பெண்களால் முடியும் - பாகம் 2

மேகலா : கிருஷ்ணா…., பாரதியாரின் கவிதையைச் சொல்லிட்டயா… எனக்கு, விண்ணிலே பறக்கும் பெண்கள் ஞாபகம் வருது கிருஷ்ணா… ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் வரைக்கும் பெண்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பதை நாம் பார்த்து விட்டோம்ல…. Space-ல் பறந்த பெண்ணை, சில காலத்திற்கு முன்னால் எல்லோரும் பார்த்தோமே…, நினைவிருக்கிறதா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : OH! ஆமாம்… ‘நாசா’ அனுப்பிய விண்கலத்தில், space-க்குப் பறந்து சென்றவர்களில் ஒருவர் தான் ‘கல்பனா சாவ்லா’. விண்ணில் பறந்தவர்… விண் வெளியிலேயே காற்றோடு கரைந்து போனவள்… இப்படிப் பேசப் பேசத்தான், ‘பெண்களால் முடியும்’ என்ற வார்த்தையை, பெருமையாய் சொல்ல முடிகிறது…..

மேகலா : கிருஷ்ணா…, ‘கல்பனா சாவ்லா’ ஒருவர் தான்…. இன்று, அவர் காற்றோடு கலந்து…, நூற்றுக்கும் மேலான கல்பனா சாவ்லாக்களை, விண்வெளியில் தூவி விட்டார் போலும்… ஆகாய விமானத்தை ஓட்டும் விமானிகளில் எத்தனை பேர் பெண்கள் தெரியுமா கிருஷ்ணா…. நான் முதன் முதலில் துபாய்க்குச் செல்லும் போது, அந்த விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவர், பெண்… இப்போ, ஹரித்துவார் சென்ற போது…, அங்கிருந்து Bangalore-க்குத் திரும்பிய விமானத்தை ஓட்டியது ஒரு பெண் விமானி… Runway-யில் ஓடிய விமானத்தை, short driving-ல் சட்டென்று உயரே கிளப்பிய ‘கெத்து’… எல்லோரும் விமானம் ஓட்டலாம்… ஆனால், ஒரு சிலரின் style-ல் ஒரு கெத்து இருக்கு கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! பெண்கள் விமானம் ஓட்டுவது பெருமை என்றால்…., அதை style-லாய் ஓட்டுவது இன்னும் கெத்து தான்…

மேகலா : இப்போ ஒரு ad அடிக்கடி வருது கிருஷ்ணா…. ஒரு பெண் விமானி விமானத்தை செலுத்துகிறாள்… Passengers அவளைப் பார்த்து, ‘என்ன அழகு’ என்று சிலாகிக்கிறார்கள். அப்போ, ஒரு குழந்தை, ‘அம்மா’ என்று விமானியை நோக்கி ஓடி வருகிறாள்… பயணிகள் இதை எதிர்பார்க்கவில்லை. ‘அம்மாவா’ என்று வியந்து போகிறார்கள். அவள் அவ்வளவு அழகாம்… ஒரு குழந்தைக்கு அம்மாவாய் அவளை நம்ப முடியவில்லை – என்று போகிறது இந்த ad….

கிருஷ்ணர் : பாரு…, ad-ல் காட்டும் போது, பெண் விமானியைக் காட்ட வேண்டும் என்ற அளவுக்கு…, பெண்கள் விமானம் ஓட்டுவது, ‘common’ ஆகி விட்டது… ‘வாவ்’… ‘பெண்களால் முடியும்’ மேகலா….

மேகலா : இதாவது, விமானம் ஓட்டுவது என்ற கணக்கில் சேர்கிறது… ஒரு கம்பெனிக்கு interview எடுத்து, select பண்ணுவது…, candidates-ஐ…, கிருஷ்ணா… இதில் ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்ற பேதமெல்லாம் கிடையாது… யார் திறமையாளர்களோ, அவர்கள் executive என்ற பெருமையோடு, தங்கள் திறமையைக் காட்டுவார்கள் கிருஷ்ணா… Programming, designing, marketing – என்று எல்லா தரப்பிலும், ஆணுக்குப் பெண் இங்கே சளைக்காமல் வேலை செய்கிறார்கள் கிருஷ்ணா…. திரைப்படத்துறை, entertainment துறைதானே…, இதில் முக்கியமான பணி, கதையின் போக்கைக் காட்சிப்படுத்தும் camera-வுக்கு உண்டுதான கிருஷ்ணா… அந்த camera-வைத் தூக்கிக் கொண்டு வேலை செய்யும் cameraman குழுவில் இன்று பெண்களும் இருக்கிறார்கள் கிருஷ்ணா…. அந்த camera இருக்கும், ஒரு குட்டிக் கண்ணுக்குட்டி மாதிரி…. அதைத் தூக்கிக்கிட்டு ஓடும் பெண்கள்…. திரைப்பட வேலையில் மட்டுமல்ல…, பத்திரிக்கைத் துறையில், செய்தி சேகரிக்கும் reporter பெண்கள், camera-வைத் தூக்கிக் கொண்டு, இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து வந்து, படம் பிடிக்கிறார்கள்…, செய்தி சேகரிக்கிறார்கள்…, short film எடுக்கிறார்கள்…. Times of India பத்திரிக்கை, சென்னை Times 2019 தொலைக்காட்சியில், மிகவும் விரும்பப்படும் 20 பெண்கள் என்று பட்டியலே போட்டிருக்கிறார்கள் கிருஷ்ணா… இவர்கள், செய்தி சேகரிப்பது மட்டுமல்ல கிருஷ்ணா…. குறும்படம் எடுப்பது…, சிலர், இப்படிப்பட்ட படங்களில் தானே நடிக்கவும் செய்கிறார்கள். இவர்களுடைய திறமையை வெளிப்படுத்த, தங்களுடைய platform-ஐ வெகு அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இன்றைய பெண்கள், very smart, மேகலா…. நடிப்புத் தொழிலைக் கூட, தன் திறமையை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறார்கள்…

மேகலா : இன்னும், BBC நிறுவனம், ஆண்டுதோறும்…, BBC 100 women என்று பட்டியலிட்டு வெளியிடுகிறார்கள் கிருஷ்ணா…. அதில், பல துறைகளைச் சார்ந்த திறமையான பெண்களைத் தேர்வு செய்து வெளியிடுகிறார்கள் கிருஷ்ணா… இதையெல்லாம் பார்க்கும் போது,

ஆணுக்குப் பெண்ணிங்கே சளைத்தவரில்லை காணென்று கும்மியடி’ என்று பாடத் தோணுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : BBC நிறுவனம் போன்ற நிறுவனங்கள், திறமையான பெண்களை அடையாளம் காட்டுவது சிறந்த செயல் தான். இப்படி நிறுவனங்களால் அடையாளம் காட்டாமலே சத்தமில்லாமல் சாதனை புரிந்து வரும் பெண்களைச் சொல்லேன்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1