வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 6

மேகலா : மேடைக்கு என்னைப் பேச அழைத்ததும், ‘கனவில் மிதப்பது போல இருந்ததா....?’ என்று கேட்டிருந்தாயல்லவா, கிருஷ்ணா..... அப்படீண்ணும் சொல்ல மாட்டேன். மெதுவாக நடந்து, பொன்னாடையையும், விருதையும் ஏற்றுக் கொண்டு, ‘மைக்’ முன்னே சென்றேன். President, 'அம்மா, ‘மூன்று’ நிமிடம்’ என்றார்......

கிருஷ்ணர் : அச்சச்சோ....... நமக்கு time குறித்துக் கொடுத்தாரா..... அப்போ.... நம்மைப் பற்றிய ரகசியம் அவருக்குத் தெரியுமோ.....?

மேகலா : ரகசியமா....?

கிருஷ்ணர் : ஆமா....ம்..... ‘மைக்’ கிடைத்தால், மணிக்கணக்காகப் பேசுவோமே.... அதைச் சொன்னேன்.....

மேகலா : நீ என்னை ரொம்பக் கிண்டல் பண்ணுற, கிருஷ்ணா......

கிருஷ்ணர் : ச்சோ...ச்சோ.... நீ ரொம்ப வருத்தப்படுறயா....?

மேகலா : வருத்தமா....? உன்னோடு பேசும் போது, குதூகலம் தவிர எனக்கு வேற தெரியவே தெரியாது, கிருஷ்ணா! President 3 நிமிஷம்ணு சொன்னால், நாம விட்ருவோமா, கிருஷ்ணா....? அவங்க club-ஓட concept-ஆக, ‘வாழ்த்துக்கள் நம்மை வளப்படுத்தும், வலுப்படுத்தும், வசப்படுத்தும்’ என்றும், ‘சிங்கப் பெண்’ title-க்கான அர்த்தமாக, ‘தொட்டில் ஆட்டும் கை, தொல்லுலகை ஆளும் கை’ என்று எழுதியிருந்ததை வைத்து, என் பேச்சை ஆரம்பித்தேன், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : Good..... நல்லாத்தான் யோசித்திருக்கிறாய்......

மேகலா : ‘ஆளுமை’ என்பது பெண்களுக்கு இயல்பாக உள்ளது. அது எந்த நேரத்தில் வர வேண்டுமோ, அந்த நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும். புறநானூற்றுப் பெண் தைரியமாய் புலியை விரட்டியது போல்; ‘ஆத்திசூடி’ பாடிய ஔவையாரின் ’அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையில் நடக்க இருந்த போரை விவேகத்தோடு தடுத்து நிறுத்தியது’ போல; ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும், ஒரு வீர மங்கை ‘வேலு நாச்சியார்’ இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு புறநானூற்றுப் பெண் புதைந்து கிடக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு மதிநுட்ப ஔவைப் பிராட்டி இருக்கிறாள் என்று சொல்லி, ‘சிவகாசி சமையல்’ travel-ஐயும், அதன் வளர்ச்சியையும், கலகலப்பாக எடுத்துச் சொன்னேன், கிருஷ்ணா. ஆனால், நான் பெசும் போது, என் நாக்குதான் உலர்ந்து போய், பேச முடியாமல் என்னைத் தளரச் செய்தது.

கிருஷ்ணர் : பரவாயில்லை, மேகலா...... நல்லா பேசிட்ட..... பத்து நிமிஷம் பேசுனயா....?

மேகலா : இருக்கலாம், கிருஷ்ணா..... கடைசியில், நான் என் program-ஐ முடிக்கும் போது, ‘நீங்களும் இத செஞ்சு பாருங்க, மறக்காம எங்க channel-க்கு subscribe பண்ணுங்க, இதை share பண்ணுங்க, எனக்கு comment பண்ணுங்க’ என்று சொல்லி, applause வாங்கினேன், கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : கலகலப்பா பேசியிருக்கிற.... பரவாயில்லை.....

மேகலா : மேடையை விட்டுக் கீழே.... இற......ங்......க...., கொஞ்சம் slip ஆயிட்டேன், கிருஷ்ணா...... அப்படியே உக்காந்துட்டேன்....

கிருஷ்ணர் : அச்சச்சோ..... பார்த்து வரக் கூடாதா, மேகலா.....

மேகலா : அதன் பிறகு, cake செய்வதில் சாதனை புரிந்த ஒரு பெண்ணை அழைத்து, விருது கொடுத்தார்கள், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : Cake செய்வதில் சாதனையா..... அப்படீன்னா, ‘Coronation Bakery’-க்காரங்களைத்தான் கௌரவப்படுத்தி இருக்கணும்......

மேகலா : Coronation Bakery-யை விட்டு விட்டு, இந்தப் பெண்ணுக்கு விருது கொடுக்கணுமின்னா....., இந்தப் பெண் என்ன செஞ்சிருப்பான்னு யோசி, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : ஓஹ்.....ஹோ..... இவ commercial-ஆக cake செய்யல...... மக்களை ஈர்க்கணுமென்றால், சுவையும் குறையக் கூடாது, மக்களும் திரும்பிப் பார்க்கணும்...... ஓ...... ஏதாவது..... concept வச்சி, cake செய்தாளோ..... Am I correct?

மேகலா : Exactly...... concept வைப்பது...., Birthday cake-ல் coloring புதுமையாகச் செய்வது...., குழந்தைகளுக்குப் பிடித்தமானதாகச் செய்வது......

கிருஷ்ணர் : எப்படி இந்தப் பெண்ணை அறிந்தார்கள்.....?

மேகலா : இப்பத்தான், facebook, instagram எல்லாவற்றிலும் பரப்புரை செய்கிறார்களே..... Sheethal-ம் அவளுடைய instagram ID, வாங்கி வந்திருக்கிறாள். அவள் பெயரை announce பண்ணும் போது, screen-ல் அவள் செய்த cake-ன் clippings பார்த்தேன், கிருஷ்ணா. அவள் கைகளில், லட்சுமியும், சரஸ்வதியும் மனப்பூர்வமாக அமர்ந்திருக்கிறார்கள், கிருஷ்ணா.... அப்படியே அசந்துட்டேன். Program முடிந்து கீழே இறங்கி வரும் போது, அந்தப் பிள்ளையை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டேன், கிருஷ்ணா. எனக்கு, என் சந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகியது என்று அந்தப் பெண்ணிடமே சொன்னேன், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : உன் நம்பிக்கையை எல்லாம், என்னிடம் நீ கொடுத்திருக்கிறாய். இருந்தாலும், ஒவ்வொரு மனிதர்களும் தங்களுக்கான பாதையை தெளிவாகத் தேர்ந்தெடுத்து, அதில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது,
‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’ - என்பது உண்மைதானே.

மேகலா : இந்தப் பெண் தனக்குக் குழந்தைகள் பிறந்த பிறகு, ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில், ‘France' சென்று baking படித்து வந்திருக்கிறாள், கிருஷ்ணா..... அந்த அனுபவத்தை எங்களிடம் share பண்ணி, அனுப்பி வைத்த தன் family-க்கும், அம்மா அப்பாவுக்கும் நன்றி சொல்லும் பொழுது, பெண்ணாகிய எனக்கு ரொம்ப பொறாமையாக இருந்தது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : எதற்குப் பொறாமை....?

மேகலா : இப்படி சின்ன வயசுலேயே நாமும் சாதிக்காமல் போனோமே என்ற ஏக்கமும், அதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கலியே என்ற ஆதங்கமும், கொஞ்சம் பொறாமையும் கலந்து வந்தது. அவளும், எங்கள் channel பார்த்து ரசித்திருக்கிறேன் என்று சொன்னவுடன், என் ஏக்கமெல்லாம் தாய்மையின் கனிவாக மாறி விட்டது, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : நல்ல வேளை, உன் channel-ஐ பாராட்டினாள்.....

மேகலா : பாராட்டாவிட்டால்........, நான் என்ன செய்திருப்பேன்....?

கிருஷ்ணர் : என் friend ’சிங்கப் பெண்’ அல்லவா.... இன்னொரு சிங்கத்தைப் பார்த்து ஏங்கலாமா.....? சரி, அடுத்த ‘சிங்கப் பெண்’ணைப் பற்றிச் சொல், மேகலா....

மேகலா : மேலும் நடந்த நிகழ்ச்சிகளோடு அடுத்த episode-ல் சந்திப்போம், கிருஷ்ணா.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1