Lock-down கலகலப்பு - பகுதி 3

கிருஷ்ணர் : உங்கள் ‘சமையல் போட்டி’யில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன், மேகலா....., சீக்கிரம் சொல்லு...

மேகலா : கிருஷ்ணா! எல்லோரும் lockdown-ல் என்ன செய்வது என்று தெரியாமல், பொழுது போக்கவும் முடியாமல் தானே இருக்கிறார்கள். நான் ஆரம்பித்து வைத்த போட்டி, என்னைப் போலவே, எல்லோருக்கும், எல்லோருடனும் பேசுவதற்கு வாய்ப்பாகிப் போனதுதான் நிஜம். கிருஷ்ணா!

முதலில், அதாவது வியாழக்கிழமை மதியம், 1.30 மணி சுமாருக்கு, ‘மலர்’ என்னுடைய whatsapp-ல் ஒரு photo post பண்ணியிருந்தாள். ‘அத்தை, egg noodles' என்று போட்டிருந்தாள். நான் அந்த photo-வைப் பார்த்து விட்டு, ‘மலர், இதை Lord group-ல் post பண்ணிரு’ என்று போட்டிருந்தேன். அவளும், ‘சரி அத்தை’ என்று சொல்லி விட்டு, group whatsapp-ல் போட்டு விட்டாள். அப்புறம் பார்க்கணும், கிருஷ்ணா - comments-ஐ....... Priya சொல்றா.... ’veg. noodles பண்ணிட்டு, photo-வுக்காக, egg scramble-ஐ தூவியிருக்க’ என்கிறாள். ஒருத்தன் சொல்றான், ‘கடையில் noodles வாங்கிட்டு, photo போட்டுட்ட’ என்கிறான். அடேயப்பா.....

கிருஷ்ணர் : அப்ப....., கிச்சன்..... களை கட்டி விட்டது....

மேகலா : சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சி கிருஷ்ணா... இதுல என்னண்ணா, பிள்ளைகள் இந்தப் போட்டியில கலந்துக்கிட்டதுலே highlight-ஏ ஒருவரை ஒருவர் round கட்டி கலாய்ச்சி comment போட்டதுதான்.

கிருஷ்ணர் : வாவ்..... யார் போட்ட comment உன் மனசுல இன்னமும் மறையாம இருக்கு.....? நீ என்ன comment போட்ட....?

மேகலா : கிருஷ்ணா....., 2-வதாக வந்த product, Bhagi செய்த egg pizza. அவள் pizza செய்யும் video-வையே அனுப்பியிருந்தாள். நான், Shammy ஏதாவது செய்வாள் என்று எதிர்பார்த்திருந்த போது, 10th படிக்கும் சின்னப் பிள்ளை, video எடுத்து post பண்ணியிருந்தது, எனக்கு ரொம்பவே ஆச்சரியமாகவும், குஷியாகவும் இருந்தது. எல்லோரையும், ‘நாம எப்ப செய்து அனுப்ப; என்ன செய்து அனுப்ப’ என்று யோசிக்க வைத்தது. இவள் 15 வயது baby. அடுத்தது, எங்க அக்கா.... 70 வயது lady.... egg pudding செய்து, photo எடுத்து post பண்ணியிருந்தாங்க...

கிருஷ்ணர் : போட்டி tough ஆயிருச்சி போலயே....

மேகலா : Tough-ஆ...., பயங்கரமா, ‘விறுவிறுண்ணு’ போக ஆரம்பிச்சிருச்சி, கிருஷ்ணா. பிரியா மகள் ‘தனு’, burger பண்ணி அனுப்பியிருந்தாள். மலர் மகன் egg fried rice; செல்வி பையன், ‘ஷவர்மா’; முரளி பசங்க ‘முட்டை ஆப்பம்’; veg. omelette; சிந்து, ‘கொத்து சப்பாத்தி’; தாரிணி, egg மஞ்சூரியன்; கார்த்தி, ‘egg 65' என்று எல்லோரும் கலக்கிட்டாங்க. ஹரி, ‘தூத்துக்குடி மக்ரூன்’ செய்து post பண்ணியிருந்தான். முரளி, ‘சரி, இத எந்தக் கடையில வாங்கினீங்க’ என்று கேட்க, ஹரி, தான் செய்ததாக explain பண்ண, ஒரே கசமுசாவாயிருச்சி...

கிருஷ்ணர் : ஏன், ஹரி அதை video எடுத்து போடலியா....?

மேகலா : ஆமாம், கிருஷ்ணா! செல்வி மகனெல்லாம், அழகாய் video எடுத்து, அதிலும் ‘ஷவர்மா’ செய்வது எப்படி என்ற range-க்கு செய்து காட்டியிருந்தான். சீமான், ‘கொத்து சப்பாத்தி’ post பண்ணியிருந்ததைப் பார்த்து, ஷீத்தல், ‘என்னப்பா ‘forward'-னு போட்டிருக்கு!’ என்றாளா....? நான் உடனே, ‘இது அதுதானா’ என்று கேட்டேன்....

கிருஷ்ணர் : இரு..... இரு...... ‘forward' என்று வந்தால், ஏன் ஷீத்தல் கேட்கணும்....?

மேகலா : நம்ம phone-ல photo post பண்ணினால், ‘forward' என்று வராது. என் phone photo-வை ஷீத்தல் அப்பா phone-க்கு அனுப்பி, அதிலிருந்து அனுப்பினாலோ, அல்லது, வேற phone-ல் இருக்கும் photo-வை ‘அபேஸ்’ பண்ணி post பண்ணினாலோ...., அந்த photo, forward என்று போட்டு, நம்மைக் காட்டிக் கொடுத்து விடும்.....

கிருஷ்ணர் : சரி...., ஏன் சீமான், கொத்து சப்பாத்தி photo-வை forward பண்ணியிருக்கிறான். இது, ஏதாவது ‘அபேஸ்’ தானா.....

மேகலா : இல்லை; அவன் wife, photo எடுத்து, இவன் phone-க்கு அனுப்பியிருக்கிறாள். நான் கலாய்க்கிற மாதிரி comment போடவும், அவன் என்ன பதில் போட்டான் தெரியுமா....? ‘மண்டையில இருக்கும் கொண்டைய மறந்துட்டேனே’ - என்று போட்டானா..... அவனுடைய comment-க்கு comment பறக்க ஆரம்பிச்சிருச்சி. இப்படியாக, நாலு நாள், நாளும் பொழுதும் போவது தெரியாமல், விறுவிறுப்பாய் ஓடியது, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : ‘சிவகாசி சமையல்’ chef அம்மா, நீங்க சமைக்கிறதோட இல்லாம, எல்லார் கையிலயும் கரண்டியைக் கொடுத்து வேடிக்கை பாத்தீங்களாக்கும்..... சரி, யாருக்கு பரிசு என்று சொன்னாயா....?

மேகலா : Photo பாத்து தேர்வுதான கிருஷ்ணா.... எல்லோரும் பரிசுக்குரியவர்கள் தான்....

கிருஷ்ணர் : நீ ஏதோ ’quiz’ நடத்துனயா....?

மேகலா : ஆமாம் கிருஷ்ணா.... 25 கதாபாத்திரங்களின் பெயரைச் சொல்லி; ‘எந்த புராணம்’, ‘அவர் யாருக்கு உறவினர்’ என்று சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தேன். மகாபாரதம், இராமாயணம், திருவிளையாடல் புராணம் இந்த மூன்று புராணங்களிலிருந்து மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படும் என்று போட்டி announce பண்ணியிருந்தேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : எல்லோரும் சின்ன வயசுக்காரங்கள் தானே; ஆர்வமாய் கலந்து கொண்டார்களா....?

மேகலா : எனக்கும் இந்தப் பயம் இருந்தது, கிருஷ்ணா. நான் போட்டிக்கான அறிவிப்பு message கொடுக்கும் போதே, help-க்கு யாரை வேணாலும் அழைத்துக் கொள்ளலாம்.... (internet, google...) என்று போட்டிருந்தேன். ஹரியெல்லாம், ‘wikipedia' என்னும் media-வைப் புரட்டிப் பார்த்து, மனப்பாடம் செய்து தயாராக இருந்தானாம்.....! இருந்தாலும், கிரிஜா (புகழ் மருமகள்), நான் கேள்வி கேட்ட உடனேயே, ‘டக் டக்’கென்று பதில் சொல்லி, maximum சரியாகச் சொல்லி, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். ராணிமா மருமகள் பூர்ணிமாவும் நிறைய விடைகள் சொன்னாள். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னாடியே, ஹரியை நான் மிரட்டியிருந்தேன்; மூணு, நாலு கேள்விக்காவது பதில் சொல்லணும்; இல்லையென்றால், ‘கும்மு, கும்முனு கும்மிடுவேன்’ என்று....

கிருஷ்ணர் : அதனால்தான் wikipedia-வை நெட்டுரு போட்டிருக்கிறான். என்றாலும் பரவாயில்லை; அன்றாடம் நடக்கும் சமுதாயப் பிரச்னைகளுக்கிடையில், நம் பிள்ளைகளுக்கும், நம் புராணத்தினோடு கொஞ்சமாவது தொடர்பு இருக்க வேண்டும். உன்னுடைய முயற்சி பாராட்டத்தக்கது, மேகலா......

மேகலா : Thank you, Krishna! பிள்ளைகள் அன்று பதிலளித்தது எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்றால், இதோ இந்த நிமிஷம் நீ பாராட்டும் போது, மகாபாரதமே எழுந்து நின்று கை தட்டுவது போல இருக்கு, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : பரவாயில்லை மேகலா.... இத்தனை பிள்ளைகளையும் கலகலப்பாக வைத்திருப்பது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை.... நீ இதைச் செய்திருக்கிறாய்.... அடுத்து whatsapp-ல என்ன post செய்திருக்கிறாய்..... ஒரே பரபரப்பாய் இருக்கிறாய்......!

மேகலா : அவை எல்லாம் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் எழுதுகிறேன், கிருஷ்ணா, சரியா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2