Posts

ஏணிப்படிகள் - பாகம் 3

மேகலா   : டீச்சரோட அணுகுமுறைதான் கிருஷ்ணா…. முதல் முதலாக school-க்கு வருவதால், பிள்ளைகள் பயந்து போய் அழுகும் கிருஷ்ணா…. டீச்சர்…, அம்மாவிடம் கண்ணை சிமிட்டி போகச் சொல்லி விட்டு, ‘என்ன கண்ணு…, அழக் கூடாது…, இங்க பாரு…, டீச்சர் உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன் பாரு’ என்று mesmerizing-ஆ பேசும் போது, பிள்ளைகள் பாதி control ஆயிரும்…. ஒரு வாரம், பத்து நாள்…, இந்த கூத்து முடிந்ததும், முதலில் பாட்டு, rhymes என்று பிள்ளைகளுக்கு அபிநயம் பிடித்து சொல்லிக் கொடுப்பதும்…, பிள்ளைகள் ஆளுக்கொரு சுதியில் ராகம் இழுப்பதும்…, பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்…   நெசம்மா சொல்லணும்னா, ‘மாண்டிசோரி’ கல்வி கற்பித்தலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லுமளவு, டீச்சரின் சொல்லிக் கொடுக்கும் பண்பு…, அபாரமானது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இந்த மாதிரியான ஏணிப்படிகளால் மட்டும் தான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கான பணியை சிறப்பாகச் செய்ய முடியும்… மேகலா…, சூப்பர்…, சூப்பர்…. மேகலா  : இது மட்டுமல்ல கிருஷ்ணா… நான் 3rd Std படிக்கும் போது, எங்க டீச்சர் எனக்கு எப்படி கணக்கு சொல்லிக் கொடுப்ப...

ஏணிப்படிகள் - பாகம் 2

கிருஷ்ணர்   : மேகலா…, உன்னிடம் ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். இப்பெல்லாம், பிள்ளைகளுக்கு சரியான school select பண்ணுவதற்கு, parents, Google-ல் தேடி…., friends-இடம் கேட்டு, அப்படியிப்படின்னு அலப்பறைய கூட்டுறாங்க… இதில் school fees விவகாரம் ஏதுவா இருக்கணும்கற எதிர்பார்ப்பு வேற இருக்கும்…. சரி…, நீயெல்லாம் school-ல சேரும் போது, நிலவரம் எப்படி… உனக்குத்தான் அந்தக்காலத்து கதையை பேசுறதுனா ரொம்பப் பிடிக்கும்ல… அதுவும், ஏணிப்படிகளைப் பற்றிப் பேசுறோம். அந்தக் காலத்து ஆசிரியர்களைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்ல…. மேகலா  : ஐயோ…, கிருஷ்ணா…, அந்தக் காலத்து நிகழ்ச்சிகளை பேசுறதுனாலே, எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. நீ வேற கேட்டுட்டயா… இதோ சொல்றேன் கிருஷ்ணா…. கிருஷ்ணா…, முதல்ல எங்க school-அப் பத்தி சொல்லணும் கிருஷ்ணா…. எங்கள் பள்ளி நூறாண்டுகள் கடந்தது… பல கலெக்டர்களை…, பல பொறியாளர்களை…, பல தொழிலதிபர்களை உருவாக்கிய இந்தப் பள்ளிக்கூடம்…, நாடார் சமுதாய மகமை பண்டினால் ஆரம்பிக்கப்பட்டது… விசாலமான area… ஒவ்வொரு வகுப்பும், காற்றோட்டமாக, விசாலமாக…, 50 மாணவர்கள் கூட, சுலபமாக அமர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக இர...

ஏணிப்படிகள் - பாகம் 1

மேகலா   : ஏ! கிருஷ்ணா…, இதோ நானும் வாரேன்… கொஞ்சம் நில்லு. என்னால் வேகமா நடக்க முடியல… கிருஷ்ணா…., நில்லு…. கிருஷ்ணர்  : ஹையைய்யோ…., இவ பாத்துட்டாளா…. இனி தப்ப முடியாதே… கேள்வியால என்ன குடைஞ்சிருவாளே… இன்னைக்கு என்ன கேக்கப் போறாளோ…, தெரியலயே… வா, மேகலா… என்ன இந்தப் பக்கம் வந்திருக்க… நான் அப்படியே காத்து வாங்கலாம்னு வந்தேன். உன்னை எதிர்பார்க்கல… அதான் வேகமா போய்க்கிட்டு இருந்தேன்… என்ன…, உன்னை கொஞ்ச நாளா ஆளையே காணோமே… ஊருக்கு எங்கயும் போயிட்டயோ…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. சென்ற வாரம், திண்டுக்கல்லில் உள்ள ‘கல்யாண சௌந்தரராஜப் பெருமாள்’…, ‘சௌந்தரவல்லித் தாயார்’ குடியிருக்கும் கோயிலுக்கும்…, கோட்டை மாரியம்மன் கோயிலுக்கும் சென்றிருந்தோம் கிருஷ்ணா…. அடுத்து நம்ம ஊரில், ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது… எங்க மாமனார் நினைவு நாள்…, என்று அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளினால் எழுத ஆரம்பிக்காமல் விட்டுட்டேன்…  அறிவு வற்றிப் போய் விடுமோ என்று பயந்து போய் …, இன்று எழுத உட்கார்ந்து விட்டேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அறிவு வற்றி விடுமா…! என்ன உளறுகிறாய்…  அறிவு, கல்வி....

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 11 (நிறைவுப் பகுதி)

மேகலா   : நீ எங்களை நினைத்து வருத்தப்படுகிறாயா கிருஷ்ணா…. எனக்கென்னவோ, பிள்ளைகளை வேலை செய்யப் பழக்குவதற்கு அம்மா trick செய்வது பரவாயில்லையோ என்று தோன்றுகிறது…. கிருஷ்ணர்  : நீ சொல்வது சரிதான் என்றாலும், பிள்ளைகளுக்கு, சிறுவயது முதலே, பிறருக்கு உதவ வேண்டும்…, சாப்பிடும் பொருளோ, அல்லது சில ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ மாதிரியான பென்சில், note-book என்ற பொருட்களை, எல்லோருக்கும் share பண்ணணும், ‘சண்டை போடக் கூடாது’, ‘விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று சில கதைகளைக் கூறி புரிய வைக்க வேண்டும்… அப்பத்தான், demand பண்ணும் பொருளை வாங்கிக் கொடுத்தாவது வேலை செய்ய வைப்பது என்பதை ஒத்துக் கொள்ளலாம்… இருந்தாலும், உயர்ந்த உள்ளம் என்பது, சொல்லிக் கொடுத்து வருவதல்ல….. ஆனாலும், ஒரு மனிதனின் வளர்ச்சி, இப்படியும் வளர வாய்ப்பிருக்கிறது… நானும், என் அப்பாவைப் போல…, படித்து doctor ஆவேன் என்பதில் தொடங்கி…, எங்க teacher மாதிரி பாடம் நடத்துவேன்…. கொஞ்சம் வளர்ந்த பின், ‘தோனி’ மாதிரி விளையாடுவேன்… அப்துல் கலாம் மாதிரி scientist ஆவேன்… நானும் pilot ஆவேன்… என்று ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிய வரும் போது, அவர்கள் மாதிரி த...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 10

மேகலா   : ஓ…! வாவ்…! நீ சொல்லும் போது….., நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நமக்கான சவுகரியங்கள் அனைத்தும் நாம் நன்றாக, வளமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் என்று புரியும் போது, நம் முன்னோர்களைக் கும்பிடத் தோணுது கிருஷ்ணா…. அப்படிப் பார்த்தால், நம்முடைய முன்னோர்கள் செய்த பிழை கூட, நமக்கான எச்சரிக்கைதானே…. கிருஷ்ணர்  : கண்டிப்பாக…. சட்டத்தை நம்ம இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ளலாம் என்று ஒருவன் செயல்பட்டால், அந்தச் செயலே…, அவனை படுகுழியில் தள்ளி விடுகிறது… இது பின்னாடி வருபவர்களுக்கு ஒரு பாடமாகிறது… ‘பாமா விஜயம்’ படத்தின் கருத்தாக, T. S. பாலையா என்ன சொல்கிறார்…. மேகலா  : நான் சொல்கிறேன் கிருஷ்ணா…  ’இந்த உலகம், ஒரு விசித்திரமான பள்ளிக்கூடம். பாடம் நடத்தி விட்டு, பரீட்சை வைப்பதில்லை. பரீட்சை வைத்து விட்டு…, அதிலிருந்து பாடம் கற்றுக் கொடுக்கிறது…’  என்று….. கிருஷ்ணர்  : அதேதான்…  உயர்வோ…, தாழ்வோ…, மனிதன் எப்படி இருக்கணும்…, எப்படி இருக்கக் கூடாது…, என்பதற்கு பல உதாரணங்களை, நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள்… அதையெல்லாம், மனிதன் தன் பாடமாக எட...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 9

மேகலா  : பஸ்மாசுரன் கதை தெரியும் கிருஷ்ணா… அதைச் சொல்லட்டா…. கிருஷ்ணர்  : எனக்கு கதை தெரியும்… வேண்டாம் என்று சொன்னால் விடவா போகிறாய்… சொல்லு… சொல்லு…. மேகலா  : யப்பாடா… எங்க நீ வேண்டாம் என்று சொல்லி விடுவாயோ என்று நினைத்தேன் கிருஷ்ணா…. பஸ்மாசுரன் என்று ஒரு அசுரன். அவனுக்கு திடீரென்று, தான் சர்வ வல்லமை படைத்தவன் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது…  வல்லமை படைத்தவனாக வேண்டும் என்று நினைத்தால், எல்லோரும் புகழும்படியாக உயர்ந்து நிற்க வேண்டும்… மக்களைப் பாதுகாக்க வேண்டும்… நல்லாட்சி புரிய வேண்டும்…. எதிரிகளிடம் விழிப்பாக இருக்க வேண்டும்…. இது நேர்மையான வழி…  ஆனால், ‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது நிதர்சனமான உண்மை… பஸ்மாசுரனுக்கு, தான் யார் மீது கை வைக்கிறானோ…, அவர்கள் எரிந்து சாம்பலாகி விட வேண்டும்… என்று புது மாதிரி ஒரு யோசனை வருகிறது. அப்படி நடந்து விட்டால்…, தான் தான் உலகில் சர்வ வல்லமை படைத்தவன் ஆகி விடுவோம் என்று தப்புக்கணக்கு போடுகிறான்… ஆனாலும், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குறுக்குவழி போவதற்கும் வழி தெரிய வேண்டுமே… அதனால், இந்த வல்லமையைத் தர வல்லவர்கள்...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 8

மேகலா  : நாங்க பேசும் தமிழை இவ்வளவு சரளமாகப் பேசுகிறாய் கிருஷ்ணா… சரி…, பெரிய பெரிய புராணங்களிலும், கதைகளிலும் நாம் படித்திருக்கிறோம்…, கேட்டிருக்கிறோம்…, கொடுமை செய்யும் அசுரர்களும், ராட்சசர்களும் கொடுந்தொழில் புரிய நினைத்து…, எதிரியை வெல்வதற்கான ஆயுதங்களை…, கடவுளிடமிருந்தே கேட்டுப் பெறுகிறார்களே… அவர்கள் கேட்ட வரத்தை, கடவுளும் கொடுக்கிறார். அது ஏன் கிருஷ்ணா… நாம் செய்யும் நற்செயல்… bank deposit… அதில் சேரும் வட்டி என்பது கடவுள் அளிக்கும் வரம் என்றாயே…, அதனால் கேட்டேன்… கிருஷ்ணர்  : சரி…, நீ யாரை மனதில் வைத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்… அதைச் சொல்… நான் பதில் சொல்லுகிறேன்… மேகலா  : எல்லா அசுரர்களும் தான் கிருஷ்ணா… ராவணனிலிருந்து…, எத்தனை பேர், இந்த மாதிரி வரம் வாங்கியவர்களாக இருக்கிறார்கள்… மகாபாரதத்தில் அர்ஜுனன், பரமசிவனாரை நோக்கி தவம் செய்து பெற்றது ‘பாசுபதா அஸ்திரம்’ என்று பலமுறை படித்து படித்து மெய் சிலிர்த்திருக்கிறேன்… அதே மகாபாரதத்தில், துரியோதனின் சகோதரி துச்சலையினுடைய கணவன் ஜயத்ரதன், திரௌபதியிடம், வனவாசத்தின் போது, தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான்… இதனால் க...