கிருஷ்ணா…. அத்தனை வழவழப்பாக…, அழகாக இருக்கும் கிருஷ்ணா… எங்க அம்மாவிடம் இரண்டு மர பீரோ – காரைக்குடி பீரோ உண்டு…, ஒன்று சிவப்பு பீரோ…, அதன் அழகைச் சொல்லி மாளாது… கருப்பு மர பீரோவில் ‘ரகசிய அறை’ கூட இருக்கும் கிருஷ்ணா… எத்தனை ரசிச்சி வடிவமைத்திருக்கிறார்கள் தெரியுமா… இதில் மரப் பெட்டியைப் பற்றி உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா… அதனுள் ஒரு வீட்டின் வெள்ளிச் சாமான், விலையுயர்ந்த சாமான்களை வைத்து மூடி விட்லாம். மூடிய பின், அதை table ஆக use பண்ணிக்கலாம். அத்தனை பெருசு. வேறு எங்கும் இது கிடைக்காது….

கிருஷ்ணர் : காரைக்குடி மர பீரோ, மரப் பெட்டி…., உங்க வீட்டுக்கு எப்படி….?

மேகலா : எங்க அத்தை காரைக்குடியில்தான் இருந்தாங்க கிருஷ்ணா…. எங்க மாமா, பழைய மரச் சாமான்களை வாங்கி விற்கும் வியாபாரம் தானே செய்தார்… சிவகாசி, பட்டாசுத் தொழிலால் உயர்வடைந்தது என்றால்…, செட்டி நாட்டு காரைக்குடி, வேலைப்பாடு நிறைந்த மரச் சாமான்களாலும், சிறந்த கட்டடக் கலையாலும் புகழ் பெற்றது கிருஷ்ணா… இன்று, அங்கிருக்கும் அரண்மனை நிகர்த்த வீடுகள் museum மாதிரி பாதுகாக்கப்பட்டு, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது கிருஷ்ணா… அங்கிருக்கும் பல வீடுகள், இன்றைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது கிருஷ்ணா… வெளிநாட்டினர் பலர், வியந்து போற்றும் கட்டிடக் கலையை நகரத்தாரின் செல்வாக்கினாலும், கலை நயத்தாலும் கட்டப்பட்டு, இன்று தமிழகத்திற்கே பெருமை சேர்க்கிறது கிருஷ்ணா. அந்த வீடுகள், ஒரு வீதியில் வாசல் அமைக்கப்பட்டு, மறு வீதியில் புறவாசல் இருக்குமளவுக்கு நீண்டும், அகன்றும் அரண்மனை மாதிரி இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அங்கெல்லாம் நீ போயிருக்கியா மேகலா….

மேகலா : கிருஷ்ணா…, வெளியே காரில் செல்லும் போது பார்த்ததுதான் கிருஷ்ணா…. ஆனாலும், நகரத்தார் வீடுகளைப் பற்றிய கட்டுரைகளும், படங்களும் பார்த்திருக்கிறேன். வீட்டின் மத்தியில் சூரிய வெளிச்சம் படும் படிக்கு முற்றம் அமைத்து, அதைச் சுற்றி தாழ்வாரமும், ரூம்களும் இருப்பதாகக் கட்டியிருக்கிறார்கள். ரூமிலிருந்து வெளியே வந்தால், அனைவரும் முற்றத்திற்கு வந்து விட வேண்டும். முற்றத்தில் இருந்து பார்த்தால் மாடி, பால்கனி முழுமைக்கும் தெரியும்… தொங்கும் விளக்கு, நிலை இருக்கும் மாடத்தில் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கும். ஜன்னல்களில் கலர் கலர் கண்ணாடிகள் என்று, பார்த்து பார்த்து அலங்காரம் பண்ணிய வீடு… முற்றத்தின் நான்கு மூலைகளிலும், மழைநீர் சேகரிக்கும் pipe கட்டப்பட்டிருக்கும். இந்த வசதிகள் அனைத்தும் 150 வருட காலத்துக்கு முன்பே கட்டி, அரண்மனைவாசிகள் போல வாழ்ந்திருக்கிறார்கள் கிருஷ்ணா… இவையனைத்தும், மனிதனின் கற்பனை சொல்லச் சொல்ல, அவன் கைகள் செதுக்கிய கலைவண்ணம் கிருஷ்ணா…. 200 வருடங்களுக்குப் பழமையான வீடுகள் இன்னமும் புத்தம் புதுசாக, ஒரு விரிசல் கூட இல்லாமல் இருப்பது, அன்றைய கட்டிடக் கலை அறிவுக்கு ஒரு சான்று கிருஷ்ணா… இத்தனைக்கும் இந்த வீடுகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவே பல லட்சங்கள் ஆகலாம். இருந்தாலும், இந்த வீடுகள் பழுது படாமல் இருப்பதற்கு, மனிதனின் கைவண்ணம் தானே காரணம்….

கிருஷ்ணர் : இன்றைய காலகட்டங்களில், சுவரின் பூச்சு விரிசல் விடாமல் இருப்பதற்கு பல chemicals வந்திருக்கிறது. இருந்தாலும், அன்றைய காலத்தில், சுண்ணாம்பு, சிமெண்ட், மணல் கலந்து அரைத்துப் பூசிய கலவையும்…, கருப்பட்டி பாலைக் கரைத்து ஊற்றி பூச்சுமானம் பூசியதால், கட்டிடம் விரிசல் அடையாமல், இன்றுவரை புதுசு போல நிலைத்து நிற்கிறது… இன்னும் கோயில் கோபுரங்களைப் பார். பாரத நாட்டில் இருக்கும் அனைத்துக் கோவில்களும், மனிதனின் கைவண்ணத்தில் எழுப்பப்பட்டதுதானே. கோபுரங்களை ‘பிரமிட்’ வடிவத்தில் கட்ட வேண்டும் என்ற அறிவியல் அறிவு, இடிதாங்கியோடு கட்ட வேண்டும் என்ற விஞ்ஞானத்துடன் கூடிய நிலைத்த ஞானம்…, அதை அழகான சிற்பங்களுடன் அழகுபடுத்த வேண்டும் என்ற கலையுணர்வு…. இது கைத்தொழில் மட்டுமில்லை, அறிவுடன் கூடிய திறமையும் கூட…. பாரதத்தின் பெருமையே, அறிவியல் அடிப்படையில் அமைந்த கோயில் கோபுரங்களும், வெய்யில் காலத்தில் குளிர்ச்சியூட்டும் கோயிலின் கல் கட்டிடங்களும் தான் என்று சொன்னால், யாராவது மறுத்துப் பேச முடியுமா…..

மேகலா : கிருஷ்ணா…, நீ சொன்னாயே… நம்முடைய பாரதத்தின் பெருமை, மிகப் பெரிய சொத்து, நம்முடைய கோயில்களும், கோபுரங்களும்…, குளிர்ச்சியான கல் கட்டிடங்களும் என்று… அத்தனையும் நூத்துக்கு நூறு உண்மை கிருஷ்ணா… பழமையான கோயில்களின் விஸ்தீரணம்…, அந்த ஊர் மக்கள் அனைவரும் கூடும்படிக்கு அத்தனை விசாலமானது… கோயிலில் மேற்கூரை இருந்தாலும், கோயிலுக்குள் நல்ல வெளிச்சமும், காற்றும் வரும்படிக்கு ventilation அமைப்பு என்று ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, திட்டமிட்டு கட்டியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட, அந்தக் கோயில் தூண்கள்…, அதில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் என்று, நம் முன்னோர்கள் தன்னுடைய கற்பனா சக்தியையும், நம் கலாச்சாரத்தையும் அந்த சிற்பங்களில் வடித்து, நம்முடைய சிற்பக்கலைக்கே பெருமை சேர்த்திருக்கிறார்கள் கிருஷ்ணா… திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சுவாமி சந்நதி செல்லும் மண்டபத்தில், தாங்கி நிற்கும் தூண்கள், சின்னச் சின்ன கோல்கள் ஒன்று சேர்ந்து நிற்பது போல் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடைவெளி கொடுத்து எப்படித்தான் சிற்பம் செதுக்கினாரோ… இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், இந்தத் தூண்களைத் தட்டினால் இசை பிறக்கும் கிருஷ்ணா…. இந்த சிற்பக்கலை மாத்திரம், மனிதனின் கைகளுக்குள் ஒரு தெய்வசக்தி புறப்பட்டு வெளிப்பட்டதாகவே தெரியும்… இன்னும், கர்நாடகாவில், ஹளபேடு என்ற ஊரில் ஹொய்சாலேஸ்வரர் கோயில், விஷ்ணுவர்தன் என்னும் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் சிற்பங்களில் மனிதன் கைத் திறமையில் உலக கலைகளுக்கே சவால் விடுவதாக இருக்கும் கிருஷ்ணா… அந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பங்களும் மனிதனின் கற்பனை திறத்தின் உச்சம்…. சிற்பங்களின் முக பாவனைகளும், ஆடை அணிகலன்களும் நுணுக்கமாக செதுக்கப்பட்டு, அந்தச் சிலைகளுக்கே உயிரூட்டுவதாக இருக்கும் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2