ராமரின் வில்லும், கிருஷ்ணரின் ஸ்ரீ சக்கரமும் - பகுதி 2
மேகலா : இந்த இலச்சினை (ராமர் விட்ட அம்பு, ‘டிராகனை’ குத்தி நின்றது) trending ஆகிக் கொண்டிருந்த வேளையில், பிரதமர், சீனாவின் 59 app-களை செயலிழக்கச் செய்த செயல், அமெரிக்காவை ரொம்பவே குஷிப்படுத்தியது. 'ஓஹ்ஹோ... சீனாவை வீழ்த்த இப்படி ஒரு route இருக்கோ' என்று துள்ளிக் குதிக்க.... நம் நாட்டில், ஒரு heart-warming நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
கிருஷ்ணர் : ஹ்.... ஹேங்.... என்ன அது, எனக்குத் தெரியாமல்....
மேகலா : எல்லாம் நீ நடத்தியதுதானே கிருஷ்ணா; உனக்குத் தெரியாமலா.... ஜூன் 3-ம் தேதி, நாங்களெல்லாம் news பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம். எந்த அறிவிப்பும் இல்லாமல், தனி ஹெலிகாப்டரில், ராணுவ உடை அணிந்த நமது பாரதப் பிரதமர், முப்படைத் தளபதி, ‘பிபின் ராவத்’ மற்றும், Army Chief, General Naravane ஆகியோருடன், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், நமது ராணுவம் முகாமிட்டிருக்கும் பகுதிக்குச் சென்று, அவர்களிடையே உணர்ச்சி மிகுந்த உரையாற்றினார்.
கிருஷ்ணர் : பள்ளத்தாக்கின் அந்தப் புறம், இன்னும் சீனப்படை, பீரங்கியோடு முகாமிட்டிருந்த வேளையிலேயே....., என்ன துணிச்சல்...!
மேகலா : ஆம்மாம்.... ராணுவ வீரர்களிடம், தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்து விட்டு, நம்முடைய ரானுவத்தினரில், நாட்டுக்காகவும், இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காகவும் உயிர்த் தியாகம் செய்த 20 ராணுவ வீரர்களுக்கு வீர சல்யூட் அடித்து, ‘அவர்களுடைய தியாகம் வீணாகக் கூடாது’ என்று நன்றியறிதலோடு பேசிய பிரதமர், சீனாவுக்கு எச்சரிக்கை அளிப்பதாக பேசிய பேச்சுதான் உலகத்துக்கே வீரம் கொடுத்த உற்சாக டானிக்கானது கிருஷ்ணா....
கிருஷ்ணர் : Oh! வாவ்.... சொல்லு.... சொல்லு....
மேகலா : கிருஷ்ணா.... லடாக் பகுதியின், கால்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களிடையே நிகழ்த்திய வீர உரை இந்தியர்களைப் பெருமை கொள்ளச் செய்தது என்றால், அந்த வீர உரையில், ராணுவத்தின் வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குறளைச் சொல்லி உரை நிகழ்த்தி, தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் கிருஷ்ணா.... இங்குள்ள தமிழர்களுக்கு, இது பெருமையாகத் தெரியவில்லை. ஆனால், தமிழின் பெருமையை அறிந்தவர்கள், தமிழின் மாண்பை அறிந்தவர்கள், திருக்குறளை தமிழின் அடையாளமாக உணர்ந்தவர்கள், தலை நிமிர்ந்து, மிகப் பெருமையாக, நம் பாரதப் பிரதமருக்கு வெற்றி வாழ்த்துக்களைக் கூறினார்கள் என்பது உண்மை கிருஷ்ணா.
கிருஷ்ணர் : ‘படைமாட்சி’ அதிகாரத்தில் வரும் குறளைப் பற்றிச் சொன்னதா மேகலா.... எங்கே, அந்தக் குறளைக் கொஞ்சம் சொல்லு....
மேகலா : ”மறம் மானம் மாண்ட வழிச் செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு”
கிருஷ்ணர் : மறம் - வீரம்
மானம் - ரோஷம்
மாண்டவழிச் செலவு - நல்ல வழிகளில் செல்லுதல்
தேற்றம் - வீரன் என்பவன் அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பது
ஏமம் படைக்கு - படைக்கு சிறந்த பாதுகாப்பு
ஆஹா...... வள்ளுவர் என்னும் மனுஷன், சிறந்த ராணுவத்திற்கு வகுத்த இலக்கணம் இது. இப்படி ஒரு ராணுவப் படை இருக்கும் பட்சத்தில், அரசனுக்கு இதை விடச் சிறந்த அரண் இருக்க முடியுமா? இதை மோடி அல்ல; அமெரிக்க அதிபர் டிரம்ப் படிச்சிருந்தாக் கூட, தன்னுடைய ராணுவத்தினரிடையே எடுத்துக் கூறி பெருமைப்பட்டிருப்பார். மனுஷனுடைய கைவண்ணம் அப்படிப்பட்டதல்லவா...... ஏன் மேகலா, மோடி தினமும் திருக்குறள் படிப்பாரோ....?
மேகலா : தெரியல கிருஷ்ணா..... ஆனால், சீனாவுக்கு அவர் கொடுத்த எச்சரிக்கை, நம்முடைய ராணுவப்படையினருக்கு உற்சாகத்தையும், புதுத் தெம்பையும் கொடுத்தது என்பது 100% உண்மை கிருஷ்ணா.
‘இது நில அபகரிப்புக்கான நேரம் அல்ல.... உலகத்தின் வளர்ச்சிக்கான நேரம் ஆரம்பமாகி விட்டது. நாங்கள் குழலூதும் கண்ணனை வழிபடுபவர்கள். குழலூதும் கண்ணனின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும் செய்வோம்; அவர் கையில் சுழலும் ஸ்ரீசக்கரத்தை பிரயோகிக்கவும் செய்வோம்’ என்ற வீரம் செறிந்த வார்த்தைகள், மொத்த இந்தியாவின் போர் concept ஆக உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
கிருஷ்ணர் : இதற்கு என்ன அர்த்தமாம்....
மேகலா : புரியாமல் நீ கேட்கிறாய் என்று நான் நம்பவில்லை. நான் விளக்கம் சொல்லணும் என்று விரும்புகிறாய் என்று அர்த்தம் எடுத்துக் கொள்கிறேன். ‘ஒரு அடி எங்கள் இடத்தில் இனி கால் வைத்துப் பார்....., நடக்கிறதே வேற..... நட்பு நாடி வந்தால், நட்புறவாடுவோம்.... ச்சும்மா.... இடத்தை ஆட்டையப் போட வந்தா...., காலை ஒடிப்போம்’ என்பதுதான், இதன் பட்டவர்த்தனமான அர்த்தம், கிருஷ்ணா! இந்த speech முடிந்ததும், உலக அரங்கில் வெகு வேகமாகப் பரவி, பிரதமர், உலகக் கதாநாயகன் ஆனார். அமெரிக்க ஜனாதிபதி உற்சாகமாக, சீனாவை எதிர்க்கத் துணிந்தார்.
கிருஷ்ணர் : சரி...., சீனா அதற்கு என்ன பதில் சொன்னது...?
மேகலா : பேச்சு வார்த்தை நடத்தக் கூப்பிட்டது. ஆனால், அவர்கள் நாட்டிற்குள் ‘கசமுசா’வானது....
கிருஷ்ணர் : என்ன ‘கசமுசா’வானது....?
மேகலா : இதற்கான பதிலுடன் அடுத்த பகுதியில் சந்திக்கலாம் கிருஷ்ணா!

Comments
Post a Comment