மேல் துண்டு படும் பாடு - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா? யோசனை பலமாக இருக்கிறது! விரலிடுக்கில் பேனாவை சுழல விட்டுக் கொண்டு, T. V. பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் கண்ணு தான் T. V. பார்க்கிறதே தவிர, உன் நெனப்பு எங்கோ மேயுது.... என்ன யோசிக்கிறாய்? ஏதாவது தலைப்பு கிடைச்சிருச்சா....?

மேகலா : ம்......ம்..... என்ன கிருஷ்ணா....., ஏதாவது பேசுனயா....?

கிருஷ்ணர் : சரியாப் போச்சு.... போ....! சரி, சும்மா கலகலப்பாப் பேசுவோமா? காலை நேரத்தில் ஒரேயடியாக வீட்டையே தலைகீழாகக் கவுத்தப் போவது போல, cleaning வேலை பார்க்கிறாய். என்ன, தீபாவளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறாயா? (இதை எழுதியது சென்ற தீபாவளி நேரம்). அதான், ‘போண்டா முழி’ முழித்துக் கொண்டிருக்கிறாயா.....?

மேகலா : ஏன் கிருஷ்ணா, மோடி தமிழகம் வந்திருந்த போது, அவரைப் பார்த்தாயா...? அவர் dress எப்படி இருந்தது...?

கிருஷ்ணர் : ஏன்..., தமிழ்நாட்டுக்கு வந்திருந்த சீன அதிபரை வரவேற்கச் செல்லும் போது, ‘வேஷ்டி சட்டையில்’ செல்வதுதானே முறை; அதான் வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். அதற்கென்ன....?

மேகலா : வெறும் வேஷ்டி, சட்டை மட்டும் தானா....?

கிருஷ்ணர் : வேறென்ன அணிந்திருந்தார்.... எனக்குப் புரியல....

மேகலா : மேல் துண்டு..... ‘அங்கவஸ்திரம்’.....

கிருஷ்ணர் : ஆமாம்..., அதுக்கென்ன இப்போ. வேஷ்டி கட்டினால், மேலே துண்டு போடுவது சகஜம் தானே....!

மேகலா : மோடிக்கு costume designer, அப்படி design பண்ணியிருக்கிறார். ஆனால், நமக்கு அதுதான் topic....

கிருஷ்ணர் : Topic-கா...? மேகலா, உனக்கு உடம்பு சரியில்லாமல் போச்சா....?

மேகலா : நான் உன்னை ஒன்று கேட்கிறேன். நீ style-ஆக துப்பட்டா மாதிரி மேல் துண்டு அணிந்திருக்கிறாயே; அதனால் என்ன use....?

கிருஷ்ணர் : அதுவா...., மேலே துண்டு போடுவதால், சட்டை போடத் தேவையில்லை. நம்ம ஊரு climate-க்கு, free-யா இருக்கும். மாடு மேய்க்கும் போது, அது கூட தொந்தரவா இருக்கும். தலையில் தலைப்பாகையாய்க் கட்டிக் கொள்வேன். வியர்த்தால், முகத்தைத் துடைத்துக் கொள்வேன். யமுனையில் dive அடிக்கும் போது, இடுப்பில் கட்டிக் கொள்வேன்.....

மேகலா : இதைப் பற்றித்தான் பேசப் போகிறோம்.

கிருஷ்ணர் : இது கூட interesting ஆக இருக்கும் போலயே.... very good.... very good...., சரி, சொல்லு.....

மேகலா : கிருஷ்ணா! இந்த மேல் துண்டைப் பற்றிப் பேசுவதற்கு, நாம் சில காலங்கள் பின்னோக்கிப் போகணும், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : ஆமாம்; இப்பல்லாம், வேஷ்டி போடணும்; அதற்கு மேல், ‘சட்டை’, சட்டை மேல துண்டு அப்படீன்னு, costume designer, design பண்ணினாத்தான், எல்லோருக்கும் தெரியும். இப்ப இருக்கும் தலைமுறையினருக்கு, தோளில் துண்டு போடுவது என்பதே தெரியாதே....

மேகலா : கிருஷ்ணா! நீ சொன்னாயே, ‘சட்டை போடாமல், துண்டு மட்டும் அணிவதுதான், நம்ம ஊரு climate-க்கு free-யா இருக்கும்’ என்று. அது எவ்வளவு உண்மை...! அந்தக் காலங்களில், நம்முடைய முன்னோர்கள், ‘வெய்யில்’, ‘மழை’ என்று பாராமல், உடல் உழைப்பைக் கொடுத்துத்தான், எந்த வேலையையும் செய்ய வேண்டும். அப்படி வேலை செய்வதற்கு, full-arm சட்டையும், ‘மல்லு வேட்டியையும்’ கட்டிக் கொண்டு, மடிப்புக் கலையாமலா, வேலை பார்க்க முடியும்...?! ஒரு விவசாயி வேட்டியைக் கூட, ‘தார்ப்பாச்சி’க் கட்டித்தான், நிலத்தை உழுவதும், வரப்புகளில் இறங்கி வேலை செய்வதும் கூட செய்வான். அப்போ, நெற்றியிலிருந்து விழும் வேர்வையைத் துடைக்க, ஒரு ‘kerchief' மாதிரிதான் துண்டும்.....

கிருஷ்ணர் : வேலை செய்யும் போது, வெய்யிலுக்கு ஒரு குடை மாதிரி, துண்டைத் தலைப்பாகாயாய்க் கட்டிக் கொள்வான். வியர்வை வழியும் போது, துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்வான்.

மேகலா : அதே சமயம், சாப்பாட்டு நேரத்தில், சாப்பிட உட்காரும் போது, அதே துண்டை தரை விரிப்பாக விரித்து, அதில் அமர்ந்துதான் சாப்பிடவும் செய்வார்கள், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : சட்டை போடாமல் வெறும் வேஷ்டியும் துண்டும் மட்டும் அணிந்தவர் யாரையாவது உனக்குத் தெரியுமா, மேகலா....?

மேகலா : ஐயோ கிருஷ்ணா! எங்க ‘ஐயாப்பா’வோட regular costume-ஏ, ஒரு வேஷ்டி, தோளில் ஒரு துண்டு மட்டுமே. தன்னுடைய பொருட்களைப் பத்திரப் படுத்திக் கொள்ள, pocket மாதிரி எதுவும் கிடையாதல்லவா....? இடுப்பில் கட்டியிருக்கும் ‘அரைஞாண்’ கயிற்றில் ஒரு ’சுருக்குப் பை’ வைத்திருப்பார். அந்தப் பையில் இரண்டு compartment வைத்திருப்பார். அதற்குள், மரக்கடை bill, சுண்ணாம்பு, cement வாங்கியதற்கான bill, மற்றும் பணம் வைத்திருப்பார். இதைச் சுருட்டி, கயிறால் கட்டி, அதன் ஒரு முனையை, அரைஞாண் கயிற்றில் கட்டி, சுருக்குப் பையை, வேஷ்டியின் மடியில் பத்திரப்படுத்தியிருப்பார்.

கிருஷ்ணர் : இரு....இரு.... உங்க ஐயாப்பா என்னவாக இருந்தார்? ஏதோ, மரக்கடை bill, சுண்ணாம்பு, அது..., இது என்கிறாய்! உங்க ஐயாப்பா, கொத்தனாரா....?

மேகலா : அதுக்கும் மேல..., ‘மேஸ்திரி’, கிருஷ்ணா..... எங்க ஐயாப்பா, துண்டை எடுத்து, ‘தலப்பா’வாக் கட்டி நான் பார்த்ததே இல்ல, கிருஷ்ணா. இரண்டு வேட்டி, இரண்டு துண்டு தான் அவர் சொத்து. தினமும் இரவு குளிப்பார். வேஷ்டியையும் துண்டையும் அலசி, கோவணம் கட்டிக் கொண்டுதான் வருவார். வேஷ்டியையும், துண்டையும் காயப் போட்டு விட்டு, காய்ந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்ட பின், அன்றையக் கணக்கைச் சரி பார்த்த பின்பு, சாப்பிட வருவார், கிருஷ்ணா. கிருஷ்ணா! எங்க ஐயாப்பா, எங்களுக்குச் சாப்பிடுவதற்கு வெள்ளரிக்காய், சேவு, கடலை என்று வாங்கி வருவார். அப்போ, அந்தத் துண்டுதான் ‘big shopper bag' ஆக மாறிப் போகும், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : ஆமாம் மேகலா, நாங்க group-ஆக மாடு மேய்க்கப் போவோம், இல்லையா; எங்களுக்கான lunch box-ஐ துண்டில் கட்டித்தான் எடுத்துச் செல்வோம். என் அம்மா, ஒரு நாள் எனக்குத் தயிர் சாதம் கட்டித் தருவார். ஒரு நாள், பூரியும், சப்ஜியும் எடுத்துச் செல்வேன். இவை எல்லாவற்றையும், ஒரு பாத்திரத்தில் வைத்து, அதை ஒரு துணியில் கட்டி, மாடு மேய்க்கும் கழியில் கட்டிக் கொடுத்து விடுவார். மாடு மேயும் போது, யமுனையில் குளிப்போமல்லவா...! அதை நினைத்து, துண்டு எடுத்துச் செல்வேன். வழியில், புளிய மரத்தில், புளியம் பிஞ்சு பறிப்போம். அதை அந்தத் துண்டில் கட்டித்தான் எடுத்து வருவோம்.

மேகலா : ஆக, ஒரு துண்டு, ‘தலப்பா’வாக இருக்கும். ஒரு துண்டு, lunch box வைக்கும் carry bag ஆக இருக்கும். ஒரு துண்டு, ‘big shopper bag' ஆகவும் இருக்கும்.

கிருஷ்ணர் : No, no, no; ஒரே துண்டை, அந்தந்த நேரத்துக்குத் தகுந்தபடி, use பண்ணிக்குவோம். குளிக்கும் போது, அதையே, ‘தார்ப்பாச்சி’ கட்டி குளிப்போம். All purpose costume....!

மேகலா : மேலும் இது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம், கிருஷ்ணா!

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2