Lock-down கலகலப்பு - பகுதி 5 (நிறைவு)
மேகலா : என் அம்மாவைப் பற்றிய விவரங்களோடு இந்த வாரப் பகுதியை ஆரம்பிப்பதாகக் கூறியிருந்தேனல்லவா... ஏன் கிருஷ்ணா...., என் அம்மாவுக்கான, நான் எழுதியிருக்கும் குறிப்புகளை நீ படித்தாயா..., இல்லையா....? எங்க அப்பா, அவர் பாட்டுக்கு அதிகாரம் பண்ணிக்கிட்டே இருப்பார். எங்க அம்மா, கேட்குற நேரத்தில் தான் கேட்பார். சில சமயங்களில், எங்க அப்பா தலையீட்டால், எங்க அம்மாவுக்கு வேலை மிச்சமாகுதுல்ல. எங்க அப்பா எல்லா விஷயத்திலும் தலையிடுகிறேன் பேர்வழி என்று.... எங்க அம்மாவிடம் நல்லா ‘டோஸ்’ வாங்குவார் என்றும் எழுதியிருந்தேன் அல்லவா. இருவருடைய நட்பும் ஒரு புரிதலுடன் இருந்தது கிருஷ்ணா!
கிருஷ்ணர் : அதுவும் சரிதான். இருப்பினும், உன் எழுத்துக்களினாலும், நினைவுகளின் பகிர்வினாலும், உன் அம்மா, அப்பாவுக்கு காவியமே படைத்து விட்டாய் மேகலா. ஊரடங்கு காலத்தை, வெகு சுவாரஸ்யமாகத்தான் கொண்டு செல்கிறாய்.
மேகலா : அதற்குப் பிறகு, சின்னப் பிள்ளைகளுக்கான ‘அடுப்பில்லாத சமையல் போட்டி’ நடத்தினோமே...., நீ பார்க்கலியா, கிருஷ்ணா...?
கிருஷ்ணர் : நீயாகச் சொன்னால், ரசனையோடு சொல்வாய். சரி...., முதலில் இது யாரோட idea?
மேகலா : நாங்க முதலில் சமையல் போட்டி என்று discuss பண்ணும் போதே, 'egg' தான்போட்டியின் main food என்று யோசித்த மாதிரி, இன்னொரு concept...., 'fire-less cooking' என்று பேசினோம். இது ஷீத்தலோட idea. முதல் போட்டி முடிந்ததும், quiz program என்று அடுத்தடுத்து ‘ஆடுகளம்’ busy-யாக இருந்ததால், இந்தப் போட்டி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கார்த்தி தான் lemon juice போடும் போதெல்லாம் கேட்டு விடுவான், ‘எப்போ competition ஆரம்பிக்கப் போறீங்க’ என்று. இதில், மகாலட்சுமியின் மகனும், அடுத்த போட்டி எப்பொழுது என்று ஆர்வத்துடன் கேட்கவும், அவனுக்காக, உடனே போட்டியை நடத்தி விடுவது என்று முடிவெடுத்து, ஷீத்தலும் message-ஐ whatsapp-ல் போட்டு விட்டாள்.
கிருஷ்ணர் : ஏன் அவனுக்கும் மட்டும் அத்தனை ஆர்வம்....?
மேகலா : ராம்கோபால், முதல் போட்டியில் கலந்து கொள்ளாமல் ‘miss' பண்ணி விட்டான், கிருஷ்ணா!
கிருஷ்ணர் : Oh....Ho....! சரி, போட்டி எப்படி நடந்தது? யாரெல்லாம் இதில் கலந்து கொண்டார்கள்?
மேகலா : யார் கலந்து கொள்ளவில்லை என்று கேள் கிருஷ்ணா. பிறந்து ரெண்டு இலை மொளச்ச 'பிருத்வி' மட்டும் தான் கலந்துக்கல கிருஷ்ணா!
கிருஷ்ணர் : அத்தனை சின்னப்புள்ளைகளும் கல்ந்துக்கிட்டார்களா....?
மேகலா : கிருஷ்ணா, எல்லாப் புள்ளைகளும் வசனம் வேற பேசி நடித்த நடிப்பு இருக்கே...., சிவாஜி தோத்துருவார்! அவ்வளவு நல்லா இருந்தது கிருஷ்ணா...
கிருஷ்ணர் : ஐயோ.... கேட்கவே interesting ஆக இருக்குதே. நம்ம கார்த்தி என்ன செஞ்சான்....?
மேகலா : கார்த்தி பெரிய்ய பையனாயிட்டான், கிருஷ்ணா. ‘ஆதி’.... சர்பத்தோட கதை தெரியுமா, கிருஷ்ணா...?
கிருஷ்ணர் : ஆதியா....?
மேகலா : ஆதியோட சின்னப்புள்ள.... ‘ஆரவ்’ கூட ‘மேங்கோ சாகு’ பண்ணினான் கிருஷ்ணா.... ஆதி, ‘ஹலோ everybody, நான் ‘சர்பத்’ பண்ணப் போறேன்’ என்று சொல்லி, இரண்டு கையையும் விரித்து action காட்டுகிறான். நான் அந்த video-வை நாலஞ்சு தடவை பார்த்து, ரசிச்சி ரசிச்சி மகிழ்ந்து போனேன்.
கிருஷ்ணர் : அடேயப்பா..... அப்ப, கார்த்தி ஒண்ணும் பண்ணலயா....
மேகலா : பண்ணினான் கிருஷ்ணா.... அவனும் Biscuit sandwich பண்ணினான்; ஆதியும் Biscuit sandwich பண்ணினான். இந்தப் போட்டியில் trending-கே, ஆதி வயசுப் புள்ளைக கலந்துக்கிட்டு கலக்கியதுதான், கிருஷ்ணா.... அதிலும், ஷ்யாம் பெத்த புள்ள விஷ்ணு பண்ணி அனுப்பிய, குல்ஃபி செய்முறை.... சூப்பர் டூப்பர் கிருஷ்ணா...
கிருஷ்ணர் : Taste நல்லா இருந்ததா மேகலா?
மேகலா : எங்க.... டேஸ்ட் பார்க்க.... அவன் பேசியது கிருஷ்ணா.... செய்முறையை விளக்கி ஒரு video.... அடுத்து.... ‘இத நாளக்கி தான் சாப்பிடணும்’ என்று தத்தித் தத்திப் பேசும் போது, குல்ஃபிக்கே தனி ருசி வந்திருச்சி கிருஷ்ணா.
கிருஷ்ணர் : வாவ்....!
மேகலா : சிந்து சீமானோட பொண்ணு..... chocolate லட்டு பண்ணி அனுப்பியிருந்தாள், கிருஷ்ணா....
கிருஷ்ணர் : Chocolate லட்டுவா’..... நீ ஒரு chef என்று பீற்றிக் கொள்கிறாய்.... என்றாவது, chocolate-ல் லட்டு பிடிக்கணும் என்று உனக்குத் தோன்றியதா...?
மேகலா : அதுவும், அந்தக் குட்டிக் கை, கையில் நெய் தடவி பொறுமையாய் லட்டு பிடித்த விதம்; இதுவரைக்கும் எங்கள் வீட்டில், எந்த chef-இடமும் இது மாதிரி perfect ஆகவும், அழகாகவும் லட்டு பிடிக்கும் நேர்த்தியை நான் பார்க்கவேயில்லை, கிருஷ்ணா....
கிருஷ்ணர் : அதுவும் குழந்தை.....
மேகலா : பின்னாலிருந்து அவ அம்மா, கையில் எண்ணெய் தடவச் சொல்லுறா.... இந்தப் பிள்ளை, மெதுவாகத் தடவி, லட்டு உருட்டும் நேர்த்தி இருக்கிறதே.... அடா, அடா..... நான் அப்படியே மயங்கிப் போனேன் கிருஷ்ணா.... எல்லாம், அந்த வீட்டின் ராசி அப்படி, கிருஷ்ணா....
கிருஷ்ணர் : ஓஹோ.... அந்த வீட்டில் பிறந்தவர்கள் எல்லாம்.... பெரிய்ய.... ‘வெங்கடேஷ் பட்’...டு..
மேகலா : இல்லையா.... பின்ன... அதிலும், கண்ணா பேரன், சின்னவன், ’மகத் கிருஷ்ணா’, நுங்கு போட்டு ஒரு drinks செய்தான். அவன் கலந்துக்கிட்டதும், செய்ததும் பெரிய விஷயம் தான். அது start பண்ணும் போது, தன் மழலையில், ‘Good day, everyone' என்று சொல்லி ஆரம்பிக்கிறான். அதில் கவனம் செலுத்தாமல், video-வைப் பார்த்து அசந்து போய், comment போட்டிருக்கிறேன். பின்னாடியே, ஹரி போடுகிறான்; இவன் பேசும் முதல் மூன்று வார்த்தைகள் எனக்கும் புரியவேயில்லை. மறுபடியும், மறுபடியும் 3 முறை rewind பண்ணிக் கேட்ட பிறகுதான் புரிந்தது; ‘Good day, everyone' என்று சொல்கிறான். ‘So cute' - என்ற comment-ஐப் பார்த்த பிறகுதான், நானும் video-வை rewind பண்ணிப் பார்க்கிறேன், கிருஷ்ணா..... பிள்ளைகள் எல்லாம் ரொம்ப ஆர்வமாகத்தான் கலந்து கொண்டார்கள், கிருஷ்ணா.....
கிருஷ்ணர் : ஆர்வம் மட்டும் தானா மேகலா... இந்தப் பிள்ளைகளோட attitude-ஏ மாறிப் போயிருக்கு.... முன்னெல்லாம், rhymes கூட சொல்லச் சொன்னால், வெட்கப்படுகிற குழந்தைகள்..... ‘இத இன்னைக்கு சாப்பிடக் கூடாது; நாளைக்குச் சாப்பிடணும்’; ‘Good day everyone'; ஹலோ, நான் நன்னாரி சர்பத் பண்ணப் போறேன்’னு ஒரு chef level-க்கு பேசத் தயாராவது என்பது, இந்தப் பிள்ளைகள், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தன் ‘arms'-ஐத் தட்டிக் காட்டி, வரிசையில் நிற்கிறார்கள் என்று தெரிகிறது.... வாழ்க....வாழ்க....
மேகலா : கிருஷ்ணா! ‘வாழ்க’ என்ற வார்த்தை யார் சொன்னாலும் அது மேன்மையானது. அதை நீ சொல்லிக் கேட்கும் போது, அந்தப் பிள்ளைகளுக்கு கடவுளின் அருள் இருப்பதாக நம்புகிறேன், கிருஷ்ணா...
கிருஷ்ணர் : சரி..... இன்று இத்துடன் இந்த விவாதத்தை முடிப்போம். நாளை ஒரு அற்புதமான தலைப்புடன் என்னை வந்து பார்....

Comments
Post a Comment