நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 5

மேகலா : கிருஷ்ணா! இந்தக் காலக் கட்டத்தில் சுகாதாரத் துறை செய்த நல்ல காரியத்தைப் பற்றிக் கேட்டிருந்தாயல்லவா....? இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சு விட சிரமப்படுவார்கள். அவர்களது சிகிச்சைக்குத் தரப்படும் ‘ventilator' கருவி மிகுந்த costly-யானது. அதனை 10,000 ரூபாய்க்கு எளிமையாகக் கிடைக்கும்படிச் செய்து, 10 நோயாளிகளுக்கு ஒரு ventilator பொருத்தும்படியான கண்டுபிடிப்புகளும் செய்யப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என நினைக்கிறேன். இது உலகத்தோரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அதிலும், அமெரிக்கா முதலான வளர்ந்த நாடுகள் கூட விழிப்படையாத சமயத்தில், நம் நாட்டில் நோய்த் தொற்று பரவுவதற்கு முன்னமேயே விழித்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது, இன்னமும் இந்தியர்களாலேயே நம்ப முடியவில்லை, கிருஷ்ணா!

அதிலும், வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் செய்திகள், இந்தியாவின் பாதுகாப்பு விழிப்புணர்ச்சியைப் பாராட்டிப் பாராட்டியே, அவர்களது நாடுகளின் நடவடிக்கைகளை ‘ஒப்பீடு’ செய்து பார்க்கிறார்கள்.
அதிலும், 8-ம் தேதி, ’அனுமன் ஜெயந்தி’ அன்று, ‘பிரேசில்’ அதிபர், ‘போர் சமயத்தில், லக்ஷ்மணன் மயங்கிய போது, அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்து, மூலிகை மருந்தைக் கொடுத்து, குணப்படுத்தியதைப் போல, இந்தியப் பிரதமர், கொரோனாவுக்கான மருந்தை, எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

கிருஷ்ணர் : வாவ்.....! இன்னும், இன்னும் மேலே சொல்லு மேகலா.... கேட்பதற்கே, காதுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது....

மேகலா : அமெரிக்க அதிபர் ‘ட்ரம்ப்’, ‘twitter-ல், மிகவும் நெகிழ்ச்சியுற்று, ‘அசாதாரணமான சூழ்நிலையில், நட்பு நாடுகளுக்கிடையில் மேலும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. கொரோனா சிகிச்சை மருந்துகளை, அமெரிக்காவிற்கு அளிக்க முன்வந்த இந்தியாவின் முடிவுக்கு நன்றி; இதை மறக்க மாட்டோம். வலுவான தலைமையால், இந்தியாவுக்கு மட்டுமின்றி, மனித குலத்துக்கே உதவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக, அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : பின்ன..... இந்தியப் பிரதமர், யாரோட selection....!

மேகலா : இந்திய மக்களோட selection.....

கிருஷ்ணர் : அட போம்மா..... நான் உத்தரவு கொடுத்ததாக்கும்...... சரி, இன்னும் வேறு யார் என்ன சொல்லியிருக்காங்க....?

மேகலா : கணிப்பொறி உலகத்தின் மாமன்னன் Bill Gates, 'நான் இதுவரைக்கும் பார்த்த பிரதமர்களுக்குள், இப்படி கஷ்டமான காலக் கட்டத்தில் மிகத் திறமையாகச் செயல்படக்கூடிய பிரதம மந்திரியாக இந்தியப் பிரதமர் மோடி அவர்களைத்தான் பார்க்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : சபாஷ்! பலே! நீ அப்படியே சிலிர்த்துப் போனாயா, மேகலா....?

மேகலா : பின்ன....?

கிருஷ்ணர் : சரி, இந்த ஊரடங்கு உத்தரவில், உன்னை impress பண்ணிய செய்திகள் என்னென்ன சொல்லு....

மேகலா : கிருஷ்ணா! Impress பண்ணிய செய்திகள் என்றால், பாரதப் பிரதமரின் அயராத உழைப்பு, கவனமான விரைவான நடவடிக்கைகள்; தமிழக முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், மற்றுமுள்ள அனைத்துத் துறை அமைச்சர்களின் செயல்பாடுகள்; காவல்துறையினரின் அர்ப்பணிப்பான நடவடிக்கைகள்; மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களின் உழைப்பு இவையெல்லாம் பாராட்டப்பட வேண்டியவை.....

இதைத் தவிர, நான் முதலில் சொன்னது போல, பெங்களூர் நகரத்தை 15 நிமிடத்தில் கடந்தேன் என்றேனல்லவா...., வெறிச்சோடிக் கிடக்கும் போக்குவரத்துச் சாலைகள், திறக்கப்படாத கோயில்கள், அவரவர் வீட்டில் அமைதியாகத் தூங்கும் நான்கு சக்கர வாகனங்கள், பம்மிக் கொண்டும், மிதந்து கொண்டும் செல்லும் இருசக்கர வாகனங்கள், மனித நடமாட்டம் வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட நிலையில் உற்சாகமாய் சிறகடிக்கும் பறவைக் கூட்டங்கள், நம்மை விரட்டுவதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில், நிம்மதியாக உலா வரும் தெரு நாய்கள்...... என்று இன்னும் என்னென்னவோ இருக்கு கிருஷ்ணா. இவற்றையெல்லாம், நான் வெளியில் வந்து வேடிக்கை பார்த்தேனா என்றால், அதுதான் இல்லை. நானிருப்பதோ வீட்டுச் சிறையில்; என் படுக்கையில் படுத்துக் கொண்டு, mobile வழியாக இந்த உலகத்தைப் பார்க்கிறேன்! சுமார் 50 வருடங்கள் கழித்து, போக்குவரத்து மாசு, தூசியிலிருந்து விடுபட்ட ‘ஜலந்தரிலிருந்து’ தெரியும், பனிபடர்ந்த இமயமலையைக் கூட, என் படுக்கையில் படுத்துக் கொண்டே பார்த்து ரசித்தேன், கிருஷ்ணா! இனி, இப்படி ஒரு தூசு, தும்பு இல்லாத, அப்பழுக்கில்லாமல் வீசும் காற்றினால், சுத்தமான இந்தியாவைப் பார்க்க முடியுமா....?

கிருஷ்ணர் : அப்படி ஒரு இந்தியாவைப் பார்க்கவே வேண்டாம்! தூசு, தும்பு இருந்தால் கூடப் பரவாயில்லை, மேகலா! இயல்பு வாழ்க்கையை மக்கள் வாழட்டும். சரி....., உலகமெல்லாம் பாராட்டும் மோடியை யாராவது விமர்சிக்கிறார்களா, மேகலா....?

மேகலா : கண்ணை மூடிக் கொண்ட பூனைகள், இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்கள், கிருஷ்ணா! அரசியல் பண்ணுவார்கள், ‘எதுடா சாக்குக் கிடைக்கும்’ என்று பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். காஷ்மீரில், 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தால், அரசியல்; C.A.A குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்தினால், அரசியல்; N.R.C சட்டத்தை forward பண்ணினால், அரசியல் என்று தினந்தோறும் அரசியல், போராட்டம் என்று, இந்தச் சட்டங்கள், நாட்டு மக்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டம் தான் என்ற விவரம் கூடத் தெரியாமல் எதிர்க்கும் இந்த அரசியல்வாதிகளைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழகிப் போச்சு; அலுத்தும் போச்சு!

இவர்கள் இந்தக் கொரோனா தொற்றை எதிர்த்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து, இதில் எங்கு அரசியல் பண்ணுவது என்று புரியாமல் முழிக்கிறார்கள் என்பது தான் உண்மையான விஷயம். அதிலும், வெளிநாடுகளிலிருந்து வரும் தகவல்கள், குறிப்பாக, பாரதப் பிரதமரை வாழ்த்தியோ, அவரிடம் உதவி கேட்டோ வரும் செய்திகள், உண்மையிலேயே அவர்களை அரசியல் பண்ண விடாமல் செய்கிறது. நாடு ஒரு கடுமையான போரினைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில், ஒருவர் வெகு ‘அசால்ட்டாக’, பிரதமர் மோடிக்கு, twitter-ல் 3 பக்கங்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார், தமிழில்.......!

யார் என்று guess பண்ணி, யோசித்து வை, கிருஷ்ணா! அடுத்த பகுதியில் சந்திப்போம்....


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2