தாலி கட்டலைனா.... பகுதி 1

மேகலா : கிருஷ்ணா! இந்த ‘டயலாக்’க கேளேன்...

கிருஷ்ணர் : என்ன மேகலா! ஒரு good morning கிடையாது; நலம் விசாரிப்பு கிடையாது; வரும் போதே ‘டயலாக்’கோட வர்ற...

மேகலா : நேற்று ஒரு படம் பார்த்தேன் கிருஷ்ணா! அதில் வரும் வசனம் என்னை ரொம்பவே கலகலப்பாக்கியது. அது மறந்து போவதற்குள் உன்னிடம் சொல்லணுமே என்ற பரபரப்பில் தான்...., சரி...., ‘ஹாய் கிருஷ்ணா..... எப்படி இருக்கிற....?

கிருஷ்ணர் : ஐயே.... போதும்.... உன் ‘டயலாக்’கைச் சொல்லு....

மேகலா : ஒரு மாப்பிள்ளை, தன்னைக் காண வந்த மாமனாரிடம் கேட்பது போல..... அதாவது இது ’கட்டாயக் கல்யாணம்’ மாதிரி.... அதனால் அவன் (மாப்பிள்ளை) கேட்கிறான்....., ‘தாலி கட்டுனா, எனக்கு என்ன போடுவீங்க....?’

கிருஷ்ணர் : ‘தாலி கட்டலன்னா, உன்னப் போட்டுருவேன்’ என்றானா....?

மேகலா : ஐயோ! எப்படி கிருஷ்ணா.... கச்சிதமாய் சொல்லிட்ட...! திருட்டுத்தனமா நீயும் படம் பார்த்தியா....?

கிருஷ்ணர் : ஆம்...மாம்.... இதற்குப் பெரிய.... படம் பார்க்கணுமாக்கும். நீ build-up பண்ணும் போதே, ‘ஏதோ சமாச்சாரம்’ என்று தெரிகிறது.... அதிலும், ‘கட்டாயக் கல்யாணம்’ என்று சொன்னாயா...., வெட்ட வெளிச்சமாய்ப் புரிந்து விட்டது. சரி...., உருப்படியாய்ப் பேசுவோமா....?

மேகலா : கிருஷ்ணா! அதற்கு முன்னால், உன்னிடம் interesting-ஆன விஷயம் ஒண்ணு சொல்லணும்...... India Glitz என்ற channel-ல், sowcarpettai-யைத் தெறிக்க விட்ட Shivangi என்று தலைப்புக் கொடுத்த ஒரு விளம்பரம் பார்த்தேன். என்னதான் தெறிக்க விட்ராங்க பார்ப்போமே என்று பார்த்தேன். India Glitz channel-ஓட anchor, Super Singer-ல் பாடிய சிவாங்கியைத்தான், சௌகார்பேட்டைக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். அதாவது, அந்தப் பாடகி பொண்ணு, guest. அவளைக் கூட்டிச் செல்லும் போது நடக்கும் கலாட்டாதான், அந்த video-வின் concept. அந்தப் பொண்ணுக்கு, 20 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்கும். அந்த வயதுக்கே உரிய innocence. அந்தப் பையனுக்கு, 22 வயதிலிருந்து 24 வயசுக்குள் இருக்கும். அந்த வயசுக்கே உரிய friendly கலாய்க்கும் dialogue.....

கிருஷ்ணர் : புரிஞ்சி போச்சு; கிருஷ்ணரும், மேகலாவும் இப்படிக் கலாட்டாவாகப் பேசிக் கொண்டே கடைவீதியில் போனால், எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தாய்.... போகும் வழி தோறும் விற்கும் ‘குல்ஃபி ஐஸ்’ சாப்பிட்டாயா.... வேற்கடலை சாப்பிட்டாயா.... comedy piece ஆக நீ வர, உன்னைக் கலாய்ச்சுக்கிட்டே நானும் வருவதாகக் கற்பனை பண்ணி குதூகலப்பட்டாயா....!

மேகலா : எப்படி..... இது எப்படி..... கிருஷ்ணா.... என் மனசை நீ scan பண்ணிப் பார்த்தது  மாதிரி பேசுகிறாயே, கிருஷ்ணா.... வா.... கிருஷ்ணா.... நாம சென்னைக்கெல்லாம் போக வேணாம்.... இதோ..., இங்க இருக்கிற மதுரை விளக்குத்தூண் ரோட்டுக்குப் போகலாம்......

கிருஷ்ணர் : இந்த மாசி மாத வெய்யிலிலா....? (இந்த blog எழுதப்பட்டது, மாசி மாதத்தில்....)

மேகலா : பரவாயில்லை, கிருஷ்ணா..... நீ உடன் வந்தால், ‘தங்க நிலா’ குடை பிடிக்கும். வெண் மேகங்கள் குளிர்வாய் விசிறிக் கொடுக்கும். எனக்கும், உன்னோடு வரும் போது, உலகையே வலம் வருவதாய் மெய் மறக்கும்.

கிருஷ்ணர் : சரி...., நம்ம drama-வ பிறகு continue பண்ணிக்குவோம். ‘சிவாங்கி’, சௌகார்பேட்டையில் என்ன செய்தாள்? அதைச் சொல்லு, முதலில்....

மேகலா : அதுவா....., சௌகார்பேட்டையில் enter பண்ணியவுடன், கொஞ்ச தூரம் அந்தப் பொண்ணும், anchor-ம் நடந்து போகிறார்கள். போகிற வழியில் விற்கிற, lemon juice, lassi வாங்கிக் குடிக்கிறார்கள். தெருவில் நடக்கும் போது, ‘கால் வலிக்குதே...., ரிக்‌ஷாவில் போகலாமா’ என்கிறாள். உடனே, ஒரு cycle rikshaw-வை நிப்பாட்டி, ஏறிக் கொள்கிறார்கள். அதில் செல்லும் போது, ‘கச்சா முச்சா’வென்று பேசிக் கொண்டே செல்கிறார்கள். ’அவன்’ சொல்கிறான், ‘இந்த trip முடியும் போது, யார் அதிகமா ‘மொக்க’ போடுறாங்கண்ணு பார்ப்போம்’. அந்த அளவுக்கு ‘மொக்கையா’ பேசுறாங்க....!

கிருஷ்ணர் : ‘மொக்கையா’..... அப்படீன்னா....

மேகலா : Comedy-ன்னு நெனச்சிக்கிட்டு கண்டதெல்லாம் பேசுவது; யாருமே சிரிக்க மாட்டாங்க...., ஆனா, அது comedy....!

கிருஷ்ணர் : ஓ....! நீ பேசுவது மாதிரி....!

மேகலா : இப்படித்தான்...... இப்படித்தான் கிருஷ்ணா! நீ இப்ப, எப்படி free-யா கிண்டல் பண்ற..... அந்த மாதிரி பேசிக்கிட்டே வண்டியில் போனாங்க. அந்த area-யாவில் ‘வடா பாவ் பாஜி’ ரொம்ப famous போல..... அந்தப் பொண்ணு அத சாப்பிடணும் என்கிறாள். ஆனால், அது எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. சௌகார்பேட்டையே, குறுகிய தெருவாக, வடக்கும் தெற்குமாக; கிழக்கும் மேற்குமாக ஏகப்பட்ட தெருக்கள் இருக்கிறது. ஏற்றி வந்த ரிக்‌ஷாக்காரன், இறக்கி விட்டு, இடது கையைத் தூக்கி, ‘அப்பால போகணும்’ என்று காட்டி, வழி சொல்லி விட்டு, போயே போய் விட்டான்.
கிருஷ்ணர் : ‘வடா பாவ் பாஜி’ சாப்பிட்டார்களா.....?

மேகலா : எங்க கிருஷ்ணா..... அங்க சுத்தி.... இங்க சுத்தி, கடைசியில, கிளம்புன இடத்துக்கே வந்து சேர்ந்தார்கள், கிருஷ்ணா! இதற்கிடையில், ஒரு hand bag பார்த்து, கை நீட்டி வாங்கிக் கொண்டாள். அடுத்து ஒரு ‘கம்மல்’ வாங்கினாள்....

கிருஷ்ணர் : நல்லா அவளை வாய் பார்த்திருக்கிறாய். இதே மாதிரி நானும் உன்னை தெருத்தெருவாய் கூட்டிப் போகணுமா..... நல்ல friend நமக்கு....!

மேகலா : அத கற்பனை பண்ணுவதற்கே எத்தனை சந்தோஷமா இருக்கு, கிருஷ்ணா...... இன்று ஒரு சம்பவம் நடந்தது; என்ன தெரியுமா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : சொன்னாத்தானே தெரியும்....

மேகலா : எங்க N.G.O. காலனில ஒரு பிரச்னை, கிருஷ்ணா. எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்பில ஒரு play ground இருக்குல, கிருஷ்ணா. அது ஏதோ கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலம் மாதிரி நகராட்சி feel பண்ணியிருக்கிறது....

கிருஷ்ணர் : அதனால......?

மேகலா : அதனால், அந்த இடத்தில், ஊரிலே collect பண்ணும் குப்பைகளை, அங்கு கொட்டி, ‘மக்கும் குப்பை’, ‘மக்காத குப்பை’ என்று பிரித்து process செய்யலாம் என்று தீர்மானித்து, அரசாங்கமும் அனுமதி கொடுக்க, காலனியில் குடியிருப்போர் யாருக்கும் இந்த முடிவைத் தெரிவிக்காமல், ‘கிடு கிடு’வென வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர். Engineer வருகிறார்; contractor வருகிறார்; குழி தோண்டும் machine வருகிறது. எனக்கு எதிர்த்த வீட்டில் குடி வந்த family இந்தத் தகவலைச் சொன்னார்கள். அதிர்ந்து போனேன். அதற்குள், இந்த news N.G.O. Colony-க்குள் viral ஆக பரபரப்பானது.....

கிருஷ்ணர் : பின் என்ன நடந்தது....?

மேகலா : அந்த சுவாரஸ்யமான விவரங்களோடு அடுத்த பகுதியில் சந்திப்போம், கிருஷ்ணா.......

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2