நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? பகுதி 6 (நிறைவு)

கிருஷ்ணர் : யாரோ ஒருவர், பாரதப் பிரதமருக்கு, twitter-ல் பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொன்னாயே...., அதுவும் தமிழில்.....! யார் அவர்......? தெரியவில்லையே....! தமிழில் எழுதியிருக்கிறார் என்றால், பிரதமர் கண்டிப்பாகப் படிக்க மாட்டார் என்ற தைரியத்தில் கண்டபடி எழுதியிருக்கிறாரா....?

மேகலா : ஆமாம், கிருஷ்ணா! மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்காதவனெல்லாம், தன்னை மேதாவி என்று, தன்னைத் தானே நினைத்துக் கொண்டு, தனக்கு நிகர் இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது என்ற அகம்பாவத்தில், நேரே straight-ஆக பிரதம மந்திரிக்கே, ‘பகிரங்கக் கடிதம்’ ஒன்று எழுதியிருக்கிறான்கள்....

கிருஷ்ணர் : ஏய்.... இரு.... இரு.... நீ யாரைச் சொல்லுகிறாய்? நீ சொல்லும் போது, உன் முகத்தில் தெரியும் கோபம், வார்த்தையில் தெறிக்கும் உஷ்ணம், ‘உலக நாயகனையா’ சொல்லுகிறார்....?

மேகலா : ‘உலக நாயகன்’...... ‘உலக்கை நாயகன்’ என்று சொல்லு, கிருஷ்ணா.... அவன் பெயரை விட்டுட்டு, பெருசா படிச்சு வாங்குன பட்டம் மாதிரி, பட்டப் பெயரில் கூப்பிடுகிறாயே...

கிருஷ்ணர் : சரி.... சரி...... என்ன ஆச்சு...... ஆளு, பகிரங்கக் கடிதத்தில் விவகாரமாகத்தான் எழுதியிருக்கிறாரோ....

மேகலா : ஒரு விஷயத்தை..... விவகாரமாக எழுதுவதில் தப்பில்லை, கிருஷ்ணா.... ஆனால், நடந்த விவரமே என்னண்ணு தெரியாம, A.C. room-ல உட்கார்ந்து கொண்டு, வேளைக்கு ரெண்டு சினிமா பார்த்துக் கொண்டு, வருடத்திற்கு ஒரு பொண்டாட்டியைச் சேர்த்துக் கொள்பவனுக்கு, தன் வீட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், முழ நீளத்திற்கு, கொரோனா வைரஸிற்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவனெல்லாம் இந்த நாட்டில் வாழவே தகுதியில்லாதவர்கள் என்று நான் நினைக்கிறேன், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : இரு... இரு.... பொறுமையா இரு..... கோபத்தை விட்டுட்டு, என்ன நடந்தது என்று மெதுவாகச் சொல்லு.....

மேகலா : கிருஷ்ணா! கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகி விட்டதாம்....

கிருஷ்ணர் : என்னது....! நான்கு மாதங்கள் ஆச்சா! டிசம்பர் மாதத்தில் சைனாவில்தானே பிறந்தது..

மேகலா : விஷயத்தைக் கேளு, கிருஷ்ணா..... அப்பெல்லாம் சும்மா இருந்து விட்டு, ஒரு திட்டமிடலும் இல்லாமல், ஒரே ராத்திரியில் முடிவெடுத்து, ‘ஊரடங்கு உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டதாம்....!

கிருஷ்ணர் : என்ன மேகலா....? அநியாயமாய் இருக்கு.... சைனாவால் இந்தத் தொற்று பரவுகிறது என்று அறிந்ததும், இந்தியாதான் முதன் முதலாக சைனாவிலிருந்து வரக் கூடிய container-களை நிறுத்தியது. போக்குவரத்தைத் தடை செய்தது. இது நடந்தது, ஜனவரி 15-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல், இங்கொன்றும், அங்கொன்றுமாக 11 பேர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டார்கள் என்று தெரிந்த நிலையிலேயே, அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சிருச்சே. மக்களே, இதன் பின் விளைவுகள் என்னவாகும் என்று தெரியாமல் இருந்தார்களே ஒழிய, கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றுதானே எதிர்பார்த்து இருந்தார்கள். இங்க எப்படி ஒரே ராத்திரியில் முடிவு பண்ணி, திடீரென்று உத்தரவு பிறப்பித்தார்...! சொல்லப் போனால், இந்தியப் பிரதமர், பலத்த முன்யோசனையுடன், பிற நாடுகள் செயல்படுவதற்கு முன்னாடியே, கொரோனாவுக்கு எதிராக தீர்க்கமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்து விட்டார் என்பதுதானே உண்மை. இந்த மாதிரி, இந்திய அரசாங்கம் செயல்படும் போது, கேள்வி கேட்டவர், ஊரில் இருந்தாரா, இல்லையா.....?!

மேகலா : யார் கூட, எந்த உலகத்தில் இருந்தாரோ; யாருக்குத் தெரியும், கிருஷ்ணா.....! அடுத்து என்ன சொன்னார் என்பதைக் கேள், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நீ என்ன சொல்லப் போறேன்னு நான் சொல்லட்டா....? ’நீங்க எப்பவுமே ‘பால்கனி’யில் நின்னுகிட்டு விளக்குப் பொருத்துபவர்களுக்காகத்தான் பேசுகிறீர்கள். இங்கு வீடில்லாமல் இருக்கும் ஏழைகள், எண்ணெய் வாங்குவதற்குக் கூட பணம் இல்லாமல் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள். அவர்களுக்கு, கை தட்டவும், விளக்குப் பொருத்தவும் சொல்லும் நீங்கள், ஏழைகளின் பிரச்னையைக் கேட்க மறுக்கிறீர்கள்’ என்று சொன்னாரா....? அதற்கு, ரங்கராஜ் பாண்டே, ‘பாவம், கமலஹாசன் குடிசையில் இருக்கிறார் போல; அதனால்தான் ஏழைகளின் பிரச்னையைப் பற்றிப் பேசுகிறார்’ என்றாரா....

மேகலா : கேட்டுட்டியா....?

கிருஷ்ணர் : Twitter-ல் பகிரங்கக் கடிதத்தையும் படித்தேன். ‘சாணக்யா’வில் பகிரங்கப் பதிவையும் கேட்டேன். அதென்ன...., ‘இரவு நேரக் கேளிக்கைகளில்’ கலந்து கொள்பவர் என்று பிரதமரைப் பார்த்து, கூச்சமில்லாமல் கேட்கிறாரே....

மேகலா : தன்னைப் போலவே பிரதமரையும் நினைத்து விட்டார் போல.....

கிருஷ்ணர் : அப்படி நினைத்திருந்தால், ‘உங்களுக்குத்தான், உங்கள் அருகில் அறிவாளிகள் இருப்பதே பிடிக்காதே’ என்ற வார்த்தையைச் சொல்லியிருக்க மாட்டாரே....! எனக்கென்னவோ, பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் video conference-ல் பேசிய போது இவரையும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் சேர்க்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியோடு பேசியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது, மேகலா. பேசியதெல்லாம் வெறுப்பு உணர்வோடு பேசியிருக்கிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தந்திருக்கிறார். உலகமே இந்தியப் பிரதமரிடம் உதவி பெற்று, இந்தியாவை வியந்து போற்றும் நிலையில், இவர் மிகுந்த வயித்தெரிச்சலோடு பேசுவதாகத் தெரிகிறது. ‘நீங்கள் சொன்னால் எல்லோரும் கேட்கிறார்கள்’ என்று சொல்லும் போது, 100% வயித்தெரிச்சலைத்தான் காட்டுகிறது.

‘போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!
கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான்,
கண்ணனே கொலை செய்கின்றான்!
காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக,
இக்களமெலாம் சிவக்க, வாழ்க!’
‘பரித்ராணாயா சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே’

- நீ கவலையை விடு, மேகலா. பேசுபவர் பேசட்டும்; உன் நம்பிக்கைக்குரிய கிருஷ்ணன், எப்பொழுதும் தர்மத்தின் பக்கமே....

மேகலா : கொரோனா தொற்று இன்றே மிரண்டு ஓடி விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது, கிருஷ்ணா....!

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2