மனிதர்கள் பலவிதம் - பகுதி 3

மேகலா : அஜித் தோவல், பொற்கோவிலுக்குள் எந்த வேஷத்தில் நுழைந்தார் என்று உன்னை guess பண்ணச் சொல்லியிருந்தேனே, கிருஷ்ணா! உன்னால் யூகிக்க முடிந்ததா....? சரி.....! பரவாயில்லை, நானே சொல்கிறேன். ‘ரிக்‌ஷாக்காரன்’ மாதிரி சென்றாராம், கிருஷ்ணா! நீ நம்புகிறாயா....?
கிருஷ்ணர் : அஜித் தோவல், இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம் மேகலா!

மேகலா : நானும் அப்படித்தான் நினைக்கிறேன், கிருஷ்ணா. ஒரு ரிக்‌ஷாக்காரன், சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த தீவிரவாதிகள், அவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அவர், ’நான் ஒரு பாகிஸ்தானி உளவாளி; உங்களுக்கு உதவுவதற்காகவே வந்திருக்கிறேன்’ என்று சொல்லி நோட்டம் விட்டிருக்கிறார், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : விசாரணை என்றால், சும்மாவா விசாரித்திருப்பார்கள்?! ...... ’தீவிரவாத விசாரணை’...... சும்மா சொல்லக் கூடாது; மனுஷன் நாட்டுக்காக உயிரையே கொடுப்பார் போலிருக்கிறது.....

மேகலா : ராணுவத்திற்கு அவர் அனுப்பிய தகவல் இதுதான்; ‘பொற்கோவிலுக்குள் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அரசாங்கம், கோவிலுக்குள் மின்சாரம், தண்ணீர் இரண்டையும் தடை செய்தால், அவர்களால் இயங்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். ‘தகதகக்கும்’ கோடை வெய்யிலில் மின்சாரமும், தண்ணீரும் செல்வது தடை செய்யப்பட, முழுதாக எட்டு நாட்களுக்குள் தீவிரவாதிகள் அனைவரும், வெளியேறியுள்ளனர். பிரச்னை, கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு முடிவுக்கு வந்துள்ளது, கிருஷ்ணா...!

கிருஷ்ணர் : வாவ்....வாவ்....! என்ன ஒரு மதிநுட்பம்; என்ன ஒரு துணிச்சல்; என்ன ஒரு சாதுர்யம்....! Great man....!

மேகலா : அடுத்தது, அவர் பாகிஸ்தானுக்குச் சென்று 7 வருடங்கள் அங்கிருந்தார் என்று சொன்னால், நீ என்ன சொல்லுவாயோ....!

கிருஷ்ணர் : இவருக்கு இருக்கும் துணிச்சலுக்கு, பாகிஸ்தானுக்கு மட்டுமா செல்வார்? விட்டால், பாகிஸ்தான் அதிபர் ‘இம்ரான் கான்’ வீட்டுக்கே கூட உளவு பார்க்கச் செல்வார் பொலிருக்கிறதே...!

மேகலா : கிருஷ்ணா! பாகிஸ்தானுக்குச் சென்று சில ரகசியங்களை அறிந்து தகவல் சொல்ல வேண்டும். இதற்காக ஒன்றல்ல, இரண்டல்ல, 7 வருடங்கள் அங்குள்ள குடிமகனாகவே மாறி, அங்குள்ள மக்கள் பேசும் வட்டார வழக்கு (slang language) style-ல் உருது பேசி, குறிப்பாக ‘இஸ்லாம்’ மதத்துக்கு மாறி வேலை பார்த்திருக்கிறார் என்றால், என்னால் நம்பவே முடியவில்லை, கிருஷ்ணா! அவரைப் பற்றிய ஒவ்வொரு சம்பவத்தையும் சொல்லச் சொல்ல, என் மனதிற்குள், அவர் உருவம் வளர்ந்து, வளர்ந்து, விஸ்வரூபமாய் உயர்ந்து நிற்கிறது, கிருஷ்ணா! நான் அவர் பெருமைகளை அண்ணாந்து பார்க்கிறேன்.

ஒரு முறை, தொழுகைக்காக, மசூதிக்குச் சென்றிருக்கிறார். பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர், அவரிடம் கிசுகிசுப்பாக, ‘நீங்கள் இந்துதானே’ என்று கேட்டிருக்கிறார். இவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, ‘நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்; நான் ஒரு முஸ்லிம்’ என்று சொல்லியிருக்கிறார். இவரும், மசூதியை விட்டு வெளியே வந்தவுடன், அந்த முதியவர், இவருடன் நடந்து கொண்டே, ‘உங்கள் காதில் இருக்கும் கடுக்கன் போட்ட வடு, நீங்கள் ஒரு இந்து தான் என்று காட்டிக் கொடுக்கிறது’ என்று கூறுகிறார். அப்பொழுது, அந்த முதியவருடைய வீடு வந்து விடுகிறது. அஜித் தோவலை உள்ளே அழைத்துச் சென்று, முதியவர் தனது cup-board-ஐத் திறந்து காட்டுகிறார். அதில், சிவ லிங்கமும், மற்றும் கடவுள் படமும் இருக்கிறது. அவர், ‘நானும் இந்துதான். இங்கு இந்துவாக நம்மைக் காட்டிக் கொள்ள முடியாது’ என்று சொன்ன அந்த அனுபவத்தை, அஜித் தோவல் நினைவு கூர்கிறார், கிருஷ்ணா!

பாகிஸ்தானிலிருந்து என்ன தகவல்களை ராணுவத்திற்கு அளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், அபாயத்தையே விளையாடும் களமாக வாழ்ந்தவருக்குத் தகுதியான பதவியைத்தான் பிரதமர் கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது, கிருஷ்ணா! உனக்கு ஒண்ணு தெரியுமா, கிருஷ்ணா....? இவரைப் பற்றி ஒரு ராணுவ அதிகாரி சொன்னதைக் கேட்டியா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : Retired ராணுவ அதிகாரி ‘கரன்கர்’ சொன்னதைப் பற்றிக் கேட்கிறாயா...? ‘காலிஸ்தான்’ பிரச்னையில், அஜித் தோவலின் brilliant move பற்றித்தானே....

மேகலா : அதேதான்...., அதேதான் கிருஷ்ணா.... ’அவர் எதையும் வித்தியாசமாக யோசிப்பார்’ என்று சொல்லி வியந்து போகிறார், கிருஷ்ணா! நமது பாரதப் பிரதமர், குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுதே, இவருடைய மதிநுட்பத்தைப் பார்த்து, இவரோட நெருக்கமாகிறார்.

கிருஷ்ணர் : ஆமாம்....! தேசப் பற்றுள்ளவர்களுக்கு, இன்னொரு தேசப் பற்றாளரைப் பார்க்கும் போது, அவர் மீது அபிமானம் உண்டாவது சகஜம் தானே....! ஆமாம், நீ அஜித் தோவலைப் பற்றி ‘மாஞ்சி மாஞ்சி’ எழுதுகிறாய்; ஒரு tailor-ஐப் பற்றி ரசிச்சு என்னிடம் share பண்ணுகிறாய்.... நம்முடைய உள்துறை அமைச்சரைப் பற்றிய விவகாரம், இந்தியாவே, ‘அடுத்து என்ன, அடுத்து என்ன’ என்று பரபரப்பாய் கவனித்துக் கொண்டிருக்கும் விவகாரத்தைப் பற்றி ஒன்றுமே பேச மாட்டேன் என்கிறாய்.... நெசம்மாவே உனக்கும் ஒன்றும் தெரியாதா.... ச்சும்மா, நடிக்கிறயா....?

மேகலா : உள்துறை அமைச்சரா? ‘அமித் ஷா’வுக்கு என்ன ஆச்சு கிருஷ்ணா? நான் news-ஐ regular ஆக follow பண்ணத்தானே செய்கிறேன்....!

கிருஷ்ணர் : ஐயோ.... அவரில்லை; அவர் நிதித்துறை அமைச்சரும் கூட......

மேகலா : நீ, நிர்மலா சீத்தாராமனைச் சொல்லவில்லை என்று தெரிகிறது. ‘அருண் ஜெயிட்லி’யின் மரணத்தைப் பற்றிச் சொல்கிறாயா.... ஆனால், அவர் உள்துறை அமைச்சராக..... oh....... once upon a time உள்துறை அமைச்சராக இருந்த the great culprit, criminal பானா. சிதம்பரத்தைப் பற்றிக் கேட்கிறாயா? என்னைச் சுற்ற வைத்து வேடிக்கை காட்டுகிறாயா, கிருஷ்ணா....? Congress government-ல் இருந்தவர். ஆமாம், கிருஷ்ணா! காஷ்மீர் விவகாரத்திற்குப் பிறகு, இன்று ‘top talk in town' இதுதான் கிருஷ்ணா! அந்த ஆளு செய்த வேலையெல்லாம் கேட்டயா, கிருஷ்ணா....? கடந்த சில வருடங்களாகவே அவருக்கு முன் ஜாமீன் வாங்குவது தான் பொழப்பாகவே இருந்திருக்கிறது, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : சரி, இப்போ எந்தக் case-ல விசாரணைக் கைதியாக பிடிபட்டிருக்கிறார்?

மேகலா : அமலாக்கத்துறையும், நீதிமன்றத்திடம், முன் ஜாமீன் வழங்கக் கூடாது; தங்கள் custody-யில் விசாரிக்க அனுமதி வழங்கக் கோருகிறது. அந்த case, இன்னும் court-ன் உத்தரவிற்குக் காத்திருக்கிறது. இப்போ விசாரிப்பது C.B.I. INX Media case-ல் 350 கோடி வரைக்கும் commission வாங்கியதாக, லஞ்சம் கொடுத்தவர் (ஓரு பெண்: இந்திராணி முகர்ஜி) வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் ஆதாரம் தேடிய போது, ஆதாரத்தோடு சிக்கிக் கொண்டார். வழக்கு court-க்கு வந்திருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில், மிக strong-ஆன ஆதாரம் கிடைத்திருப்பதால், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி, ‘இவர் தான் எல்லா case-க்கும் ‘kingpin' ஆக இருந்திருக்கிறார். அதனால், இந்தக் case-ல் முன் ஜாமீன் வழங்க முடியாது’ என்று மனுவைத் தள்ளுபடி பண்ணியிருக்கிறார். ஆமாம் கிருஷ்ணா.... kingpin-அப்படீன்னா....?

கிருஷ்ணர் : அப்படீன்னா, ‘சூத்ரதாரி’ என்று அர்த்தம். சரி, C.B.I arrest பண்ணியதா...?

மேகலா : கிருஷ்ணா! சிதம்பரம், தன்னுடைய முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகும் என்பதை எதிர்பார்க்கவேயில்லை போல....

கிருஷ்ணர் : அந்த அளவுக்கு, முன்கூட்டியே எல்லோரையும் ‘correct' பண்ணியிருக்காங்க..... சரி, மேலே சொல்லு.....

மேகலா : ஒரு வாரம் இடைவெளி விட்டு, அடுத்த வாரம் பார்ப்போமா, கிருஷ்ணா.......?

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2