ராமரின் வில்லும், கிருஷ்ணரின் ஸ்ரீ சக்கரமும் - பகுதி 3 (நிறைவு)
மேகலா : சீனா நாட்டில் என்ன ‘கசமுசா’வானது என்று கேட்டிருந்தாயல்லவா...? கிட்டத்தட்ட இந்தியா பொருளாதாரத் தடையை சீனா மீது விதித்தது மாதிரிதானே.... ‘59 செயலிகளை’ நிறுத்தியது. இந்திய நாட்டுக்குள் அந்நிய நிறுவனம் காலூன்ற நினைத்தால், இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. இதுவும் சீனாவை நினைத்தே கொண்டு வரப்பட்ட சட்டம். அமெரிக்காவும், சீனாவுடன் வர்த்தகத் தடையைக் கொண்டு வந்தது. சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், தானாக முன்வந்து வேளியேறத் துவங்கியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாவின் ராணுவ வீரர்கள், இந்தியாவில் ராணுவ வீரர்களுக்குத் தரப்படும் மரியாதை, சலுகைகளைப் பார்த்து, தனது அரசாங்கம், அதே போல ராணுவ வீரர்களை நடத்தவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. - இது எல்லாமாகச் சேர்ந்து, அங்கிருக்கும் அதிகாரிகளிடையே ஒரு அதிருப்தி நிலவுவதாகக் காத்து வாக்கில் செய்தி வந்தது. பிரதமர் மோடி அவர்களுடைய ‘லடாக்’ பேச்சு, சீனாவின் இந்தியாவைப் பற்றிய கணிப்பில் மண்ணள்ளிப் போட, இங்குதான் குழலூதும் கண்ணன் தன் ஆட்டத்தை ஆரம்பித்தார் என்று நான் திடமாக நம்புகிறேன்.
கிருஷ்ணர் : அவன் என்ன ஆட்டம் ஆடினான்.....
மேகலா : நமது பாதுகாப்புத் துறை ஆலோசகர் பெருமை மிகு ‘அஜீத் தோவல்’, சீனாவுடன் முக்கியமான பேச்சு வார்த்தை நடத்தினார். சீனப்படைகள் எல்லையிலிருந்து, அதாவது ‘கால்வான்’ பள்ளத்தாக்கு மட்டுமல்ல கிருஷ்ணா...., Gogra, Hot Springs, Finger 4 area in Pangong Tso என்ற இடங்களிலிருந்தெல்லாம் தன்னுடைய படைகளை வாபஸ் பெற்றதோடு மட்டுமல்லாமல், முகாம்களையும் கலைத்து விட்டு, ‘துண்டக் காணோம், துணியக் காணோம்’ என்று ஓடியே போய் விட்டார்கள் கிருஷ்ணா.....
கிருஷ்ணர் : அதாவது, ஒருவருக்கு போர் பயத்தைக் கண்ணில் காட்ட வேண்டுமென்றால், போர் விமானத்தை இறக்க மட்டும் செய்யக் கூடாது; அடிமடியிலேயே கை வைக்க வேண்டும். அதைச் செய்திருக்கிறது, மோடி அரசாங்கம்.
மேகலா : இன்னொரு விஷயம் தெரியுமா...., சென்ற வாரத் தகவலின்படி, அமெரிக்கா, சீனா எல்லையில் போர்க்கப்பலை நிறுத்தியிருக்கிறது. ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றால், அமெரிக்கா சீனா மீது செம கடுப்பில் இருக்கிறது. இதில் மோடியின் இரு வழித் தாக்குதல் (ராணுவம், வர்த்தகம்) யுக்தி கொடுத்த உற்சாகத்தில், இன்னும் உறுதியாகச் செயல்படவும், சீனா, தன்னுடைய நம்பிக்கைத் துரோக நடவடிக்கைகள் உலகத்தாரால் வெறுக்கப்படுகிறது என்பதை மெள்ள உணரத் தொடங்கியிருக்கிறது. இதை ஹாங்காங் ரொம்பவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. தங்களுக்கு, சீனாவின் பிடியிலிருந்து விடுதலை கிடைப்பதற்கு இதுதான் சரியான சமயம் என்று நினைக்கிறது. சென்ற வாரம், ஜப்பான் நாட்டுத் தொலைக்காட்சிகளில் இந்தியப் பிரதமர் மோடியின் படமும், சீன அதிபர் ‘ஜின்பிங்’இன் படமும், 'Tom & Jerry' concept-ல் கார்ட்டூன் சித்திரமாக ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இப்போ, latest தகவல், ஜப்பான், சீனாவில் நிறுவிய தன் நாட்டு நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறி, மலேசியா, வியட்னாம் போன்ற நாடுகளில் நிறுவச் சொல்லியிருக்கிறது. அதற்காக, அந்தக் கம்பெனிகளுக்கு 2.2 billion அமெரிக்க டாலர்களைத் தருவதாகச் சொல்லியிருக்கிறது. அவர்களும் வெளியேறத் தயாராகி விட்டார்கள்.
கிருஷ்ணர் : இனி, சீனா ரொம்ப யோசிக்கத்தான் செய்யும்...., இல்லையா....?
மேகலா : சீனாவிடம் நம்பகத் தன்மை கிடையாது கிருஷ்ணா! உலகத்துக்கெல்லாம் ‘நாட்டாமை’யாக வேண்டும் என்பது சீனாவின் கனவு.... உலக நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில், இந்தியா temporary யாகக் கூட இடம் பெற முடியாமல் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று உலக நாடுகள், இந்தியாவின் பின், அணிவகுப்பதைத் தடுக்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்கிறது.
கிருஷ்ணர் : ஒரு க்ஷத்திரியன், எல்லா வழிகளிலும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு களமிறங்க வேண்டும். ஒரு காட்டுயானையை, அதன் பாகன் சிறு அங்குசத்தால் அடக்கி விடுகிறான். யானையை அடக்குவதற்கு, மதியூகம் மட்டுமல்ல மேகலா, எதற்கும் அஞ்சாத தைரியம் வேண்டும். அது மோடியிடம் மிகப் பிரமாதமாக இருக்கிறது. பின் என்ன அவருடைய இடப்புறம், வில்லேந்திய ராமரும் நிற்பார்; வலப்புறம் ஸ்ரீசக்கரமும், குழலும் ஏந்திய கண்ணனும் நிற்பான்......
மேகலா : என் மெய் சிலுக்குது கிருஷ்ணா! பேச வார்த்தையே வர மாட்டெங்குது கிருஷ்ணா.
கிருஷ்ணர் : வார்த்தை வர மாட்டேங்குதுல்ல......, அப்படியே இரு..... escape.....
மேகலா : கிருஷ்ணா...., கிருஷ்ணா..... புகழ்ந்து ஒரு வார்த்தை பேசுவதற்குள்..... சிட்டாகப் பறந்துட்டியே கிருஷ்ணா.....
(முற்றும்)

Comments
Post a Comment