வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 7 (நிறைவு)

மேகலா : இன்னொரு ‘சிங்கப் பெண்’ணைப் பற்றிக் கேட்டிருந்தாயல்லவா, கிருஷ்ணா....? அந்த ‘சிங்கப் பெண்’ யாரென்று கேட்டால், நீ நம்பவே மாட்டாய் கிருஷ்ணா.....!

கிருஷ்ணர் : என்னவாக இருக்கும்.....?

மேகலா : நீ யோசித்தது போதும்...... உன் ‘scan' கண்கள் மோப்பம் பிடித்து விடும்.... நானே சொல்லுகிறேன். இப்போ, புதிதாகத் தாய்மை அடையும் பெண்கள், பிள்ளைப்பேறு, delivery time, வலி, மசக்கை என்று பயப்படுகிறார்கள் அல்லவா......

கிருஷ்ணர் : அவர்களின் கருவறையில் இருக்கும் குழந்தைகளுக்கு positive vibration, normal delivery-க்கான மனப் பயிற்சி, உடற்பயிற்சி கொடுக்கிறார்களா.....?

மேகலா : அப்பப்ப, நீ கடவுள் என்பதைக் காட்டி விடுகிறாய், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : நான் சொன்னதுதானா.... ஏன் மேகலா..... இதைத்தானே என் தங்கை ‘சுபத்ரை’, அபிமன்யுவைக் கருவுற்றிருந்த போது செய்து காட்டினாள்..... சொல்லப் போனால், பிரகலாதன் காலத்திலேயே, அவனுடைய தாயார் கருவுற்றிருந்த போது, வாத்தியார், நாராயண மந்திரத்தின் பெருமைகளைக் கூறிக் கொண்டே வருவார். அப்பொழுது, பிரகலாதனின் தாயார், சற்று கண் அயர்ந்து விடுவாள். அப்பொழுது, வாத்தியார் சொல்லச் சொல்ல, குழந்தை பிரகலாதன் ‘உம்’ கொட்டும். சுபத்ரையும் அப்படித்தான்; போர்த் தந்திரங்களைப் பற்றியும், போரின் வியூகங்களைப் பற்றியும், கருவுற்ற சுபத்ரைக்கு சொல்லப்பட்டது. சுபத்ரை கண் அசர, அபிமன்யு, கருவிலேயே கற்றுக் கொண்ட போர்த் தந்திரங்கள், அவனைச் சிறந்த வீரனாக்கியது.

கருவுற்றிருக்கும் பெண்கள், எதை விரும்பிக் கற்கிறார்களோ, அல்லது நல்ல விஷயங்களைக் கேட்கிறார்களோ, அது கருவில் இருக்கும் குழந்தையையும் சென்றடையும் என்பது, விஞ்ஞான உண்மை.... இதை, நம் பாரத நாட்டில், வேத காலத்திலேயே, மஹரிஷிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள், கருவுற்ற பெண்கள் நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே பேச வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

மேகலா : உனக்கும் தெரிஞ்சி போச்சா.....? ஆனால், இந்தக் காலங்களில், அம்மாமார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு, நல்லதையே படிக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்வது கம்மிதானே....

கிருஷ்ணர் : ‘தைரியம்’ கற்றுத் தருவதில்லை. அதுதான் உண்மை..... Doctor கொஞ்சம் rest-ல இருக்கணும் என்றவுடன், தரையில் கால் படவே விடுவது கிடையாது. ‘தாம் தூம்’ என்று குதிப்பது, குனிந்து பெருக்குவது, நிமிர்ந்து துணி காயப்போடுவது என்ற வேலை எதுவும் செய்ய விடுவதில்லை. இதனால்தான் பிரசவம் என்பதை, கர்ப்பிணிப் பெண்கள், உயிர் போகும் விஷயமாகப் பார்க்கிறார்கள். இதில், ஒரு பெண், கர்ப்பிணிப் பெண்களிடையே ஒரு விழிப்புணர்வு கொண்டு வருகிறாள் என்றால், ‘சபாஷ்’ போடலாம்.

மேகலா : அவள், தன் அனுபவத்தைச் சொல்லும் பொழுது, எனக்கு அப்படியே சிலிர்த்துப் போச்சி, கிருஷ்ணா..... நான் என் பிள்ளைகளிடமும் இதைத் தான் சொல்லுவேன், ‘நம் வயிற்றுக்குள் இருக்கும் baby, நாம் சாப்பிடும் உணவைத்தான் உணவாக ஏற்றுக் கொள்கிறது. நாம் ‘ஜீன்’ என்கிறோமே, அந்த ஜீன்களை உருவாக்கும் எண்ண அலைகளையும், நம்மிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. அதனால், நாம் நல்ல எண்ணங்களையே, நம் எண்ணங்களாக ஏற்றுக் கொண்டால், பாப்பாவும், அதுவே தன் எண்ணமாக ஏற்றுக் கொள்கிறது’ என்று சொல்லியிருக்கிறோமே, இதோ, இங்கு நடைமுறையில் ஒரு பெண் சாதித்துக் காட்டியிருக்கிறாளே என்று பெருமையாக இருந்தது, கிருஷ்ணா. அவளிடம் சென்று பாராட்டுச் சொன்னேன். அங்கு அவள் மாமியார், அவள் அம்மா எல்லோரும் என் fans-களாம்! அதிலும், அவங்க மாமியார், இன்னும் ஒரு படி மேலே போய், தன் friends, relatives எல்லோருக்கும் என்னோட channel-ஐத்தான் recommend பண்ணுவார்களாம்.

கிருஷ்ணர் : அவர்களுக்கு, உன்னைப் பார்த்து சிலுத்துப் போச்சா....? ‘சிங்கப் பெண்’ முடி சிலுப்பி, வீறு நடை போட்டாளா....? ஒரு ‘சண்டி ராணி’, ‘சிங்கப் பெண்’ணாக மாறினாள் என்று title கொடுத்து, ஒரு கதை எழுதலாம் என்றிருக்கிறேன்....

மேகலா : கதை......? நீயுமா....? நான் தான் கதை விடுவேன்....

கிருஷ்ணர் : அப்ப..... இதுவரையிலும் நீ விட்டதெல்லாம், ’புருடா’வா....?

மேகலா : இல்ல, கிருஷ்ணா..... Program முடிந்து, மேடை கலைந்ததும், முதலில் ஓ......டி வந்து எனக்கு shake hands கொடுத்து, ‘நான் உங்கள் fan' என்று சொன்னது யார் தெரியுமா....?

கிருஷ்ணர் : யார்....? ‘ஆட்டிசத்தால்’ (autism) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு treatment கொடுக்கும் டாக்டரா....?

மேகலா : ஐயோ...... எப்படி கிருஷ்ணா கண்டுபிடிச்ச....?

கிருஷ்ணர் : இன்னும் மிச்சமிருக்கும் ‘சிங்கப் பெண்’ அவர்தானே....

மேகலா : ஏன் கிருஷ்ணா...... நீ நம்பலியா.....

கிருஷ்ணர் : என்ன மேகலா..... நம்பாமல் இருப்பனா.... உன்னுடைய channel-லில், நீங்க என்ன பண்றீங்கன்னு எனக்குத் தெரியாதா..... ச்சும்மா கலாய்ச்சேன். உன் சின்னச் சின்ன ஆசைகள் travel, track மாறிப் போச்சு...... anyhow, நீ award வாங்கியதும், அதை வெகு சுவாரஸ்யமாய் எனக்கு விளக்கியதும், ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களின் அனுபவங்களை நுணுக்கமாய் நீ கவனித்ததும்..... உனக்கு award கொடுக்கும் பொது, inch by inch உன் மகள் அதை shoot பண்ணியதும்...... மனசுக்கு நிறைவாய் இருக்கு, மேகலா.....

மேகலா : Thanks, கிருஷ்ணா...... என்ன கிருஷ்ணா..... முடிஞ்சிருச்சா.....

கிருஷ்ணர் : முடிச்சிருவோம்..... ஊருக்குள்ள எத்தனையோ நடந்திருச்சி.... அதைப் பற்றி யோசி...... bye.....!

(இத்துடன் இந்த topic  நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2