நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா..... ரோடெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது..... வீதியில் ‘மாரியம்மன்’ தேரைக் காணோம்..... காப்புக் கட்டிய கரத்தோடும், மஞ்சளில் குளித்த ஈர உடையோடும், ஒரு பக்தனைக் கூட வீதியில் பார்க்க முடியவில்லை. வெடிச் சத்தத்தைக் கேட்கவே முடியவில்லை. என்ன ஆச்சு....? ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த ஊருக்குச் சென்றாலும், நகரமே முடங்கிக் கிடக்கிறது. என்ன காரணம்...? உனக்கு ஏதாவது தெரியுமா....?

மேகலா : என்ன கிருஷ்ணா.... ‘நீ’ இப்படிச் சொல்லுற...! மனிதனுடைய பிறப்புக்குக் காரணமானவன் நீ.... மனிதன் உன்னை வந்து சேரும் நாளைக் கூட, ‘விதி’ என்ற பெயரில் கணித்து வைத்திருப்பவன். உன்னுடைய இணைய தளத்தில், உலகின் இண்டு இடுக்குகளில் நடக்கும் காட்சி ஒவ்வொன்றும் பதிவாகி, உன் பார்வைக்கு வந்து விடும். இது எப்படி miss ஆயிருச்சி..... ‘கொரோனா வைரஸ்’ என்ற ‘விஷக் கிருமி’, இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே வீதியில் நடமாட விடாமல் ஓடி ஒளியச் செய்கிறது. நீ எப்படி அறியாமல் விட்டாய்...!

இங்கு பூக்குழி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆண்டாள் கோயில் முதல், காசி விசுவநாதர் கோயில் வரை எல்லாக் கோயில்களும் நடை சாத்தப்பட்டிருக்கிறது. இதை நீ என்றாவது கேள்விப்பட்டிருப்பாயா...? திருப்பதி, ஆள் அரவம் இல்லாமல் இருப்பதை என்றாவது பார்த்திருக்கிறாயா, கிருஷ்ணா...? நீ அப்பாவியாக இருப்பதைப் பார்த்தால், எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சாட்டையை வேறு கையில் வைத்திருக்கிறாய்....! oh...... இப்பத்தான் பம்பரத்தை சுழல விட்டு விட்டு, இங்கு வந்து அப்பாவி போல கேள்வி கேட்கிறாயா....?

கிருஷ்ணர் : என்ன நிகழ்வு நடந்தாலும், அதுக்கு நான் தான் காரணமா....?

மேகலா : அதிலென்ன சந்தேகம்..... நோய்க்கு மருந்து தரும் மருத்துவன் நீயென்றாலும், நோய் என்னும் ‘விதி’க்குக் காரணமும் நீதானே.....

கிருஷ்ணர் : சரி, அதெல்லாம் இருக்கட்டும். ‘கொரோனா’ வைரஸினுடைய பாதிப்பு எப்படி இருக்கிறது, மேகலா......? இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன....? அதைச் சொல்லு எனக்கு...

மேகலா : கிருஷ்ணா! இந்த virus முதலில் வெளிநாட்டிலிருந்து, நமது நாட்டிற்குள் எட்டிப் பார்த்தது, இல்லையா..... அது வந்த வழியைத்தான் முதலில் 'lock' பண்ணியது, அரசாங்கம்.

கிருஷ்ணர் : வெளிநாட்டு வழி...... என்ன...... ம்.....ம்...... புரியலையே.....

மேகலா : நீ நடிச்சது போதும்..... நான் பெங்களூரில் இருக்கும் போது.....; எல்லோரும் இயல்பு வாழ்க்கை வாழும் போது; ‘கொரோனா’ வைரஸைப் பற்றிப் பிரமித்துப் போய் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பொசுக்குனு’ வான்  வழித் தடங்களை, அதாவது air service அனைத்தையும் அரசாங்கம் நிறுத்தியது. அப்பத்தான், மக்களாகிய நாங்க serious-ஆக இதன் விளைவுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். அப்பவும், இந்தியாவையே புரட்டிப் போடப் போகும், சூறாவளியாக, கடும் புயலாக நாங்கள் யாருமே யோசிக்கவில்லை.

மறுநாள், ஆதி school-க்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். ஹரியிடமிருந்து, மதனாவுக்கு ஒரு phone call வருகிறது. ’Montessori children அனைவருக்கும், ‘indefinite holiday', school-க்கு வர வேண்டாம் என்று எனக்கு message வந்திருக்கிறது. நீ check பண்ணிப் பார்த்து, confirm பண்ணிக் கொள்’ என்று சொல்லவும், மதனாவும் confirm பண்ணி, ஆதிக்கு school leave என்று சொல்லி, கார்த்தியை மட்டும் school-க்கு அனுப்பினாள். மறுநாள், கார்த்திக்கும், 5 to 6 days, leave இருக்கலாம் என்ற news வந்தது. மாப்பிள்ளைக்கு, ’work from home' என்று உத்தரவு வந்தது. இந்த மாதிரியான நடவடிக்கைகள் அதிகரித்த அளவு, வைரஸால் பாதிப்பு எந்த அளவு என்ற news வரவில்லை.

இதற்கிடையில், நான் Bangalore-லிருந்து கிளம்பும் நாளும் வந்தது. ஹரியும், ‘work from home' என்ற உத்தரவால், வீட்டுச் சிறைக்குள் வந்தான். நல்ல வேளை, கிருஷ்ணா, ஹரி, எங்களுக்கு வர வேண்டிய driver-க்கு, திங்கட்கிழமை ticket போட வேண்டியது, புதன்கிழமை ticket மாற்றிப் போட்டு விட்டான். நான், பூக்குழி விரத காலத்தில், இன்னும் நாள் தள்ளிப் போகிறதே என்று பதறிப் போய், மறுபடியும் ticket-ஐ திங்கட்கிழமைக்கு மாற்றச் சொல்லி, கிட்டத்தட்ட அலறியே விட்டேன். அன்று மட்டும் நான் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால், நானும் Bangalore-லேயே, சிறையிருக்க வேண்டியிருந்திருக்கும்.

கிருஷ்ணர் : ஏன்....! நீ car-ல் தானே போனாய்....?

மேகலா : Driver, Bangalore வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்குமே....? ஏனென்றால், bus transport நிறுத்தவில்லையென்றாலும், நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் வர ஆரம்பிச்சிருச்சி, கிருஷ்ணா...

கிருஷ்ணர் : Oh! ஆமாம்! அப்பொழுது, முதல் கட்டம் தான் என்றாலும், ‘கொரோனா’ பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலேயே, இரண்டாம் கட்டத்திற்குச் செல்லக் கூடிய அபாயம் இருந்திருக்கும்.

மேகலா : ஆம் கிருஷ்ணா! ‘வழியில் எங்கும் இறங்காதீர்கள். அப்படியே இறங்கினாலும், கையை நன்றாகக் கழுவுங்கள்’ என்ற அறிவுறுத்தலோடு, நானும் ஊருக்குக் கிளம்பி விட்டேன். Work from home என்ற எச்சரிக்கை அறிவிப்பு மாத்திரமே வந்திருந்த நிலையில், சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது என்பதுமில்லை; பரபரப்பாக traffic jam ஆகி, பிரதான சாலைகளைக் கடக்க முடியாமல் தவித்தோம் என்பதுமில்லை. சாலையோர வியாபாரிகள், தங்கள் வண்டிகளில், இளநீரைச் சுமந்து கொண்டு விற்பனைக்குத் தயாரானார்கள். ஒரு இளநீர் 10 ரூபாய் என்று ‘சல்லிசாக’ விற்க முன்வந்தாலும், வாங்க யாரும் முன்வரவில்லை. பஸ்கள் ஓடின; கார்களும் ஓடின; இரு சக்கர வாகனங்களும் ஓடின. ஆனால், முண்டியடித்துக் கொண்டு, ஒன்றையொன்று உரசும் பக்கத்தில் ஓடுவதாயும் இல்லை. Free-யாக, ஹாய்யாக எங்கள் கார் 15 நிமிடங்களில் Bangalore-ஐக் கடந்தது.....!

கிருஷ்ணர் : என்னது...., Bangalore-ஐ 15 நிமிடங்களில் cross பண்ணினீர்களா....?

மேகலா : அட, ஆமாங்கறேன்.... காலை 8.45-க்கு relaxed ஆக, ஷீத்தல் வீட்டிலிருந்து கிளம்பினோம். ஹரி வீட்டுக்குப் போய், பிள்ளைகளைப் பார்த்து விட்டு, Electronic City வரும் போது, 9.20 தான் ஆகியது. அடுத்து Hosur enter பண்ணி, petrol fill பண்ண நிறுத்தும் போது, தமிழ்நாடு government, car-ஐச் சுற்றி கிருமிநாசினி spray பண்ணினார்கள். சேலம் 11.45-க்கு வந்து விட்டோம். Srivi, reach ஆகும் போது, நீ நம்பவே மாட்டாய் கிருஷ்ணா, 4.30-க்கெல்லாம் வந்து விட்டோம்....

கிருஷ்ணர் : பரவாயில்லையே..... வழியில் ஏதாவது அறிவுறுத்தல்....., அப்படி, இப்படி என்று ஏதாவது நடந்ததா....?

மேகலா : அப்படி ஏதும் நடக்கவில்லை, கிருஷ்ணா! ‘ஹரீஸ்’ ஹோட்டலில் கூட, வழக்கமான கூட்டம் இருந்தது. ஆனால், ஸ்ரீவி enter பண்ணியவுடன், police எங்களை நிறுத்தியது......

கிருஷ்ணர் : ‘மருந்து’ spray பண்ணவா....

மேகலா : ஆம் கிருஷ்ணா! அதன் பிறகு, நேரே எங்கே சென்று காரை நிறுத்தினோம் என்று guess பண்ணு கிருஷ்ணா..... நான் அடுத்த பகுதியில் உனக்குக் கூறுகிறேன், சரியா....?

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2