வாகனங்கள் பலவிதம் - பகுதி 2

மேகலா : மாட்டு வண்டி, வில்வண்டியிலிருந்து, மனிதன் உருவாக்கிய வாகனங்களைப் பற்றிப் பேசுவோம் என்று சென்ற பகுதியை முடித்திருந்தோம், அல்லவா....? வாகனம் உருவான கதையே எவ்வளவு இருக்கு கிருஷ்ணா! மனிதன் எப்பவுமே, மனதுக்குள், ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று கேட்டுக் கொண்டே இருப்பது தான் மனிதனின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். நம்முடைய புராணங்களிலிருந்தும் நமக்கு நிறைய தகவல் கிடைத்திருப்பது interesting ஆன விஷயம் தான். இப்ப, நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் வாகனங்களைப் பற்றி வரிசையாகப் பார்ப்போம் கிருஷ்ணா...!

கிருஷ்ணர் : இப்போ இருக்கும் வாகனம் என்றால், cycle, scooter என்றுதானே ஆரம்பிக்கணும். அந்தக் காலத்து மனிதன் உருவாக்கிய மாட்டு வண்டி இப்பவும் இருக்கா.... ஏனென்றால், மாட்டு வண்டியிலிருந்து தானே, அடுத்தடுத்த வாகனங்கள் உருமாறி வளர்ச்சி அடைந்திருக்கும்.

மேகலா : கிருஷ்ணா..... நம்ம நாடு விவசாய நாடு தானே...., விவசாயிகள், தன்னோடு வளர்ந்த மாடுகளைத்தான் உழுவதற்கு, tractor ஆகப் பயன்படுத்தினார்கள்; விளைபயிர்களை, market-ல் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு, மாடுகள் பூட்டிய வண்டிகள், அதாவது, goods vehicle ஆக பயன்படுத்தினார்கள்.

அதே மாதிரி,

’மாடு கட்டி போரடித்தால், மாளாது செந்நெல்லென்று
ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை’

- என்ற பாடல், மாடு ‘புல்டோசராக’வும் பயன்பட்டிருக்கிறது என்று கூறுகிறது கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : ஆஹா....! மாடு தான் multi-purpose vehicle. மாட்டை வண்டியில் பூட்டினால், goods vehicle. கலப்பையில் பூட்டினால், tractor; செந்நெல்லைப் பிரித்தெடுக்க, ‘புல்டோசர்’. இன்னும் ஒண்ணு தெரியுமா.... மாட்டை வண்டியில் பூட்டி, race-லும் ஓட விட்டார்களே.... அதை யோசித்தாயா....?

மேகலா : ‘ரேக்ளா ரேஸ்’....., இன்றைய 'car race' மாதிரி...., இல்லையா, கிருஷ்ணா....? எந்தக் காலத்திலும், மனிதனுடைய பழக்க வழக்கங்கள் ஒன்றேதான்....; வாகனம் தான் காலத்திற்குத் தகுந்தபடி மாறுகிறது. தொழில், வியாபாரம், entertainment என்று எல்லா நேரங்களிலும், மனிதனுக்கு வாகனம், எல்லாக் காலங்களிலும் அவசியமாகத்தான் இருந்து வருகிறது. இப்பவும், கிராமப்புறங்களில், மாட்டு வண்டிகள் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது, கிருஷ்ணா. நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது கூட, மாட்டு வண்டி சரளமாக புழக்கத்தில் இருக்கத்தான் செய்தது. இன்னும், மணல் குவாரியிலிருந்து மணல் கொண்டு வரும் ‘கட்ட வண்டி’ இருக்கிறது கிருஷ்ணா....

கிருஷ்ணர் : கட்ட வண்டியா.....

மேகலா : ஆமாம்..... கட்ட வண்டியென்றால், மாட்டு வண்டி. ‘வில்லு வண்டி’ தெரியுமா கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : மாட்டு வண்டி தெரியும். அது என்ன வில்லு வண்டி....?

மேகலா : மாட்டு வண்டியை, மனிதர்கள் உட்கார்ந்து செல்லும் luxury வண்டியாகக் ‘convert' பண்ணியிருப்பார்கள். அதாவது, வெய்யில் படாமல் கூடாரம் வளைத்து, வண்டியில் அமர்வதற்கு இதமாக மெத்தை விரித்து, ஏறுவதற்கு இசைவாக step அமைத்து, உட்கார்ந்த பின் கீழே விழாமல் பாதுகாப்பிற்காக, ‘அடிதண்டா’ மாதிரி ஒரு கம்பியைக் குறுக்கே மாட்டுவார்கள். சில வில்வண்டியில், ‘ஜன்னல்’ கூட இருக்கும். இந்த மாதிரி ‘வில் வண்டிகள்’, வசதி படைத்தவர்கள் வீட்டில், பெண்கள் வெளியில் செல்வதற்கு வைத்திருப்பார்கள். இன்னும் இந்த மாதிரி வண்டிகளை, star hotels-க்கு முன்னாடி, show piece-ஆக வைத்திருக்கிறார்கள் கிருஷ்ணா. நீ பார்த்திருக்கிறாயா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : நான்.... நான்..... ஏகப்பட்ட hotels பார்த்திருக்கிறேன். மாட்டு வண்டி, வில்லு வண்டி, கூட்ஸ் வண்டி, குதிரை வண்டி எல்லாவற்றிலும் சென்றிருக்கிறேன்....

மேகலா : ஐயோ கிருஷ்ணா..... comedy பண்ணாத கிருஷ்ணா..... மாட்டு வண்டியைப் போலவே, குதிரை வண்டியும், passenger வண்டியாக ‘ஜட்கா’ என்ற பெயரில் ஓடியிருக்கிறது கிருஷ்ணா. 1960-களில் கூட இந்த வண்டி புழக்கத்தில் இருந்திருக்கிறது. Railway station-களில், taxi-யாக இந்த குதிரை வண்டிகள் தான் பயணிகளை ஏற்றிச் செல்ல காத்திருக்கும். மாட்டு வண்டிகள் கூட, கிராமப்புறங்களில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. குதிரை வண்டி என்னும் ‘ஜட்கா’ முற்றிலும் வழக்கொழிந்து விட்டது கிருஷ்ணா.

கிருஷ்ணர் : எங்கள் காலங்களில் எல்லாம், குதிரை பூட்டிய ரதங்கள் தான். ஒண்ணா, குதிரையில் ஏறிச் செல்வோம்; இல்லையா, குதிரை பூட்டிய தேரில் ஏறிச் செல்வோம். இந்தத் தேரை செலுத்துவதற்கு special training எடுக்க வேண்டுமாக்கும்; உனக்குத் தெரியுமா.... நான் one of the best ' தேரோட்டி’.....

மேகலா : அர்ஜுனனுக்காக தேரோட்டிய ‘பார்த்தசாரதி’யுடன், நான் வாகனங்களைப் பற்றிப் பேசுகிறேன் என்பதே அதிகப்பிரசங்கித்தனம் தானே, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : ’அப்படியா’..... அப்போ, கார் ஓட்டத் தெரிந்த மேகலாவுடன் பேசுவது மட்டும் என்னவாம்....!

மேகலா : கிருஷ்ணா.... யுத்த களங்களில், தேரை ஓட்டிச் சென்று, யுத்த சாஸ்திரத்தை எடுத்துச் சொன்ன பார்த்தசாரதி, கிருஷ்ணன் எங்கே..... 4th gear தாண்டி, 5th gear-ல் கூட போகப் பயப்படும் மேகலா எங்கே.... என்ன கிருஷ்ணா.... என்னையெல்லாம், car ஓட்டத் தெரிந்தவள் என்று பேசுகிறாயே....

கிருஷ்ணர் : சரி.... சரி.... நம்ம topic-ஐ continue பண்ணுவோம். எங்க விட்ட....? விட்ட இடத்தை தொடர்க....

மேகலா : Yes, boss! ஜட்கா வண்டி சொன்னோமா.... ‘சாரட் வண்டி’ தெரியுமா கிருஷ்ணா, உனக்கு....?

கிருஷ்ணர் : You mean..... ’சாரட் வண்டி’.....; British Queen செல்லும் வண்டியா...?

மேகலா : இது இங்கிலீஷ்காரங்க குதிரை வண்டிதான் கிருஷ்ணா.... கிட்டத்தட்ட தேர் மாதிரி தான். பிரிட்டிஷ்காரங்க இந்தியா வந்து, திரும்பும் போது, ஆங்காங்கே இந்த வண்டியை விட்டுச் சென்றார்கள். பெரீய்ய... சமஸ்தானங்களில் இந்த வண்டி இருக்கும். Driver மாதிரியான குதிரைக்காரன், front portion-ல் உட்கார்ந்திருப்பான். பின் portion-ல், seat வைக்கப்பட்டு, ஒரு compartment-ஆக இருக்கும். அதில் ஏறுவதற்கு step இருக்கும். அதில் காலை வைத்து ஏறி, seat-ல் உட்காரணும். உட்கார்ந்தவுடன், door-ஐக் close பண்ணிக் கொள்ளலாம். எங்கள் பகுதிகளில், 15 வருடத்திற்கு முன்பு வரை, கல்யாணம் முடிந்தவுடன், மாப்பிள்ளையும், பொண்ணும் இதில் அமர்ந்து, ‘பட்டினப் பிரவேசம்’, அதாவது ஊர்வலம் வருவார்கள். இப்போ, அந்த மாதிரியான ‘சாரட் வண்டி’யைப் பார்க்கவே முடிவதில்லை, கிருஷ்ணா. என் கல்யாணத்தில் கூட, Sheethal அப்பா, மாப்பிள்ளை கோலத்துடன், கல்யாண மண்டபத்திற்கு, ‘சாரட் வண்டி’யில் தான் வந்தார்.

கிருஷ்ணர் : அப்படியா...... very interesting..... நீயும் சாரட் வண்டியில் அமர்ந்து ‘பட்டினப் பிரவேசம்’ சென்றாயா மேகலா....

மேகலா : சீ....சீ.... நானெல்லாம், இதில் ஏற மாட்டேன் என்று strict-ஆக சொல்லி விட்டேன் கிருஷ்ணா....

கிருஷ்ணர் : Miss பண்ணிட்டாயே மேகலா.... நீ குதிரை வண்டியில் போயிருக்கிறாயா மேகலா....?

மேகலா : நினைவில்லையே கிருஷ்ணா.....! நினைவு படுத்தி அடுத்த பகுதியில் சொல்கிறேனே......, சரியா.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1