Lock-down கலகலப்பு - பகுதி 2

கிருஷ்ணர் : என்ன மேகலா...., உனக்கு serial-ம் கிடையாது. திருப்பிப் பார்க்கும் பழைய serial-ம் நீ பார்ப்பதில்லை. இத்தனை உணர்ச்சி பொங்க என்ன கதை விடுகிறாய்....?

மேகலா : கதை விடுகிறேனா.....? யார்....., நானா.....? நானும் Sheethal அப்பாவும் ராமாயணம் படிக்கிறோம், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : oh! உன் கதையில், ராமர் கானகம் சென்று விட்டாரா....? பரதன் அயோத்திக்கு வந்த பின், ராமர் கானகம் சென்ற செய்தி அறிந்து, அவரை அழைத்து வரச் சென்றுள்ளானா....? உன் குரலில் கொந்தளிப்பு தெரிகிறதே....!

மேகலா : கிருஷ்ணா! அதையும் தாண்டி, இன்று சீதை, ராவணனால், அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டார்கள். ராமர், மனிதர்கள் புலம்புவது போலேயே புலம்புகிறார், கிருஷ்ணா! ‘சீதை கடத்தப்பார்’ என்பதை உணர்ந்ததும், ’சீதை இல்லாமல், தெய்வ அந்தஸ்து கிடைப்பதாக இருந்தாலும், எனக்கு அது வேண்டாம்; நான் சீதை இல்லாமல் உயிர் வாழ விரும்பவில்லை; அயோத்திக்கு சீதை இல்லாமல் திரும்ப மாட்டேன்’ என்று மனுஷ மக்களைப் போலவே புலம்புகிறார், கிருஷ்ணா.... வாசிக்கும் போது எனக்கு அப்படியே கரைஞ்சி போச்சு கிருஷ்ணா....

கிருஷ்ணர் : மனிதனாகப் பிறந்தால், மனிதனுக்குரிய அத்தனை லட்சணங்களும் சேர்ந்துதானே பிறக்க முடியும்...... ரிஷிகளெல்லாரும் நிம்மதியானார்களா, தெய்வ காரியம் தொடங்கப் பெற்றது என்று. ஒருவருடைய துயரம், மற்றவருக்கு விடிவு காலமாகப் போகிறது. ஒருவருடைய இழப்பு, நல்லவர்களுக்கு நன்மையாகப் போகிறது. ஒருவருடைய சோகம், ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் நன்மையாகப் போகிறது. அதுதான் இத்தனை உணர்ச்சிப் பிழம்பாய் கதை சொல்லுகிறாயா....?

மேகலா : நீ கேட்டாயா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : கதை கேட்டால் மட்டும் தான், உன் குரல் எனக்குப் புரியுமா...? நீ எந்த நேரத்தில் என்ன குரல் கொடுப்ப.... உன் குரலில் கொப்பளிக்கும் உணர்வுக்கு என்ன அர்த்தம்....... நீ ஆத்திரப்பட்டால் என்ன நடந்திருக்கும்..... சினிமா பார்த்தால் என்ன செய்வாய்? யாராவது அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசினால், நீ எப்படி react பண்ணுவாய்.... என்பதெல்லாம் நானறிவேன். நீ நெகிழ்ந்து போனாலோ, குழைந்து போனாலோ, துவண்டு போனாலோ, கரைஞ்சி போனாலோ, துல்லியமாய்த் தெரிந்து விடும். அப்படிப்பட்ட முகலட்சணம் உன்னோடது....! ராமாயணம் படிக்கிறாய் என்று, உன்னருகில் உட்கார்ந்து கதை கேட்டுத்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. உன் முகம் போற போக்கைப் பார்த்து, என்ன கட்டம் படிக்கிறாய் என்று கூட தெரிந்து விடுகிறதே......

மேகலா : அப்படியா என் முகம் இருந்துச்சி..... ஏன் கிருஷ்ணா...? வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோம். வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து, எனக்கெல்லாம் மூளையும் மழுங்கிப் போயிருச்சி. நீதான் எனக்கு ஏதாவது கதை சொல்லேன்...

கிருஷ்ணர் : அது சரி..... நீ தான் ராமாயணம் கதை சொல்லுகிறாய். Whatsapp-ல் cooking competition நடத்துகிறாய். கலந்து கொள்பவர்களுக்கு comment கொடுத்து அசத்துகிறாய். புராணக் கதாபாத்திரங்களைக் கொடுத்து, ‘எந்தப் புராணம்’ என்று கேட்டு quiz நடத்துகிறாய். உனக்குப் பொழுது போகலியா....? யாருகிட்ட கதை உட்ற....

மேகலா : ம்ஹும்..... ஹி.....ஹி..... நீ பாத்தியா, கிருஷ்ணா....? நான் நெனச்சத விட cooking competition-லயும், quiz competition-லயும், சின்னப் புள்ளைங்க சந்தோஷமா கலந்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : அதான் பார்த்தனே..... அம்மா..... ஆள கையிலேயே பிடிக்க முடியாம, துள்ளிக்கிட்டு இருந்தீங்களே...... எங்க, எனக்கு உன் போட்டி.... இத்யாதி, இத்யாதியெல்லாம் explain பண்ணு பார்க்கலாம்.....

மேகலா : கிருஷ்ணா.... இந்த ஊரடங்கு உத்தரவுல, whatsapp மூலமா ஒருத்தருக்கொருத்தர் தொடர்பு ஏற்படுத்திக்கிட்டு, தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் போல, கிருஷ்ணா...!

கிருஷ்ணர் : ஏன்.....? நீ ஒண்ணும் whatsapp group-ல message போடறது இல்லையா....?

மேகலா : Smart sisters group-ல, தகவல்களைப் பரிமாறத்தான் செய்கிறோம், கிருஷ்ணா...... Ushu-வும், Shammy-யும், daily, தான் சமைச்சதை post பண்ணப் பண்ண, அவரவர் செய்யும் dishes-ஐயும் post பண்ணி enjoy பண்ணிக்கிட்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள், என்னைப் போல, முந்தைய தலமுறையினரை, Lord group-ல் சேர்த்து விட்டார்கள். இளைய தலைமுறையினர் message போடுவது, happy birthday wish பண்ணுவது என்று நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. எங்க மரபுக்கவிதை whatsapp group-ல ஒரு நாள், Sheethal ஒரு photo pose கொடுத்து, ‘இது என்ன பாட்டு’ என்று கேட்க, ஹரி அதற்குப் பதில் சொல்ல, இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருந்தது. அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில், Sheethal, Lord group-ல இந்த game-ஐ எடுத்துச் சென்று விட்டாள் போல.... நான் அன்று group-லேயே இல்லை. அதன் பிறகுதான் நான் group-லேயே சேர்ந்தேன். அந்த வார week-end-ல், ஷம்மி இந்த game-ஐ நடத்தினாள். எனக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

கிருஷ்ணர் : உடனே, அடுத்த வாரத்தில் நீ, ‘சமையல் போட்டி’யை announce பண்ணினாயாக்கும்....?

மேகலா : முதலில், Sheethal கிட்டதான் discuss பண்ணினேன், கிருஷ்ணா. ’அம்மா ’போட்டி’ announce பண்ணப் போகிறேன்; main ingredient ஆக egg கொடுக்கப் போகிறேன்’ என்று. உடனே, அவள் ‘மள மள’வென்று game-ஐ design பண்ணி விட்டாள். நான் மறுநாள் ஒரு message போட்டு விட்டேன்.
"என்னருமைப் பிள்ளைகளே, ஊரடங்கு உத்தரவில், எல்லோரும் safe ஆக இருக்கிறீர்களா? வெளியில் செல்ல முடிந்தவர்கள், தகுந்த பாதுகாப்புடன் தானே செல்கிறீர்கள். என்ன.... வைர அத்தை, வைரச் சித்தி, இத்தனை பீடிகையெல்லாம் போடுகிறார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். பீடிகையெல்லாம் ஒண்ணுமில்லை.... நம்ம வீட்ல எல்லோரும் ‘கிச்சன் கில்லாடிகள்’ என்பதில் எனக்கு எப்பவும் ரொம்பப் பெருமை உண்டு. இந்த ஊரடங்கு சமயத்தில், நாம் ஏன் ஒரு ‘சமையல் போட்டி’ நடத்தக் கூடாது என்று எனக்குத் தோன்றியது..... போட்டியா.....? என்ன விளையாடுறீங்களா....? மனுஷன், ரெண்டு எட்டு வெளியே போயி காத்து வாங்க முடியல.... இதுல competition எப்படி என்று முணுமுணுப்பது எனக்குக் கேக்குது (mind voice கேட்டுட்டேன்). அவரவர் கிச்சனில், தனித் தனியாகவோ, family-யாகவோ சேர்ந்து சமையல் செய்யலாம். முக்கியமான உணவுப் பொருள் ‘முட்டை’. இது சம்பந்தமாக innovative ஆகவோ, traditional ஆகவோ சமையல் செய்யலாம். ‘குறிப்பிட்ட நேரம்’ என்று எதுவும் கிடையாது. ‘இவ்வளவு நேரத்திற்குள்’ என்று சுருக்கியும் கிடையாது. என்ன செய்யலாமா...?”

- என்று கேட்டு, மற்ற details-ஐ Sheethal சொல்லுவாள் என்று போட்டு விட்டேன். அடுத்தடுத்து எல்லாப் பிள்ளைகளும், ‘O.K. Ready', 'Super Chiththi', 'Yes, Aththai' 'Thumbs Up' என்று மாறி மாறி பதில் சொல்லி, ஆரவாரம் செய்து விட்டார்கள், கிருஷ்ணா! மறுநாள் காலையில், ஷீத்தலும், ‘விதி’ என்று இல்லாத, அதாவது எத்தனை dishes வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எப்ப வேண்டுமானாலும் செய்து post பண்ணலாம் என்ற விதியைப் பதிவு பண்ணி, நாங்கள் இந்தப் போட்டியை ‘சிவகாசி சமையல்’ channel-ல் upload பண்ணுவோம் என்றும், message போட்டு விட்டாள். 'No winner, No loser' என்பதால், அனைவரும் பரிசுக்குரியவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தாள்.

கிருஷ்ணர் : சக்கப் போடு..... போடு ராசா.....ம்...... அப்புறம்.....

மேகலா : அப்புறமென்ன.., ரொம்பவே interesting ஆன விஷயங்கள் நடந்தன. சரி....., அதை எல்லாம் அடுத்த பகுதியில் கூறுகிறேனே....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2