கதை கதையாம் காரணமாம் - பாகம் 4
மேகலா : கிருஷ்ணா…, இதுவும், பார்வதி பரமேசுவரனார், உலகிற்கு ‘நம்பிக்கை’ எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் தான் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : Oh! இந்தக் கதையா…, அற்புதம்…; சொல்லு… மேகலா : ஒரு முறை, பார்வதி தேவி, பரமேசுவரனாரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்கிறார். ‘ஐயனே, மக்கள், கங்கையில் குளித்தால், தங்கள் பாவத்தைத் தொலைத்து புண்ணியம் அடைவார்கள் என்று ஒரு நம்பிக்கையை சொல்கிறார்கள்… நானும் பார்க்கிறேன்…, தினந்தோறும், கங்கையில் நீராட வருபவர்கள் ஏராளம் பேர்… வருகிறார்கள், குளிக்கிறார்கள், செல்கிறார்கள். ஆனால், பாவங்கள் தொலைந்ததாகத் தெரியவில்லையே… ஒரு பக்கம் கங்கையில் குளிக்கிறார்கள்…, மறு பக்கம் குற்றங்களும் பெருகிக் கொண்டே போகின்றன… மக்களுக்கு கங்கையின் மேல் நம்பிக்கையில்லையா…, இல்லை…, கங்கைக்கு புண்ணியம் வற்றிப் போய் விட்டதா…’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார். சர்வேஸ்வரனும், ‘உமாதேவி, இந்தக் கேள்விக்கு பதிலை, நாம் உலகுக்குச் சொல்லியே ஆக வேண்டும்… நாமும் நாடகம் நடித்து பல நாட்கள் ஆகி விட்டதல்லவா… கங்கை நதி தீரத்துக்கே செல்வோம்… நான் வயதானவனாக, பேரழகியான உன் கையை...