தாலி கட்டலைனா.... பகுதி 2 (நிறைவு)

மேகலா : எங்கள் வீட்டிற்கு எதிர்த்தாப்புல இருக்கிற play ground-ல் எங்க ஊர் முனிசிபாலிட்டி ‘குப்பை’ கொட்ட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்று சென்ற வாரப் பகுதியின் முடிவில் கூறியிருந்தேனல்லவா.... இந்த news, N.G.O. Colony முழுக்க வைரலாகி பரபரப்பானது.

கிருஷ்ணர் : என்ன மேகலா.... எனக்குப் புரியல.... வழக்கமா..... மனுசங்க தான் அரசாங்கத்த எதிர்த்துப் போராட்டம் நடத்துவாங்க.... இங்க, நிம்மதியாக இருக்கும் ஒரு காலனிக்குள், plot போடும் போது, play ground-க்காக இடத்தை ஒதுக்கச் சொன்னதே, government-தான். இப்ப அந்த அரசாங்கமே, சின்னப் புள்ளைக விளையாடும் இடத்தை ஆக்ரமித்து, மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக்கப் போகிறார்களாமா....? குப்பையைக் கொண்டு வந்து கொட்டினால்....., மக்கள் அந்த நாற்றத்தில் குடியிருக்க முடியுமா....?

மேகலா : கிருஷ்ணா..... நீ எங்களுக்கு சாதகமாக யோசிக்கும் போது, எங்களுக்கு சாதகமாகவே பலனும் கிடைக்கும் என்று நம்புகிறேன் கிருஷ்ணா.... இப்படித்தான் தாசில்தார் அம்மாவும் சொன்னார்கள், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : பிரச்னையைத் தாசில்தாரிடம் கொண்டு சென்றீர்களா....?

மேகலா : பின்ன...? சும்மா இருக்க முடியுமா, கிருஷ்ணா? குழி தோண்ட வந்த காண்ட்ராக்டரை, stay order போட்டு தடுத்தி நிறுத்தி...., ஆளும் கட்சிக்காரர்களை வரவழைத்து, மரம் நட்டு, அதை இதைச் செய்து, பிரச்னையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டோம். இதற்கிடையில், தாசில்தாரை வரவழைத்து, அத்தோடு செய்தி சேகரிப்பாளரையும் வரவழைத்து, N.G.O காலனி மக்களும் ஒருங்கிணைந்தோம். அம்மா (தாசில்தார்) வந்தாங்க; பார்த்தாங்க.... அவங்களுக்கு, குடியிருப்புக்கு நடுவில், இப்படி ஒரு பிரச்னையை, நகராட்சி கொடுக்கிறது என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது போலும். நான் அன்று, ஷீத்தல் அப்பாவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ‘லக்ஷ்மி நரசிம்ஹரை’க் கட்டாயம் தரிசனம் செய்தே ஆக வேண்டும் என்று புறப்பட்டு விட்டேன், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : இங்கு இவ்வளவு பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கும் போது, நீ என்ன, லக்ஷ்மி நரசிம்ஹரிடம் ‘petition' போடப் போனாயா....?

மேகலா : கிருஷ்ணா! சனிக்கிழமை Bangalore கிளம்புகிறேன் இல்லையா.... போயிட்டு வருகிறேன் என்று சொல்லணும்; என் கார் சாவியை நரசிம்ஹர் பாதத்தில் வைத்து எடுக்கணும்; என்னுடைய travel-ல் நரசிம்ஹரின் துணை வேணும், கிருஷ்ணா! அதனால்தான் போனேன். அப்படியே, ஹரிக்கு, அரிசியும், பூண்டும் வாங்கி வந்து விடலாம் என்று சென்றேன்.

கிருஷ்ணர் : உன்னுடைய travel-க்குத் துணை, லக்ஷ்மி நரசிம்ஹரா... அதான் நீ ஊருக்குப் போகும் போதெல்லாம், ‘மாயா ரூபத்தில்’ அங்கு வருகிறாரா.....? சரி, வரட்டும்.....

மேகலா : என்ன சொன்ன..... என்ன சொன்ன....? என்னுடைய கார் சாவி, நரசிம்ஹரின் பாதம் தொட்டு, என் கைக்கு வந்ததிலிருந்தே, அதை நினைத்து நினைத்து சிலிர்த்துப் போகிறேன். இப்போ நீயும், நரசிம்ஹர் எனக்குத் துணையிருக்கிறார் என்று சொல்வது...., இதை விட பெரும் பாக்கியம் வேறு உண்டா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : சரி...., நம்ம கதையைப் பிறகு பேசுவோம்..... தாசில்தார் அம்மா கதையைச் சொல்லு.....

மேகலா : நான் வீட்டிற்குத் திரும்பிய வேளையில், கூட்டம் நிறைவுக்கு வந்து கொண்டிருந்தது. நானும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்று விட்டேன். கடைசியில் வந்தாலும், நம்முடைய குரலில் நம் point-ஐச் சொல்லாமல் விடக் கூடாது என்று நினைத்து, ‘பிள்ளைகள் விளையாடுவதற்காக என்று plot பிரிக்கும் போதே, அதற்கான தனி இடத்தை government பிரித்து, plot போட்ட பின்பு, அந்தக் குழந்தைகள் விளையாடுவதற்கு இடமில்லை என்று நகராட்சி occupy பண்ணுவது நியாயம் கிடையாதுல்லம்மா’ என்று என் கருத்தை பதிவு செய்து கொண்டே நுழைகிறேன்.

அதுவரை தாசில்தாராக இருந்து கவனமுடன் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்த தாசில்தார், reporter-இடம், ‘மக்களின் கருத்துக்களை cover பண்ணுங்க’ என்று கூறி விட்டு, என் குரல் வந்த திசை பக்கம் திரும்பினார். ‘உங்களை எங்கேயோ பார்த்தி......., நீங்க ‘சிவகாசி சமையல்’ chef தானே....’ என்றது மட்டுமல்ல, கிருஷ்ணா....., அப்படியே எனக்கு shake hand கொடுத்து, selfie எடுத்து, ‘இன்னொரு photo எடுப்பா’ என்று reporter-இடம் கட்டளையிட்டு, அந்த ஒரு நிமிடத்தில், என்னை V.I.P ஆக்கி விட்டார். அதுவரையிலும், அந்தக் கூட்டம், பவ்யமாக மனு கொடுத்து, தங்கள் குறைகளைப் பேசிக் கொண்டிருந்தவர்கள், தாசில்தார் அம்மா, ஒரு சாதாரண அம்மாவாக, ‘என் fan' ஆகப் பேசியதைப் பார்த்தவுடன், அப்படியே 'still' ஆக நின்று விட்டார்கள்.

கிருஷ்ணர் : நீ என்ன செய்து கொண்டிருந்தாய்....?

மேகலா : அவர், ‘நீங்க.... என்று இழுக்கும் போதே எனக்குப் புரிந்து விட்டது; ‘something', 'something' என்று. அதற்கப்புறம், ‘என் பொண்ணு Australia-வில இருக்கிறா. அவள் உங்கள் சமையல் பார்த்துத்தான் சமைக்கிறா. அவள் மட்டும் இல்ல, நானும் உங்க fan தான். அதுலயும், ‘மீன் குழம்பு’ல நீங்க சொல்லியிருக்கும் வசனமெல்லாம், அப்படியே மீன் குழம்பு சாப்பிட வச்சிரும்’ என்று சொன்னார்களா....

கிருஷ்ணர் : உனக்கு அப்படியே ‘கிறு கிறுத்துப்’ போயிருச்சா....

மேகலா : அதுவரைக்கும் பேசாமல் இருந்த கூட்டம், ‘world famous, இவங்க பேச்சுத்தான், இவங்க சமையலில் ‘highlight'; ’அப்படி’, ’இப்படி’ என்று பேச ஆரம்பித்தார்களா.....

கிருஷ்ணர் : நீயும், அப்படியே வானுலகில் சஞ்சாரம் பண்ணுனயா....?

மேகலா : நான் தான் கூட்டத்திற்கு வந்ததில் கடைசி member..... தாசில்தார் அம்மா, என்னைத் தூக்கி உச்சாணிக் கொம்பில் வைத்தவுடன்.... reporter-க்கு camera மூலம் தகவல் சொல்லும் தலைமையாளராக மாறி விட்டேன்....!

கிருஷ்ணர் : பார்ரா....., அப்புறம்....?

மேகலா : அப்புறம் என்ன..... எங்கள் குறைகளை reporter-க்கு எடுத்துச் சொல்லி, ‘இத்யாதி...இத்யாதி’... எப்படி, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : உனக்கென்னம்மா.... லக்ஷ்மி நரசிம்ஹர், உன் கார் சாவியை, தன் திருவடியில் வைத்துத் தருகிறார்...... தாசில்தார் அம்மா உன்னோட selfie எடுக்கிறாங்க..... நீ பெரிய ஆளாயிட்ட, மேகலா. அப்போ, நான்..... வர்ட்டா....?

மேகலா : கிருஷ்ணா! நான் உன் கூட பேசணும்....

கிருஷ்ணர் : நாளைக்கு..... நாளைக்கு.... இதோ, போயிட்டேன்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1