ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - பகுதி 62
மேகலா : பீஷ்மர் வீழ்ந்த பிறகு, துரோணர், கௌரவப் படைக்கு சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். துரோணர், துரியோதனனைப் பார்த்து, ‘துரியோதனா, நீ என்ன விரும்புகிறாயோ, அதை நான் செய்கிறேன்’. இவ்வாறு கூறிய துரோணரிடம், துரியோதனன், ‘தருமபுத்திரனை உயிருடன் பிடித்து, என்னிடம் நீங்கள் கொண்டு வந்து சேர்த்தால், நான் மகிழ்ச்சியடைவேன்’ என்று கேட்டுக் கொண்டான்.
துரோணர், ‘அரசனே! தருமபுத்திரனைக் கொன்று விடாமல் உயிருடன் பிடித்துத் தர வேண்டும் என்று கேட்கிறாய். இது என்னை மகிழ்விக்கிறது. இந்த உலகில் பகைவர்களே கிடையாது என்று அர்த்தமாகிறது’ என்று மகிழ்ச்சியடைந்தார்.
துரியோதனன், ‘தர்மனை நீங்கள் கொன்றாலும், பாண்டவர்கள் அந்தக் கோபத்தின் காரணமாக, நம்மைக் கொல்லத்தான் போகிறார்கள். உயிருடன் தர்மன் பிடிபட்டால், அவனுடன் சூது ஆடி, மறுபடியும் அவனை வென்று, பாண்டவர்களை நிரந்தரமாகக் காட்டிற்கு அனுப்புவேன். அப்படி ஏற்படும் வெற்றி, நீடித்து நிலைக்கும். தர்மன் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை’ என்று கூறினான்.
துரியோதனன் சொன்னதைக் கேட்ட துரோணர், ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும், தர்மனை உயிருடன் பிடித்துத் தருவதாக வாக்களித்தார். 'அர்ஜுனன் பாதுகாப்பில் இருக்கும் தர்மனைப் பிடித்துத் தருவது இயலாத காரியம். ஏதாவது ஒரு உபாயத்தின் மூலமாக அர்ஜுனனை, தர்மன் அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது, யார் பாதுகாப்பாக நின்றாலும் சரி, அவனை நான் உயிருடன் பிடித்து, உன்னிடம் கொண்டு வருகிறேன்’ என்று கூறினார்.
எங்கே துரோணர் தனது வார்த்தையிலிருந்து நழுவி விடுவாரோ என்று அஞ்சிய துரியோதனன், இத்தகவலை யுத்த களம் முழுவதும் பரவச் செய்தான். இந்தச் செய்தி பாண்டவர் தரப்பிலும் எட்டியது. இத்தகவலை அறிந்த தர்மன் மனம் கலங்கினான். அர்ஜுனனிடம், தன் பக்கத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டான். அர்ஜுனனும் அவருக்கு ஆறுதல் கூறி, அவர் அருகிலேயே இருப்பதாகச் சொன்னான். இரு தரப்புக்கிடையே பெரும் போர் துவங்கியது.
துரோணரால் தாக்கப்பட்ட படை பெரும் கலக்கமுற்றது. துரோணர், திருஷ்டத்யும்னனையும், அவனைச் சார்ந்தவர்களையும், அம்பு மழையால் தாக்கினார். வெறி பிடித்தவர் போல, துரோணர் ஏற்படுத்திய நாசத்தைக் கண்டு, பாண்டவர்கள் மனம் வருந்தினர். துரோணரின் விசித்திரமான யுத்தம், பாண்டவர் படையைக் கதி கலங்கச் செய்து கொண்டிருந்தது. பதினோராவது நாள் யுத்தம் தொடர்ந்தது.
மேகலா : இந்த துரியோதனனைப் பார்த்தாயா, கிருஷ்ணா? இத்தனை நாசங்களையும் பார்த்தும், சமாதானம் செய்து கொள்வோம் என்று சொல்வானில்லை. தர்மனை உயிரோடு கொண்டு வா! சூதாடி ஜெயிப்போம் என்று சொல்கிறான், பாரேன்....!
கிருஷ்ணர் : இந்தக் கலியுகத்தில், அரசியல் வியாபாரத்தைப் பார்த்துப் பார்த்துப் பழகிய உனக்கு இதில் ஆச்சரியம் என்ன மேகலா...! ஜெயிக்க வேண்டும்! போர் வந்தால் என்ன? மக்கள் அழிந்தாலென்ன.....? சரி, தருமபுத்திரனை துரோணர் பிடித்தாரா பார்ப்போம்...
தொடர்ந்து நடந்த பதினோராவது நாள் யுத்தத்தில் துரோணர் கோபாவேசமாகப் போர் புரிந்து கொண்டிருந்தார். மனித உயிர்களை எல்லாம் முடித்து வைப்பதற்காக, காலன் தான், யுக முடிவை ஆரம்பித்து வைப்பதற்காக, துரோணர் உருவில் வந்து விட்டானோ என்று பாண்டவர்கள் கலக்கமுற்றனர்.
துரியோதனன் தரப்பில் போரிட்டுக் கொண்டிருந்த அனைவரும், இனி எந்த நேரத்திலும் தருமபுத்திரனைச் சிறைப்படுத்தி, துரியோதனனிடம் கொண்டு வந்து துரோணர் நிறுத்தப் போகிறார் என்று நம்பத் தொடங்கினார்கள். தருமபுத்திரருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை உணர்ந்த அர்ஜுனன், அங்கே ஓடி வந்து, துரோணரை எதிர்த்துப் போர் செய்தான். இருவருக்கும் கடும் போர் நடந்து கொண்டிருக்கையில், சூரியன் அஸ்தமனம் ஆகியது. பதினோராவது நாள் யுத்தம் முடிவடைந்தது.
பன்னிரெண்டாவது நாள் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக துரோணர், துரியோதனனிடம், ‘தர்மனை அர்ஜுனன் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போது, தர்மனை உயிரோடு பிடிப்பது என்பது இயலாத காரியம். ஏதாவது ஒரு தந்திரம் செய்து, அர்ஜுனனை தருமபுத்திரனிடமிருந்து விலக்கி விட்டால், அப்பொழுது நிச்சயமாக தர்மனை நான் உனக்குப் பிடித்துத் தருவேன். நமது பக்கத்து வீரர்கள், அர்ஜுனனுடன் போர் செய்து, அவனை வேறு திசைக்கு இழுத்துச் செல்ல வேண்டும்’ என்று கூறவும், அங்கிருந்த ஸம்சப்தர்கள், இதனைக் கேட்டு, ‘அர்ஜுனனுடன் போர் செய்வது என்பது தங்களுடைய லட்சியம். அர்ஜுனன் எங்களை எப்போதும் அலட்சியம் செய்து அவமதிக்கிறான். தற்சமயம் அவனுடன் போர் செய்து வெல்வது, அல்லது மடிவது என்பது எங்களுக்குப் புகழைத் தரும். நிச்சயம் போரில் புறம் காட்ட மாட்டோம். அப்படிச் செய்தால், பாவம் செய்தவர்கள் செல்லும் உலகை அடைவோம்’ என்று சபதம் செய்தனர். ’அர்ஜுனனை எதிர்க்கும் வாய்ப்பை எங்களுக்கு அளிப்பாயாக’ என்று, அவர்களுள் ‘ஸுசர்மா’ சொல்லவும், துரியோதனன் சம்மதித்தான்.
தாங்கள் சபதம் செய்த மாதிரியே, ஸம்சப்தர்கள், அர்ஜுனனைப் போருக்கு அழைத்தார்கள். அர்ஜுனன், தருமபுத்திரரைப் பார்த்து, ‘ஸுசர்மா தன் சகோதரர்களுடன் சேர்ந்து என்னை யுத்தத்திற்கு அழைக்கிறான். அப்படி அழைக்கும் பொழுது, மறுப்பது க்ஷத்திரிய தர்மம் அல்ல’ என்று சொல்லி அவர்களுடன் யுத்தம் புரிய, அர்ஜுனன் செல்வதாகத் தீர்மானித்தான்.
அர்ஜுனன், ஸம்சப்தர்களுடன் யுத்தம் புரியச் சென்று விட்டால், துரோணர், தன்னைப் பிடித்து, துரியோதனனிடம் கொடுத்து விடுவார் என்று தர்மன் நடுங்கினான். அர்ஜுனனைத் தடுக்கவும் அவனால் முடியவில்லை. துரியோதனனிடம் துரோணர் செய்த சபதத்தை, அர்ஜுனனுக்கு நினைவு படுத்தினான்.
அர்ஜுனன், ‘நான் இல்லாத நேரத்தில், துரோணர் உம்மைப் பிடித்து விடுவாரோ என்ற அச்சம் உமக்குத் தேவையில்லை. பாஞ்சால அரசகுமாரனாகிய சத்யஜித்தை நிறுத்தி விட்டு, நான் செல்கிறேன். அவனை மீறி, துரோணரால் உம்மைப் பிடித்து விட முடியாது’ என்று கூறினான். துரியோதனனுடைய படையினர், தருமபுத்திரனை விட்டு அர்ஜுனன் விலகி விட்டதை அறிந்து மகிழ்வுற்றனர்.
அர்ஜுனனுக்கும், ஸம்சப்தர்களுக்குமிடையே பெரிய போர் மூண்டது. ஸம்சப்தர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். இருப்பினும், ஸுசர்மா அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டி, தைரியத்துடன் யுத்தம் புரிந்து கொண்டிருந்தார்கள்.
அச்சமயத்தில் துரோணர், தனது படையை அணிவகுத்து, தர்மனைப் பிடிப்பதில் முனைந்தார். துரோணர் வகுத்த வியூகத்தை யாராலும் பிளக்க முடியாது என்ற நிலையில், திருஷ்டத்யும்னன், தர்மனைப் பாதுகாக்க முனைந்தான். தருமபுத்திரரைக் காப்பாற்றும் பொறுப்பை அர்ஜுனனிடமிருந்து ஏற்றிருந்த சத்யஜித், துரோணரை எதிர்க்கத் தொடங்கினான். வீரசாகசங்களுடன் போரிட்ட சத்யஜித், துரோணரின் தேரின் மீது இருந்த கொடியை அறுத்துத் தள்ளினான். குதிரைகளைப் பெரும் துன்பத்திற்குள்ளாக்கினான். கோபம் கொண்ட துரோணர், விசேஷமான அஸ்திரத்தால், சத்யஜித்தின் தலையை அறுத்துக் கீழே தள்ளினார். சத்யஜித் வீழ்ந்தான்.
சத்யஜித் வீழ்ந்தவுடன் மிகவும் பயந்து போன தர்மன், துரோணரிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து, தன்னுடைய ரதத்தைக் களத்திலிருந்து திருப்பிச் செலுத்தினான். பாண்டவர் தரப்பில் உள்ள அரசர்கள், துரோணரை எதிர்க்கக் கூட்டமாகக் கூடினார்கள். துரோணரோ, அவர்கள் எல்லோரையும் பொசுக்கித் தள்ளினார். பாண்டவர் படை நடுங்கிச் சிதறியது. கௌரவர் தரப்பின் கை ஓங்கியது. வெற்றிக் களிப்பில் மூழ்கினான், துரியோதனன்.
போருக்கு நடுவே சிறிது ஓய்வு எடுத்து, மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்...
துரோணர், ‘அரசனே! தருமபுத்திரனைக் கொன்று விடாமல் உயிருடன் பிடித்துத் தர வேண்டும் என்று கேட்கிறாய். இது என்னை மகிழ்விக்கிறது. இந்த உலகில் பகைவர்களே கிடையாது என்று அர்த்தமாகிறது’ என்று மகிழ்ச்சியடைந்தார்.
துரியோதனன், ‘தர்மனை நீங்கள் கொன்றாலும், பாண்டவர்கள் அந்தக் கோபத்தின் காரணமாக, நம்மைக் கொல்லத்தான் போகிறார்கள். உயிருடன் தர்மன் பிடிபட்டால், அவனுடன் சூது ஆடி, மறுபடியும் அவனை வென்று, பாண்டவர்களை நிரந்தரமாகக் காட்டிற்கு அனுப்புவேன். அப்படி ஏற்படும் வெற்றி, நீடித்து நிலைக்கும். தர்மன் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை’ என்று கூறினான்.
துரியோதனன் சொன்னதைக் கேட்ட துரோணர், ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும், தர்மனை உயிருடன் பிடித்துத் தருவதாக வாக்களித்தார். 'அர்ஜுனன் பாதுகாப்பில் இருக்கும் தர்மனைப் பிடித்துத் தருவது இயலாத காரியம். ஏதாவது ஒரு உபாயத்தின் மூலமாக அர்ஜுனனை, தர்மன் அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது, யார் பாதுகாப்பாக நின்றாலும் சரி, அவனை நான் உயிருடன் பிடித்து, உன்னிடம் கொண்டு வருகிறேன்’ என்று கூறினார்.
எங்கே துரோணர் தனது வார்த்தையிலிருந்து நழுவி விடுவாரோ என்று அஞ்சிய துரியோதனன், இத்தகவலை யுத்த களம் முழுவதும் பரவச் செய்தான். இந்தச் செய்தி பாண்டவர் தரப்பிலும் எட்டியது. இத்தகவலை அறிந்த தர்மன் மனம் கலங்கினான். அர்ஜுனனிடம், தன் பக்கத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டான். அர்ஜுனனும் அவருக்கு ஆறுதல் கூறி, அவர் அருகிலேயே இருப்பதாகச் சொன்னான். இரு தரப்புக்கிடையே பெரும் போர் துவங்கியது.
துரோணரால் தாக்கப்பட்ட படை பெரும் கலக்கமுற்றது. துரோணர், திருஷ்டத்யும்னனையும், அவனைச் சார்ந்தவர்களையும், அம்பு மழையால் தாக்கினார். வெறி பிடித்தவர் போல, துரோணர் ஏற்படுத்திய நாசத்தைக் கண்டு, பாண்டவர்கள் மனம் வருந்தினர். துரோணரின் விசித்திரமான யுத்தம், பாண்டவர் படையைக் கதி கலங்கச் செய்து கொண்டிருந்தது. பதினோராவது நாள் யுத்தம் தொடர்ந்தது.
மேகலா : இந்த துரியோதனனைப் பார்த்தாயா, கிருஷ்ணா? இத்தனை நாசங்களையும் பார்த்தும், சமாதானம் செய்து கொள்வோம் என்று சொல்வானில்லை. தர்மனை உயிரோடு கொண்டு வா! சூதாடி ஜெயிப்போம் என்று சொல்கிறான், பாரேன்....!
கிருஷ்ணர் : இந்தக் கலியுகத்தில், அரசியல் வியாபாரத்தைப் பார்த்துப் பார்த்துப் பழகிய உனக்கு இதில் ஆச்சரியம் என்ன மேகலா...! ஜெயிக்க வேண்டும்! போர் வந்தால் என்ன? மக்கள் அழிந்தாலென்ன.....? சரி, தருமபுத்திரனை துரோணர் பிடித்தாரா பார்ப்போம்...
தருமபுத்திரர் தப்பினார்
துரியோதனன் தரப்பில் போரிட்டுக் கொண்டிருந்த அனைவரும், இனி எந்த நேரத்திலும் தருமபுத்திரனைச் சிறைப்படுத்தி, துரியோதனனிடம் கொண்டு வந்து துரோணர் நிறுத்தப் போகிறார் என்று நம்பத் தொடங்கினார்கள். தருமபுத்திரருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை உணர்ந்த அர்ஜுனன், அங்கே ஓடி வந்து, துரோணரை எதிர்த்துப் போர் செய்தான். இருவருக்கும் கடும் போர் நடந்து கொண்டிருக்கையில், சூரியன் அஸ்தமனம் ஆகியது. பதினோராவது நாள் யுத்தம் முடிவடைந்தது.
பன்னிரெண்டாவது நாள் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக துரோணர், துரியோதனனிடம், ‘தர்மனை அர்ஜுனன் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போது, தர்மனை உயிரோடு பிடிப்பது என்பது இயலாத காரியம். ஏதாவது ஒரு தந்திரம் செய்து, அர்ஜுனனை தருமபுத்திரனிடமிருந்து விலக்கி விட்டால், அப்பொழுது நிச்சயமாக தர்மனை நான் உனக்குப் பிடித்துத் தருவேன். நமது பக்கத்து வீரர்கள், அர்ஜுனனுடன் போர் செய்து, அவனை வேறு திசைக்கு இழுத்துச் செல்ல வேண்டும்’ என்று கூறவும், அங்கிருந்த ஸம்சப்தர்கள், இதனைக் கேட்டு, ‘அர்ஜுனனுடன் போர் செய்வது என்பது தங்களுடைய லட்சியம். அர்ஜுனன் எங்களை எப்போதும் அலட்சியம் செய்து அவமதிக்கிறான். தற்சமயம் அவனுடன் போர் செய்து வெல்வது, அல்லது மடிவது என்பது எங்களுக்குப் புகழைத் தரும். நிச்சயம் போரில் புறம் காட்ட மாட்டோம். அப்படிச் செய்தால், பாவம் செய்தவர்கள் செல்லும் உலகை அடைவோம்’ என்று சபதம் செய்தனர். ’அர்ஜுனனை எதிர்க்கும் வாய்ப்பை எங்களுக்கு அளிப்பாயாக’ என்று, அவர்களுள் ‘ஸுசர்மா’ சொல்லவும், துரியோதனன் சம்மதித்தான்.
தாங்கள் சபதம் செய்த மாதிரியே, ஸம்சப்தர்கள், அர்ஜுனனைப் போருக்கு அழைத்தார்கள். அர்ஜுனன், தருமபுத்திரரைப் பார்த்து, ‘ஸுசர்மா தன் சகோதரர்களுடன் சேர்ந்து என்னை யுத்தத்திற்கு அழைக்கிறான். அப்படி அழைக்கும் பொழுது, மறுப்பது க்ஷத்திரிய தர்மம் அல்ல’ என்று சொல்லி அவர்களுடன் யுத்தம் புரிய, அர்ஜுனன் செல்வதாகத் தீர்மானித்தான்.
அர்ஜுனன், ஸம்சப்தர்களுடன் யுத்தம் புரியச் சென்று விட்டால், துரோணர், தன்னைப் பிடித்து, துரியோதனனிடம் கொடுத்து விடுவார் என்று தர்மன் நடுங்கினான். அர்ஜுனனைத் தடுக்கவும் அவனால் முடியவில்லை. துரியோதனனிடம் துரோணர் செய்த சபதத்தை, அர்ஜுனனுக்கு நினைவு படுத்தினான்.
அர்ஜுனன், ‘நான் இல்லாத நேரத்தில், துரோணர் உம்மைப் பிடித்து விடுவாரோ என்ற அச்சம் உமக்குத் தேவையில்லை. பாஞ்சால அரசகுமாரனாகிய சத்யஜித்தை நிறுத்தி விட்டு, நான் செல்கிறேன். அவனை மீறி, துரோணரால் உம்மைப் பிடித்து விட முடியாது’ என்று கூறினான். துரியோதனனுடைய படையினர், தருமபுத்திரனை விட்டு அர்ஜுனன் விலகி விட்டதை அறிந்து மகிழ்வுற்றனர்.
அர்ஜுனனுக்கும், ஸம்சப்தர்களுக்குமிடையே பெரிய போர் மூண்டது. ஸம்சப்தர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். இருப்பினும், ஸுசர்மா அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டி, தைரியத்துடன் யுத்தம் புரிந்து கொண்டிருந்தார்கள்.
அச்சமயத்தில் துரோணர், தனது படையை அணிவகுத்து, தர்மனைப் பிடிப்பதில் முனைந்தார். துரோணர் வகுத்த வியூகத்தை யாராலும் பிளக்க முடியாது என்ற நிலையில், திருஷ்டத்யும்னன், தர்மனைப் பாதுகாக்க முனைந்தான். தருமபுத்திரரைக் காப்பாற்றும் பொறுப்பை அர்ஜுனனிடமிருந்து ஏற்றிருந்த சத்யஜித், துரோணரை எதிர்க்கத் தொடங்கினான். வீரசாகசங்களுடன் போரிட்ட சத்யஜித், துரோணரின் தேரின் மீது இருந்த கொடியை அறுத்துத் தள்ளினான். குதிரைகளைப் பெரும் துன்பத்திற்குள்ளாக்கினான். கோபம் கொண்ட துரோணர், விசேஷமான அஸ்திரத்தால், சத்யஜித்தின் தலையை அறுத்துக் கீழே தள்ளினார். சத்யஜித் வீழ்ந்தான்.
சத்யஜித் வீழ்ந்தவுடன் மிகவும் பயந்து போன தர்மன், துரோணரிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து, தன்னுடைய ரதத்தைக் களத்திலிருந்து திருப்பிச் செலுத்தினான். பாண்டவர் தரப்பில் உள்ள அரசர்கள், துரோணரை எதிர்க்கக் கூட்டமாகக் கூடினார்கள். துரோணரோ, அவர்கள் எல்லோரையும் பொசுக்கித் தள்ளினார். பாண்டவர் படை நடுங்கிச் சிதறியது. கௌரவர் தரப்பின் கை ஓங்கியது. வெற்றிக் களிப்பில் மூழ்கினான், துரியோதனன்.
போருக்கு நடுவே சிறிது ஓய்வு எடுத்து, மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்...
Comments
Post a Comment