Lock-down கலகலப்பு - பகுதி 4
கிருஷ்ணர் : இத்தனை பிள்ளைகளையும், கலகலப்பாக வைத்திருப்பது லேசுப்பட்ட காரியமில்லை என்று சொன்னேனல்லவா..... அடுத்து, whatsapp-ல் என்ன post செய்திருக்கிறாய்....? ஒரே பரபரப்பாய் இருக்கிறாயே...
மேகலா : கிருஷ்ணா! முதலில் நான் நினைத்தது, ’எங்க ஐயாமா, ஐயாப்பா தொடங்கி, ராணிமா பிள்ளைகள் வரை அனைவர் photo-வையும் போட்டு, அவர்களைப் பற்றின சிறு குறிப்பு (bio-data) எழுதி post செய்யலாம்’ என்று. அது என்னோட style-ல் எழுதும் போது, வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைத்துத்தான் ஆரம்பித்தேன்.....
கிருஷ்ணர் : ஏன்....? என்னாச்சு.... அப்படி எழுதலயா?
மேகலா : எங்க அம்மாவை எழுதும் போது, சரித்திரம் படைத்தவர்களை, அவர்கள் வாழ்க்கை முறைகளை எழுதும் போது, நம்மைப் பற்றியும் எழுதினால், அதில் அத்தனை சுவாரஸ்யம் இருக்கும் என்று எனக்குத் தோணவில்லை. அதனால், எங்க அம்மாவைப் பற்றி எழுதிய கையோடு முடித்து விட்டேன், கிருஷ்ணா!
கிருஷ்ணர் : ஏன்....? Bio-data என்றால், சின்னச் சின்னதாக, பெயர், ஊர்.... இப்படித்தானே....
மேகலா : நான் அப்படி எழுதல கிருஷ்ணா....!
கிருஷ்ணர் : Oh! ஓஹ்ஹோ.... அம்மா..... சிறு குறிப்பையே, பெரும் வரலாறாய் எழுதீட்டீங்களாக்கும்.....
மேகலா : சின்னச் சின்ன சம்பவங்கள் தான்.... அதுவே நிறைய வந்துருச்சி....
கிருஷ்ணர் : சரி.... சரி.... உன்னைப்பத்தித்தான் தெரியுமே.... ‘மைக்’ கிடைச்சா, பேசிக்கிட்டே இருப்ப.... ‘பேனா’ கிடைச்சா, எழுதிக்கிட்டே இருப்ப....
மேகலா : ஐயோ.... அது இல்ல, கிருஷ்ணா.... முதலில், எங்க ஐயாப்பா, ஐயாமாவைப் பற்றின குறிப்புக்களை எழுதினேன். எங்க ஐயாப்பாவைப் பற்றிய குறிப்பில், ‘பழக்கம்’ என்ற குறிப்பில் - தனக்குத் தானே மகிழ்வோடு அடிக்கடி சிரித்துக் கொண்டே இருப்பார் - என்று எழுதினேனா.... எழுதும் போதே, என் ஐயாப்பா என் எதிரில் இருப்பது போல் ஒரு பிரமிப்பு உண்டாயிற்று, கிருஷ்ணா! அவரோட dress; அவர் சாப்பிடும் முறை என்று ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்து விட்டேன். அது வாசிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாகி விட்டது என்பது, நான் எதிர்பார்க்காதது....
கிருஷ்ணர் : அதிலும், உங்க ஐயாப்பா, மேலே சட்டை அணியாமல், வெறும் துண்டு மட்டும் தான் அணிந்திருப்பார். இந்த மாதிரி costume அணிந்தவர்களை சின்னப் பிள்ளைகள் அறியாதது. தனக்குத் தானே சிரித்துக் கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தைச் சொல்லும் போது, interesting ஆகத்தானே இருக்கும்....!
மேகலா : அதுவும், எங்க ஐயாமாவின் நகையைக் குறிப்பிட்டு, ‘காது வளர்த்து ‘தண்டட்டி’ அணிந்திருப்பார்’ என்றதும், அந்தத் ‘தண்டட்டி’ இன்னும் இருக்கிறதா என்று கிரி கேட்டாள். ’எழுந்து நடந்தால், கம்பீரத்தில் எங்க அப்பாவை நினைவுறுத்துவார்’ என்றதும், மலர் அதை accept பண்ணினாள். பிள்ளைகளுக்கு நான் கொடுத்த தகவல்கள் பிடிச்சிருந்தது போல... நான் எழுதிய அந்த script-ஐத் தொடர்ந்து, என் நினைவுகள், எங்க ‘மாம்மை’யின் bio-data-வைத் துருவித் துருவி தொகுக்க ஆரம்பித்தன. அப்படித் தோண்டித் துருவும் போது, என் நினைவுகள், அந்தக் காலங்களுக்கே சென்று, என் மாம்மையின் அன்புக் கரங்களால் தழுவப்பட்டது, கிருஷ்ணா! எங்க மாம்மையின் photo என்னிடம் இருக்கிறது. அதை எடுத்துப் பார்த்த போது, என் கண்களால் காண முடியவில்லை கிருஷ்ணா....!
கிருஷ்ணர் : ஏன்....? அழுதயா..... நீ.... இத்தனை build-up பண்ணும் போதே நெனச்சேன். உங்க மாம்மைன்னா...., உனக்கு ரொம்பப் பிடிக்குமோ...?
மேகலா : அழுகை, மாம்மையினால் மட்டுமில்ல கிருஷ்ணா.... எங்க ஐயாமை, ஐயாப்பாவைப் பற்றி எழுதும் போதே என் நினைவுகள் 70’s-க்குப் போயிருச்சி.... அதிலும், எங்க மாம்மை தினமும் வீட்டுக்கு வருவாங்களா, அவரோட ரொம்ப ஆடியிருக்கிறேன். அவரோட அன்பு; அப்ப நடந்த சம்பவங்களின் comedy; அவரோட உழைப்பு எல்லாம் சேர்ந்து, photo-வைப் பார்த்ததும், கண் கலங்க வச்சிருச்சி... அவரைப் பற்றிய குறிப்புக்களை நோண்டும் பொழுது தான், அவருடைய தனித்தன்மை (individuality), independent attitude எல்லாம் புரிந்தது. உனக்கு ஒன்று தெரியுமா கிருஷ்ணா....?
கிருஷ்ணர் : ஒண்ணு மட்டும் தானா.... நீ இதை எழுதும் போது எப்படி இருந்தாய் தெரியுமா... மந்திரிச்சி விட்டது மாதிரி இருந்தாய். வளர்ந்து, பெரிய மனுஷியாகி, உனக்கு ஒரு பேத்தி, இரண்டு பேரன்கள் இருப்பதெல்லாம் மறந்து போச்சி.... பாவாடை, சட்டை, தாவணியில் உலா வந்தாய்.... உன் அப்பா மகளாய்; உன் மாம்மை, ஐயாமையின் பேத்தியாய் வலம் வந்தாய். உன் அம்மாதான் கண்ணாடியைப் பார்த்துச் சிரிப்பார்களா.... நீயும், உன் அம்மாவின் photo-வைப் பார்ப்பதும், ஏதோ நினைத்தது மாதிரி சிரிப்பதுமாய் இருந்ததை நானும் பார்த்தேன்.
மேகலா : பாத்துட்டியா....? எங்க அப்பா, அம்மாவைப் பற்றி எழுதிய குறிப்புக்களைப் படித்தாயா கிருஷ்ணா....
கிருஷ்ணர் : அதிலும், உன் ‘ஐயாப்பா’வைப் பற்றி எழுதிய அந்த ஒரு வார்த்தை, அடிக்கடி சொல்லும் வார்த்தை என்று கோடு போட்டு ‘அடிப் பய புள்ள’ என்று எழுதியிருந்தாயல்லவா.... அந்த ஒரு வார்த்தையில் உங்க ‘ஐயாப்பா’வின் மொத்த டயலாக்கையும், emotion-ஐயும் சொல்லிட்ட. அதிலும், ‘அடிக்கடி தனக்குத் தானே மகிழ்வுடன் சிரிப்பார்’ - என்றவுடன், நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்.
மேகலா : இப்பச் சொல்லு கிருஷ்ணா! இப்படியெல்லாம் ஒவ்வொரு விஷயத்தையும் எழுதும் போது, அவர்களோடு இருக்கிற மாதிரி உணர்வு வருமா, வராதா....?
கிருஷ்ணர் : வரும்..... வரும்..... கட்டாயம் வரத்தான் செய்யும். அவர்களோடு சேர்ந்து 1 நாள் இருக்க மாட்டோமா என்று கூடத் தோணும்.....
மேகலா : நீ...... ஒத்துக்கிறியா, கிருஷ்ணா..... நான் இதையெல்லாம் எழுதும் போது....., ராமர், ராவணனை வதம் செய்து..... தேவர்களெல்லோரும் வாழ்த்தும் அத்தியாயம் படித்தேன். அதில், பரமசிவனார் அருளினால், ராமர், தசரதனைச் சந்திக்கும் கட்டம் வந்தது. தசரதர், ராமரை வாழ்த்துவதாகப் படிக்கும் போது, எனக்கும் என் அப்பாவையும், அம்மாவையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது கிருஷ்ணா. யதார்த்தம் தெரியும். இருந்தாலும், என் நினைவுகள், வலம் வந்த சம்பவங்களின் சுவாரஸ்யம், அந்தக் காலத்திற்கே என்னை இழுத்துச் சென்றது....
கிருஷ்ணர் : உனக்கு ஒண்ணு தெரியுமா....? இந்த நினைவுகள், உன் அம்மா, அப்பாவுக்கு நீ கொடுக்கும் மரியாதை.... அதாவது, பித்ருக்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கும் ஏக்கம், வருவதில் தவறில்லை. சரி...., பேச்சு திசை மாறுது. உன் அப்பா, வேட்டைப் பிரியரா....? நல்லா car ஓட்டுவார். Dominating personality! எந்த வேலையென்றாலும், தானே தான் decide பண்ணுவார்; இட்லிக்கு எந்தக் கறி சுவை சேர்க்கும் என்பதைக் கூட.... என்று எழுதியிருந்தாயே.... அப்ப.... உங்க வீட்டில், உன் அம்மா ‘டம்மி’தானா....?
மேகலா : என் அம்மாவைப் பற்றிய விவரங்களுடன் உன்னை அடுத்த வாரம் சந்திக்கிறேன் கிருஷ்ணா...

Comments
Post a Comment