நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 3

மேகலா : பாரதப் பிரதமர், 21 நாட்கள் ‘ஊரடங்கு உத்தரவு’ பிறப்பித்தார் என்று என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம் அல்லவா? அதை மக்கள் எப்படிக் கழித்தார்கள் என்ற தகவல்களுடன் இந்த வாரப் பகுதியை ஆரம்பிப்போம்.

கிருஷ்ணர் : ஆமாம் மேகலா! இன்றைய தலைமுறையினருக்கு, ‘ஊரடங்கு உத்தரவு’ என்ற சட்டமே தெரிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா? ‘சும்மா, virus பரவினால், உடல்நலம் பாதிப்படையும்; வெளியே வராதீர்கள்’ என்று சொன்னால், யார் கேட்பார்கள்? மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர், என்ன செய்வார்? சட்டம் போட்டு, மக்களை வெளியே வராதீர்கள் என்று கரிசனத்தோடு சொல்கிறார். சரி, மக்களின் reaction என்ன மேகலா? நான் ஒன்று கேட்க மறந்து விட்டேன். மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவின் போது, மாலை 5 மணிக்கு கை தட்டினாயா....?

மேகலா : கிருஷ்ணா! நானும் ஷீத்தல் அப்பாவும், மாலை 4.50-லிருந்து காத்திருந்து, count-down....10...9....8...7....6...5... என்று எண்ணி, 4.59-க்கு வெளியில் வந்து, நான் பூஜை மணியை ஆட்டி, ஒலி எழுப்பினேன். ஷீத்தல் அப்பா கை தட்டினார்.

கிருஷ்ணர் : மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும், மற்றும் இதற்காக உழைத்தவர்களுக்கும் நன்றி சொன்னாயா....?

மேகலா : சொன்னேன் கிருஷ்ணா.... என்ன.... எங்க தெருவில், நாங்க 2 பேர் மட்டும் தான் ஒலி எழுப்பினோம். ஆனால், ஹரி மாதிரி apartment-ல் இருப்பவர்கள் எல்லாம், ‘balcony'-க்கு வந்து கை தட்டியது, social media-வில் வெளியாகி, பரபரப்பாகப் பரவி, viral ஆகியது. நமது பிரதமரின், இந்த ‘கை தட்டும்’ idea-வால் கவரப்பட்ட Spain தேசத்து மக்களும், தங்கள் balcony-யில் light போட்டு, வெளிச்சமாக நின்று கொண்டு, கை தட்டுவதும், விசில் அடிப்பதுமாக தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி, பாரதப் பிரதமருக்கும் சேர்த்து நன்றி சொல்லியது, எனக்கெல்லாம் ரொம்பப் பெருமையாக இருந்தது, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : சரி, இந்த ஊரடங்கு உத்தரவினால், மக்களின் நடைமுறை வாழ்க்கை எப்படி இருக்கிறது, மேகலா....?

மேகலா : நடைமுறை வாழ்க்கையைத்தான் முடக்கியாச்சே கிருஷ்ணா! மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு போட்டிருந்தார்களா..... 14 மணி நேரம் தொடர்ந்து, ஒரு ‘மனுஷ சனம்’ கூடத் தொற்றுவதற்குக் கிடைக்கவில்லை என்றால், தொற்றும் கிருமிக்கு, சங்கிலித் தொடர் விடுபட்டுப் போகும்; ‘கொரோனா’ மிரண்டு ஓடி விடும் என்று நாங்களும் வெகு சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தோம். ‘ஒன்று’, ‘இரண்டு’ நாள் தான் சென்றிருக்கும். கொரோனா மெள்ள மெள்ள பரவ ஆரம்பமாகிறது.

பிரதமர், அதிரடியாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தப் போவதாக அறிவிக்கிறார். இதற்கான செய்திகள் முன்கூட்டியே கசிய ஆரம்பிக்கவும், அவசர அவசரமாக வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கிச் சேகரிப்பதில் முனைந்தோம். ‘சமூக விலகல்’, ‘தனித்திருத்தல்’, வெளியில் சென்றால், கைகளை, கால்களை சுத்தம் செய்தல் என்ற அறிவுரைகள் திரும்பத் திரும்ப அறிவுறுத்தப்பட்டது. State to state transport நிறுத்தப்பட்டது. இன்னும் இரண்டு நாள் கழித்து, district to district transport-ஐயும், தமிழ்நாடு government நிறுத்தியது. மக்கள் கட்டாயம் வீட்டுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும். அதைச் சட்டமாக எப்படி வலியுறுத்த முடியுமோ, அந்த அளவுக்கு, மத்திய அரசும், மாநில அரசும் செயல்பட்டது, கிருஷ்ணா... இந்த உத்தரவை அலட்சியமாக எடுத்துக் கொண்டவர்களை, போலீஸார் சில இடங்களில் அறிவுரை கூறி, திரும்ப அனுப்புகிறார்கள். சில இடங்களில், ‘தோப்புக்கரணம்’ போடச் சொல்லி உணரச் செய்கிறார்கள். சில இடங்களில், ரோட்டில் படுத்து உருளச் செய்கிறார்கள்....

கிருஷ்ணர் : அச்சச்சோ....! ரோட்டில் உருளச் சொல்கிறார்களா....?!

மேகலா : இதற்கே நீ இத்தனை ஆச்சர்யப்படுகிறாயே! கர்நாடகா மாநிலத்தில், exact-ஆ Bangalore சாலையில், two wheelers-ல் வந்த passengers எதிரில், ரோட்டை அடைத்துக் கொண்டு, போலீஸ்காரர்கள் நின்று கொண்டு, கும்பிடுகிறார்கள், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : பரவாயில்லை, மேகலா! அவர்கள் நினைத்தால், லத்தியால் ரெண்டு தட்டு தட்டலாம். அதைச் செய்யாமல், எத்தனை பெருந்தன்மையாக உணரச் செய்திருக்கிறார்கள்...!

மேகலா : லத்தியால் தட்டியதும் சில இடங்களில் நடந்திருக்கிறது, கிருஷ்ணா! உலகெங்கிலும், வெகு வேகமாகப் பரவி வரும் இந்தக் கொரோனா வைரஸினால், மற்ற நாடுகளில், பெரும் பாதிப்பு அடைந்து வரும் நிலையில், இந்தியாவில், மத்திய அரசின் வேகமான நடவடிக்கைகளாலும், சீரிய, முறையான அணுகுமுறையாலும், மக்கள் தொகை அதிகமான நமது நாட்டில், வைரஸ் பரவுவது, மிகச் சாதுர்யமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இத்தனைக்கும், மக்களுக்கு பயமும், பீதியும் அதிகரித்துள்ளதைத் தவிர, ‘நமக்கெல்லாம் பரவாது’ என்ற அலட்சியமும் இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான், ‘வீட்டில் எத்தனை நேரம் தான் அடைபட்டுக் கிடப்பது’ என்ற காரணத்தை வைத்தும், ‘நிலவரம் என்ன’ என்று தெரிந்து கொள்ள வந்தேன் என்று சொல்லியும் வெளியில் வருகிறார்கள். சும்மா சொல்லக் கூடாது, கிருஷ்ணா! மாநில அரசும், மத்திய அரசுக்கு இணையாக செயல்படுகிறது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ....!

மேகலா : மக்களை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், தாங்களாகவே முன்வந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்; நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டால், பரிசோதனை செய்து கொண்டு, ‘positive' என்று வந்தால், treatment எடுத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவுறுத்தலோடு, மருத்துவர்களையும், செவிலியர்களையும் 24 மணி நேரமும் களப்பணியில் ஈடுபடுத்தி, மக்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறார்கள், கிருஷ்ணா. இவர்கள் எல்லாவற்றையும் விட, காவலர்களின் பணிதான் உன்னதமானது. முதலில், social media-வில்....

கிருஷ்ணர் : ‘முதலில்’ என்றால்....?

மேகலா : 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2-வது நாள், திண்டுக்கல்லில் சிலர், இரவு நேரத்தில் வெளியில் வந்து கும்பலாக நின்றிருக்கிறார்கள். அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், சரமாரியாக ‘வைது’ தீர்த்து விட்டார். ‘உன்னைக் கொண்டு போய் ஜெயிலில் போட்டால், அங்கு வைரஸ் தொற்றி விடும். ஒரு உத்தரவு போட்டா, ‘என்ன’, ‘எதுக்கு’ என்று தெரியாதா; நீ பாட்டுக்கு வெளியில் வந்து, வைரஸ் தொற்றி எல்லோருக்கும் பரப்புவ...., உனக்கு உயிர் அவ்வளவு சாதாரணமாகப் போச்சா...ஏண்டா, நீ திருந்தவே மாட்டாயா....?’ என்று அவங்க level-க்கு இறங்கிப் பேசுகிறார். வந்தவங்க, ‘திரு திரு’னு முழிச்சிட்டு கலஞ்சி போறாங்க.... இந்தச் சம்பவம் social media-வில upload பண்ணப்பட்டு, மக்கள், அதற்கப்புறம் கொஞ்சம் serious ஆனார்களோ....; நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

கிருஷ்ணர் : இருக்கலாம், மேகலா! சும்மா, சட்டமாகப் பார்க்கப்பட்ட ‘ஊரடங்கு உத்தரவு’, சட்ட நடவடிக்கைகளைப் பார்த்து, பயந்து கூட மக்கள் உணர்ந்திருக்கலாம்....

மேகலா : ஆம் கிருஷ்ணா! சென்னையில் ஒருவன் அலப்பறையைக் கூட்டுகிறான். காவலர்கள் புத்திமதி சொல்கிறார்கள். அதற்கு அவன், ‘என்ன... 144 தடை உத்தரவு? நான் ஏன் வெளியில் வரக் கூடாது? இது என் இடம்! என் உரிமை! உங்க முதல் மந்திரிய இங்க வரச் சொல்லு; நான் கேட்கிறேன்’ என்றானா! லத்தியினால், ஒரு போடு...இழுத்துக் கொண்டு போய், station-க்குள் வைத்து, முட்டி போடச் சொல்லி, ‘உனக்கு முதலமைச்சர் இங்கு வரணுமா...., என்ன சொன்ன, என் உரிமைன்னா... இப்பச் சொல்லு, உரிமையைப் பத்தி! வாய் பேசுவியா?’ என்று வெளுத்துத் தள்ளிட்டாங்க...

கிருஷ்ணர் : பாரு......! சரி! அடுத்த பகுதியில் இவங்க அலப்பறையைப் பற்றி மேலும் பார்ப்போம்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2