Posts

பக்குவம் - பாகம் 5

கிருஷ்ணர்   : ‘பக்குவமான நேரம்’ என்பது, சம்பந்தப்பட்டவர் சந்தோஷமாக இருக்கும் நேரம்… நம்மளோட அணுகுமுறையே காரியத்தை சாதிக்க வைத்து விடும்… பக்குவத்திற்கு அவ்வளவு வலிமை உண்டு மேகலா….   ‘பக்குவமான நேரம்’ – மிகச் சரியான நேரம் என்று சொல்லலாம்.  நேரம் பார்த்து, பக்குவமா, பதமா சொல்லு… எந்தத் தப்பும் வந்து விடக் கூடாது… எந்தத் தடையும் தடுத்து விடக் கூடாது. அதற்குத் தகுந்தாற் போல, ‘பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கம்… மேகலா  : கிருஷ்ணா…, பெண் பிள்ளைகள் பிறந்த எல்லோர் வீட்லயும் தவறாமல் வரும் ஒரு situation-ல் பக்குவம் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்படும் தெரியுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்னது…, சாமர்த்தியமாக செயல்படுகிறதா… சுவாரஸ்யமா இருக்கு… எங்க சொல்லு பார்ப்போம்… மேகலா  : கிருஷ்ணா…., திருமணம் முடிஞ்சி, பெண் அழைப்பிற்காக மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க இல்லையா… இது வரை சந்தோஷமாக வலம் வந்த அம்மாவுக்கும், அப்பாவுக்கும், மகள் நம்மை விட்டுப் பிரிந்து புருஷன் வீட்டிற்குச் செல்லப் போகிறாள் என்ற உண்மை கலங்க வைக்கும்… அதை விட அதிகமாக…, நம்ம பொண்ணு புருஷன் வ...

பக்குவம் - பாகம் 4

கிருஷ்ணர்   : இதுதான் கீதையில், அர்ஜுனனிடம் சொல்லப்பட்ட உபதேசம்…, போர்க்களத்தில், உனக்கான உரிமையைப் போரிட்டு, எதிரிகளை வீழ்த்திப் பெறுவதில் தவறேயில்லை…. அவரவர்க்கான கடமைகளை, அவரவர் செய்வதுதான், மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட விதி… அதை சிறப்பாக திறமையாகச் செய்பவன், எல்லோராலும் விரும்பப்படுகிறான்… நீ சொன்ன உதாரணம் உண்மையானது…, வலிமையானதும் கூட.   மனிதனோட வேலைகளை எட்ட நின்று, encourage பண்ணலாம். ‘நான் அந்த வேலையைச் செய்கிறேன்’ என்று யார் குறுக்கே வந்தாலும்…, கடவுளே ஆனால் கூட, மனிதனால் ‘பக்குவம் அடைவது’ என்ன…, ‘வளரவே’ முடியாது…. மேகலா  : உண்மை கிருஷ்ணா… இந்த ‘பக்குவத்திற்கு’ இன்னும் ஒரு அர்த்தம் கூட இருக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன…, அது…? மேகலா  : ஒருவருக்கு, ஏதோ ஒரு இழப்பு நேர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு, மனம் உடைந்து அழுகிறார் என்று வைத்துக் கொள்வோம்… அம்மாவோ…, அப்பாவோ…, யார் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என்று அறிந்து, அவர்களிடம், ‘நீதான் பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவளை சமாதானப்படுத்தணும்’ என்று கேட்டுக் கொள்வார்களே… இந்தப் பக்குவத்தின் அர்த்தம் என்ன கிருஷ்...

பக்குவம் - பாகம் 3

மேகலா   : எப்புடி கிருஷ்ணா.., எப்டி…, என் மனசுல உள்ளத அப்படியே சொல்ற…. கிருஷ்ணர்  : இதை நீ சொல்லி…, நான் கேட்டு கேட்டு…, என் ஒரு பக்கத்துக் காது வீங்கியே போச்சு… ஆனாலும், நீ சொல்லும் கைப்பக்குவம் ரொம்ப சுவையா இருக்கு… இது மட்டும் தானா…, இன்னும் இருக்கா…. மேகலா  : ஐயோ கிருஷ்ணா…, தீபாவளி வரட்டும் கிருஷ்ணா… அதற்கான பலகாரங்களில் இந்த ‘பக்குவம்’ சும்மா புகுந்து விளையாடும். அதிலும், இனிப்பு வகையறாவில்…, ‘ஜீரா’ தயாரிப்போமே…, அதற்கு ‘பக்குவம்’ ரொம்ப அவசியம் கிருஷ்ணா… குலோப் ஜாமூனுக்கு…, ஜீராவின் பக்குவம், பிசுபிசுப்பாய் இருக்க வேண்டும்… லட்டுக்கு, one string கம்பி பதம்…. அதிலும், அதிரசத்திற்கு வெல்லப் பாகு ‘டங்கு’ பதம்… அப்படீன்னு, பலகாரம் பக்குவமாய் வருவதற்கு, இந்த பதம் பலவிதமாய் மாறுபடும்…. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பக்குவம் இருக்கு… இந்த ‘பக்குவம்’ தப்பாமல் செய்தால் மட்டுமே, நாம் விரும்பும் சுவை நமக்குக் கிடைக்கும். முறுக்கு பக்குவமாய் செய்தால் தான், ‘கரகரப்பாய்’ இருக்கும்… அதிரசம் பக்குவமாய் செய்தால் தான் மிருதுவாய் இருக்கும்…. கிருஷ்ணர்  : Oh! இதில் இத்தனை விஷயம் இருக்கா…...

பக்குவம் - பாகம் 2

மேகலா   : கிருஷ்ணா…, சின்னப்புள்ளைகளாக இருக்கும் போது, ஒவ்வொரு மனிதர்களும் எப்படிலாம் ஆசைப்படுவாங்க தெரியுமா கிருஷ்ணா… அது குழந்தைத்தனமான ஆசைன்னு சொல்லி easy-யா இப்போ ஒதுக்கிரலாம். சொல்லப் போனா, ஒவ்வொரு பருவத்திலும் மனிதன், தான் நினைப்பதுதான் சரி…, நாம ஆசைப்படுறதுல தப்பே கிடையாது…, அது நிச்சயம் நமக்குக் கிடைக்கும்…, என்று தன்னுடைய தகுதி மறந்து நினைப்பதுண்டு… இவ்வளவு ஏன்…? மாணவப் பருவத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு hero பிடிச்சிருக்கும். அவங்க நடிச்ச படத்தின் பாடலை மனப்பாடம் பண்ணுவது மட்டுமில்லை…, அந்த hero-வோட heroine ஆக நினைப்பதிலே, அவர்களுக்கு ஒரு சந்தோஷம்… இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்ற ‘பக்குவம்’ கிடையாது. முதலில் அந்த hero-வுக்கு நம்மைப் பிடிக்குமா என்ற அறிவு கூட இல்லாமல், கற்பனையிலும், கனவுகளிலுமே லயித்திருப்பார்கள்.   இப்படி immature behavior எப்போ மாறும் தெரியுமா… நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவத்தையும் சந்திக்க சந்திக்க…, யதார்த்தம் புரிய ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக பக்குவமாகிறார்கள்.  அப்பவும்…, புதுசா ஒரு அனுபவத்தை சந்திக்கும் போது, ஆலோசனை சொல்பவர்களை ஏற்றுக...

பக்குவம் - பாகம் 1

மேகலா   : கிருஷ்ணா…, தினந்தோறும் ஏதும் எழுதாமல் சும்மா இருப்பது…, குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி எழுதலாமா…. இன்று, மாண்புமிகு நரேந்திர மோடி பேசிய, ‘ரோட்டி காவ்…, இல்லையேல் என் துப்பாக்கியின் கோலி உன்னைத் தேடி வரும்’ – என்று பாகிஸ்தானை எச்சரித்ததை நினைத்து கொந்தளிக்கவா…, என்று திணறித் திணறி மூச்சு முட்டுது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : மூச்சு முட்டெல்லாம் வேண்டாம்… ஏதாவது எழுதணும் என்றால், நல்ல தலைப்பாக யோசி… இன்னும் முடிவுறாத ஆபரேஷன் சிந்தூரை வேறு ஒரு நாள் யோசிக்கலாம்… நிறையப் பேசி, பேசி நானே கொதித்துப் போனேன்… ஏதாவது குளிர்ச்சியாகப் பேசலாம்… மேகலா  : அக்னி நட்சத்திரத்தில், சூரியன் கூட தகிக்காமல், கொஞ்ச நாளாக குளிர்ச்சியாயிருக்கிறான். அது போல, நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒரு இதம் தேவையாக இருக்கு போல…. நீயும் அதைத்தான் சொல்லுகிறாய்… கிருஷ்ணர்  : சரி…, தலைப்பைச் சொல்லு… மேகலா  : எதை எழுதுவது என்று எனக்கும் புரியவில்லை கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இன்று முழுவதும், ‘பக்குவம்’, ‘பக்குவமடைதல்’…, ‘மேன்மை’ – இதைப் பற்றி யோசி… அப்புறம் பேசலாம்… ...

ஆளுமை - பாகம் 12 (நிறைவுப் பகுதி)

மேகலா   : வெள்ளையனைப் பார்த்து, கட்டபொம்மன், ‘நீ யார் என்னிடம் வட்டி கேட்பது?’ – என்று சொல்லிய வசனத்தை, வீட்டிற்கு வந்த பின்னும், ‘கிஸ்தி, வரி, வட்டி…, எங்களுடன் வயலுக்கு வந்தாயா…, நாற்று நட்டாயா…, இல்லை, எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி செய்தாயா? யாரைக் கேட்கிறாய் வட்டி…, மானம் கெட்டவனே’ – என்று நாமும் கட்டபொம்மனாக மாறி, மெய் சிலிர்த்துப் போவோம்… ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே…’ என்ற பாடலைக் கேட்கும் போது…, பாரதியாரைக் காட்டிலும், பாரதியார் வேஷத்தில் நடித்த நடிகர் திலகம் மட்டுமே கண்ணில் தெரிவார்… ‘திருவிளையாடலில்’ மீனவனாக வரும் சிவபெருமான், கடற்கரையோரம் நடக்கும் நடையழகு…, அந்த எம்பெருமான் சிவனையே நினைக்க வைக்கும் கிருஷ்ணா…. எந்தப் பாத்திரத்தைச் சொல்ல…, நாவுக்கரசராய் நடித்த சிவாஜியா…, தொண்டரடிப்பொடியாழ்வாராய் நடித்த சிவாஜியா…, இவ்வளவு ஏன்…,   1960-களில், தமிழக மக்களுக்கு சுதந்திரத்தின் வலியையும், ஆன்மீகத்தின் மேன்மையையும் வெளிப்படுத்திக் காட்டியதில் முக்கிய பங்கு நடிகர் திலகம் சிவாஜி ஐயாவையே சாரும் கிருஷ்ணா…  ‘படிக்காத மேதை’ ரங்கனாகட்டும்…, ‘பாசமலர்’ அண்ணனாகட்டும்…...

ஆளுமை - பாகம் 11

மேகலா   : கிருஷ்ணா…, இன்னொரு கிருஷ்ணர் கிடையாது. அதையும் சேர்த்துச் சொல்லு கிருஷ்ணா…   எத்தனை பேர் சாஸ்திரம் படைத்தாலும், திருக்குறள் எழுதினாலும்…, எல்லாம் ‘கீதை’யின் எதிரொலியே…   எந்த நல்ல சிந்தனையும், கிருஷ்ணரிடமிருந்து வந்தவையே… தைரியம், நம்பிக்கை, உழைப்பு, முயற்சி, பக்தி, தர்மம்…, என்று யார் போதித்தாலும், அது கீதையின் தாக்கத்தினால் வந்ததே…   உலகத்தின் மொத்த ஆளுமையும், ஸ்ரீகிருஷ்ணரும், கீதையும் தான்…. கிருஷ்ணர்  : Ok…, done…bye… மேகலா  : கிருஷ்ணா.., என்ன கிருஷ்ணா…., கிருஷ்ணா, நான் இன்னுமொரு ஆளுமையாளரைப் பற்றி உன்னிடம் சொல்லவில்லை… அதற்கு முன்னே, நீ bye சொல்லிட்டு கிளம்புறியே… நான் யாரிடம் சொல்லுவேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இப்ப எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு புலம்புற… யார் அந்த ஆளுமையாளர்…. மேகலா  : ‘யார் அந்த நிலவு…, ஏன் இந்தக் கனவு’ – என்ற பாடலுக்கு…, gentle ஆ…, சோகமா.., இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்ற பாவனையில் சிகரெட்டை ஊதி, ஊதி தன் வேதனையை வெளிப்படுத்துவாரே…, அந்த நடிகர்…, நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் கிருஷ்ணா… அவர் நடிக்கு...