கதை கதையாம், காரணமாம் - பகுதி 5

மேகலா : கிருஷ்ணா! ‘மாத்தி யோசி’ concept-ல் ஒரு கதையுடன் இந்த வார episode-ஐ ஆரம்பிப்பதாகக் கூறியிருந்தேனல்லவா...! இதோ! ஒரு Project Engineer, தன்னுடைய project work-ஐ முடிப்பதற்காக, தனி இடம் விரும்பினார். அதனால், அந்த ஊர் குளத்துக்கருகில் சென்று அமர்ந்து, தன் laptop-ஐ open பண்ணி வேலை பார்க்கத் தொடங்கினார். மரத்தின் மீது அமர்ந்திருந்த பறவை சப்தம் கேட்டு, அண்ணாந்து பார்க்க நிமிர்ந்த நேரத்தில், கையில் இருந்த laptop, கை தவறி குளத்துக்குள்ளே விழுந்தது. உடனே பதற்றமான அந்த இளைஞன், என்ன செய்வதென்று தெரியாமல், கண் கலங்கி அழுதான்.

கிருஷ்ணர் : ஏன்....? உடனே குளத்துக்குள் குதித்து, laptop-ஐத் தேடலாமே....!

மேகலா : ஐயோ கிருஷ்ணா!அவனுக்கு நீச்சல் தெரியாது. ‘என்னுடையது, advanced technical வசதிகள் நிறைந்த laptop; யாரிடமும் இது மாதிரியான laptop கிடையாதே.... இதை நான் அமெரிக்காவில் வாங்கினேன். இந்த system இன்னும் இந்தியாவிற்கு வரவேயில்லையே’ என்று அழுது புலம்பினான். ‘Oh God! நான் என்ன செய்வேன். நாளைக்குள் இந்த project-ஐ முடித்துத் தருவதாக promise பண்ணியிருக்கேனே; வேற system இதை விட slow-வாக இருக்குமே’ என்றெல்லாம் புலம்ப, அந்தக் குளத்தில் இருக்கும் ‘God'-க்கு அவன் மீது இரக்கம் வந்தது. உடனே அவன் முன், ஒரு தோட்டக்காரன் போலத் தோற்றத்துடன் தோன்றி, ‘ஐயா! என்ன ஆச்சு? ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவனோ, ’உனக்குப் புரியுமா என்று எனக்குத் தெரியவில்லை; என்னுடைய laptop; advanced system கொண்டது, தவறி குளத்துக்குள் விழுந்து விட்டது. எனக்கு நீச்சல் தெரியாது. என்னுடைய laptop, water-proof - இது மாதிரியான system, இந்தியாவிலேயே கிடையாது; advanced model, can you help me, please?' என்று பரிதாபமாகக் கேட்டான்.
கடவுளும் சிரித்துக் கொண்டே, குளத்துக்குள் dive அடித்து, மூழ்கி, ஒரு சிறிய அளவுப் பொருளைக் கையில் கொண்டு வந்தார். ‘இதுவா பார்’ என்று கேட்டார். தீப்பெட்டியை விட சற்று பெரிய size-ல் இருந்த அந்தப் பொருளை, அந்த இளைஞன் விநோதமாகப் பார்த்தான். ‘ஐயோ, இது இல்லை. என்னோடது laptop; பெருசு; advanced model. இது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை’ என்றான்.

கடவுளும் மறுபடியும் தண்ணீரில் குதித்து, இன்னும் சற்றுப் பெரிய iPad மாதிரியான பொருளோடு வந்தார். அவனிடம் காண்பித்து, ‘இதுவா?’ என்று கேட்டார். அவன் அலறியே விட்டான். ‘போச்சு, போச்சு, நான் store பண்ணி வைத்திருந்த data எல்லாம் போச்சு; 1 1/2 லட்சம் ரூபாயில் வாங்கிய என்னோட system, very new model, உலகத்திலேயே மொத்தம் 10 பேரிடம் மட்டும் தான் உள்ளது’ என்று அழுதான். கடவுள் ரொம்பவும் இரக்கப்பட்டு, மறுமுறை குளத்திற்குள் குதித்து, இந்த முறை அவனுடைய original laptop-ஓடு வந்தார். ஓடிப் போய், கடவுள் கையில் இருந்த laptop-ஐ பறிக்காத குறையாகப் பிடுங்கினான். ‘Thank God, இதுதான்; இதுவேதான். தம்பி! (கடவுளைப் பார்த்து) உனக்கு இதன் அருமை தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தா, இதை வைத்துக் கொள்’ என்று கையில் ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.

கடவுள், சற்றே அலட்சியமாகச் சிரித்து, தன் கையை நீட்டினார். அதில், அவர் ஏற்கனவே எடுத்து வந்த, தீப்பெட்டி size, micro-laptop-ம் அடுத்து எடுத்து வந்த iPad size laptop-ம் இருந்தன. கடவுள் சொன்னார், ‘நான் முதலில் எடுத்து வந்த micro-laptop இன்னும் 50 வருடம் கழித்து வரப் போகும் very advanced laptop. இதை நீ வாங்கியிருந்தால், உன் வாழ்நாள் காலம் வரைக்கும், இது மாதிரியான laptop-ஐ இன்னும் ஒருவர் வாங்கப் போவதே இல்லை! நான் அடுத்து எடுத்து வந்தது, இன்னும் 20 ஆண்டுகளுக்குள் புழக்கத்தில் வர இருக்கும் laptop; அதிவேக system! நான் என்ன, ஏது என்று விசாரிக்காததாலேயே, ஒன்றும் தெரியாதவன் என்று எடை போட்டு விட்டாய். நீ புலம்பியதால் மாத்திரமே, எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொண்டாய். சரி...., ஊரோடு ஒத்து வாழ்வதே உன் விதி. உன் laptop இன்னும் 1 வருஷத்தில், old model ஆகி விடும். நீயும் வயதாகி விடுவாய். உன் project-ஐ முடித்து நல்ல பெயர் எடு’ என்று சொல்லி மறைந்து போனார். இளைஞனோ, வாயடைத்துப் போனான்...

கிருஷ்ணர் : ஹஹ்ஹா; ஹஹ்ஹா...! விஞ்ஞானமும் அப்படித்தான் இருக்கிறது; மனிதர்களின் அலப்பறையும் அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும், கதை super மேகலா... இந்த நவீன விஞ்ஞானக் கதைகள் நல்லா இருக்கே.... ஏன் மேகலா, ஒரு ‘முயலாமைக் கதை’ சொல்லுவியே....
மேகலா : நான் ’முயலாமல்’ இருக்கிறேனா.... கதை சொல்ல முயற்சி செய்து கொண்டுதானே இருக்கிறேன்.....

கிருஷ்ணர் : ஹேய்.... இது நல்லா இருக்கே.... நான் ‘முயல் ஆமைக் கதை’ mean பண்ணினால், நீ வேற மாதிரி அர்த்தம் (முயலாமை - not trying) எடுத்துக் கொண்டாயே....!

மேகலா : கிருஷ்ணா! ‘சிங்கம்’ படத்துல, serious ஆன ஒரு scene..... ’சிங்கத்தை’ city station-க்கு transfer பண்ணியிருப்பாங்க. நம்மாளு ரொம்ப நேர்மையான ஆளு இல்லையா! வில்லனோட ஆட்கள், police officer-ஐ trap பண்ணனும். ஒரு phone call வரும். ‘Sir, இங்க ஒரு கொலை நடக்கப் போகுது; உடனே வாங்க sir' என்று அவசரமா கூப்பிடுவாங்க. Police ஆக நடிக்கும் சூரியா, spot-க்குப் போவார். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. Police விசாரிப்பார். அப்போ, வில்லனோட கும்பல், ‘கொலையா...., ‘தென்னங்கொல்லை’ இங்க இருக்கு; இதத்தான் சொல்லியிருப்பாங்க...’ என்று நக்கலா சிரிப்பாங்க. இப்படி இரண்டு விதமா meaning கொடுக்கக்கூடிய சொற்கள், தமிழுக்கு இனிமை கொடுப்பதல்லவா....?

கிருஷ்ணர் : பலே....பலே.... எங்க, அப்படி அழகான வார்த்தைகளாகச் சொல்லேன், மேகலா.....

மேகலா : கிருஷ்ணா! உனக்கு ‘நிர்வாண coffee வேணுமா....?

கிருஷ்ணர் : எ....எ.... என்ன....என்னம்மா...., அழகான தமிழ் வார்த்தையைக் கேட்டா...., ஏடாகூடமாகப் பதில் சொல்லுற...... எனக்கு coffee-யும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்..... உன்னோட சேர்ந்தேன் பாரு; என்னைச் சொல்லணும்.

மேகலா : ஐயோ..... கிருஷ்ணா..... ‘ஆடை இல்லாத coffee', அதாவது, ‘ஏடு படியாத சூடான coffee'. இதைத்தான், ஒரு சினிமாவில், ‘நிர்வாண coffee' என்பார்கள்.....

கிருஷ்ணர் : ஓஹ்..... மேகலா! நான் பயந்தே போயிட்டேன். இந்த ‘வார்த்தை விளையாட்டு’ நல்லா இருக்கே.....

மேகலா : நேற்று ஒரு படம் பார்த்தேன், கிருஷ்ணா. இரண்டு நண்பர்கள், ஒரு இக்கட்டான situation-ஐ விவரிச்சிக்கிட்டு இருப்பாங்க..... ஒருத்தன், ‘டேய், தொடடா, தொடடா’ என்பான். மற்றவன் அவன் முகத்தைத் துடைக்கப் போவான்....

கிருஷ்ணர் : எனக்குப் புரிஞ்சி போச்சு; அவன் தொடையில் கை வைத்து, அழுத்திக் கொண்டிருந்தானோ.....!

மேகலா : Exactly, கிருஷ்ணா! இப்படி சின்னச் சின்ன வார்த்தை twist-களை வைத்து, comedy சம்பவங்களை, அழகாக சினிமாவில் காட்டுவார்கள். இது பற்றியும் மேலும் பல விஷயங்களையும் அடுத்த பகுதியில் பார்ப்போமா, கிருஷ்ணா....?

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1