Maturity - பாகம் 1

மேகலா : யாரோ, யாரையோ தேடுவது போல இருக்குது…. யாருன்னு பார்ப்போம்….

கிருஷ்ணர் : நீலப்புடவை கட்டிய பெண் யாராவது இங்கு வந்தாளா…. நீங்க பார்த்தீங்களா…, சொல்லுங்களேன்…. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள்…

மேகலா : கிருஷ்ணா…., யாரைத் தேடுகிறாய்….

கிருஷ்ணர் : ஓ…! மேகலா…., வந்துட்டயா…., ‘வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள்’’ என்ற வார்த்தையை முடிக்கும் முன்னேயே வந்து விட்டாயா…. யப்பா…., இப்பத்தான் நிம்மதி…. கடந்த ஒரு வாரமாக உன் குரலே கேட்கவில்லையா…, காதே இருண்டது போல இருக்கு…. இனி பரவாயில்லை…. காதுக்கு கொஞ்சம் ‘சளசள’வென்று பேச்சு சப்தம் கேட்கும்….

மேகலா : என்ன கிருஷ்ணா…., என்னைத் தேடியது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சளசளன்னு’ பேசுவேன்னு சொல்லி, என்னை ‘வாயாடி’ ஆக்கி விட்டாயே…. என்னை எதற்கு தேடினாய் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : நீ ரிஷிகேஷ் சென்று வந்ததைப் பற்றிப் பேசிப்….., பேசி…., பக்கங்களையெல்லாம் நிறைத்து விட்டாயா…. இனி அடுத்த subject பேசுவதற்கு கொஞ்ச காலம் ஆகுமோ என்று நானும் சும்மா இருந்தேன். ஆனாலும், ஏதாவது topic எடுத்து வருவாயோ…, என்று இன்று வாசலைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். சரியாக நீயும் வந்து விட்டாய்….

மேகலா : கிருஷ்ணா…., நம்ம ஊரில் தேரோட்டம் நடக்க இருக்கிறதல்லவா…. ஆண்டாளுக்கும் பிறந்த நாள் வர இருக்கிறது. ஊரே கோலாகலமாய் குதூகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று, ’ஐந்து கருட சேவை’ – எங்கள் அண்ணா எங்களை அழைத்துச் சென்றார்….. அன்னப்பறவை வாகனத்தில் ஆண்டாளையும், கருட வாகனங்களில் பெருமாளையும் தரிசித்து வந்தோம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பரவாயில்லை…. சரி…, பெருமாளை தரிசனம் கண்ட கையோடு…, என்ன தலைப்பில் பேசலாம் என்று யோசித்தாயா….

மேகலா : யோசித்தேன் கிருஷ்ணா…. சிறப்பான தலைப்பு எடுக்கலாம் என்று நினைத்து, ‘சாதனைப் பெண்கள்’, ‘சாதனையாளர்கள்’ என்று யோசித்தேன். இது பொதுவான தலைப்பாகத் தெரியவில்லை; அதான் உன்னிடம் கேட்கலாமே என்று வந்து விட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இதுவரையில் எத்தனையோ தலைப்புகளில் பேசியிருக்கிறோம்…. மனிதனின் வளர்ச்சிக்கு…, சிறப்புக்கு…, முக்கியமான குணம் ஒன்று தேவை என்பதை மறந்து விட்டாயா….

மேகலா : மனிதனின் வளர்ச்சிக்கு…, முக்கியமான குணம்…. அது என்ன…, கல்வியா, கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மக்கு…., கல்வி, மனிதனுக்கான தகுதி…. நான் கேட்பது, குணம்… இந்த குணம் இருப்பவர்கள், கல்வித் தகுதி உள்ளவர்களாகவும் இருக்கலாம்… அனுபவம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்…, பளிச்சினு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்பவர்களாகவும் இருக்கணும்…. இன்னும் நிறைய நல்ல குணங்கள், நான் கூறும் குணத்தை ஒட்டி வெளிப்படும்…. இன்னும் உனக்குப் புரியவில்லையா….

மேகலா : புரிஞ்ச மாதிரி இருக்கு…. கொஞ்சம் யோசிக்கிறேன்…. மனிதனை மேன்மைப்படுத்தும் குணம்….., ’maturity’-யா…., பக்குவம்…, நிதானம்…, என்ற குணங்களா….

கிருஷ்ணர் : Yes….! ‘Maturity’…, இதப் பற்றித்தான் பேசப் போகிறோம்….. ஒரு மனிதன், மனதளவில் பக்குவப்பட்டிருந்தால், அதாவது maturity உடையவனாக இருந்தால்…, முதலில் அவன் முகத்தில் தெரிவது, நிதானம்…, தெளிவு… இவையிருந்தால், எந்தப் பிரச்னையையும் ஏற்றுக் கொள்ளும் தைரியம்; பிரச்னையை முறியடித்து விடலாம் என்ற தன்னம்பிக்கையும் கட்டாயம் பிறக்கும்….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா! நீ சொன்ன பிறகுதான், ஒரு மனிதனுக்கு, ‘maturity’ எவ்வளவு மேன்மையைக் கொடுக்கும் சிறந்த குணம் என்று புரிகிறது.

கிருஷ்ணர் : சரி…, இந்த maturity, அதாவது ’பக்குவம்’….., இதைப் பற்றி, உன் opinion என்ன?

மேகலா : என்னைப் பொறுத்த வரையில், ஒரு மனிதனுக்கு இயல்பாகவே ‘பக்குவம்’ வரும் என்பது ரொம்ப கஷ்டம் கிருஷ்ணா…. ஒரு தோல்வியோ…, அல்லது இயலாமையோ…, ஒரு அவமானமோ…, சந்திக்கும் போது, அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில், சரி…, இதற்கு என்ன காரணம் என்று மனசு யோசிக்கும்…. நாம் அறியாமலேயே, ‘நிதானம்’ மெள்ள மனசுக்குள் குடி வரும்…..

கிருஷ்ணர் : இந்த ’நிதானம்’, நீ சந்திக்கும் பிரச்னையில் மட்டும் தானே வரும்…. மொத்தத்துக்கு மனுசனுக்கு ‘பக்குவம்’ வர வேண்டுமென்றால், எந்த விஷயத்தையும், காரண காரியத்தோடு யோசிக்கணும்…

மேகலா : கிருஷ்ணா…., நாங்கெல்லாம் மனுஷங்க….. எங்களுக்கு பிரச்னையெல்லாம் ஒரு நொடியில் magic மாதிரி மறையாது…. இப்போ…, ஒரு விஷயத்துக்கு நமக்கு பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம், செல்லாக்காசு தவிர…, நம்ம பேச்சு செல்லும்படிக்கு காசு இருக்காது…. அந்த நேரத்தில், கடவுள்தான் கை கொடுக்கணும் என்று கடவுளை சரணடைவோம்…. அப்போ, லேசா நிம்மதி பிறப்பது மாதிரி இருக்கும். இருந்தாலும், பணப்பிரச்னை முடியும் வரையிலும் மனுஷனுடைய திண்டாட்டம் தீராத பிரச்னைதான். காலம் கடந்து போகும். பிரச்னை ஏதோ ஒரு வகையில், மனிதன் அறியாமலேயே மறைந்து போயிருக்கும். கொஞ்ச நாள் கழித்து, இதை flash back-ஆக நினைக்கும் போது தான், ‘சொரேலென’ ஒரு உண்மை நமக்கு புரிய வரும்… பணப்பிரச்னை நம்மை பாடாய்ப் படுத்தினாலும், அந்த பிரச்னை முடிவுக்கு வந்த விதம்…, அந்தப் பிரச்னையிலும் நமக்கு நடந்த நன்மை…, இவை எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் ’நிதானம்’…., நம்மை கடவுளிடம் இன்னும் சரணடையச் சொல்லும் பக்குவம் என்று எல்லாமே அப்போதுதான் நம் நெஞ்சில் நிழலாடும் கிருஷ்ணா. ஒரு உண்மையும் வெளிப்படும் கிருஷ்ணா…. ’கடவுள் மந்திரவாதி கிடையாது, magic பண்ணுவதற்கு’ என்ற நம் வாதம்…., அட மக்கு! கடவுள் மந்திரவாதி தான். நீ புரிந்து கொள்ளும் முன்னமேயே, ஏதோ ஒரு magic செய்’து, உன்னைத் தன் பக்கம் இழுக்கும் ‘மாயக்காரன்’ என்று விளங்க வைக்கும்…. மனுஷங்க வாழ்க்கை என்பது, ஒரே பிரச்னையில் மாறி விடுவது இல்லையே…. ஒரு பிரச்னை போனால், இன்னொரு பிரச்னை வரத்தான் செய்யும்…. ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு சோதனைதானே என்று புரிந்து கொள்ளும் போதுதான், immaturity மறைந்து, maturity வருகிறது என்று நான் நினைக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பரவாயில்லை…. நீ பிரச்னைகளை சந்தித்தவள். அதன் மூலமாக நீ அறிந்த பாடத்தை சொல்லி விட்டாய்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1