வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 1

மேகலா : ஹாய் கிருஷ்ணா! நான் எங்க போய் வந்திருக்கிறேன்னு சொல்லு பார்க்கலாம்….

கிருஷ்ணர் : ஆமாம்…., அதானே…., ரொம்ப நாளாச்சு உன்னப் பார்த்து…. எங்க போயிருந்தாய்…? வாயெல்லாம் பல்லாக இருக்கே… கொஞ்சம் இரு… ஏய்…, நீ…, ஹரித்துவார், ரிஷிகேஷ் போகணும்னு அலப்பறை பண்ணிக்கிட்டு இருந்தயோ… போயிட்டு வந்திட்டயா…. நான் எப்படி மறந்து போனேன்….

மேகலா : நீ எங்க கிருஷ்ணா…, மறந்து போன…, அதான் என் கூடவே வந்தாயே… என் பலமாக…, உற்சாகமாக…., என் மன தைரியமாக…., கங்கையின் நெடும் பயணத்தின் சுகமாக…., இளம் காற்றாக…., இமயமலையின் நிமிர்ந்த தோற்றமாக, என்னுடனேயே பயணித்ததை நான் அறியவில்லை என்று நினைத்தாயா…..

கிருஷ்ணர் : நீ இப்படிப் பேசுவதைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது மேகலா… உன் trip-ஐப் பற்றிச் சொல்லு மேகலா…. ஹரித்துவாரை நீ எப்படி ரசித்தாய்…? கங்கையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதா…. நீ அதில் முங்கினாயா…. இமயமலையை ரசித்தாயா… இமயமலையையும், கங்கையையும் கதைகளில் சொல்லும் போதே சிலிர்த்துப் போவாயே…. நேரில் பார்க்கும் போது, உன் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் அறிய முடிகிறது… இருந்தாலும், நீயே சொல்லு….

மேகலா : கிருஷ்ணா…, நானெல்லாம் இமயமலையை பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. இந்த முறை, ‘ஹரித்துவார், ரிஷிகேஷ்’ கட்டாயம் போக வேண்டும் என்ற உத்வேகம், ‘யாத்ரா’ சேனலில், லலிதகுமாரி, கோவை சரளா, ‘கேதார்நாத்’ சென்று வந்த அனுபவத்தை சொல்லும் போதுதான், எனக்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டது மாதிரி பத்திக்கிச்சி…

கிருஷ்ணர் : அப்ப, ஏன் ‘கேதார்நாத்’ செல்லவில்லை….

மேகலா : கோவை சரளா சொன்ன பயண அனுபவத்தில், என்னுடைய வயதுக்கு கேதார்நாத் போக முடியுமா என்று தயங்கி விட்டேன்… ஆனால், இறைவனை, நதியாக, மலையாக, புனிதமாக கண்டு மெய்சிலிர்க்க வேண்டும் என்று மனசு ஒரேயடியாக ஏங்கியது….. ஹரியிடம், நாம் ஹரித்துவார் சென்று வர வேண்டும்…, அம்மா மூச்சு அடங்குவதற்குள் என்னைக் கூட்டிச் செல் என்று, கிட்டத்தட்ட கெஞ்ச ஆரம்பித்து விட்டேன்… ஹரிக்கும், அங்கெல்லாம் சென்று வர வேண்டும் என்று தோன்றியதால், அவன், கேதார்நாத் செல்லும் வழிப்பயணத்தையும் மனதில் கொண்டு, Google-ல் search பண்ண ஆரம்பித்தான். நான் சமீபத்தில்தான் ‘யாத்ரா’ சேனலைப் பார்த்ததினால், ‘பஞ்ச கேதார்நாத்’ செல்லும் வழிப்பயணம், கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்று ஹரிக்கு நினைவூட்டினேன். ஒரு கேதார்நாத்தை மட்டும், அங்கு வரைக்கும் செல்ல, ஹெலிகாப்டர் வசதி இருக்காம் என்று சொன்னவுடன், அதை ஆராய்ந்து பார்த்தான். டேராடூனிலிருந்து கேதார்நாத் செல்வதற்கு, ஒரு நபருக்கு 1 லட்சம் ஆகும் என்று சொன்னவுடன், நான், கேதார்நாத் செல்வதை விட, காசிக்குச் செல்லலாமோ என்று கேட்டேன். இறுதியாக, ஹரி சொல்லி விட்டான். காசி இருப்பது, U. P. State; நாம் செல்ல இருப்பது ‘உத்தர்காண்ட்’ State. அதனால், அயோத்தி செல்லும் போது, காசிக்குச் செல்லலாம். இப்போ, ஹரித்துவார், ரிஷிகேஷ் மட்டும் செல்லுவோம் என்று சொல்லி, அதற்கான ticket, தங்குமிடம், local transport, என்று எல்லாவற்றையும் book பண்ணி, date-ம் May 7th கிளம்புகிறோம் என்றும் முடிவு செய்தான்…

கிருஷ்ணர் : நீ முடிவு செய்யலையா….

மேகலா : போகணும்னு முடிவு செய்தது தான் நான். பிள்ளைகளோட leave-ஐ அனுசரிச்சி date fix பண்ணியதிலிருந்து, program-ஐ organize பண்ணியது ஹரிதான் கிருஷ்ணா… நான் அதற்குப் பிறகு வெறும் ‘டம்மி பீஸ்’ தான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்குதான், flight ticket book பண்ணுவதிலிருந்து, local-ல் சுற்ற ‘cab’ book பண்ணுவது, room book பண்ணுவதெல்லாம் தெரியாதுல… அப்ப…, நீ டம்மியாய் இருப்பதில் தப்பில்ல….. இன்றைய தலைமுறையினர், இருந்த இடத்தில் இருந்தே இந்த வேலையெல்லாம், ‘online’-லேயே முடித்து விடுவார்கள்… சரி…, இந்த ‘டம்மி’ எப்போ டேராடூன் சென்று இறங்கினாய்….

மேகலா : May 7, ஞாயிற்றுக்கிழமை, Bangalore airport-லிருந்து, மதியம் 1.30 மணிக்கு flight. நாங்க, ஷீத்தல் வீட்டிலிருந்து 9.30 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம் கிருஷ்ணா. Airport-ல் ஒரு அதிசயம் தெரியுமா கிருஷ்ணா…. Boarding Pass எடுக்க counter-க்குப் போகத் தேவையில்லை. Automatic machine-ல் ticket-ல் உள்ள நம்பர் பார்த்து press பண்ண, boarding pass slip வருகிறது. அதை எடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுக்கிறான். அதே மாதிரி bags எல்லாவற்றையும் தனித்தனியாக tags நாங்களே கட்டி, ட்ராலியில் luggage-ஐ ஏற்றி, எங்கள் ‘ஆதார் கார்டை’ காட்டி, airport-டுக்குள் நுழைந்து விட்டோம். எங்கள் plane கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கார்த்தி, plane கிளம்புவதையும், land ஆவதையும் video எடுத்துக் கொண்டிருந்தான். ‘ஆதி’, இது என்னோட 3rd travel in aeroplane என்று சொல்லிக் கண் சிமிட்டினான். ராணிமா, அங்கு விற்றுக் கொண்டிருந்த சென்னப்பட்னா toys, fashion jewels, hand bags, இன்னும் அற்புதமான artistic சிலைகள் இவைகளின் விலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியே நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்து விட்டு, வயிற்றுக்கு ஏதாவது போட்டு வைப்போம் என்று யோசித்து, அங்கிருந்த ஒரு stall-ல், கொஞ்சம் கூட ருசியே இல்லாத button இட்லி என்ற பெயரில் mini இட்லியை 250 ரூபாய் கொடுத்து வாங்கி, ‘விதியே’ என்று தின்றோம்…

கிருஷ்ணர் : ஏன், flight-ல் கொடுப்பாங்கல்ல….

மேகலா : ‘அந்த நேரம்’ அப்படிப்பட்டது கிருஷ்ணா… ரெண்டுங்கெட்டான் நேரம்… கார்த்திக்கும், ஆதிக்கும் பசிக்குமே என்று நினைத்து இப்படி வாங்கி சாப்பிட்டோம். அடுத்து உடனே IndiGo counter-ல், ’airport bus’, passengers-ஐ pick-up பண்ண wait பண்ணிக் கொண்டிருந்தது. அவரவர், boarding pass slip-ஐ கையில் வைத்துக் கொண்டு, queue-வில் நின்று, உள்ளே சென்றோம். எங்களுக்கான bus-ல் ஏறி, plane land ஆகி இருந்த இடத்திற்குச் சென்றோம். இதற்குள், கார்த்தியும், ஆதியும், யார் பக்கத்தில் உட்காருவது என்று decide பண்ணி, கார்த்தி என் பக்கத்திலும், ஆதி ராணிமா பக்கத்திலும் உட்கார்ந்து, journey-யை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் கிருஷ்ணா…. கார்த்தி, window seat-ல் அமர்ந்து, plane, take-off ஆவதை video எடுத்து, துளித்துளியாய் ரசிக்க ஆரம்பித்தான். பரபரப்பான எங்கள் விமானப் பயணம், மேகங்களை விலக்கிக் கொண்டு பறந்தது…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2