மேல் துண்டு படும் பாடு - பகுதி 3 (நிறைவு)

மேகலா : கிருஷ்ணா! மேல் துண்டின் வேறு பல பயன்பாடுகளையும் இப்போது பார்ப்போமா.....? நீ கேட்டா ஆச்சர்யப்படுவ கிருஷ்ணா.... வாங்குன கடனைத் திருப்பிக் கொடுக்காம ‘டிமிக்கி’ கொடுக்குறவங்களை வழியில் பார்த்தா, பணம் கொடுத்தவன், கழுத்துல துண்டைப் போட்டு முறுக்கித்தான் நிப்பாட்டி விசாரிப்பான், கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : இல்லாட்டி, கடன் வாங்கியவன் ஓடிப் போயிருவான், இல்லையா... கழுத்துல துண்டைப் போட்டு முறுக்கி, அதன் ஒரு முனையைக் கையில் பிடிக்கும் போது, எவ்வளவு திடகாத்திரமான ஆளாக இருந்தாலும் ஓட முடியாது. முகம் தெரியாம பொத்தி வச்சு அடிக்கணும் என்றாலும், துண்டால் முகத்தை மூடி, முறுக்கி, சாத்துவார்கள். நான் ஒரு திரைப்படத்தில் இந்த மாதிரி ஒரு scene-ஐப் பார்த்திருக்கிறேன்.

மேகலா : ‘Friends' படத்துல, கிருஷ்ணா! அடி வாங்கியவன், யார் அடித்தது என்று பிரச்னையைக் கிளப்பும் போது, அடித்தவன், ‘நான் அடிக்கல; வேணும்னா துண்டப் போட்டுத் தாண்டட்டுமா’ என்று சொல்வான். ஏன்னா, துண்டப் போட்டுத் தாண்டுனா, இதை விட powerful-ஆன சத்தியம் வேறு கிடையாது.

கிருஷ்ணர் : பார்த்தியா, மேகலா...? இந்த மேல் துண்டு எப்படியெல்லாம் use ஆகுதுன்னு....

மேகலா : Western style-ல் இதனை, ‘மஃப்ளராகக் கழுத்தில் கட்டுவார்கள், கிருஷ்ணா! 1960-களில், M. G. R. படங்களில் அவருக்கு, கழுத்தில் மஃப்ளர் கட்டி, pant, shirt போட்டு விட்டிருப்பார்கள். அநேகமாக, அது woolen-ல் இருக்கும். ஐயப்ப சாமிக்கு மாலை போட்டிருப்பவர், பூக்குழி விரதம் இருப்பவர்கள், கழுத்தைச் சுற்றி ‘கலர், கலராக’ துண்டு போட்டிருப்பார்கள். அதனை ‘உருமால்’ என்று சொல்வார்கள், கிருஷ்ணா! கோயில் பூசாரிகள், தங்கள் மேனியை மறைக்கப் போட்டிருக்கும் துண்டு, ‘உத்தரீயம்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய மனிதர்கள், பட்டு வேஷ்டி கட்டி, shirt போட்டு, தோளில் துண்டு போடுவார்கள் இல்லையா? அதனை, ‘அங்கவஸ்திரம்’ என்பார்கள். தென் தமிழகத்தில், துண்டை ‘லேஞ்சி’ என்றும் அழைப்பார்கள்.

கிருஷ்ணர் : பரவாயில்லை, மேகலா! ஒரு சாதாரண மேல் துண்டு எத்தனை கதை சொல்லுது பார்த்தியா...? உனக்கு ஒண்ணு தெரியுமா, மேகலா....? சிலம்பம் தெரிந்தவர்களை பகைவர்கள் தாக்க நேரிடும் போது, கையில் சுழற்ற கம்பு இல்லையென்றாலும், இந்தத் துண்டை வைத்து, தாக்க வந்த ஆயுதத்தைக் கூடத் தடுக்க முடியும். சரியான angle-ல் ஆயுதத்தைத் தடுக்கும் போது, துண்டால் அவன் கையை மடித்துக் கட்டி விடலாம். இப்ப சமீபத்தில், ‘பட்டிக்காடா, பட்டணமா’ படம் பார்த்தோமே; அதில் ஒருவன், சிவாஜி கணேசனை அரிவாளால் வெட்ட வரும் போது, அப்படித்தானே கட்டுவார். இது உண்மை, மேகலா. ஒரு வகையில், துண்டு நம் கையில் இருக்கும் பாதுகாப்புக் கவசம் மாதிரி......

மேகலா : வயல் வரப்பில் வேலை பார்க்கும் இளம் தாய், தன் குழந்தைக்குத் தொட்டில் கட்ட, சேலை எடுத்து வரவில்லை என்றால், இந்தத் துண்டு, தூளியாக மாறக் கூடும். அதே குழந்தை வளர்ந்து, பிள்ளையாக விளையாடும் பொழுது, உட்கார்ந்து விளையாடும் ஊஞ்சலாகக் கூட மாறும், இல்லையா, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : இத்தனை கதை சொல்லுறியே.... இந்தத் துண்டு வளர்ந்த கதையைப் பற்றிச் சொல்லு, மேகலா....

மேகலா : கிருஷ்ணா! இந்த topic-ல பேசப் போறோம் என்றவுடன், நீ முதலில் என்ன சொன்னாய்....? ‘சட்டை’ போடாமல் மேலே துண்டு அணிவதுதான், நம்ம ஊரு climate-க்கு free-யாக இருக்கும்’ என்று. அதை யோசித்துப் பார்க்கிறேன், கிருஷ்ணா..... நம்ம நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கேற்ப, மனிதன் தனக்கான உடையாக, வேஷ்டியை அணிந்து கொண்டு, மேனியை மறைப்பதற்காகவும், வழியும் வியர்வையைத் துடைப்பதற்காகவும், பல்வேறு வசதிக்காகவும் தான், மேல் துண்டை அணிய ஆரம்பித்தான் என்று நினைக்கிறேன். அந்தத் துண்டை வெளியில் செல்லும் போது, தோளில் போட்டுக் கொள்கிறான். வேலை செய்யும் போது, தலைப்பாகையாகக் கட்டிக் கொள்கிறான். கடவுள் சன்னிதானத்துக்குள் செல்லும் போது, துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்கிறான்.

கிருஷ்ணர் : மேகலா! கோயிலுக்குள் நுழையும் போது, ஏன் இடுப்பில் துண்டைக் கட்டுகிறார்கள்?

மேகலா : கிருஷ்ணா! மனிதன் தன்னை விட மேலானவர்கள் முன்னிலையில், தன் பணிவைக் காட்டுவதற்காக, துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். இப்பல்லாம் pant, shirt போட்டுத்தானே கோயிலுக்குச் செல்கிறார்கள். இன்னும், ஆண்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள், shirt, பனியன் எல்லாவற்றையும் கழட்டி விட்டு, வெறும் மேனியோடுதான் செல்ல வேண்டும். கேரள மாநிலத்தில் எல்லக் கொயிலுக்குள்ளும், மேல் சட்டை அணிந்து செல்லக் கூடாது. பெண்கள், ஜீன்ஸ், pant, சுடிதார் முதலியவை அணிந்து செல்லக் கூடாது. சுடிதாரோடு சென்றால், வாடகை வேஷ்டியையாவது அதன் மீது அணிந்துதான் செல்ல முடியும். நான், ஹரி கூட குருவாயூர் கோயிலுக்குச் சென்றிருந்த போது, ஹரி, கார்த்தி, ஆதி எல்லோரையும் வேஷ்டி அணிவித்துத்தான் கோயிலுக்குள் கூட்டிச் சென்றேன். ஹரி, மேல் துண்டை சால்வையாகப் போர்த்திக் கொண்டான்.

ஏன் கிருஷ்ணா! நான் நினைக்கிறேன், மனிதன் தன் பணிவைக் காட்டுவதற்காக இடுப்பில் துண்டைக் கட்டிய பழக்கத்தின் மீது ஒரு , ‘கிக்’ இருந்திருக்கும் போல இருக்கு. உழைப்பவர்கள், தனக்குச் சம்பளம் கொடுக்கும் முதலாளி முன்னே கை கட்டி நிற்பது மட்டுமல்ல, வேலை செய்யும் போது, கட்டியிருந்த தலைப்பாகையைக் கழட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டோ, இடுப்பில் கட்டிக் கொண்டோ தான், முதலாளிமார் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பழக்கம் இருந்தது, கிருஷ்ணா....! இது ஒரு வகையான அடிமைத்தனம் தானே....! ஒரு boss முன்னிலையில் employee, சட்டையைக் கழட்டாத பணிவோடுதான் நிற்பான். ஒரு teacher முன்னாடி, ஒரு student பணிவாகத்தான் நிற்க வேண்டும். இந்தப் பணிவு, ஒரு மனிதனுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும். ஆனால், மனதால் பணிவு காட்ட வேண்டிய மனிதன், தன் முதலாளி முன்னே, மேல் துண்டைக் கழற்றி இடுப்பில் கட்டிக் கொள்வது, பணிவு மட்டுமல்ல...., அதுக்கும் மேலே....
பள்ளிக் கூடங்களில், uniform கலாச்சாரம் வந்தது, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. மேல் துண்டும், கழுத்தைச் சுற்றிய மஃப்ளர் ஆனது; Tie ஆனது; ’கர்ச்சீப்’ ஆகிப் போனது. பள்ளிக் கூடங்களில், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் அம்மாமார்கள், பிள்ளைகளுக்கு 'fib' கட்டி விடுகிறார்கள். இந்தத் தலைமுறையினரால், மேல் துண்டின் purpose மறைந்து போய், costume designer-ஆல் design பண்ணப்பட்ட costume ஆனது, கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : வாவ்! பரவாயில்லை மேகலா! மேல் அங்கவஸ்திரத்தை, ‘கர்ச்சீப்’ ஆக்கி விட்டாய்! அதுவும் காணாமல் போவதற்குள், நான் escape....

மேகலா : கிருஷ்ணா! இந்த மேல் துண்டு.....

கிருஷ்ணர் : ஐயோ..... அம்மா...... நானில்லை......

(இத்துடன் இந்த topic நிறைவு பெறுகிறது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2